Published:Updated:

அஞ்சலி தேவிக்கள் நதியாக்கள்... அமலா பால்கள் !

த.சிதார்த்,படம் :வி.ரரஜேஷ்

அஞ்சலி தேவிக்கள் நதியாக்கள்... அமலா பால்கள் !

த.சிதார்த்,படம் :வி.ரரஜேஷ்

Published:Updated:
##~##

இந்த முறை ஜாக்பாட்... கோவைக்கு! ஆம்... டிசம்பர் 18-ம் தேதியன்று, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது... 'அவள் விகடன்’ - 'அட்வென்ச்சர்ஸ் இந்தியா’ இணைந்து நடத்தும் 'தகதக தங்கப் புதையல்’ போட்டி! தொகுப்பாளர் சுமதி ராஜகோபால், ''கோவை வாசகிகள் கொஞ்சம் ஸ்பெஷல்!'' என்று அன்பு பேசி நிகழ்ச்சியை ஆரம்பித்து வைக்க, கூடுதல் கொண்டாட்டத்தோடு போட்டிகளுக்குத் தயாராயினர் கொங்கு மண்டல தோழிகள்

பானையை ஒரு பார்வை பார்த்தே... அதற்குள் இருக்கும் காசுகள் (தங்க காயின் போலிருக்கும் சாக்லேட்) எத்தனை என்று சொல்லும் சவாலான போட்டி... நவக்கிரகத்தைச் சுற்றுவது போல் பயபக்தியுடன் பானையைச் சுற்றினார் அம்பிகா! ''எத்தனை காயின் இருக்கு?'' என்று கேட்க, ''எட்டு'' என தான் சுற்றிய சுற்றைச் சொல்லி  'ஸ்டேண்ட் அப்’ காமெடி செய்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அஞ்சலி தேவிக்கள் நதியாக்கள்... அமலா பால்கள் !

நடனப் போட்டி என்றாலே... எங்கே«யுமே ஒரு கை பார்க்காமல் விடுவதில்லை நம் பெண்கள். இங்கேயும் அப்படித்தான்! சுடிதார்களும் புடவைகளும் ஒன்றுக்கொன்று போட்டி போட்டு ஆட, 'அஞ்சலி தேவி'க்கள்... 'நதியா'க்கள்... 'அமலா பால்'கள் என்று முக்காலத்தையும் ஒரே மேடையில் பார்த்த எஃபெக்ட் நமக்கு! கடுமையான போட்டியில் டீன்களை தோற்கடித்து முதல் பரிசை வென்றார் இல்லத்தரசி கவிதா!

'ஓபன் டு ஆல்’ காம்படிஷனான அந்தாக்ஷரியில்... ஒரே ராகப் பாடல்கள், ஓரெழுத்துப் பாடல்கள், சிச்சுவேஷன் பாடல்கள் என டஃப் காம்படிஷனையும் 'ஜஸ்ட் லைக் தட்’டாகப் பாடி ஒரு கிராம் வெள்ளி நாணயங்களைத் தட்டிச் சென்றார்கள் சின்னக்குயில் சித்ராஸ்!

நிகழ்ச்சியின் இடையிடையே தங்கத்தில் முதலீடு செய்வது பற்றி பேசிய 'அட்வென்ச்சர்ஸ் இந்தியா’ நிறுவன இயக்குநர் சோலையப்பன்... 'ஸ்டாக் மற்றும் ஃப்யூச்சர்ஸ் மார்க்கெட்டில் பொருட்களை எவ்வாறு வாங்குவது, விற்பது’ என்பதைப் பற்றி விரிவாகக் கூறியதுடன், 'தங்கம் மற்றும் வெள்ளியை எவ்வாறு சிறுகச் சிறுக சேமிப்பது’ என்பதைப் பற்றியும் வழங்கிய ஆலோசனைகள் வாசகிகளை இன்னும் உற்சாகப்படுத்தியது.

வளையல் அடுக்கும் போட்டி, பால் டேப்பிங் போட்டி என்று அனைத்திலுமே அசத்தினர் பெண்கள், ஐந்து மணி நேர கொண்டாட்டத்துக்கு பிறகு விடைபெற்றபோது, தோழிகள் சொன்ன வார்த்தைகள்-

''இந்த 'கோல்டன்’ மொமன்ட்ஸை மறக்கவே முடியாது!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism