Published:Updated:

திறந்தது கண்கள் மட்டுமல்ல்... மனதும் !

எம்.கார்த்தி, பா.திவ்யபாரதி படங்கள் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ச.லெட்சுமிகாந்த்

திறந்தது கண்கள் மட்டுமல்ல்... மனதும் !

எம்.கார்த்தி, பா.திவ்யபாரதி படங்கள் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ச.லெட்சுமிகாந்த்

Published:Updated:
##~##

ராஜபாளையத்தில் 'அவள் விகடன்’, 'சக்ரா கோல்ட்' இணைந்து, டிசம்பர் 24-ம் தேதியன்று நடத்திய 'பொங்கல் திருநாள்...’ நிகழ்ச்சி, அசத்தல் ஹிட்! எஸ்.எஸ். அரசு மேல்நிலைப் பள்ளியில், 15 வயது சிறுமி முதல் 60 வயதான வாசகிகள் வரை ஆவலுடன் காத்திருக்க, 'பட்டிமன்ற பேச்சாளர்' கவிதா ஜவஹர், ''வணக்கம் ராஜபாளையம்!'’ என்று கணீர் குரலால் நிகழ்ச்சியைத் துவக்க... உற்சாகம் பற்றிக் கொண்டது!

'பொம்மிஸ் நைட்டீஸ்' உரிமையாளர் ஷியாமளாதேவி ராஜா நடுவராக பொறுப்பேற்க... ரங்கோலி போட்டியில் பங்கேற்ற 102 வாசகிகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடங்களில் கைவண்ணத்தை காட்டத் தொடங்கினர். திராட்சைப் பழ கோலம் வரைந்த வனஜாவுக்கு முதல் பரிசு. இரண்டாவது பரிசு கீதாவுக்கும், மூன்றாவது பரிசு கண்மணிக்கும் சென்றது. ஸ்லோகன் போட்டியில் தீபா, வனஜா மற்றும் லாவண்யா பரிசுகளை புக் செய்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நிகழ்ச்சியின் ஹைலைட்டாக அமைந்தது பேச்சுப் போட்டி! 'என் மனதைத் திறந்த நிகழ்வு...’ என்கிற தலைப்பில் பேசிய திருச்சியைச் சேர்ந்த 66 வயதான சின்னப்பொண்ணு, ''பக்கத்து வீட்டுத் தோழியின் மகன் எதிர்பாராமல் இறந்துவிட்டார். அவர் மருமகளுக்கோ சின்ன வயது... நிலைகுலைந்து நின்றாள். 'உன் மருமகளுக்கு, உன் இளைய மகனை மறுமணம் செய்து வை. ஊர் உலகத்தைப் பற்றிக் கவலைப்படாதே’ என்று தோழியிடம் பல கட்டங்களாக தைரியம் சொன்னேன். அது நடந்தது. இன்று அந்தத் தம்பதி குழந்தைகளுடன் சந்தோஷமாக இருக்கின்றனர். எதிர்பார்க்கவில்லை... எனக்கும் என் தோழியின் சூழல் வரும் என்று. என் மருமகன் திடீரென இறந்துவிட்டார். மகள் விதவையாக வந்து நின்றாள். அவளுக்கு ஆறுதல் சொல்லி, தைரியம் சொல்லி மறுமணம் செய்து வைத்தேன். இப்போது அவளும் நல்லபடியாக வாழ்கிறாள். கைம்பெண் கொடுமைகள் எல்லாம் சென்ற தலைமுறைகளோடு போகட்டும். இனிமேலாவது விதவை மறுமணத்தை ஆதரியுங்கள்!'' என்று முடித்தபோது, கூட்டம் சிலிர்த்துப் பாராட்டியது. முதல் பரிசு அவருக்கே! பாகம்பரியாள், மீனா முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது பரிசைப் பெற்றனர்.

திறந்தது கண்கள் மட்டுமல்ல்... மனதும் !

மறுநாள் (டிசம்பர் 25)... மதுரையில் 'பொங் கல் திருநாள்...’! அன்னை ராஜாமணி சங்கரலிங்கம் மஹாலில் தோழிகளின் சங்கமத்தால் சந்தோஷம் கரைபுரண்டு ஓட, நிகழ்ச்சியைத் தொடங்கினார் தொகுப்பாளர் சுமதி ராஜகோபால். போட்டிகளில் பரிசுகளை வெல்ல சபதம் ஏற்று, களத்தில் முண்டியடித்தனர் தோழிகள்!

திறந்தது கண்கள் மட்டுமல்ல்... மனதும் !

மலர்கள், மயில்கள் என்ற வழக்கமான கோலங்களுடன்... முல்லை-பெரியாறு, மதநல்லிணக்கம், தேசப்பற்று என  ரங்கோலியில் மெஸேஜ் சொன்னார்கள் மதுரை மல்லிகள்.

''14 வருஷமா 'அவள் விகடன்’ மதுரையில் நடத்துற எல்லா போட்டிகள்லயும் கலந்துட்டு பரிசு வாங்குறவ நான். இந்த முறையும் மிஸ் பண்ண மாட்டேன்!'' என்ற மகாலட்சுமிக்கு முகமெல்லாம் பெருமை. சொன்னது போலவே... புவனா பாண்டியன், பிருந்தா ஆகியோருடன் தானும் பரிசை வென்றார் மகாலட்சுமி!

ஸ்லோகன் போட்டியில் வார்த்தை ஜாலத்திலும் கலக்கினார்கள் தோழிகள். கருத்துடன் ரைமிங்கையும் கலந்து கொடுத்த பிரியதர்ஷினி, முருகேஸ்வரி மற்றும் பனிமலர் பரிசுகளை வென்றனர். பேச்சுப் போட்டியில், அரசியல், சினிமா, குடும்பம், சமூக அக்கறை என எல்லா ஏரியாவிலும் புகுந்து புறப்பட்டனர் வாசகிகள். க்ளாப்ஸை அள்ளிய சின்னப்பொண்ணு, ரேவதி மற்றும் ராமலட்சுமி பரிசுகளை வென்றனர்.

நிறைவாக, வாசகிகளை நடனமாடச் சொல்லி மேடைக்கு அழைத்தார் தொகுப்பாளர். முதலில் குழந்தைகளை மட்டும் மேடையேற்றிய அம்மாக்கள், பின்னர் உற்சாகத்தில் ஒவ்வொருவராக மேடையேறி போட்டி போட்டு ஆட, அரங்கமே அதிர்ந்தது ஆரவாரத்தால்!

திறந்தது கண்கள் மட்டுமல்ல்... மனதும் !

நடுவர்களாக வந்து சிறப்பித்த, கல்வித் துறையில் 34 ஆண்டுகால அனுபவம் பெற்ற பெரியத்தாய், கைவினைக் கலைஞர் ஜெயா வெற்றிமணி ஆகியோர்... வெற்றியாளர்களுக்குப் பரிசுகளை வழங்கினர்.

ராஜபாளையம் மற்றும் மதுரை இரண்டு இடங்களிலுமே முதல் பரிசாக வெட்கிரைண்டர், இரண்டாவது பரி¢சாக மிக்ஸி, மூன்றாவது பரிசாக கேஸ் ஸ்டவ் ஆகியவை வழங்கப்பட்டன. பார்வையாளர்கள் அனைவருக்கும் சக்ரா கோல்டு நிறுவனத்தினரின் டீ தூள் பேக் அடங்கிய கிஃப்ட் பேக் வழங்கப்பட்டது.

விடைபெற்று தோழிகள் கலைந்தபோது தங்களுடன் தவறாமல் எடுத்துச் சென்றது... மனதில் உற்சாகமும் உதட்டில் புன்னகையும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism