Published:Updated:

தொழில் வழிகாட்டி: “இப்போ எங்க தன்னம்பிக்கை அதிகரிச்சிருக்கு!”

தொழில் வழிகாட்டி: “இப்போ எங்க தன்னம்பிக்கை அதிகரிச்சிருக்கு!”
பிரீமியம் ஸ்டோரி

ன்னதான் கடினமா உழைச்சு தொழில் செய்துட்டிருந்தாலும், எப்போ, எப்படி, என்ன பிரச்னை வருமோ என்ற பயம் மனசுக்குள்ள ஓடிட்டேதான் இருக்கும். இப்போ இந்தப் பயிற்சியை முடிச்ச பிறகு, பிரச்னை வந்தா அவற்றையெல்லாம் எப்படிக் கையாளணும் என்கிற தெளிவு கிடைச்சிருக்கு. அதுவே, எங்க தன்னம்பிக்கையையும் அதிகரிச்சிருக்கு!’ - இந்தப் பெண்கள் இதைக் கூறும்போது, இவர்கள் பெரிய பாய்ச்சலுக்குத் தயாராகிவிட்ட உறுதி தெறிக்கிறது.

குறுந்தொழில் செய்யும் பெண் தொழில் முனைவோர்களுக்கான சிறப்புப் பயிற்சிப் பட்டறை காஞ்சிபுரம் மாவட்டம் களியனூரில் உள்ள `ஹேண்ட் இன் ஹேண்ட்' வளாகத்தில் நடைபெற்றது. ஐஐடி மெட்ராஸ் மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா, ‘CAMS’ அமைப்புகளோடு அவள் விகடனும் கைகோத்து நடத்திய நிகழ்ச்சி இது. ஜனவரி 2-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை நடைபெற்ற இந்தப் பட்டறை யில், ஐஐடி பேராசிரியர்கள் பயிற்சிகள் வழங்கினர்.

தொழில் வழிகாட்டி: “இப்போ எங்க தன்னம்பிக்கை அதிகரிச்சிருக்கு!”

தொழில் திட்டம் தயாரிப்பது, வரவு செலவு பராமரிப்பு செய்யவேண்டியதன் முக்கியத்துவம், ஒரு பொருளை சந்தைப்படுத்துவது எப்படி, சந்தைப்படுத்துவதற்கும் விற்பனைக்கும் என்ன வேறுபாடு, பெண் தொழில் முனைவோர்கள் சந்திக்கக்கூடிய சவால்கள், இணையத்தைப் பயன்படுத்தி விற்பனையை அதிகரிப்பது, அரசுத்துறையை அணுகி அரசுத் திட்டங்களுக்கு வங்கிக் கடன் பெறுவது, தொலைநோக்குப் பார்வை...  உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா அமைப்பின்  தலைவர் கல்பனா சங்கர், “உங்களுக்காகவே ஆலோசகர்களை நியமித்திருக்கிறோம். அவர்கள், அடுத்தகட்டமாக உங்களுக்குத் தேவைப்படும் பயிற்சிகளையும் அளிப்பார்கள். உங்களில் பலர் முன்மாதிரியாக உருவாக வேண்டும்’’ என்று ஆர்வத்தைத் தூண்டினார்.

ஐஐடி முன்னாள் மாணவரான திரைப்பட தயாரிப்பாளர் சுரேஷ் கல்பாத்தி (AGS Investment), “எங்க குடும்பப் பெண்கள்தான் எங்க நிறுவன வேலைகளை முன்னெடுத்துச் செய்றாங்க. ‘விஜய் 63’ படத்தோட கதையைக் கேட்டு `ஓகே’ செய்தது முதல், தயாரிப்பு வேலைகள் வரை, எங்க வீட்டுப் பெண் ஒருவர் தான் பார்த்துக்கறாங்க. அவங்க பெயரை விரைவில் நீங்க திரையில் பார்க்கலாம். உங்களின் ஆர்வத்தையும் உழைப்பையும் பார்க்கும்போது, நீங்களெல்லாம் பெரிய பிசினஸ் மேக்னெட்டா வருவீங்க என்ற நம்பிக்கை எனக்கிருக்கு” என்றவர், வந்திருந்த ஆண்களைப் பார்த்து, ‘`தொழிலில் ஈடுபடும் உங்க வீட்டுப் பெண்களுக்கு ‘நாங்க துணையா இருக்கோம்’ என்ற நம்பிக்கையைக் கொடுத்துட்டா, அவங்க எவ்வளவு பிரச்னைகளையும் எதிர்கொண்டு சாதிப்பாங்க’’ என உற்சாகமூட்டினார்.

விடைபெற்றுச் சென்றனர் பெண்கள், புது உத்வேகத்துடன்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- பா.ஜெயவேல் 

படங்கள் : தா.அபினேஷ்

பயிற்சியும் முயற்சியும்

தொழில் வழிகாட்டி: “இப்போ எங்க தன்னம்பிக்கை அதிகரிச்சிருக்கு!”

தீபா, சின்ன காஞ்சிபுரம்: நான் வெளியிலயிருந்து அரிசி வாங்கி வீட்டில் வெச்சே விற்க ஆரம்பிச்சேன். அப்புறம், ஒரு மகளிர் குழுவில் சேர்ந்து லோன் வாங்கி, சின்னதா ஒரு கடை போட்டேன். பிசினஸ் நல்லா போக, இப்போ அரிசி மொத்த வியாபாரம் செய்யத் தொடங்கியிருக்கோம். இதில் அடுத்தடுத்து நான் செய்ய வேண்டியது என்னன்னு, இந்தப் பயிற்சி எனக்குச் சொல்லிக்கொடுத்திருக்கு!

அனுராதா, காஞ்சிபுரம்: டெய்லரிங் தொழிலை திட்டமிட்டுச் செய்யணும்னு நினைச்சேன். எல்லா

தொழில் வழிகாட்டி: “இப்போ எங்க தன்னம்பிக்கை அதிகரிச்சிருக்கு!”

சீஸனிலும் விற்பனையாகும் நைட்டியை, மெட்டீரியல் வாங்கித் தைச்சு விற்க ஆரம்பிச்சேன். இப்போ, என்கிட்ட பயிற்சிபெற்ற 20 பேரை வெச்சு தொழிலை நடத்திட்டு இருக்கேன். அடுத்ததா, மருத்துவ மனைகளில் அறுவைசிகிச்சை நோயாளிப் பெண்களுக்குத் தேவைப்படும் ஃப்ரன்ட் ஓப்பன் நைட்டிகளை ஆர்டர் எடுத்துச் செய்தேன். இந்தப் பயிற்சிப் பட்டறையில், கார்மென்ட்ஸ் தொழிலின் பல கூறுகளைப் பத்தி தெரிஞ்சிக்க முடிஞ்சது. பல திசைகள் புரிஞ்சிருக்கு!

தொழில் வழிகாட்டி: “இப்போ எங்க தன்னம்பிக்கை அதிகரிச்சிருக்கு!”

வசந்தி, கீழ்பொடவூர்: 18 வயசுல எனக்குக் கல்யாணம் ஆச்சு. 23 வயசுல கணவரை நான் இழந்தப்போ, என் ரெண்டு பொண்ணுங்களோட எதிர்காலம்தான் என்னை  சுயதொழிலைப் பத்தி யோசிக்க வெச்சது. காய்கறிக் கடை போட்டேன். சில வருஷங்கள் கழிச்சு, சின்னதா டிபன் கடை வெச்சேன். இப்போ, மகளிர் குழுவில் இருந்து நாலு பேர் என்கிட்ட வேலை செய்யுறாங்க. இந்தப் பயிற்சிப் பட்டறை, எனக்கு இன்னும் தைரியம் கொடுத்ததோடு, வழிகாட்டல்களையும் தந்திருக்கு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism