Published:Updated:

இது ஒரு சாக்லேட் சக்சஸ் ஸ்டோரி !

ம.பிரியதர்ஷினிபடங்கள் :வீ.நாகமணி

இது ஒரு சாக்லேட் சக்சஸ் ஸ்டோரி !

ம.பிரியதர்ஷினிபடங்கள் :வீ.நாகமணி

Published:Updated:
##~##

''ஆசைக்காக வீட்டுலயே ஒரு நாள் சாக்லேட் செய்து பார்த்தேன். இன்னிக்கு அது என்னை 'கிஷோர் சாக்கோஸ்’ உரிமையாளர்ங்கற அளவுக்கு வளர்த்துவிட்டிருக்கு!''

- இனிப்பாகச் சிரிக்கிறார் லாவண்யா. சென்னை, முகப்பேரில் இருக்கும் அவரது வீட்டில் ஸ்வீட்டாக நிகழ்ந்தது அந்தச் சந்திப்பு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''எம்.பி.ஏ முடிச்சதும் திருமணம் ஆயிடுச்சு. சமையல்ல இன்ட்ரஸ்ட் உள்ள நான், ஒருமுறை ஃப்ரெண்ட் சொன்ன சாக்லேட் ரெசிபியை டிரை பண்ணினேன். நல்லா இருந்தது. பர்சனல் வேலையா மும்பை போயிருந் தப்போ, சின்னதா சாக்லேட் கோர்ஸ் ஒண்ணு முடிச்சேன். அதுல கிடைச்ச நம்பிக்கை, ஆர்வம்ங்கிற லெவலைத் தாண்டி, சாக்லேட்டை ஒரு தொழிலாவே யோசிக்க வெச்சுது. ஊர் திரும்பினதும் வீட்டுல ஐந்து கிலோ சாக் லேட் செய்தேன். 'சூப்பர் டேஸ்ட்!’னு சொன்ன கண வர் கையில... அழகா பீஸ் போட்டு, பேக் செய்து, அவர் ஆபீஸுக்கே சாக்லேட்டை கொடுத்துவிட்டேன். அவ்வள வும் வித்துத் தீர்ந்திடுச்சு. ஃபர்ஸ்ட் ரிசல்ட்டே குட் ரிசல்ட். இன்னும் விதவிதமா சாக்லேட் ட்ரை பண்ணின நான், மூணாவது மாசமே 'கிஷோர் சாக்கோஸ்’னு என் பையன் பேர்ல சாக்லேட் கம்பெனியை ஆரம்பிச்சுட்டேன்''

இது ஒரு சாக்லேட் சக்சஸ் ஸ்டோரி !

- அத்தனை உற்சாகம் லாவண்யா குரலில்!

''சாக்லேட் செய்றதுல பல சவால்கள் இருக்கு. கொஞ்சம் பிசகினாலும் சுவையும், கவர்ச்சியும் மிஸ் ஆயிடும். அடுத்ததா, மார்க்கெட்டிங். இது ஆல் டைம் பிஸினஸ் கிடையாது. தீபாவளி, கிறிஸ்துமஸ், நியூ இயர், வேலன்டைன்ஸ் டேனு விசேஷ தினங்கள்லதான் சாக்லெட் விற்பனை சிறப்பா இருக்கும். மத்த நாளும் நஷ்டப்படாம இருக்கணும்னா, கொஞ்சம் மெனக்கெடணும். ஒவ்வொரு பொருட்காட்சியா தேடிப்போய் ஸ்டால் போட்டேன். தன் நண்பர்கள் மூலமா எம்.என்.சி. கம்பெனிகள்ல ஆர்டர்கள் வாங்கிக் கொடுத்தார் கணவர். அடுத்து, ஒரு வெப்சைட் கிரியேட் பண்ணினேன். அதுக்கு அப்புறம் சரசரனு பிஸினஸ் ஏற ஆரம்பிச்சுது.

அழகழகான, வித்தியாசமான கிஃப்ட் பேக்கிங்ல டெலிவரி செய்றதுக்காகவே மும்பை, டெல்லினு போய் பாக்ஸ்களை வாங்கி வருவேன். 'பொக்கே’ல சாக்லேட் பூக்கள் வெச்சுக் கொடுக்கறது, ஃபாரின் சாக்லெட் ஸ்டைல்லயே பேக்கிங் பண்றதுனு சின்ன சின்ன ஐடியாக்களால என் பிஸினஸ் பெரிய லெவலில் பிக்கப் ஆச்சு!'' எனும் லாவண்யாவுக்கு, சீஸன் டயங்களில் மட்டும் மாதம் 500 கிலோ வரை சாக்லேட் ஆர்டர் குவிகிறது.

இது ஒரு சாக்லேட் சக்சஸ் ஸ்டோரி !

''சும்மா ஒரு ஆர்வத்துல ஆரம்பிச்ச பிஸினஸுல, சீஸன் டயத்துல மட்டும்  மாசம் முப்பதாயிரம் ரூபாய் வரை வருமானம் பார்க்கிறேன். அதே மாதிரி அந்த சீஸன் டயத்துல மட்டும் என்கிட்ட குறைஞ்சது இருபத்தஞ்சு பேருக்கு வேலை கொடுக்கிறேன். அதிக ஆர்டர்கள் குவியறப்போ, எக்ஸ்ட்ரா ஆட்களை வேலைக்கு எடுத்துப்பேன். சாக்லேட் செய்யக் கத்துக்கொடுக்கும் பயிற்சி வகுப்புகளும் எடுக்குறேன். வாழ்க்கை ஸ்வீட்டா போயிட்டிருக்கு!'' என்ற லாவண்யாவிடம், சாக்லேட் ரெசிபி கேட்காமல் இருக்க முடியுமா என்ன?!

சூப்பரா செய்யலாம் சாக்லேட்!

தேவையான பொருட்கள்: மில்க் பவுடர் - 200 கிராம், கோகோ பவுடர் - 200 கிராம், சர்க்கரை - 175 கிராம், பட்டர் - 175 கிராம்.

செய்முறை:  மில்க் பவுடர் மற்றும் கோகோ பவுடரை கட்டியில்லாமல் நன்கு சலித்துக் கொள்ளவும். அடுப்பில் பாத்திரம் வைத்து, சர்க்கரையில் தண்ணீர் விட்டு ஒரு கம்பி பதம் வரும் வரை 'சிம்’-ல் வைத்துக் காய்ச்சவும். சலித்து வைத்திருக் கும் கோகோ மற்றும் மில்க் பவுடர் மாவை, இந்தப் பாகில் கொட்டிக் கிளறவும். அடி பிடிக்காமல் கிளறிக் கொண்டே, அதில் பட்டர் சேர்த்துக் கிளறவும். பட்டர், சாக்லெட் கலவையோடு சேர்ந்து கண்ணாடி பதத் துக்கு வரும்போது, அடுப்பை ஆஃப் செய்து விடவும். ஒரு பெரிய டிரேயில் அலுமினியம் ஃபாயில் பேப்பரை விரித்து, தயாரான சாக்கெட் கலவையை அதன் மீது ஊற்றி, டிரேயை ஃப்ரிட்ஜில் வைக்கவும். ஐந்து நிமிடம் கழித்து ஸ்லைஸ் போட்டால், ஹோம் மேட் சாக்லேட்ஸ் ரெடி!

எச்சரிக்கை: சர்க்கரைப் பாகு ஒரு கம்பி பதத்துக்கு மேல் கெட்டியாகிவிட்டால், சாக்லேட்டை துண்டு போட முடியாது. பவுடர்களை சரியாகச் சலிக்காவிட்டால், சட்டியில் கலவையை கிளறும்போதே சாக்லேட் கட்டியாகிவிடும். பட்டரை விட்டுக் கிளறும்போது கண்ணாடி பதத்துக்கு வந்ததும் இறக்கிவிட வேண்டும். இல்லையெனில் கலவை சட்டியோடு பிடித்துக்கொள்ளும். மேற்பரப்பில் ஐஸ் துகள்கள் சேரும் மற்றும் அதிகமாக இறுகிவிடும் என்பதால், சாக்லேட்டை ஃப்ரீஸரில் வைக்கக் கூடாது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism