பிரீமியம் ஸ்டோரி

‘`கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம், விருப்பம், வேலை என எல்லாவற்றிலும் இசையே வாழ்வாகக் கிடைத்திருப்பது என் பாக்கியம்’’ என்கிறார் ‘பரூர்’ ஹரிணி ஸ்ரீவத்சா. சென்னை மியூசிக் அகாடமியின் ‘2018 டிசம்பர் இசை விழா’வில் ‘பரூர் பாணி வயலின் இசை’ என்ற தலைப்பில் விளக்கவுரை நிகழ்த்தி, அருணா சாய்ராம் உட்பட பல மூத்த இசைக் கலைஞர்களை வியப்பில் ஆழ்த்தியவர். பாரம்பர்யமிக்க மியூசிக் அகாடமியில் விளக்கவுரை நிகழ்த்திய இளம் இசைக் கலைஞர் என்கிற பெருமைக்குரியவர்.

இசையே வாழ்வு: தாகிட தாகிட!

‘`என் அம்மாவின் தாத்தா, பிரபல வயலின் வித்வான் பரூர் சுந்தரம் ஐயர். வயலின் இசையில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி, தன் மாணவர்களுக்குக் கற்றுத்தந்து ட்ரெண்ட் செட்டராகத் திகழ்ந்தவர். இன்றுவரை தொடரும் ‘பரூர் பாணி வயலின் இசை’ என்ற மரபை ஏற்படுத்தி, பல புதுமைகளைப் புகுத்தி வழிகாட்டியவர். இந்துஸ்தானி இசையில் முதன்முதலில் வயலின் இசைக் கருவியை அறிமுகம் செய்தவர். தானம் மற்றும் கல்பனா ஸ்வரம் வாசிக்கும்போது, ‘தாகிட தாகிட’ என்கிற வில்லடி (Bowing) மற்றும் ஒரே தந்தியில் வர்ணம் வாசிப்பது என வயலின் இசையின் பல பரிமாணங்களையும் தனது ஆழ்ந்த சங்கீதப் புலமையால் இந்த உலகுக்கு அளித்தவர்.

இசையே வாழ்வு: தாகிட தாகிட!

என் தந்தை கல்லூரி முதல்வராகப் பணிபுரிகிறார். தாய், இசையியல் வல்லுநர்.ஆகவே, நான் கருவிலேயே இசை பயின்றேன். அம்மாவிடம் வாய்ப்பாட்டும், தாத்தா பரூர் வெங்கட்ராமனிடம் வயலினும் கற்றேன். இசையில் முதுகலை மற்றும் பிஹெச்.டி பெற்றேன். கணவர் ஸ்ரீவத்சா, மூதறிஞர் ராஜாஜியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்; பிரபல டேபிள் டென்னிஸ் வீரர்.

‘பரூர் பாணி வயலின் இசை’ என்ற தலைப்பில் முனைவர்பட்ட ஆய்வு மேற்கொண்டபோது, என் கொள்ளுத்தாத்தா வயலின் இசையில் அறிமுகப்படுத்திய புதுமைகளையும், அவை பல இசைக் கலைஞர்களுக்கு உதவியதையும் அறிந்தேன். தீக்ஷிதர் கிருதிகளில் தேன்கூடு, குருவிக்கூடு இவற்றை விவரிப்பது பொருள் உணர்ந்து பாட வேண்டும் என்பதை உணர்த்துகிறது. பக்க வாத்தியம் வாசிக்கும்போது, இசைக் கலைஞரின் ஸ்டைலுக்கு ஏற்ப அடக்கி வாசிப்பது அவசியம். இவையெல்லாம் ‘பரூர் பாணி’ இசையின் சிறப்புகள். இதுபற்றி விளக்கவுரை நிகழ்த்தியதை பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்” என்கிற ஹரிணி, கோடைக்கால இசைப் பயிலரங்கம் உட்பட பல இசை வகுப்புகளையும் நடத்துகிறார். ஐந்து வயது குழந்தையிலிருந்து 50 வயதுள்ளவர்கள்வரை இவரிடம் இசை பயில் கிறார்கள்.

ஸ்வரங்களுடன் சுவாரஸ்யமாக இசைக் கிறது வாழ்க்கை!

-ஸ்ரீஅகத்திய ஸ்ரீதர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு