Published:Updated:

அனிதா

தம்பிக்காக வாழ்ந்தவள்... தண்ணீரில் கரைந்தவள்! மோ.அருண் ரூப பிரசாந்த்படங்கள் : எம்.உசேன்

அனிதா

தம்பிக்காக வாழ்ந்தவள்... தண்ணீரில் கரைந்தவள்! மோ.அருண் ரூப பிரசாந்த்படங்கள் : எம்.உசேன்

Published:Updated:
##~##

பழவேற்காடு படகு விபத்து, 2011-ம் ஆண்டின் முடிவில், சொல்லில் வடிக்க முடியாத பெருஞ்சோக வரலாறாக பதிவாகியிருக்கிறது!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, பழவேற்காடு பகுதிக்கு குடும்ப அங்கத்தினர் உட்பட 25 பேரோடு சுற்றுலா சென்றார் கும்மிப்பூண்டியைச் சேர்ந்த ஹோட்டல் மற்றும் சூப்பர் மார்க்கெட் அதிபர் சுந்தரபாண்டியன். அங்குள்ள ஒரு தீவில் ஜாலியாக பொழுதைக் கழித்துத் திரும்பும்போது... ராட்சத அலை தாக்கி படகு கவிழ்ந்துவிட, மூன்று சிறுவர்கள் தவிர்த்து மற்ற 22 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விபத்தில் பலியான அத்தனை பேருமே ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்... அனிதா மற்றும் நசீரா தவிர. படகை ஓட்டிச் சென்ற அன்சாரியின் மனைவி நசீரா. சுந்தரபாண்டியனின் சூப்பர்மார்க்கெட்டில் வேலை பார்த்தவர் அனிதா. இழந்த அத்தனை உயிர்களும் மதிப்பிட முடியாதவை. என்றாலும், அனிதாவின் இழப்பால் நட்டாற்றில் நிற்கும் அவருடைய குடும்பம்... நம்மை இன்னும் அதிகமாக உலுக்கி எடுக்கிறது!

அனிதா

டிசம்பர் 17 அன்று தன்னுடைய 20-வது பிறந்தநாளை அனிதா கேக் வெட்டிக் கொண்டாடியபோது, யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் அவள் இந்த ஆண்டின் இறுதியில் தலைப்புச் செய்தி ஆவாள் என்று. விபத்து நடந்த இடத்தில் இருந்து எட்டு கிலோ மீட்டருக்கு அப்பால்... காட்டுப்பள்ளி என்ற இடத்தில், மூன்று நாட்கள் கழித்துதான் அனிதாவின் உடல் சிக்கியது. பாறைகளில் மோதி முகம் மொத்தமும் சிதைந்து, உடல் முழுவதும் உப்பிப் போய், உடுத்தியிருந்த சுரிதார் மட்டுமே அது அனிதா என்று உறுதிபடுத்த முடிந்த நிலையில் கரை ஒதுங்கினார், வாழ்வாங்கு வாழ வேண்டிய அந்த சின்னப்பெண்.

அனிதா

கும்மிடிப்பூண்டி, பாலகிருஷ்ணாபுரத்தில்... இரண்டு சைக்கிள்கள்கூட ஒரே நேரத்தில் செல்ல முடியாத, குறுகலான ஒற்றையடிப் பாதையில் இருக் கிறது ஆஸ்பெஸ்டாஸ் கூரை போட்ட அனிதாவின் வீடு. நோய் வாய்ப்பட்ட தந்தையைக் காப்பாற்ற, படிப்பை கைவிட்டு, சுந்தரபாண்டியனின் சூப்பர் மார்க்கெட்டில் வேலைக்குச் சேர்ந்தார் அனிதா. இவரு டைய சம்பாத்தியத்தின் மூலம் படாதபாடுபட்டு டயாலிஸிஸ் சிகிச்சையெல்லாம் கொடுத்தும் கூட தந்தையைக் காப்பாற்ற முடியவில்லை. ஒன்றரை வருடங் களுக்கு முன் அவர் இறந்துவிட, தம்பியைப் படிக்க வைப்பதற்காக வேலையைத் தொடர்ந்துள்ளார் அனிதா.

சுறுசுறுப்பு மற்றும் திறமை ஆகியவற்றின் மூலம் சூப்பர்மார்க்கெட்டின் கணக்கு வழக்குகளை பார்த்துக் கொள்ளும் அளவுக்கு வளர்ந்த அனிதா, முதலாளியின் குடும்பத்தாருக்கு செல்லமாகிப் போயிருக்கிறார். அந்த பாசம்தான் அவர்களின் குடும்பச் சுற்றுலாவில் ஊழியரான அனிதாவையும் சேர்த்துக் கொள்ளச் செய்துள்ளது.

''என் தம்பி கார்த்திக் படிக்கணும். எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்ல. அவன் இந்த குடும்பத்தைக் காப்பாத்துற அளவுக்கு வளர்ற வரைக்கும், நான் கல்யாணம் செஞ்சுக்க மாட்டேன்னு அடிக்கடி சொல்லிக்கிட்டே இருப்பா''

- வார்த்தைகள் மீறி கண்ணீர் தெறிக்கிறது... அனிதாவின் அக்கா உஷாவுக்கு.

அனிதாவின் அம்மா அலமேலுவோ, விபத்து நடந்த அன்றிலிருந்து இன்று வரை, 'அனிதா' என்கிற பெயரைத் தவிர வேறெதையும் உச்சரிக்கவில்லை.

சினிமாவில் வறுமையைப் படம் பிடித்துக் காட்டினால், 'ப்ச்... ஓவரா ரீல் சுத்துறாய்ங்கடா’ என சர்வசாதாரணமாக சொல்லிவிடுவோம். ஆனால், சினிமாவையும் மிஞ்சிய வியாதியும், வறுமையும் சூழ்ந்த நிலையிலும்... தன்னம்பிக்கையோடும் மகிழ்ச்சியோடுமே காலம் கழித்து வந்தது அந்தக் குடும்பம் - அனிதாவின் வருமானத்தை நம்பி. இப் போது அத்தனையையும் ஒரேயடியாக மூழ்கடித்துவிட்டது இந்த படகு விபத்து!

'ஜஸ்ட் ஃபார் ஃபன்’ என்று நாம் நினைப்பவையே நமக்கு எமனாகலாம் என்பதற்கு மற்றுமொரு உதாரணமாகவும் முடிந்திருக்கிறது இவர்களுடைய கிறிஸ்துமஸ் படகு சவாரி. 12 பேரே அமரக்கூடிய கூடிய மீன் பிடி படகில் 25 பேரை ஏற்றியது, லைஃப் ஜாக்கெட் இல்லாமல் இருந்தது... என விபத்துக்கான காரணங்கள் பலப்பல இருக்கலாம். அவற்றில் முழு முதற்காரணம், 'ஒருவேளை படகு விபத்துக்குள்ளானால் என்னாவது?’ என்கிற எச்சரிக்கை எண்ணம் யாருக்கும் இல்லாமல் இருந்ததே.

அனிதா

ஹெல்மெட் போடாமல் பைக் ஒட்டுபவர்கள், ஸீட் பெல்ட் போடாமல் கார் ஓட்டுபவர்கள், செல்போனில் சிணுங்கிக் கொண்டே சிக்னலைக் கடப்பவர்கள் நம்மில் எத்தனையோ பேர். அவர்கள் அனைவருக்குமே மற்றுமொரு எச்சரிக்கை மணியை அடித்திருக்கிறது... இந்த விபத்து.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism