தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

டிரெண்ட் - செக்டு டிசைன் உடைகள்... அணியலாம் இப்படி!

டிரெண்ட் - செக்டு டிசைன் உடைகள்... அணியலாம் இப்படி!
பிரீமியம் ஸ்டோரி
News
டிரெண்ட் - செக்டு டிசைன் உடைகள்... அணியலாம் இப்படி!

டிரெண்ட் - செக்டு டிசைன் உடைகள்... அணியலாம் இப்படி!

டிரெண்ட் - செக்டு டிசைன் உடைகள்... அணியலாம் இப்படி!

‘பாலும் பழமும் கட்டம் புடவை' என்று நம் பாட்டிகள், அம்மாக்கள் சொல்லிக் கேட்டிருப்போம். 1961-ல் வெளியான ‘பாலும் பழமும்’ திரைப்படத்தில் நடிகை சரோஜாதேவி கட்டிவந்த செக்டு புடவையைப் போன்ற டிசைன்களைத்தான் அப்படிக் குறிப்பிடுவார்கள். அந்த செக்டு டிசைன் உடைகளைத்தான் இன்றைய பெண்கள் இண்டோ - வெஸ்டர்ன், வெஸ்டர்ன், கேஷுவல் லுக் எனத் தங்களுக்கு விருப்பமான ஸ்டைல்களில் அணிந்துகொள்கிறார்கள்.  இதற்கான ஃபேஷன் டிப்ஸ்களை அளிக்கிறார் சென்னையைச் சேர்ந்த உடை வடிவமைப்பாளர் வினோதினி.

புடவைக்கு பிளெய்ன் பிளவுஸ்!

டிரெண்ட் - செக்டு டிசைன் உடைகள்... அணியலாம் இப்படி!

புடவையில் இருக்கும் மல்டி கலர்களில் எந்த நிறத்தில் வேண்டுமானாலும் பிளெய்ன் பிளவுஸ் தேர்வு செய்யலாம். செக்டு புடவைகளுக்கு கெம்ப் ஜுவல்லரி பொருத்தமான தேர்வாக இருக்கும். ஹாஃப் அண்டு ஹாஃப் புடவை எனில், முந்தானை பிளெய்னாக இருந்தால் செக்டு பிளவுஸும் முந்தானை செக்டுகளால் ஆனது எனில் பிளெய்ன் பிளவுஸும் தேர்வு செய்யலாம். சிங்கிள் நிறப் புடவையில் கோல்டன் நிற செக்டு டிசைன் எனில், புடவையின் நிறத்துக்கு கான்ட்ராஸ்ட்டான நிறத்தில் புரொகேட் பிளவுஸ் தேர்வுசெய்து அணியலாம். போல்டு லுக் விரும்பும் பெண்கள் போட் நெக், ஹை நெக், கோல்டு ஷோல்டர், பட்டர்ஃப்ளை ஸ்லீவ் என பிளவுஸை வடிவமைத்துக்கொள்ளலாம். சிம்பிள் லுக் விரும்புபவர்கள் பார்டரில் மட்டும் செக்டு டிசைனைத் தேர்வுசெய்யலாம்.

இண்டோ - வெஸ்டர்ன் உடைகள்

டிரெண்ட் - செக்டு டிசைன் உடைகள்... அணியலாம் இப்படி!

செக்டு டிசைனில் இண்டோ - வெஸ்டர்ன் அவுட்லுக் விரும்பும் பெண்கள், தங்கள்  உடைகளை வடிவமைக்கும் விதத்திலும், மிக்ஸ் மேட்ச் செய்யும் ஆர்வத்திலும் அதைச் சாத்தியமாக்கலாம். ஜீன்ஸ் - டி ஷர்ட் அணிந்து, அதற்கு மேல் செக்டு டிசைனில் லாங் ஜாக்கெட் அணிந்தால் நீட் லுக் தரும். இதற்கு பட்டன் டைப் கம்மல் அசத்தலாக இருக்கும். ட்ரெண்டி லுக் விரும்பும் பெண்கள் மேக்ஸி அல்லது ஹை - லோ பேட்டர்ன் ஆடைகளாக வடிவமைத்துக்கொள்ளலாம். அல்லது எல்போ ஸ்லீவுடன் கூடிய ஷார்ட் கவுனாகவும் வடிவமைத்துக்கொள்ளலாம். இதற்கு லாங் இயர் ரிங்ஸ் பெர்ஃபெக்ட் மேட்ச்சாக இருக்கும்.

ஸ்கர்ட் சீக்ரெட்!

டிரெண்ட் - செக்டு டிசைன் உடைகள்... அணியலாம் இப்படி!

மல்டி கலர் கட்டங்கள் நிறைந்த ஸ்கர்ட்டுக்கு `பிளெய்ன் டாப்’பை மேட்ச் செய்வதுதான் பொருத்தமான தேர்வாக இருக்கும். எலிகன்ட் லுக்கை விரும்புபவர்கள் டாப்ஸின் கழுத்துப் பகுதியில் மிரர் அல்லது ஜர்தோஸி வேலைப்பாடுகள் செய்தால் அசத்தலாக இருக்கும். ட்ரெடிஷனல் லுக் விரும்பும் பெண்கள் ரா-சில்க் மெட்டீரியலில் டாப்ஸை வடிவமைத்து, ஸ்லீவ்களில் செக்டு பார்டர்களால் பைப்பிங் செய்துகொள்ளலாம். ட்ரெடிஷனல் அவுட்ஃபிட்டுக்கு கெம்ப் ஜுவல்லரிகள் பொருத்தமாக இருக்கும். கேஷுவல் லுக்கை விரும்புபவர்கள் மல்டி கலர் ஸ்கர்ட்டுக்கு கலம்காரி மெட்டீரியலில் வடிவமைத்த டாப்ஸ், ஆக்ஸிடைஸ்டு நெக்பீஸ் என மிக்ஸ் மேட்ச் செய்தால் கெத்து காட்டலாம்.

அசிமிட்ரிகல் குர்தி!

டிரெண்ட் - செக்டு டிசைன் உடைகள்... அணியலாம் இப்படி!

கேஷுவல் லுக் விரும்பும் பெண்கள் லாங் ஸ்லிட் வைத்த குர்தியை வடிவமைத்து, அதற்கு மேட்சான நிறத்தில் லெகிங்ஸ் தேர்வு செய்து அணியலாம். அல்லது பிளெய்ன் டாப் - லெகிங்ஸ் அணிந்து செக்டு ஓவர் கோட்டை மிக்ஸ் மேட்ச் செய்யலாம். ட்ரெண்டி லுக் விரும்புபவர்கள் அசிமிட்ரிகல் செக்டு குர்தியுடன் லெகிங்ஸை மிக்ஸ் மேட்ச் செய்யலாம். இவற்றுக்கு சிம்பிளான ஆக்ஸிடைஸ்டு நகைகள் அசத்தலாக இருக்கும். ட்ரெடிஷனல் லுக் உங்கள் தேர்வு எனில் அனார்க்கலி டாப்பை தேர்வுசெய்து, பிளெய்ன் துப்பட்டா, மேட்சிங்கான நகைகளை மிக்ஸ் மேட்ச் செய்யலாம். கிராண்ட் லுக் வேண்டுமெனில் டாப்ஸில் பேட்ச் வொர்க், மிரர் வொர்க், எம்ப்ராய்டரி வேலைப்பாடுகள் செய்துகொள்ளலாம்.

-சு.சூர்யா கோமதி

நோட் இட்...

செக்டு டிசைனைப் பொறுத்தவரை, உயரம் குறைவாக இருப்பவர்கள் சிறிய கட்டங்களையும், உயரமானவர்கள் பெரிய கட்டங்களையும் தேர்வு செய்யுங்கள்.