Published:Updated:

கேபிள் கலாட்டா

ரீல்ஸ் கெமிஸ்ட்ரி....ரியல்ல டாம் அண்ட் ஜெர்ரி ! படம் : எஸ்.சாய் தர்மராஜ்

கேபிள் கலாட்டா

ரீல்ஸ் கெமிஸ்ட்ரி....ரியல்ல டாம் அண்ட் ஜெர்ரி ! படம் : எஸ்.சாய் தர்மராஜ்

Published:Updated:
##~##

வீட்டு வாசல்ல வாழைமரம், பந்தல், மாவிலைத் தோரணம்னு காரைக்குடியே கலகலனு கெடக்க, 'ஊருக்குள்ள என்ன விசேஷம்?'னு விசாரிச்சா... அட... அது நம்ம 'சரவணன்- மீனாட்சி’யோட (விஜய் டி.வி) நிச்சயதார்த்த எபி சோட் ஷூட்!

பட்டு வேஷ்டிகள், பட்டுப் புடவைகள் சகிதம் ரெண்டு தரப்புக் குடும்பமும் சம்பந்தம் பேசக் கூடியிருக்க, ''பொண்ண வரச் சொல்லுங்கோ!''னு ஆர்டர் போட்டார் ஐயர். ஸ்ரீஜா (மீனாட்சி) வர்றதுக்கு முன்னயே செந்தில் (சரவணன்) 'ஜொள்’ளாக, அவரை இழுத்துப் பிடிச்சு உட்கார வைத்தார் அப்பா ராஜசேகர். 'அடச் சீ அல்பம்... உக்காரு’னு அம்மா குயிலி பார்வையாலேயே மிரட்ட, வழக்கமான 'டோன்ட் கேர்’ ரியாக்ஷன் செந்தில்கிட்ட.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''ஒருவழியா ஜோடியை சேர்த்து வெச்சுட்டீங்க போல..?''னு டைரக்டர் அழகர்கிட்ட கேட்டா,

''நிச்சயதார்த்த எபிசோட்ல கண்டிப்பா நிச்சய தார்த்தம் நடந்துடணுமா என்ன..?''னு அந்த இடத்துல ஒரு கொக்கி வெச்ச டைரக்டர்,

''அதை விடு ரீட்டா... ஷூட்லதான் சரவணன், மீனாட்சி ரெண்டு பேரும் செம்ம கெமிஸ்ட்ரி பார்ட்டி. கேமராவை ஆஃப் பண்ணிட்டா டாம் அண்ட் ஜெர்ரி ரேஞ்சுக்கு சண்டை போடுவாங்க!''னு சீக்ரெட் உடைச்சார்.

'ஒரு சாம்பிள் ப்ளீஸ்...’னு ஜோடிகள் பக்கம் திரும்பினா,

''செந்திலுக்கு ஆக்டிங் தெரியாது ரீட்டா... ஓவர் ஆக்டிங்தான் தெரியும்!''னு வாரினாங்க ஸ்ரீஜா.

கேபிள் கலாட்டா

''ஸ்ரீஜா தப்புத் தப்பா தமிழ் பேசுறதைக் கேட்டு, ஒருநாள் நான் தற்கொலை பண்ணிக்கப் போறேன்!''னு கலாய்ச் சார் செந்தில்.

''நான் ஒரு மலையாளப் பொண்ணு. அஞ்சு வருஷமாதான் தமிழ் சீரியல் பக்கம் வந்திருக்கேன். இப்போ நல்லா தமிழ் பேசக் கத்துக்கிட்டாலும், கொஞ்சம் மலையாள வாசம் வரத்தானே செய்யும்?''னு ஸ்ரீஜா கேட்க,

''பொய் ரீட்டா... தமிழ்ல மலையாள வாசம் வராது, மலையாளத்துலதான் கொஞ்சூண்டு தமிழ் வாசம் வரும்!''னு மறுபடியும் ஸ்ரீஜாவை காலி செய்தார் செந்தில்.

''ஹாய் ரீட்டாக்கா!''னு மீனாட்சியின் தங்கை களா வர்ற துறுதுறு சுசித்ரா, சத்தியசாய் ரெண்டு பேரும் வந்து நம்மிடம் கை குலுக்க, ''பொதுவா பேருக்குதான் சீரியல்கள்ல குழந்தைகளை யூஸ் பண்ணுவாங்க. ஆனா, இங்க ஹீரோயினோட தங்கையா ரெண்டும் இருக்கறதுனால இவங்க கேரக்டருக்கு நல்ல வேல்யூ''னு சர்டிஃபிகேட் கொடுத்தார் டைரக்டர் அழகர்.

''ஹையா! அப்ப நாங்க ரெண்டு பேரும் செகண்ட் ஹீரோயின்ஸா? ஜாலி!'னு சுசித்ரா குறும்ப,

''வாங்கடி வாங்க! நண்டு சிண்டுகளா இருந்து கிட்டு நீங்க செகண்ட் ஹீரோயின்களா? நான் தான் செகண்ட் ஹீரோயின், நான்தான் செகண்ட் ஹீரோயின், நான்தான் செகண்ட் ஹீரோயின்!'னு நறநற என்ட்ரி கொடுத்தார் சரவணனின் தங்கையா வர்ற ரம்யா! அவரை படாதபாடுபட்டு சமாதானப்படுத்தினார் டைரக் டர்.

''சரி, பொங்கலுக்கு என்ன ஸ்பெஷல்..?!''னு மொத்த யூனிட்டுக்கும் நாம ஒரே கேள்வியைப் போட்டோம். ''சென்னைப் பட்டணத்துக்குள்ள போய் அடைஞ்சுடாம, பொங்கல் அன்னிக்கும் இப்படி ஏதாச்சும் ஒரு கிராமத்துல அவுட்டோர் ஷூட் வெச்சா, அந்த மக்களோட சேர்ந்து வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், கரும்பு, ஜல்லிக்கட்டுனு ஒரிஜினல் பொங்கல் கொண்டாடலாம்!''

- ஆசையைச் சொன்னாங்க ஆர்டிஸ்ட்ஸ். டைரக்டர் டைரி என்ன சொல்லுதுனு அழகரைப் பார்த்தா, ''பொங்கல் வெச்சுட்டாப் போச்சு!''னு சிரிச்சார் சார்! ''பொங்கலோ பொங்கல்... சரவணன் - மீனாட்சிப் பொங்கல்!''னு சந்தோ ஷத்துல கத்தித் தீர்த்தது மொத்த டீமும்!

 வாசகிகள் விமர்சனம்

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

கேபிள் கலாட்டா

150

துளசி விறுவிறு!

''சன்.டி.வி-யில் ஒளிபரப்பாகும் 'தென்றல்' தொடர் விறுவிறுப்பாக போகிறது. அதிலும் மிகமுக்கியமாக துளசியின் கேரக்டர் சீற ஆரம்பித்திருப்பது... சீரியலோடு எங்களை மேலும் ஒட்ட வைத்துள்ளது. குறிப்பாக, சாருவை பார்த்து... 'நூறு பேர் இருந்தாலும் அவங்க முன்னாடி தைரியமா இவர்தான் என் புருஷன்னு என்னால சொல்ல முடியும். உன்னால அப்படி முடியுமா? இல்ல உன் அப்பா, அம்மா முன்னாடியாவது உன்னோட ஆசையை சொல்ல முடியுமா? இனியும் என்னை என் கணவரோட நான் வாழறதை தடுக்கறதுக்காக சதி செய்யாதே' என்று துளசி அழுத்தம் திருத்தமாக கூறியது... 'பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு... பொங்கினால் தாங்க முடியாது' என்பதை உணர்த்துவது போலிருந்து'' என்று மனம்விட்டு பாராட்டுகிறார் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த எஸ்.ராஜேஸ்வரி

விஷம விளம்பரம்!

''அந்த ஆணுறை விளம்பரத்தைப் பார்த்தால்... ஆத்திரம் பொங்குகிறது. வாஷிங் மெஷின் ரிப்பேர் பார்ப்பதற்காக இளைஞன் வீட்டுக்கு வருகிறான். வாஷிங் மெஷினை சுத்தம் செய்யும்போது அதன் அடியில் அட்டைப்பெட்டியோடு கிடக்கும் ஆணுறை காணும் அவன், ஆச்சர்யத்துடன் திரும்பிப் பார்க்கிறான். அங்கே ஈஸிசேரில் தாத்தா - பாட்டி இருவரும் அர்த்தபுஷ்டியுடன் சிரிக்கிறார்கள். இந்தக் காட்சியைப் பார்க்க சகிக்கவில்லை. நம்மூரில் தாத்தா- பாட்டிகளுக்கென மரியாதையும், கௌரவமும் இருக்கிறது. அதை இப்படிப்பட்ட விளம்பரம் மூலமாக சீரழிக்க வேண்டாமே'' என வன்மையாகக் கண்டிக்கிறார் திருச்சியிலிருந்து லட்சுமி சுதாகரன்.

தினம் தினம் கச்சேரி!

''ஜெயா டி.வி-யில் சங்கீத சீஸனுக்கு ஏற்ப தினமும் மாலை ஆறு மணி முதல், ஏழு மணி வரை மார்கழி உற்சவ கச்சேரிகள் ஒளிபரப்பாகின்றன. நேரில் சென்று பார்க்க முடியாத பல ரசிகர்களுக்கு இந்நிகழ்ச்சி வரப்பிரசாதம். கச்சேரி சீஸனில் மட்டுமல்லாமல்... தினமும் இதே நேரத்தில் ஏதாவது சங்கீத கச்சேரியை தொடர்ந்து ஒளிபரப்பினால் மனதுக்கு இதமாக இருக்கும்'' என்று விருப்பத்தைத் தெரிவிக்கிறார் பெங்களூருவை சேர்ந்த பானுமதி வைத்தியநாதன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism