ஜெயஸ்ரீ பிக்சர்ஸ் எஸ்.வி.ரமணனின் மகள்கள்...

நடனக் கலைஞர்கள்.

இசையமைப்பாளர் அனிருத்தின் அம்மா மற்றும் சித்தி.

‘விஐபி’ படத்தில் நடித்த ரிஷிகேஷின் பெரியம்மா மற்றும் அம்மா.

இவர்கள் இருவரையும் எப்படி வேண்டு மானாலும் அறிமுகப்படுத்தலாம். இவற்றை எல்லாம் தாண்டிய அடையாளத்துடன் அகம் கவர்கிறார்கள் அக்காவும் தங்கையும்.

இணைபிரியாத சகோதரிகளான இவர்கள், பிசினஸ் பார்ட்னர்ஸும்கூட. ‘இவென்ட் ஆர்ட்’ என்கிற பெயரில் இவென்ட் மேனேஜ் மென்ட் கம்பெனி நடத்துகிறார்கள்.

இரண்டு மணி நேரம் சேர்ந்திருந்தாலே சண்டை பிடிக்கிற சகோதரிகளுக்கு மத்தியில் 24 மணி நேரமும் ஒன்றாகவே இருக்கும் லட்சுமி - சரஸ்வதி சகோதரிகள் வியக்க வைக்கிறார்கள்.

‘`அது அம்மாவுக்கு நாங்க கொடுத்த வாக்கு’’ - பாசப் பின்னணிக்கு இன்ட்ரோ கொடுத்தபடியே பேசுகிறார் மூத்தவரும் அனிருத்தின் அம்மாவுமான லட்சுமி.

‘`அப்பா எஸ்.வி.ரமணன், ஜெயஸ்ரீ பிக்சர்ஸ் என்ற பெயர்ல மீடியாவில் அந்தக் காலத்திலேயே ரொம்பப் பிரபலம். ‘இவ்ளோ பெரிய பிசினஸாச்சே... உங்களுக்கு ஆம்பிளைப் பசங்க இல்லை. எப்படிப் பார்த்துக்கப் போறீங்க’னு அவர்கிட்ட நிறைய பேர் கேட்டிருக்காங்க. அப்பாவும் அம்மாவும் எங்க ரெண்டு பேருக்கும் வேலை கத்துக்கொடுத்து மீடியாவில் அறிமுகப்படுத்தினாங்க. சாட்டிலைட் சேனல்கள் வந்த புதுசுல மீடியாவில் பெண் இயக்குநர்கள் இல்லை. டி.வி சீரியல் இயக்கத்துக்கு வந்த முதல் பெண் இயக்குநர்கள் என்ற பெருமை எங்களுக்கு வரவும் அதுதான் காரணம். புரொடக்ஷனில் பெண்களே இல்லாத அந்தக் காலத்தில் எங்கம்மா அந்தத் துறையில் பெரிய விஷயங்கள் பண்ணிட்டிருந்தாங்க. அம்மாவும் அப்பாவும் எங்க ரெண்டு பேர் மேலும் வெச்ச நம்பிக்கைதான் நாங்க இன்னிக்கு இருக்கிற இந்த இடத்துக்குக் காரணம்.

பிசினஸ் நுணுக்கங்களையும் மீடியா நெளிவு சுளிவுகளையும் கத்துக்கொடுக்கிறதுக்கு முன்னால அம்மாவும் அப்பாவும் எங்களுக்குச் சொன்ன பாலபாடம் ஒண்ணு இருக்கு. ‘ரெண்டு பேரும் கடைசி வரைக்கும் ஒற்றுமையா இருக்கணும். எந்தக் காரணத்தைக் கொண்டும் உங்க உறவில் விரிசல் வரக் கூடாது.

பணம், பேர், புகழ் சம்பாதிக்கிறது முக்கியமில்லை. ஒற்றுமையா இருக்கிறதுதான் எல்லாத்தையும்விடப் பெருமையானது’னு சொல்லி வளர்த்தாங்க. அது ரொம்ப ஆழமா மனசுல பதிஞ்சிருந்ததுதான் காரணமா இருக்கும்’’ - அக்கா நிறுத்த, தொடர்கிறார் தங்கையும் ரிஷிகேஷின் அம்மாவுமான சரஸ்வதி.

‘`நாங்க ரெண்டு பேரும் இன்னிக்கும் ஒரே மாதிரி டிரஸ் பண்ணுவோம். ஒரே மாதிரி ஜுவல்ஸ் போட்டுப்போம். அது எங்கம்மா ஏற்படுத்தின பழக்கம். சின்ன வயசுலேருந்தே என்ன படம் ரிலீசானாலும் அதைப் பார்த்துட்டு எங்க ரெண்டு பேருக்கும் அந்தப் படத்துல வர்ற மாதிரி டிரஸ்லேருந்து, செருப்பு வரைக்கும் ஒரே மாதிரி போட்டு அழகு பார்ப்பாங்க. ‘நாங்க டூ பெர்சன்ஸ் இன் ஒன் யூனிட்’டுங்கிறது சின்ன வயசுலேயே எங்க மனசுல பதிஞ்சிருச்சு.

எங்க ரெண்டு பேருக்கும் ரெண்டு வயசு வித்தியாசம். ஆனாலும், பல விஷயங்களை ரெண்டு பேரும் ஒண்ணாவே கத்துக்கிட்டோம். ரெண்டு பேரும் சேர்ந்து டான்ஸும் சம்ஸ்கிருத ஸ்லோகங்களும் கத்துக்கிட்டோம். நான் தபேலாவும், அக்கா சிதாரும் கத்துக்கிட்டோம். அந்தக் காலத்துல பெண்கள் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் கத்துக்கிறது பெரிய விஷயம். பொண்ணுங்கன்னா இதையெல்லாம் பண்ணக்கூடாதுங்கிற எந்தத் தடையும் இல்லாம வளர்த்தார் அப்பா!’’

அடுத்து பேசுபவர் அம்மு. அக்காவை அப்படித்தான் அழைக்கிறார் சரஸ்வதி. அக்காவுக்கு அவர் செல்லமாக ‘சச்சு’.

‘`சின்ன வயசுல இப்படிச் சில விஷயங்களைச் சேர்ந்து பண்ணாலும் ஒரு கட்டத்துக்குப் பிறகு பெரும்பாலும் அநேக அக்கா தங்கைகள் வேற வேற துறைகளை நோக்கிப் போறதுதான் இயல்பு. ஆனா, எங்க விஷயத்துல அதிலும் அற்புதம் நடந்தது. ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரியான விஷயங்கள் பிடிச்சது. ரெண்டு பேருக்கும் மீடியா ஆர்வம் இருந்தது. ரெண்டு பேரும் கல்யாணமாகி ஒரே ஊர்ல, பக்கத்துப் பக்கத்துல இருக்கோம். எங்க ரெண்டு பேரையும்விட எங்க கணவர்கள் ரொம்ப க்ளோஸ்.

எனக்கு சச்சுவும் அவளுக்கு நானும்தான் எல்லாரையும்விட முக்கியம்னு கல்யாணமானதுமே புரிஞ்சுக்கிட்டாங்க. எங்க நாலு பேரையும்விட எங்க பசங்க நாலு பேரும் இன்னும் க்ளோஸ். எங்க ரெண்டு பேரையும் கிண்டல் பண்றதுல நாலு பேரும் ஒரே மாதிரி. எங்களை ஓட்டறதுதான் அவங்களுடைய முக்கியமான பொழுதுபோக்கே!’’ - லட்சுமி சொல்லும்போது, `அனிருத் அண்டு கோ'வின் கலாட்டா கண்முன் விரிகிறது.

‘`எங்களுக்குள்ளேயும் எக்கச்சக்கமா சண்டைகள் வரும். ஆனா, எல்லாம் நாலு சுவர்களுக்குள்ளேயே நடந்து சமாதானமாகிடும். ரெண்டு பேருக்கும் எங்களுடைய பலங்களும் பலவீனங்களும் தெரியும். நிறைய விட்டுக்கொடுப்போம். எந்த நிலையிலும் எங்களுக்குள்ளே ஈகோ எட்டிப் பார்த்ததில்லை.

நாங்க நடத்தற ‘இவென்ட் ஆர்ட்’ கம்பெனிக்கு 15 வயசு. டி.வி சீரியல்ஸ் பண்ணிட்டிருந்த டைம் அது. வாரம் ஒருமுறை ஒளிபரப்பாகிற சீரியல்கள் மாறி, டெய்லி வரும் சீரியல்கள் பிரபலமாக ஆரம்பிச்சதும் நாங்களும் அதுக்கு மாறினோம். எங்க ரெண்டு பேருடைய குழந்தைகளும் சின்னவங்களா இருந்தாங்க. காலையில 6 மணிக்குக் கிளம்பினா, வீடு திரும்ப நைட் 10 மணி ஆகும். குடும்பத்துக்கும் குழந்தைகளுக்கும் டைம் ஒதுக்க முடியாத அளவுக்கு பிசியா இருந்தோம். அது கொஞ்சம் உறுத்தலா இருந்ததால வேற என்ன பண்ணலாம்னு யோசிச்சிட்டிருந்தோம். எங்க ரெண்டு பேருடைய உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் என்ன ஃபங்ஷன் நடந்தாலும் எங்களுடைய பங்களிப்பு இருக்கும். சின்ன விசேஷமா இருந்தாலும் அதை வித்தியாசமாக்க என்ன செய்யலாம்னு யோசிச்சு கிரியேட்டிவா ஏதாவது செய்வோம். அப்பதான் ஒரு கார்ப்பரேட் இவென்ட்டை நடத்திக்கொடுக்கிற வாய்ப்பு வந்தது. அதுதான் ஆரம்பம். எங்களுடைய வேலை பிடிச்சுப்போனதால அந்த இவென்ட்டைக் கொடுத்தவர் தன் மகளுடைய கல்யாணத்தை நடத்திக் கொடுக்கச் சொல்லிக் கேட்டார். அதுதான் நாங்க பண்ற வெட்டிங் பிளானிங் பிசினஸுக்கான முதல் புள்ளி. இயல்பிலேயே டான்ஸும் மியூசிக்கும் எங்ககூடவே இருக்கு. அதனால ஷங்கர் மகாதேவன், ஜாகிர் ஹுசைன், அருணா சாய்ராம் மாதிரி பெரிய பெரிய கலைஞர்களை வெச்சு கச்சேரிகள் நடத்த ஆரம்பிச்சோம். இப்போ கார்ப்பரேட் கம்பெனி இவென்ட்ஸ், வெடிங் பிளானிங், இசைக் கச்சேரிகள்னு மூணு ஏரியாக்களில் பிசியா இருக்கோம்’’ - தங்கைக்கு விழிகளும் அக்காவுக்கு இதழ்களும் விரிகின்றன.

‘`பிசினஸுக்காகப் பெரும்பாலும் ஒண்ணாவே இருக்கோம். ஆனாலும், எங்களுக் கான பர்சனல் டைமையும் விட்டுக்கொடுக்க மாட்டோம். எங்களுக்குனு ஒரு லேடீஸ் டிராவல் குரூப் இருக்கு. அடிக்கடி அவங்களோடு எங்கேயாவது டூர் கிளம்பிடுவோம். நாங்க ரெண்டு பேர் மட்டுமே போகும் டூரும் இருக்கு. எந்த நாட்டுல என்ன முக்கியமான இசைக் கச்சேரி நடந்தாலும் கிளம்பிடுவோம். மியூசிக் கச்சேரிக்காக நாடுவிட்டு நாடு போகும் சிஸ்டர்ஸ் நாங்களாதான் இருப்போம்.

சமீபத்தில் என்னுடைய பிறந்தநாள் வந்தது. ரஜினி சார், ஜாகிர் ஹுசைன், ஷங்கர் மகாதேவன் மாதிரி எனக்கு யாரையெல்லாம் ரொம்பப் பிடிக்குமோ, அவங்கக்கிட்டருந்து பர்த்டே விஷ் வாங்கி எனக்குப் போட்டுக் காட்டினாங்க அக்கா. அந்த சர்ப்ரைஸ் அடங்கறதுக்குள்ளேயே திடீர்னு கதவைத் திறந்துட்டு ஷங்கர் மகாதேவன் உள்ளே வந்து என் எதிர்ல நின்னது உச்சகட்ட சர்ப்ரைஸ். உலகத்திலேயே பெஸ்ட் அக்கானு ஃபீல் பண்ண வெச்ச எமோஷனல் மொமென்ட் அது’’ - சொல்லும்போதே நெகிழ்கிறார் சரஸ்வதி.

‘`நான் பண்ணினதைவிடவும் என் பர்த்டேவுக்குப் பெரிய சர்ப்ரைஸ் கொடுத்தது சரஸ்வதிதான். என் வாழ்க்கையின் ஒருநாளில் நான் என்னவெல்லாம் பண்ணுவேங்கிறதை ஸ்டாண்ட்அப் காமெடியா பண்ணி அசத்திட்டா. காலையில காபி குடிச்சுக்கிட்டே பேப்பர் படிப்பேன். அப்போ கடவுளே எதிர்ல வந்து நின்னாலும் கண்டுக்க மாட்டேன். அப்படியொரு விசித்திரமான பழக்கம் உண்டு எனக்கு. இப்படி என்னுடைய ஒருநாளை அவளே ஸ்கிரிப்ட்டா பண்ணி, நடிச்சிருந்தா. வந்த கூட்டம் மொத்தமும் நான்ஸ்டாப்பா சிரிச்சிட்டிருந்தாங்க. வாழ்க்கையில் மறக்க முடியாத பிறந்தநாள் அது’’ - பெருமை பொங்குகிறது பேச்சில்.

‘`அக்கா தங்கை உறவு மட்டுமில்லை, எந்த உறவும் காலத்துக்கும் தொடரணும்னா ரெண்டு தரப்பிலும் நிறைய விட்டுக்கொடுக்கணும். இந்த உலகத்துல அந்த ரெண்டு பேர் மட்டும்தான் இருக்கோம் என்கிற மாதிரி நடந்துக்கணும். சுத்தியிருக்கிறவங்களால என்ன பிரச்னை வந்தாலும் கண்டுக்கக் கூடாது. உனக்கு என்னைத் தெரியும் எனக்கு உன்னைத் தெரியும்னு நம்பணும்.

இதையெல்லாம் தாண்டி ஒரு கண்டிஷன் முக்கியம். எவ்வளவு நெருக்கமா இருந்தாலும் ரெண்டு பேருக்கும் ப்ரைவசி முக்கியம். நம்ம எல்லையை உணர்ந்து நடந்துக்கணும். கற்பனையா நாம வரைஞ்சுக்கிற எல்லைக்கோடு தான். ஆனாலும் அது ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கணும்.’’

கண்டிஷன்ஸ் அப்ளை முதல் அன்கண்டிஷனல் அன்பு வரை உறவுகள் சிறக்க இவர்கள் சொல்லும் ரகசியங்கள் சூப்பர்!

- ஆர்.வைதேகி