Published:Updated:

உத்வேகமும் உற்சாகமும்: 8 நிமிட வாசிப்பில் அவள் விகடனின் 12 பகுதிகள்!

உத்வேகமும் உற்சாகமும்: 8 நிமிட வாசிப்பில் அவள் விகடனின் 12 பகுதிகள்!
உத்வேகமும் உற்சாகமும்: 8 நிமிட வாசிப்பில் அவள் விகடனின் 12 பகுதிகள்!

இந்த இதழ் அவள் விகடன்: https://bit.ly/2SbVQYV

உத்வேகமும் உற்சாகமும்: 8 நிமிட வாசிப்பில் அவள் விகடனின் 12 பகுதிகள்!

உங்களைச் சுற்றி எப்போதும் ஒரு 'கான்ட்ரவெர்சி' இருக்கிறதே... ஏன் என்று யோசித்ததுண்டா?

"எனக்குச் சுற்றி வளைச்சுப் பேசத் தெரியாது. எதையும் நேருக்கு நேர் வெளிப்படையா பேசிடுவேன். இன்னொரு காரணமும் இருக்கலாம். பெண் புத்திசாலித்தனமா பேசக் கூடாதுனு நிறைய ஆண்கள் நினைப்பாங்க. அதுவும் சினிமா துறையைச் சேர்ந்த பெண்கள் புத்திசாலிகளா இருக்கிறதையே பலரும் விரும்பறதில்லை. நான் சினிமாவிலும் இருக்கேன். பொதுவாழ்க்கையிலும் இருக்கேன். புத்திசாலியாகவும் இருக்கேன். அதனாலதான் என்னைச் சுற்றி எப்போதும் ஏதாவது சர்ச்சைகள் கிளப்பப்படுகின்றனபோல.

உத்வேகமும் உற்சாகமும்: 8 நிமிட வாசிப்பில் அவள் விகடனின் 12 பகுதிகள்!

சர்ச்சைகள் வந்தா ஃபீல் பண்ற ஆளில்லை நான். முதன்முதல்ல என்னைப் பற்றி சர்ச்சையான செய்தி வந்தபோதே சிரிச்சுக்கிட்டு உட்கார்ந்திருந்தேன். தப்பு பண்ணியிருந்தால்தான் பயப்படணும். என் மடியில கனமில்லை, அதனால் பயமுமில்லை. முன்னபின்ன தெரியாதவங்க என்னைப் பத்திப் பேசறாங்கன்னா அவங்க வேலைவெட்டி இல்லாம இருக்காங்க. எனக்கு ஆயிரம் வேலைகள் இருக்கு. நான் ஓடிட்டிடே இருக்கேன்."

- சினிமா, சின்னத்திரை, அரசியல் களங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஆல்ரவுண்டர் குஷ்பு. 'வருஷம் 16'-ன் சைனீஸ் பட்லரின் தமிழ் இப்போது மேலும் மெருகேறியிருக்கிறது. பேச்சில் அழகும் அறிவும் அனுபவ முதிர்ச்சியும் பிரதிபலிக்கின்றன. 'லட்சுமி ஸ்டோர்ஸ்' சீரியலின் படப் பிடிப்பில் இருந்த குஷ்புவை அவள் விகடன் வாசகியரின் கேள்விகளுக்கு கிரீன் ரூமிலிருந்து கலர்ஃபுல் பதில்களைத் தந்தார். அந்தத் தொகுப்புதான் 'அவள் அரங்கம்: வீட்டுக்குள்ளே அன்புக்கு மட்டும்தான் அனுமதி - குஷ்பு'.

உத்வேகமும் உற்சாகமும்: 8 நிமிட வாசிப்பில் அவள் விகடனின் 12 பகுதிகள்!

வேலையில அடுத்தடுத்த முன்னேற்றங்களை நோக்கி நகர ஆரம்பிச்சிருந்த அதே நேரம், குடும்பத்துக்குள்ள மறுபடி சண்டை, சச்சரவு, மனஸ்தாபங்கள். ஆண்ட்ரியாவின் அப்பா என்னைவிட்டுப் பிரியறதுனு முடிவெடுத்தாங்க. நானும் குழந்தையும் வீட்டைவிட்டு வெளியேறினோம். அடுத்து என்ன பண்ணப்போறோம்னு தெரியாத நிலையில நிர்க்கதியா நின்னோம். உடல்ரீதியா, மனரீதியான வன்முறைகளை சந்திச்சிருந்த டைம் அது. டிப்ரெஷனின் உச்சத்தில் இருந்தேன். புருஷன் விட்டுட்டுப் போயிட்டார்... கையில குழந்தை... டெய்லரிங் வேலையை நம்பி நாங்க பிழைச்சிட முடியுமா, ஊர், உலகம் என்ன பேசப்போகுதுனு பயமா இருந்தது...

"சினிமாவுக்கு காஸ்ட்யூம் டிசைன் பண்ணினா, என்னை நான் அடுத்த  லெவலுக்கு வளர்த்துக்க முடியும்னு தோணுச்சு. ஆசை இருந்ததே தவிர அதுக்கு யாரை, எப்படி அணுகணும்னு  தெரியலை.  ஃபேஸ்புக் மூலமா சில நடிகர், நடிகைகளைத் தொடர்பு கொண்டேன். அவங்களுக்கு மெசேஜ் அனுப்பினேன். அதைப் பார்த்துட்டுதான் விஜய் ஆன்டனிகிட்டருந்து அழைப்பு வந்தது. சந்திச்சேன். எடுத்ததுமே எனக்கு டிசைனர் வாய்ப்பு கிடைக்கலைனாலும், அதுக்கு முன்னாடி 'கொலைகாரன்' படத்துக்கு `இன்ஃபிலிம் பிராண்டிங்' பண்ற வாய்ப்பு வந்தது...

- கோயம்புத்தூர் டு கோலிவுட். சௌபர்ணிகா என்கிற தனி மனுஷியின் தன்னம்பிக்கைப் பயணக்கதையைச் சொல்லும் 'ஓட ஓட விரட்டப்பட்டவள்... ஓடி ஓடி உழைக்கிறேன்!' கட்டுரை நிச்சயம் நமக்கு உத்வேகம் தரும். 

உத்வேகமும் உற்சாகமும்: 8 நிமிட வாசிப்பில் அவள் விகடனின் 12 பகுதிகள்!

சாட்சியளிக்கும் மனத்திடம் வேண்டும்: தனக்கு பாலியல் வன்கொடுமை நடந்ததை நிரூபிக்கும் பொறுப்பும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கே என்பது வேதனைக்குரியது. என்றாலும், இந்த விஷயத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சட்டப்படி நீதி கிடைக்கவும், குற்றவாளிக்குத் தண்டனை கிடைக்கவும், சம்பந்தப்பட்ட பெண் மனதிடத்துடன் அடுத்தடுத்த சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தான் புகார் அளிக்க முன்வரும்பட்சத்தில், தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நிலையிலேயே, எந்தத் தடயமும் அழிந்துவிடாமல் தன்னை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும். குற்றவாளியைக் கண்டுபிடிக்கவும், அதை நிரூபிக்கவும் இந்த மருத்துவப் பரிசோதனை அவசியம். நடந்த சம்பவங்கள் அனைத்தும் மருத்துவப் பரிசோதனை, காவல் நிலையப் புகார், நீதிமன்ற விசாரணை என அனைத்து இடங்களிலும் எழுத்தில் பதிவு செய்யப்படும்.

- பெண்கள்மீது காலம் காலமாக நடத்தப்பட்ட பாலியல் வன்முறைகள், அவளது மனதுக்குள்ளேயே புதைக்கப்பட்டுவந்தன. அவற்றை வெளியில் சொன்னால் தனது நடத்தையை உலகம் கேள்விக்குள்ளாக்கும் என்கிற பயம்தான் அதற்குக் காரணம். இன்று காலம் மாறியுள்ளது. 'எனக்கு, இது நடந்தது; இவரால் நடந்தது' எனப் பெண்கள் பலர் தைரியமாகப் பகிர்ந்துகொள்கின்றனர், புகார் அளிக்கின்றனர். இந்தப் புகார்களுக்கான சட்ட நடவடிக்கை, குற்றவாளிக்கான தண்டனைகள் மற்றும் புகார் அளிக்கும் பெண்ணுக்கான சட்டப் பாதுகாப்பு பற்றிய தகவல்களை 'சட்டம் பெண் கையில்' தொடரின் 'பாலியல் குற்றங்கள் மற்றும் சட்டங்கள்' பகுதியில் வழங்கியிருக்கிறார் வழக்கறிஞர் வைதேகி பாலாஜி.

உத்வேகமும் உற்சாகமும்: 8 நிமிட வாசிப்பில் அவள் விகடனின் 12 பகுதிகள்!

"கதை சொல்லும்போது, அந்தக் கதையின் சாரம், அதைக் கேட்பவர்கள், கதை சொல்லும் இடம் என அனைத்தும் முக்கியம். புராணக் கதைகளில் பக்தி மார்க்கத்தில் ஈடுபாடுகொண்டிருந்த பெரும் புலவர்களின் கதைகளை 'ஹரிகதா' பாணியில் சொன்னபோது வயதானவர்களும் ரசித்துக் கேட்டனர். இசையால் உலகை வெல்ல முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது. 

வியட்நாம் மற்றும் இரான் நாடுகளில் கதை சொல்லியிருக்கிறேன். இரான் நாட்டு வரலாற்றில் ஏராளமான கதைகள் விரவிக் கிடக்கின்றன. அந்த நாட்டு அரசாங்கம் கதை சொல்வதற்கென்றே பலரைப் பணிக்கு அமர்த்துகிறது. அவர்களுக்கு உரிய மரியாதை மற்றும் அங்கீகாரம் அளிக்க, பெரும் தொகையை ஒதுக்குகிறது'' என்று ஆச்சர்யப்படுத்துகிற தீபா, கதை சொல்லும் பழக்கத்தை வலுப்படுத்த தான் எடுத்திருக்கும் முயற்சிகள் பற்றிக் குறிப்பிட்டார். 

- உலகளவில் கதை சொல்லும் கலையில் பிரபலமானவர்களில் ஒருவர், தீபா கிரண். இரானில் நடைபெற்ற சர்வதேச கதை சொல்லும் திருவிழாவில் கலந்துகொண்ட முதல் இந்தியப் பெண் என்கிற பெருமைக்குரியவர். இவர் தமிழ்ப் பெண் என்பது, நமக்கான கூடுதல் பெருமை. ஹைதராபாத்தில் வசிக்கிற தீபா உடனான உரையாடலே: 'கதை சொல்லத் தெரிந்தால் அரசு வேலை!' எனும் பேட்டிக் கட்டுரை.

உத்வேகமும் உற்சாகமும்: 8 நிமிட வாசிப்பில் அவள் விகடனின் 12 பகுதிகள்!

'எதுக்கு ரிஸ்க் எடுக்கறீங்க? ஏன் தனியா டிராவல் பண்றீங்க'னு நிறைய பேர் என்கிட்ட கேட்கிறதுண்டு. டிராவல் பண்ணும்போதுதான் நான் உயிர்ப்போடு இருக்கிறதா ஃபீல் பண்றேன். என் நோயை மறந்து வேறோர் உலகத்தில் மூழ்கிப் போறேன். மனசளவுல ரொம்ப பலசாலியா ஃபீல் பண்றேன். டிராவல் பண்றதுக்கு முன்னாடி வரைக்கும் எனக்கு டிரஸ் அணியறதுக்குக்கூட யாராவது உதவணும். டிராவல் பண்ண ஆரம்பிச்ச பிறகு ஒரு வைராக்கியத்தில் என் வேலைகளை நானே செய்யப் பழகினேன். அட்வான்ஸ்டு மாடல் வீல்சேர் வாங்கின பிறகு வாழ்க்கை இன்னும் ஈஸியானது. ஃப்ளைட்டில் எடுத்துட்டுப்போற மாதிரியான, ஒரு நொடியில் மடக்கி விரிக்கக்கூடிய, எடை குறைவான   வீல்சேரில் இப்போ டிராவல் பண்றேன்'' - இம்மியளவு எனர்ஜிகூடக் குறையாமல் பேசுகிறவருக்கு உலகம் முழுவதையும் சுற்றிப் பார்த்துவிடவேண்டுமென்கிற பெருங்கனவு இருக்கிறது.

- 'வீல்சேர் அண்டு ஐ' (Wheelchair and EYE) என்கிற வலைதளத்தைத் தொடங்கி தன் பயண அனுபவங்களைப் பகிர்ந்துவருகிற பம்மு, தீவிரமான பயண ஆர்வலர். முடக்குவாதத்தால் வீல்சேரில் முடங்கிப்போன நிலையிலும் சளைக்காமல் பயணம் செய்கிற பாசிட்டிவ் மனுஷி குறித்த 'தனியே... தன்னந்தனியே...' தொடரின் 'மனசு முடியும் என்று சொன்னால் உடலும் ஒத்துழைக்கும்!' எனும் பகுதி உற்சாகமும் உத்வேகமும் தரவல்லவை. 

உத்வேகமும் உற்சாகமும்: 8 நிமிட வாசிப்பில் அவள் விகடனின் 12 பகுதிகள்!

முதல் நாள் ஷூட்டிங். மலை மேல, காலில் செருப்பு இல்லாம, என்னை மான் மாதிரி ஓடிவரச் சொன்னார் பாரதிராஜா சார். காலில் முள் குத்தி வலியில, `நான் நடிக்க மாட்டேன்'னு அழுதேன். அப்போ, ரொம்ப வெகுளித்தனமாவும் விளையாட்டுத்தனமாவும் இருப்பேன். என்னை நடிக்கவைக்க டைரக்டர் மற்றும் தயாரிப்பாளர் எனக்கு பொம்மை, சாக்லேட் கொடுத்து சமாதானப்படுத்துவாங்க. தமிழ் தெரியாது. கோபம் வந்தா, இங்கிலீஷ்ல திட்டுவேன். ஷூட்டிங் ஸ்பாட்ல, கால் மேல கால் போட்டு உட்காருவேன். அது பாரதிராஜா சாருக்குப் பிடிக்காது. `என் கால் மேலதானே கால் போட்டேன்?'னு கேட்பேன். சரியா ஃபீல் பண்ணி நடிக்க, டான்ஸ் ஆட சிரமப்பட்டேன். ஒருநாள் பாரதிராஜா சார் கோபமாகி மலைமேல போய் பாறையில தலையை முட்டிக்கிட்டு இருந்தார். நான் அவர் பக்கத்துல போய், `என்ன சார் பண்றீங்க?'னு வெகுளித்தனமா கேட்டேன். 'என் தலையெழுத்து'னு சொல்லிட்டு மறுபடியும் பாறையில முட்டிக்கிட்டார். இப்படியெல்லாம் அவரைக் கொடுமைப்படுத்தியிருக்கேன். அந்தப் படத்தின் அசோஸிசியேட் டைரக்டரான பாக்யராஜ் சார் சொல்றதையும் கேட்காம, அவரையும் ரொம்பக் கடுப்பேத்தியிருக்கேன். நிறைய டேக் எடுத்து ஃபீல் பண்ணுவேன். `சிவாஜி கணேசன் சாரே, பத்து டேக் வரை எடுத்திருக்கார். உன்னால நல்லா நடிக்க முடியும்'னு பாரதிராஜா சார் தட்டிக் கொடுப்பார். பிற்காலத்துல சிவாஜி சாருக்கே ஜோடியா நடிச்சேன்.

- தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த 80'ஸ் எவர்கிரீன் கதாநாயகிகள், தங்களின் வெற்றிக் கதை சொல்லும் தொடரில் இம்முறை 'எனக்கு சவால் ரொம்பப் பிடிக்கும்!' என்ற தலைப்பில் அனுபவம் பகிர்ந்திருக்கிறார் ராதிகா. 

உத்வேகமும் உற்சாகமும்: 8 நிமிட வாசிப்பில் அவள் விகடனின் 12 பகுதிகள்!

தொழிலை விரிவுபடுத்த நினைக்கிறார் வித்யா. 2014-ம் ஆண்டு, 'டிக்' (TIIC) நிறுவனம் மூலம் முப்பத்தேழு லட்சம் ரூபாய் கடனுதவி கிடைக்கிறது. அட்வான்ஸ்டு தெர்மல் டிரான்ஸ்ஃபர் ரிப்பன் மெஷினை வாங்குகிறார். தொழிலாளர்களின் எண்ணிக்கையும் உயர்கிறது. வேலைகள் இன்னும் வேகமெடுக்க, புதுப்புது ஆர்டர்கள் வருகின்றன. 2016-ம் ஆண்டு, மேலும் ஒரு கோடி ரூபாய் கடன் பெறும் அளவுக்குத் தன் தொழிலின் வருமானத்தை உயர்த்துகிறார். ஆட்டோமேட்டிக் பிரின்ட்டிங் மெஷினை வாங்குகிறார். கூடுதலாக இன்னொரு பிளான்ட்டைத் தொடங்கி, பில் பேப்பர் கட்டிங் மற்றும் கார்பன் ஷீட் தயாரிப்புகளையும் தொடங்குகிறார்.

இப்போது பிரின்டிங் லேபிள், பிளெய்ன் லேபிள், டேக் லேபிள், ரெசிப்ட் லேபிள், தெர்மல் டிரான்ஸ்ஃபர் ரிப்பன், க்யூ.ஆர் கோடு பிரின்ட்டிங் லேபிள், பார் கோடு லேபிள் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட பொருள்களைத் தயாரிக்கிறார். இனி, புராடெக்ட் லேபிள்களையும் தயாரிக்கவிருக்கிறார். 

இந்த அவள் விகடன் இதழை வாங்க... இந்த லிங்கைக் க்ளிக் பண்ணுங்க: https://bit.ly/2FVUWdy

- சென்னையைச் சேர்ந்த லேபிள் பிரின்ட்டிங் தொழில் நிறுவனமான `ஆர்.எஸ் மேனுஃபேக்சரிங்'கின் உரிமையாளர் வித்யா 'தொழிலாளி to முதலாளி' தொடரில் 'கம்ப்யூட்டர் மட்டுமே முதலீடு... இப்போ ரூ.30 கோடி வருமானம்!' என வெற்றிப் பயண அனுபவத்தைப் பகிர்ந்திருக்கிறார். 

உத்வேகமும் உற்சாகமும்: 8 நிமிட வாசிப்பில் அவள் விகடனின் 12 பகுதிகள்!

நம் சமூகத்தில், இயல்பாகவே ஆண் என்கிற அகந்தை உள்ளது. அந்த அகந்தை வீட்டில்தான் உருவாகிறது. இந்த அகந்தை தான் ஆணாதிக்கமாகவோ, பாலியல் வன்முறையாகவோ வெளிப்படுகிறது. எதெல்லாம் இன்று நோயாக உள்ளதோ அதற்கான வேர் இந்த அகந்தைதான். அதை வேரிலிருந்து சரிசெய்ய வேண்டும். அந்த அகந்தையை அழிப்பதற்கு, ஆண் குழந்தைகளை அனைத்து வேலைகளிலும் ஈடுபடுத்த வேண்டும். உளவியல் ரீதியான மாற்றத்தை இது உருவாக்கும். குழந்தைப் பருவத்தில் இருந்தே மாற்றத்தைக் கொண்டுவருவதற்காகத்தான் சமைப்பது மற்றும் வீட்டு வேலைகளைச் செய்யச் சொல்கிறோம்.

- ஆண் குழந்தைகள் ஏன் பெண்களை மதிப்பதில்லை? மதிக்கும் மனநிலையை எப்படி உருவாக்குவது? இதற்கான கல்வியை எந்த வயதிலிருந்து ஆரம்பிப்பது? இந்தக் கேள்விகள், மகன்களைப் பெற்ற அம்மாக்களுக்கு இருக்கின்றன. `ஆண் பெண் சமத்துவத்தை குழந்தை வளர்ப்புக் காலத்திலேயே தொடங்க வேண்டும்' என்கிறார் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன். 'ஆண் குழந்தைக்கு சமையல் கற்றுக்கொடுங்கள்!' பகுதியைத் தவறவிடாதீர்கள். 

உத்வேகமும் உற்சாகமும்: 8 நிமிட வாசிப்பில் அவள் விகடனின் 12 பகுதிகள்!

”இப்ப நீங்க எல்லாம் கொண்டாடுற எத்தனையோ பெரிய மியூசிக் டைரக்டர்ஸ் எல்லோரையும் அவர்களுடைய ஆரம்பக்கட்டத்தில் பார்த்தவ நான். அவங்களுக்கெல்லாம் நானும் என் கணவரும் எவ்வளவோ உதவிகள் செய்திருக்கோம்'' என்கிறவர் அடுத்தடுத்த வார்த்தைகளை அப்படியே மென்று விழுங்குகிறார். தொண்டைக்குழி மேலும் கீழுமாக அசைய, அவர் எதையோ கொட்டத் துடிப்பது புரிகிறது. சில நொடிகளில் தன்னைச் சமன்படுத்திக்கொண்ட சரளாம்மா, "செய்ததையெல்லாம் சொல்லிக் காட்டுகிற வயசில் இப்ப நான் இல்லைம்மா. 

80 வயசாயிடுச்சு. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் மேடைக் கச்சேரி பண்ணிக்கிட்டுதான் இருந்தேன். திடீர்னு வந்த பக்கவாதம் பாட முடியாதபடிக்கு என் குரலை எடுத்துட்டுப் போயிடுச்சு. எவ்வளவோ மேடு பள்ளங்கள் பார்த்துட்டேன். இஸ்லாமியப் பாடல்கள் பாடறதுல ஹனீபாவுக்கு அப்புறம் சரளாதான்னு பெயர் வாங்கினது ஒரு காலம். பாட முடியாம முடங்கிக் கிடக்குறது ஒரு காலம்'' என்கிறவர் பழைய நினைவுகளில் சில நொடிகள் மூழ்குகிறார்.

- எந்த வி.ஐ.பி-யின் பிறந்தநாள் வந்தாலும், தொலைக்காட்சியில், 'நூறாண்டு காலம் வாழ்க... நோய் நொடியில்லாமல் வளர்க... ஊராண்ட மன்னர் புகழ்போலே... உலகாண்ட புலவர் தமிழ்போலே...' என்று பின்னணியில் ஒலிக்கிற மூவர் குரல்களில் ஒரு குரல் இவருடையது.  'பேசும் தெய்வம்' படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலைப் பாடிய சரளா இப்போது எப்படியிருக்கிறார் எனத் தேடிப் பிடித்து தந்துள்ள 'நாகூர் ஹனீபாவுக்கு அப்புறம் சரளாதான்னு இருந்தது ஒரு காலம்! - பாடகி சரளா' எனும் பேட்டிக் கட்டுரை சொல்லும் செய்திகள்தான் ஏராளம். 

உத்வேகமும் உற்சாகமும்: 8 நிமிட வாசிப்பில் அவள் விகடனின் 12 பகுதிகள்!

பாலியல் தொழிலாளி மற்றும் திருநங்கைகள் நல்வாழ்வுக்காக அரசாங்கம் கொண்டுவந்த 'தாய்' திட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டார் தேவி. சுமார் ஆறாண்டுகள் அங்கே பணியாற்றியதில் கிடைத்த தொகையை வைத்து, சொந்த கிராமத்தில் இரண்டு ஏக்கர் நிலம் வாங்கினார். அந்த இடத்தில் ஆதரவற்ற முதியோர்களுக்கான ஓர் இல்லத்தைக் கட்ட, தெரிந்த நண்பர்களின் உதவியை நாடினார். வங்கியில் கடன் வாங்கினார். குறுகிய காலத்திலேயே தேவியின் `தாய்மடி' இல்லம் உருவானது. 

2014-ம் ஆண்டு முறையாகப் பதிவு செய்து நடத்தப்பட்டுவரும் இந்த இல்லத்தில் இப்போது 42 ஆதரவற்ற முதியவர்கள் இருக்கிறார்கள். அதோடு, தாய் தகப்பன் இன்றி உறவினர்களின் வீட்டில் வாழும் முப்பதுக்கும் மேற்பட்ட வசதியற்ற குழந்தைகளைப் படிக்க வைக்கிறார் தேவி.

- ஒருவேளை பசியாறுவதற்காகவே பள்ளிக்கூடம் சென்ற தேவி இப்போது ஓர் ஊருக்கே உணவளித்துக் கொண்டிருக்கிறார். இவர் குறித்த நெகிழ்ச்சியான பதிவுதான்: 'நேசக்காரிகள்: அன்னப்பறவை - தேவி'

உத்வேகமும் உற்சாகமும்: 8 நிமிட வாசிப்பில் அவள் விகடனின் 12 பகுதிகள்!

துளசி மஞ்சள் சார வடிநீர்

தேவை:  துளசி இலைகள் - ஒரு கைப்பிடி அளவு  சுத்தமான விரளி மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்  தண்ணீர் - 200 மில்லி  சீரகம், மல்லி (தனியா) - தலா கால் டீஸ்பூன்  இந்துப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை:  200 மில்லி தண்ணீரைச் சூடாக்கி அதில் துளசி இலைகள், சீரகம், மல்லி, விரளி மஞ்சள்தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். 100 மில்லியாக வந்ததும் வடிகட்டி, இந்துப்பு கலந்து பருகலாம்.

பயன்: துளசி மற்றும் மஞ்சளில் ஏராளமான மருத்துவக் குணங்கள் உள்ளன. துளசி மஞ்சள் சார வடிநீர் நுரையீரல் நோய்த்தொற்றைச் சரி செய்து, ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, இதய துடிப்புக்கு மிகவும் துணைபுரியும். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும். மூளை செல்கள் சிதைவடையாமல் காத்து மன அமைதிக்கு வழிவகுக்கும். செரிமான மண்டலத்தைச் சீர்செய்யும்.

குறிப்பு: இதில் இந்துப்பைத் தவிர்த்து, பால் மற்றும் பனங்கற்கண்டு சேர்த்தும் வளரும் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.

- நோய் எதிர்ப்பு மண்டலம் சரிவர இருந்தால் மட்டுமே நமது உடலைத் தாக்கும் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்கள் மூலம் தோன்றும் நோய்களை எதிர்த்துப் போராட முடியும். இதற்கு உதவும் வகையில், நம் உணவில் வைட்டமின்கள், புரோட்டீன், இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், ஃபோலிக் ஆசிட், பொட்டாசியம், மக்னீசியம் போன்ற பல சத்துகள் தவறாது இடம்பெற வேண்டும். இவ்வாறு அனைத்து சத்துகளும் பெற உதவும் வகையில் ஆரோக்கியம் காக்கும், சுவையான 30 உணவு வகைகளை 'உணவே மருந்து! - உடல்நலம் காக்கும் உன்னத உணவுகள் 30' என்ற தலைப்பிலான இணைப்புப் பகுதியில் வழங்குகிறார் ஓசூரைச் சேர்ந்த சமையல் கலைஞர் எஸ்.சாந்தி.

உத்வேகமும் உற்சாகமும்: 8 நிமிட வாசிப்பில் அவள் விகடனின் 12 பகுதிகள்!

எடையை எப்படிக் குறைக்கலாம்?

கலோரி அதிகமான உணவுகளைச் சாப்பிட்டுவிட்டு, உடலுக்கு இயக்கமே இல்லாமல் உட்கார்ந்திருப்பதுதான் எடை எகிறக் காரணம் என்பது எல்லோரின் எண்ணமும். ஆனால், ஹார்மோன் சமநிலை யின்மை இருந்தால் மணிக்கணக்காக  உடற் பயிற்சி செய்தாலும் எடை குறையாது. ஹார்மோன்களைப் பற்றிய விழிப்பு உணர்வில்லாவிட்டால் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் பலனில்லை என விரக்தியில் எல்லாவற்றையும் ஒருநாள் தூக்கிப் போடுவீர்கள். 

- எடை குறைப்பு சபதம் மட்டும் ஏன் எப்போதும் தோல்வியிலேயே முடிகிறது? அதன் பின்னணியை அலசி சபதத்தில் உங்களை வெற்றிபெறச் செய்வதுதான் 'ஃபிட்னெஸ்: எடை குறைப்பு A to Z' பகுதியின் நோக்கம். 

இந்த அவள் விகடன் இதழை வாங்க... இந்த லிங்கைக் க்ளிக் பண்ணுங்க: https://bit.ly/2FVUWdy