Published:Updated:

பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...
பிரீமியம் ஸ்டோரி
பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

Published:Updated:
பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...
பிரீமியம் ஸ்டோரி
பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

சத்தமின்றி ஒரு சாதனை! 

பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச எல்லை மாவட்டமான பார்மரில் இருக்கிறது பிலோன்-கி-தானி கிராமம். எல்லைக்கோட்டிலிருந்து 10 கி.மீ தொலை விலுள்ள இந்தக் கிராமத்தில் சத்தமின்றி சாதனை ஒன்றை நிகழ்த்தியிருக்கிறார் 16 வயது பெண் கமலா. 20 சதவிகிதத்துக்கும் குறைவான படிப்பறிவு மற்றும் குறைவான ஆண் பெண் பாலின விகிதம்கொண்ட இந்தக் கிராமத்தில் முதன்முதலாக 10-ம் வகுப்பு தேர்வு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

எழுதியிருக்கிறார் இவர். இதனால் இந்தக் கிராமமே இவரைக் கொண்டாடிவருகிறது. பாலைவனத்துக்கு நடுவே உள்ள இந்தக் கிராமத்தின் தொடக்கப்பள்ளியில் ஒவ்வோர் ஆண்டும் 60 சதவிகித மாணவர்கள் பாதியிலேயே படிப்பை நிறுத்திவிடுகின்றனர்.

இவ்வூரிலிருந்து 7 கி.மீ தொலைவிலுள்ள காத்ரா என்ற ஊரில் இருக்கிறது பள்ளி. இவ்வளவு தொலைவு பெண் குழந்தைகளைப் படிப்பதற்கு அனுப்ப பெற்றோர் தயங்கிய நிலையில், அவர்களை ஊக்கப்படுத்தினர் இந்திய செக் போஸ்ட்டில் பணியாற்றும் ராணுவத்தினர். கமலாவின் தந்தை, மகளைத் துணிவுடன் பள்ளிக்கு அரசு அளித்த இலவச சைக்கிளில் அனுப்ப, கிராமத்தில் 10-ம் வகுப்பு முடிக்கும் முதல் பெண் ஆகிறார் கமலா.

“இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. இதைக் கண்டு இன்னும் பல பெண்கள் படிப்பைத் தொடர வேண்டும் என்பதே என் ஆசை” என்று சொல்கிறார் இந்தச் சுட்டிப்பெண்.

கலக்கு கமலா!

ஆசிரியருடன் விண்ணில் பறந்த விமானி!

பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

1991-ம் ஆண்டு மும்பையில் உள்ள ப்ளே ஸ்கூல் ஒன்றில் மாணவர் சேர்க்கைக்காக வந்திருந்த சிறுவன் ஒருவனிடம், “உன் பெயர் என்ன?” என்று ஆசிரியர் கேட்க, “கேப்டன் ரோஹன் பாசின்” என்று பதிலளித்தான். அப்போது அவன் வயது மூன்று.

30 ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத்தில் ஏர் இந்தியாவின் டெல்லி - சிகாகோ விமானம் ஒன்றில் பயணித்த சுதா சத்யன், விமானியின் அறிவிப்பைக் கவனித்துக்கேட்டார். விமானியின் பெயர் கேப்டன் ரோஹன் பாசின்!

விமானப் பணிப்பெண்ணிடம் விமானியைச் சந்திக்க வேண்டும் என்று அவர் கேட்க, ஆசிரியரான சுதாவை ஓடி வந்து கட்டிக்கொண்டார் விமானியும், அவரது ப்ளே ஸ்கூல் மாணவருமான ரோஹன் பாசின். ஆசிரியர் ஆனந்தக் கண்ணீர் சிந்தினார். 30 ஆண்டுகளுக்கு முன் ஆசிரியரும் மாணவனும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும், விமானத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் தன் ட்விட்டர் பக்கத்தில் ஒன்றாகப் பகிர்ந்திருக்கிறார் ரோஹனின் தாய் நிவேதிதா பாசின். அவரும் ரோஹனின் தந்தையும் ஏர் இந்தியாவின் முன்னாள் விமானிகள்.

விளையும் பயிர் முளையிலே தெரிந்திருக்கிறது!

சிறப்பு ஒலிம்பிக்கில் பதக்கங்களை வென்ற தமிழ்ப் பெண்கள்!

பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

2019-ம் ஆண்டுக்கான மாற்றுத்திறனாளிகளின் சிறப்பு ஒலிம்பிக் அபுதாபி நாட்டில் சமீபத்தில் நடை பெற்றது. அதில் இந்தியா சார்பாகக் கலந்துகொண்ட அணியினர் பெரும் சாதனை யாக பதக்கங்களைக் குவித் துள்ளனர். 284 விளையாட்டு வீரர்கள் விளையாடி, 85 தங்கம், 154 வெள்ளி மற்றும் 129 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 368 பதக்கங்களை வென் றுள்ளனர். ஒலிம்பிக்கில் கலந்துகொண்டு சென்னை திரும்பிய 21 விளையாட்டு வீரர்கள் அடங்கிய குழுவை அவர்களின் நண்பர்களும் குடும்பத்தினரும் வாழ்த்தி வரவேற்றனர். 12 ஆண்டுகளாகப் பயிற்சி செய்து, மூன்று முறை ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற ஆர்த்தி சீனிவாசன் நீச்சல் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றிருக்கிறார். மதுரை பெத்ஷன் சிறப்புப் பள்ளியைச் சேர்ந்த ஆறு பெண்களைக்கொண்ட இந்திய பேட்மின்டன் அணியில் ஒருவர் 22 வயதான மனநலம் குன்றிய திவ்ய பாரதி. “ஒற்றையரில் தங்கப்பதக்கம், இரட்டையரில் வெள்ளி... மிக்க மகிழ்ச்சி” என்று தடுமாற்றத்துடன், ஆனால் மட்டற்ற மகிழ்ச்சியுடன் கூறினார். இந்தக் குழுவை வழிநடத்திய பால் தேவசகாயம், “அபுதாபியில் ராஜா ராணி போல நடத்தப்பட்ட இவர்களை அரசு சார்பில் வரவேற்க ஒருவரும் வரவில்லை. மாநில அரசு இவர்களது உழைப்பை அங்கீகரிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

வீரர்களுக்கு வாழ்த்துகளும் அன்பும்!

`ஏபல்’ பரிசு பெற்ற முதல் பெண்!

பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

நவீன வடிவவியல் பகுப்பாய்வு (ஜியாமெட்ரிக் அனாலிசிஸ்) துறையை வடிவமைத்தவரும், 40 ஆண்டுக்காலமாக கணிதத்துறைக்குத் தன் பங்களிப்பைச் செய்தவருமான கரேன் உல்லேபெக் என்ற கணித அறிஞருக்கு `ஏபல்’ பரிசு வழங்கப்பட்டுள்ளது. ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் 76 வயதான கரேனுக்கு இப்போது கிடைத்துள்ளது ஏழு லட்சம் டாலர் பரிசுத்தொகை!

தன் 30 வயது முதல் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுவரும் கரேனின் கடும் உழைப்புக்கு வெகு தாமதமாகவே இந்த அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. அமெரிக்க சமையற்கலை நிபுணர் ஜுலியா சைல்டை தன் ரோல் மாடல் என்று சொல்லும் கரேன், “பணியாற்றும் காலம் முழுக்க நான் ஒரு பெண் என்பதை உணர்ந்துகொண்டே இருந்தேன். இங்கு இருக்கும் ஆண்களைப் போல நான் ஒருபோதும் இருந்ததில்லை” என்றும் குறிப்பிடுகிறார்.

வாழ்த்துகள் கரேன்... காலம் மாறுகிறது!

விமானம் ஓட்டிய தாய் - மகள் ஜோடி!

பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

அமெரிக்காவின் எம்பிரி - ரிடில் ஏரோநாட்டிக்கல் கல்லூரியின் தலைவர் டாக்டர் ஜான் வாட்ரெட். சமீபத்தில் லாஸ் ஏஞ்சலஸ் நகரிலிருந்து அட்லான்டா நகருக்கு போயிங் 757 விமானம் ஒன்றில் இவர் பயணம் செய்தார். அப்போது அருகில் இருந்த தாய் மற்றும் குழந்தைகள் இருவர் விமானப் பணிப்பெண்ணிடம் அனுமதி பெற்று விமானிகள் கேபின் வரை சென்று விமானிகளைப் பார்த்துவிட்டுத் திரும்பினர். அவர்கள் பேச்சிலிருந்து விமானத்தை ஓட்டும் விமானியும், முதல் அதிகாரியும் தாய் - மகள் ஜோடி என்று தெரிந்துகொண்டார். ஆவலை அடக்க முடியாதவர் பணிப்பெண்ணிடம் தானும் அனுமதி கேட்டு, கேபின் வரை சென்று விமானி கேப்டன் வெண்டி ரெக்ஸ்டன் மற்றும் அவர் மகளான பர்ஸ்ட் ஆபீஸர் கெல்லி ரெக்ஸ்டன் இருவரையும் பாராட்டிவிட்டு, அவர்களது புகைப்படம் ஒன்றையும் எடுத்துக்கொண்டார்.

தன் ட்விட்டர் பக்கத்தில் “டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றில் பயணித்தபோது நான் கண்ட தாய் - மகள் விமானிகள் ஜோடி. இன்றைய இளம்பெண்களுக்கு மிகவும் ஊக்கமளிக்கக்கூடிய புகைப்படம் இது” என்ற தலைப்புடன் புகைப்படத்தைப் பகிர்ந்தார். அமெரிக்காவில் வைரலான புகைப்படம், உலகம் முழுக்க பெண்களின் கவனத்தைப் பெற்றது. கடந்த 2017-ம் ஆண்டின் கணக்குப்படி, அமெரிக்க விமானிகளில் 7% பேர் மட்டுமே பெண்கள். இந்த நிலையை மாற்றி அதிகம் பெண் விமானிகளைப் பணியமர்த்த அமெரிக்கா முயன்றுவருகிறது. “பர்ஸ்ட் ஆபீஸருக்கு ஒரு சரியான ரோல் மாடல் கிடைத்திருக்கிறார் - அவரது அம்மா. நம் அனைவரையும் உற்சாகப்படுத்தும் செய்தி இது” என்றும் கூறியுள்ளார் வாட்ரெட்.

மகள்களைப் பெற்ற அம்மாக்களுக்குத் தெரியும்.... மகள்களுக்கு அவர்கள்தாம் ரோல் மாடல் என்று!

-நிவேதிதா லூயிஸ்

அவள் செய்திகள்

•  கர்நாடக மாநிலத்தில் விஜய்புரா மாவட்டத்தில் உள்ள நலத்வாட் நகரில் சமீபத்தில் நடைபெற்ற திருமணங்களில், லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த அமித் - பிரியா மற்றும் பிரபுராஜ் - அங்கிதா ஜோடியினர் புதுமையாகத் திருமணம் செய்துள்ளனர். மணப்பெண்கள் இருவரும் மணமகன்கள் கழுத்தில் தாலி கட்டி கணவர்களாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.

• புல்வாமா தாக்குதலுக்கு உள்ளான பேருந்துக்கு மூன்று பேருந்துகள் பின்னால் சென்றுகொண்டிருந்த மற்றொரு பேருந்தில் 29 பெண் சி.ஆர்.பி.எப் காவலர்கள் இருந்துள்ளனர். கண்ணெதிரே நடந்த கோரவிபத்துக்குப் பின்னும் காஷ்மீரின் முக்கிய வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் துணிவுடன் இறங்கியுள்ளது 80 பெண்கள் கொண்ட படை!

• பப்புவா நியூ கினி நாட்டில் குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகளை ஹைப்போதெர்மியா நோய் தாக்குகிறது. அதைக் கண்டறிந்து பெற்றோரை எச்சரிக்க உதவும் ‘பெம்பு’ என்று பெயரிடப்பட்ட சிறு பிரேஸ்லெட் போன்ற கருவியை பெங்களூரைச் சேர்ந்த ரதுல் நாராயணன் தயாரித்து ஐ.நா சபையின் யூனிசெப் மூலம் வழங்கிவருகிறார்.

• பஞ்சாபின் மல்யுத்த வீராங்கனை குருசரண் பிரீத் கௌர், 35 வயதில் மீண்டும் விளையாட்டுக்குத் திரும்பினார். சமீபத்தில் நடைபெற்ற ஒரு கோடி ரூபாய் பரிசுத் தொகைக்கான போட்டியில் வென்றவர், கணவர் - மாமியார் இருவரும் தன்னை அடித்து உதைத்த போதும் குழந்தைக்காக பொறுத்துக்கொண்டதாகவும், ஒருகட்டத்தில் பொறுமை இழக்கவே, விவாகரத்து செய்து விட்டு, கடும் பயிற்சி மேற்கொண்டு மீண்டும் விளையாட வந்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.

• விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து வெளியேறி விண்ணில் நடை மேற்கொண்டு பாட்டரிகள் பழுதைச் சீர் செய்திருக்கிறார் ஆன் மக்லேன் என்ற வீராங்கனை. விண்வெளி நடையில் எடுக்கப்பட்ட தன் புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் ஆன், `மில்லியன் டிரீம்ஸ் இஸ் ஆல் இட்ஸ் கான டேக்’ என்ற பாடல் வரிகளை அத்துடன் இணைத்திருக்கிறார்.

• ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணாகப் பிரபல நடிகை தீபிகா படுகோன் நடிக்கும் ‘சபக்’ திரைப்படத்தின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டாலும் வாழ்க்கையில் தன்னம்பிக்கையுடன் முன்னேறி, அமிலவீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களை ஒருங்கிணைத்து உதவிவரும் லட்சுமி என்ற பெண்ணின் கதையே `சபக்’.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism