தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

பெண்ணாக இருப்பதே சவால்தான்!

பெண்ணாக இருப்பதே சவால்தான்!
பிரீமியம் ஸ்டோரி
News
பெண்ணாக இருப்பதே சவால்தான்!

மூன்று கேள்விகள்

ஒரு பெண்ணாக எதிர்கொண்ட மிகப் பெரிய சவால்?

பாலபாரதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

பெண்ணாக இருப்பதே சவால்தான்!

ஒரு பெண்ணாக இருப்பதே மிகப்பெரிய சவால்தானே? இந்தச் சமூகத்தில், ஆண் பிறந்தால் மகிழ்வோடு ஏற்றுக்கொள்வார்கள். பெண் பிறந்தால் சரியாகக் கவனிக்க மாட்டார்கள். தப்பித்தவறிதான் நான்  பள்ளிக்கூடத்துக்குச் சென்றேன். தப்பித்தவறிதான் கல்லூரிப் படிப்பை நிறைவு செய்தேன். தப்பித்தவறி, ஏதோ ஒரு வெளிச்சத்தில்தான் அரசியலுக்கு வந்தேன். ஒருவேளை, அந்தக் காலகட்டத்தில் பெண் குழந்தை வேண்டாமென்று நெல் போட்டு என்னைக் கொன்றிருந்தால் நான் எப்படி இந்த நிமிடம் உயிரோடு உங்களுடன் உரையாடி கொண்டிருப்பேன்? ஆகவே, ஒரு பெண்ணாக இந்த நிமிடம் நான் உயிரோடு இருப்பதே மிகப்பெரிய சவால்தான். இது எனக்கு மட்டுமல்ல; எல்லா பெண்களுக்கும் பொருந்தும்.

ஒரு பெண்ணாகப் பெருமையடைந்த தருணம்?

திலகவதி ஐபிஎஸ்

பெண்ணாக இருப்பதே சவால்தான்!

காவல்துறையில் பணிபுரிந்தபோது, பல்வேறு வடிவங்களில் பாதிக்கப்பட்டு வரும் பெண்கள், அவங்களைப் பெற்றெடுத்த தாயிடம்கூட  பகிர்ந்துகொள்ள முடியாத  விஷயங்களை  என்னிடம் பகிர்ந்துகொள்வார்கள். அந்த நேரத்தில், ஒரு பெண் அதிகாரியாக அந்தப் பெண்களுக்கு ஒரு நம்பிக்கையையும் ஆறுதலையும் என்னால் தர முடிந்தது. ஆணாக இருந்திருந்தால் என்னால் அந்த நம்பிக்கையையும் ஆறுதலையும் தந்திருக்கவே முடியாது. பெண்ணாக இருந்ததால்தான் இது சாத்தியமானது. இதை நினைத்தே நான் பெருமைப்படுகிறேன்.

பெண்கள் குறித்த புத்தகங்களில் பிடித்தது?

அருள்மொழி, வழக்கறிஞர்

பெண்ணாக இருப்பதே சவால்தான்!

பெண் ஏன் அடிமையானாள்? இந்தக் கேள்வி எழும்போது அதற்குக் காரணமான மதம், மொழி, கடவுள் போன்ற பல பெயர்களால் பெண்கள் எப்படியெல்லாம் ஒடுக்கப்பட்டார்கள் என்பதை மிகத் தெளிவாகப் பதிவுசெய்த ‘பெண் ஏன் அடிமையானாள்?’ புத்தகம் என் நினைவுக்கு வரும். பெரியாருடைய கட்டுரைகள் அடங்கிய அந்தப் புத்தகத்தைப் படித்தால், `பெண் ஏன் அடிமையானாள்' என்பதை நிச்சயம் நீங்கள் புரிந்துகொள்ளலாம்.

- ப.தினேஷ்குமார்