Published:Updated:

பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...
பிரீமியம் ஸ்டோரி
பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

Published:Updated:
பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...
பிரீமியம் ஸ்டோரி
பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

சூப்பர் வுமன் சுதா!

பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

த்தியப்பிரதேசத்தின் சத்புரா புலிகள் சரணாலயத் தின் வனத்துறை காவலர் சுதா துர்வே. சமீபத்தில் தன்னுடன் பணிபுரியும் காவலர்களான அர்ஜுன் மற்றும் விஷ்ணு இருவருடனும் வாடிக்கையான பணியில் ஈடுபட்டிருந்தார் சுதா. புலிகளின் காலடித் தடம் எங்கு கிடைத்தாலும், அதைப் பின்தொடர்ந்து சென்று `படி' எடுத்து எண்ணிக்கையில் சேர்க்கும் புலிகள் கணக்கெடுப்புப் பணி அது. எப்போதும் போல அதிகாலை 6.30 மணிக்கு, கால்நடையாகக் கிளம்பியது இந்த மூவர் அணி. புதிதாகத் தெரிந்த புலியின் காலடித் தடத்தை ஒட்டி அவர்கள் அடர்ந்த காட்டுக்குள் சென்றபோதுதான் சுமார் பத்து மீட்டர் தொலைவில் நின்றுகொண்டிருந்தது நன்கு வளர்ந்த புலி ஒன்று. சற்று நேரம் பிரமித்து நின்றுவிட்ட குழுவில் முதலில் சுதாரித்துக்கொண்டவர் சுதா. வனத்துறை காவலர்களுக்குப் பயிற்சிக் காலத்திலேயே இதுபோல சிங்கம், புலி, கரடி போன்ற விலங்குகளை நேருக்கு நேர் பார்க்க நேர்ந்தால் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் சொல்லித்தரப்படுகின்றன.

அதிர்ஷ்டவசமாக அவை நினைவுக்கு வந்தன. புலிகள் எப்போதுமே எதிராளியின் பயத்தை அடையாளம் கண்டுகொள்கின்றன; பயந்து ஓடுபவர்களைத் தாக்குகின்றன என்பது நினைவுக்கு வர, தன்னுடன் நின்ற காவலர்கள் இருவரையும் பதற்றமின்றி அசையாமல் நிற்கச் சொல்லி ஜாடை காட்டினார் சுதா. மூவரும் புலியை வெறித்து நோக்க, புலியும் உறுமியபடி அவர்களைப் பார்த்துக்கொண்டே நின்றது. இந்தப் பார்வைப் போட்டி சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்தது. இறுதியில் புலி அவர்களை விட்டு அகன்று காட்டுக்குள் சென்று மறைந்தது. அந்தக் குளிரிலும் வியர்வையில் நனைந்திருந்த மூவரும் அலுவலகம் திரும்பி, தங்களுக்கு நேர்ந்ததை விளக்கிச் சொன்னார்கள். அர்ஜுன் மற்றும் விஷ்ணு இருவருக்கும் காய்ச்சல் ஏற்பட, சுதாவோ துணிவுடன் இருந்தார். வரும் குடியரசு தினத்தன்று மத்தியப்பிரதேச மாநில ஆளுநர் கையால் வீரத்துக்குச் சிறப்புப் பரிசு பெறவிருக்கிறார்கள் மூவரும்!

முறத்தால் அல்ல... முறைத்தே புலியை விரட்டிய பெண்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பெண்களைப் பாதுகாக்கும் பிங்க் டாக்ஸி!

பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

பெங்களூரின் கெம்பே கௌடா பன்னாட்டு விமான நிலையம் பெண்களுக்காகப் பெண்களே இயக்கும் புதிய `பிங்க் டாக்ஸி' சேவையைத் தொடங்கியுள்ளது. “பல மொழிகள் தெரிந்தவர்களாகவும், நகரின் பகுதிகளை நன்கு அறிந்தவர்களாகவும், தற்காப்புக் கலையில் தேர்ந்தவர்களாகவும் இந்த டாக்ஸி ஓட்டும் பெண்கள் இருப்பார்கள். `ஜிபிஆர்எஸ்' ட்ராக்கிங், `எஸ்ஓஎஸ்' ஸ்விட்ச் போன்ற சிறப்பம்சங்கள் கொண்ட டாக்ஸிகளாக இவை இயங்கும்.

தனியே வரும் பெண் பயணிகளுக்கு விமான நிலையத்திலிருந்து செல்ல பாதுகாப்பு அளிக்கும் அதே வேளையில், வேலையற்ற பெண்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கவும் இந்தத் திட்டம் உதவும்” என்று கூறியிருக்கிறார் கர்நாடகா சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் குமார் புஷ்கர்.

நம்ம ஊருக்காரங்களும் இதை யோசிக்கலாமே?

மாற்றம் நல்லது!

பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

ந்திய ராணுவத்தில் உயர் பதவிகளில் பெண் அதிகாரிகள் பணியாற்றினாலும், அணி வகுப்புகளில் அவர்களுக்குச் சரியான இடம் வழங்கப்படுவதில்லை என்பது பொதுவாகச் சொல்லப்படும் கருத்து. இதை உடைக்கும் விதமாக கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை அணிகளை பெண் அதிகாரிகள் வழிநடத்திச் சென்றார்கள். ஆனால், இந்திய ராணுவ தினத்தில் பெண்கள் இதுவரை தலைமை தாங்கியதில்லை. இந்தக் குறையைப் போக்கும் விதமாக, கடந்த ஜனவரி 15 அன்று டெல்லியில் நடைபெற்ற இந்திய ராணுவ தினக் கொண்டாட்டங்களில், 144 பேரைக்கொண்ட ஆர்மி சர்வீஸ் கார்ப்ஸ் அணியின் தலைவராக முன்னெடுத்துச் சென்றார் கஸ்தூரி.

1949-ம் ஆண்டு ஜனவரி மாதம், சர் ஃபிரான்சிஸ் புட்சருக்கு அடுத்து நாட்டின் கமாண்டர்-இன்-சீஃப் பதவியில் ஜெனரல் கே.எம்.கரியப்பா பதவியேற்றுக்கொண்டதன் நினைவாகவும், நாட்டுக்கு இந்திய ராணுவம் செய்த உதவிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் ஒவ்வோர் ஆண்டும் இந்திய ராணுவ தினம் ஜனவரி 15 அன்று கொண்டாடப்படுகிறது.

பெங்களூரில் கடந்த ஆறு மாதங்களாக இதற்குப் பயிற்சி எடுத்து வருவதாகக் கூறிய கஸ்தூரி, இரு ஆண் அதிகாரிகளுடன் இந்த அணிவகுப்பில் கலந்துகொண்டார். மொத்தம் 144 ஆண் அதிகாரிகள் கொண்ட குழுவுக்குத் தலைமை தாங்கிய பெண் இவர். “ராணுவத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கும் மாற்றங்களை இது பிரதிபலிக்கிறது. பெண் அதிகாரிகளை எளிதாக ஏற்றுக்கொள்ளும் போக்கும் இப்போது அதிகரித்திருக்கிறது” என்று கூறியுள்ளார் கஸ்தூரி.

முதல் பெண்ணுக்கு நம் மரியாதை!

உலக வங்கியின் தலைவர் பதவி... இந்திரா நூயிக்கு வாய்ப்பு!

பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

சென்னைப் பெண் இந்திரா நூயி, புகழ்பெற்ற உலக வங்கியின் தலைவராகும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அமெரிக்கப் பத்திரிகைகள் எழுதிவருகின்றன. அமெரிக்க பெப்சிகோ கம்பெனியின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணிபுரிந்து வந்த 63 வயது நூயி, கடந்த ஆகஸ்ட் மாதம் தன் பணியை ராஜினாமா செய்துவிட்டார். 12 ஆண்டுகளாக பெப்சிகோ கம்பெனியை உலகின் நம்பர் ஒன் குளிர்பான நிறுவனமாக இயக்கிய பெருமை நூயியையே சேரும். அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் மகளான இவான்கா ட்ரம்ப், `நூயிதான் என் முதல் வழிகாட்டி மற்றும் இன்ஸ்பிரேஷன்' என்று ட்விட்டர் பக்கத்தில் எழுதினார். இதையடுத்து அமெரிக்கப் பத்திரிகைகள் உலக வங்கி தலைமை இடத்துக்கு இந்திரா நூயிதான் வரவிருப்பதாக எழுதத் தொடங்கியுள்ளன.

உலக வங்கியின் இப்போதைய தலைவரான ஜிம் யோங் கிம், வரும் பிப்ரவரி மாதம் தன் பணியை ராஜினாமா செய்யவிருப்பதாக அறிவித்திருக்கிறார். அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணியைக் கருவூல செயலாளர் ஸ்டீவன் மினுஷின், இவான்கா மற்றும் இப்போதைய சீஃப்-ஆஃப்-ஸ்டாஃப் மிக் மல்வானி ஆகியோர் கொண்ட குழு செய்துவருகிறது. இந்தக் குழு தரும் பரிந்துரைகளைப் பரிசீலித்து அதிபர் ட்ரம்ப், உலக வங்கியின் தலைவராகும் தகுதி இருப்பவரை வங்கியின் தலைமைக் குழுவுக்குப் பரிந்துரைப்பார். போட்டியில் டேவிட் மால்பாஸ் மற்றும் ரே வாஷ்பர்ன் போன்றோர் இருந்தாலும், இவான்காவின் ஆதரவு பெற்ற இந்திராவுக்கே வாய்ப்புகள் அதிகம் என்று கருதுகின்றன அமெரிக்க ஊடகங்கள்.

வாசல் வரை வந்த வாய்ப்பு கைக்கு எட்டுமா?

கழிவறைகளாக மாறிய பழைய பேருந்துகள்!

பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

ழைய பேருந்துகளைக் கழிவறைகளாக மாற்றி வீடில்லா மக்கள் பயன்படுத்த உதவுவது பற்றி நான் படித்திருந்தேன். அதை ஏன் புனே நகரில் பயன்படுத்தக் கூடாது என்று யோசித்தேன்” என்று கூறுகிறார் அல்கா சதல்கர். இவரது யோசனையின்படி புனே நகரின் நெரிசலான சாலைகளில் நிறுத்தப்பட்டிருக்கின்றன `தி' பேருந்துகள். மராத்தி மொழியில் `அவள்' அல்லது `பெண்' என்ற பொருள்படும் இந்தப் பெயர் `டாய்லெட் இன்டெக்ரேஷன்' என்கிற தன் கனவையும் குறிப்பதாகச் சொல்கிறார் அல்கா.

வெஸ்டர்ன் மற்றும் இந்திய பாணி டாய்லெட்கள், வாஷ் பேஸின், டயப்பர் மாற்றும் இடம் மற்றும் விற்பனைக்கு சானிட்டரி நாப்கின்கள் என்று பெண்ணின் அவசர தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்கின்றன இந்தக் கழிவறைகள். சோலார் பேனல் மூலம் இதற்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஐந்து ரூபாய் கட்டணம். பணிப்பெண், டெக்னீஷியன் என ஒவ்வொரு பேருந்திலும் இரண்டு பெண்கள் எப்போதும் பணியில் இருக்கிறார்கள். “இதை இலவச உதவியாக மாற்றவே முயற்சி செய்து வருகிறேன்” என்று கூறுகிறார் அல்கா. நகரின் நெரிசலான பகுதிகளில் பெண்களின் அவசரத்துக்கு உதவும் 11 டாய்லெட் பஸ்களும் பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

அந்த பஸ்ஸு இங்க வராதாங்க?

சரும பிளீச்சிங் தயாரிப்புகளுக்குத் தடை!

பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

ப்பிரிக்க நாடான ருவாண்டாவின் அதிபர் பால் ககாமே. கடந்த நவம்பர் மாதம், ``சருமத்தை பிளீச் செய்யும் தயாரிப்புகள் மிகவும் ஆபத்தானவை. அவற்றில் உள்ள வேதிப்பொருள்கள் உடல்நலத்துக்கு கேடு விளைவிப்பவை'' என்று அறிவித்திருந்தார் பால். அவரது ஆணைக்கு இணங்க, அந்நாட்டின் சுகாதாரத்துறை பிளீச்சிங் செய்யப் பயன்படுத்தப்படும் க்ரீம்கள், பவுடர்கள் போன்றவற்றைத் தடை செய்வதாக அறிவித்தது. ஏற்கெனவே ஆப்பிரிக்க நாடுகளான கென்யா, கானா, தென்னாப்பிரிக்கா போன்றவற்றில் இது போன்ற தயாரிப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன. முகத்தை பிளீச் செய்து பொலிவாக்கும் பல தயாரிப்புகளில் மெர்க்குரி மற்றும் ஹைட்ரோகுய்னான் போன்ற ஆபத்தான வேதிப்பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன.

ஆனால், இந்தத் தடை காரணமாக, அனுமதியில்லாத, தரமற்ற தயாரிப்புகள் பிளாக் மார்க்கெட்டில் விற்கப்படும் அபாயமும் உண்டு என்று எச்சரிக்கிறார்கள் மக்கள். `எந்தப் பெண்ணும் தன் சருமம் வெள்ளையாகவே இருக்க வேண்டும் என்று விரும்புவாள். இந்தத் தடையால் பெண்கள் தங்கள் சருமத்தை பிளீச் செய்யாமல் இருக்கப்போவதில்லை' என்று கூறுகிறார்கள் பெண்கள். உலகின் மிக அதிகமாகப் பணம் புரளும் துறைகளில் இந்த சரும பிளீச்சிங் துறையும் ஒன்று. உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கெடுப்பின்படி, ஆப்பிரிக்காவில் பத்தில் நான்கு பெண்களாவது சரும பிளீச்சிங் தயாரிப்புகளைப் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.

என்று தீரும் இந்த வெள்ளை சருமம் மீதான மோகம்?!

- நிவேதிதா லூயிஸ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism