Published:Updated:

இசையிலே தொடங்குதம்மா! - தினமும் கற்றுக்கொள்கிறேன்! - பாம்பே ஜெயஸ்ரீ

இசையிலே தொடங்குதம்மா! - தினமும் கற்றுக்கொள்கிறேன்! - பாம்பே ஜெயஸ்ரீ
பிரீமியம் ஸ்டோரி
இசையிலே தொடங்குதம்மா! - தினமும் கற்றுக்கொள்கிறேன்! - பாம்பே ஜெயஸ்ரீ

இசையிலே தொடங்குதம்மா! - தினமும் கற்றுக்கொள்கிறேன்! - பாம்பே ஜெயஸ்ரீ

இசையிலே தொடங்குதம்மா! - தினமும் கற்றுக்கொள்கிறேன்! - பாம்பே ஜெயஸ்ரீ

இசையிலே தொடங்குதம்மா! - தினமும் கற்றுக்கொள்கிறேன்! - பாம்பே ஜெயஸ்ரீ

Published:Updated:
இசையிலே தொடங்குதம்மா! - தினமும் கற்றுக்கொள்கிறேன்! - பாம்பே ஜெயஸ்ரீ
பிரீமியம் ஸ்டோரி
இசையிலே தொடங்குதம்மா! - தினமும் கற்றுக்கொள்கிறேன்! - பாம்பே ஜெயஸ்ரீ

பார குரல் வளம் மற்றும் ஆழமான இசைத் திறனால் கச்சேரிகளில் ரசிகர்களை மெய்மறக்கச் செய்யும் இசை வாணி, பாம்பே ஜெயஸ்ரீ. கர்னாடக இசைப் பாடகியாகப் புகழ்பெற்றவர், திரைப்படப் பின்னணிப் பாடகியாக அனைத்துத் தரப்பு மக்களையும் தன் குரலால் கொள்ளைகொண்டவர். பரபரப்பான சங்கீதப் பணிகளுக்கு இடையே இருந்தாலும், குளுமையான குரலால் இனிமையுடன் வரவேற்று, தன் இசைப் பயணத்தைப் பகிர்ந்துகொண்ட ஜெயஸ்ரீ, 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் கச்சேரி செய்திருக்கிறார். தமிழ்க் காவியங்கள், புதுக் கவிதைகள் உட்பட 30 பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

இசையிலே தொடங்குதம்மா! - தினமும் கற்றுக்கொள்கிறேன்! - பாம்பே ஜெயஸ்ரீ

35 ஆண்டுகளுக்கும் மேலான உங்கள் இசைப் பயணம் பற்றி...

என் பெற்றோர் இசை ஆசிரியர்கள். நானும் பாடகி ஆக வேண்டும் என்று என் அம்மா ஆசைப்பட்டார். அதனாலேயே பக்கத்து வீட்டு நண்பர்களுடன்கூட என்னை விளையாட விடமாட்டார்; வெளியிடங்களுக்கும் செல்ல விடமாட்டார். பள்ளிக்குச் செல்வது, வீட்டில் இசை கற்றுக்கொள்வது, சாதகம் செய்வதுதான் என் முழுநேர வேலை. இசையுடன் தொடங்கும் என் ஒவ்வொரு நாளும் அதிலேயேதான்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இசையிலே தொடங்குதம்மா! - தினமும் கற்றுக்கொள்கிறேன்! - பாம்பே ஜெயஸ்ரீ

முடியும். இசை மேதைகளான பாலாமணி அம்மா, லால்குடி ஜெயராமன் ஐயா ஆகியோரிடம் முறையாக இசை பயின்றேன். சென்னை வந்து, என் இசைப் பயணத்தைத் தொடர்ந்தேன். ஆல் இண்டியா ரேடியோ, தூர்தர்ஷன் சேனல், பல்வேறு சபாக்களில் படிப்படியாகப் பாடி, இசைப் பயிற்சியால் வளர்ந்தேன். இப்படி, கடந்த 37 ஆண்டுகளாகப் பாடினாலும், இசை என்ற பெருங்கடலின் ஆழத்தை நோக்கி மகிழ்ச்சியுடன் பயணித்துக்கொண்டிருக்கிறேன். 

பின்னணிப் பாடகி அனுபவம் பற்றி...

இளம் வயதில் எங்கள் வீட்டில் ரேடியோ வாயிலாக சினிமா பாடல்களை அடிக்கடி கேட்பேன். அதேபோல பாடி, பயிற்சி எடுப்பேன். என் பள்ளித் தோழி புவனாவின் தாத்தா, சினிமா தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் சார். ஒருமுறை எங்கள் பள்ளி நிகழ்ச்சியில் நான் பாடியதைக் கேட்ட அவருக்கு என் குரல் பிடித்துப்போனது. அவர் தயாரித்த `தம்பதிகள்’ படத்தில் பாட வாய்ப்பு கொடுத்தார். ஒரு பாடல் பாடச் சென்ற என்னை அந்தப் படத்தில் நான்கு பாடல்களைப் பாடவைத்தார், எம்.எஸ்.விஸ்வநாதன் சார். கல்லூரி முடித்துவிட்டு, சென்னையில் இசை கற்றுக்கொண்டிருந்த காலம். `இளையராஜா என்ற ஓர் இசை மேதை இருக்கிறார். அவர் பாட வாய்ப்பு கொடுத்தால் உடனே பயன் படுத்திக்கொள்’ என்று என் குரு லால்குடி ஜெயராமன் சொன்னார். அடுத்த இரண்டு மாதங்களில் இளையராஜா சாரிடமிருந்து அழைப்பு வந்தது. அவர் இசையில், `கை வீணையை ஏந்தும் கலைவாணியே (வியட்நாம் காலனி)’ பாடலைப் பாடினேன். பிறகு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் `நறுமுகையே (இருவர்)’ பாடல் பாடினேன். தொடர்ந்து, ‘வசீகரா என் நெஞ்சினிக்க (மின்னலே)’, `பார்த்த முதல் நாளே (வேட்டையாடு விளையாடு)’, `சுட்டும் விழி (கஜினி)’, ‘யாரோ மனதிலே (தாம் தூம்)’ உட்பட ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் பல பாடல்களைப் பாடியிருக்கிறேன்.

இசையிலே தொடங்குதம்மா! - தினமும் கற்றுக்கொள்கிறேன்! - பாம்பே ஜெயஸ்ரீ

கர்னாடக இசை, சினிமா இசை... இரண்டுக்குமான வித்தியாசம்?

(சிரிக்கிறார்) கர்னாடக சங்கீதம் எப்போதும் எனக்குள் ஊறிக்கொண்டேயிருக்கும் ஒரு கலை. சமீபத்தில், சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் மூன்று மணிநேரம் கச்சேரி செய்தேன். இப்படி பாடக்கூடிய இடம், கேட்கும் ரசிகர்கள், பாடக்கூடிய சூழல் மற்றும் கீர்த்தனைகள் பற்றி முன்தயாரிப்பு மற்றும் பயிற்சிக்காக மாதக்கணக்கில் நேரம் செலவிடுவேன். கர்னாடக இசைப் பயிற்சிதான், சினிமா பாடல்கள் உட்பட பல வகையான பாடல்களையும் நான் பாடுவதற்கு அஸ்திவாரம். என் சினிமா பாடல்களைக் கேட்டு நிறைய ரசிகர்கள், கர்னாடக இசைக் கச்சேரிகளிலும் கலந்து கொள்கிறார்கள். எல்லா இசையும் மக்களை மகிழ்ச்சிப்படுத்துபவைதானே?

மக்களுக்கும் கர்னாடக இசைக்குமான இடைவெளி இன்றும் அதிகமாகவே இருக்கிறதே...

இசை எல்லோருக்கும் பொதுவானது. ஒரு பயிரின் வளர்ச்சிக்கு அதன் விதைப் பருவம் மிக முக்கியமானது. அப்படிப்பட்ட குழந்தைப் பருவம்தான், கர்னாடக இசையைக் கற்றுக்கொள்ள சரியான நேரம் என நான் நினைக்கிறேன். அப்படி நிகழ்ந்தால், கர்னாடக இசைமீது குழந்தைகளுக்குப் பெரிய சிநேகம், அன்பு, நட்பு உண்டாகிடும். கர்னாடக இசை ஆசிரியர்களின் எண்ணிக்கை மற்றும் இந்த இசை பற்றிய விழிப்புணர்வு குறைவாக இருக்கிறது. இவையும் ஒரு காரணம்.ஆஸ்கர் விருதுக்கு நாமினேட் ஆன முதல் தமிழ்ப்பாடல் உங்கள் குரலில் உருவானது. அந்த அனுபவம்...

இசையமைப்பாளர் மைக்கேல் டான்னா, ஐந்து மாதங்களாக ‘லைஃப் ஆஃப் பை’ படத்தின் இசைப் பணிகள் பற்றி என்னிடம் விளக்கினார். பிறகு மும்பையில் நடந்த ரெக்கார்டிங்கில், ‘கண்ணே கண்மணியே’ பாடலைப் பாடினேன். அந்தப் பாடலுக்காக நான் ஆஸ்கர் விருதுக்கு (2013) நாமினேட் ஆகியிருந்தேன். விருது நிகழ்ச்சியில், உலகின் சிறந்த சினிமா கலைஞர்கள் பலரையும் ஓரிடத்தில் பார்த்தது மகிழ்ச்சியாக இருந்தது. பிரபல ஹாலிவுட் பாடகி அடேலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. எனக்கு விருது கிடைக்கவில்லை என்றாலும், மிகத் திறமையான ஒரு பாடகருடன் போட்டிபோட்டதே எனக்குப் பெருமைதான்.

இசையிலே தொடங்குதம்மா! - தினமும் கற்றுக்கொள்கிறேன்! - பாம்பே ஜெயஸ்ரீ

சத்தம்போட்டு பேசாத உங்கள் குணம் குரல்வளத்துக்கு உதவுகிறதா?

ஆமாம்! என் குரல், கடவுள் அளித்த கொடுப்பினை. குரல்வளத்தை தக்கவைத்துக் கொள்ள, காலையில் நான்கு மணிக்கு சாதகம் செய்யத் தொடங்கிடுவேன். அடிக்கடி வாய்ஸ் ரெஸ்ட் எடுப்பேன். குரல்வளத்தைப் பாதிக்கிற சில உணவு வகைகளைத் தவிர்த்துவிடுவேன்.

உங்கள் பர்சனல் உலகம் எப்படியானது?

என் எல்லா உலகமும் இசைதான். அதில் ஓர் அங்கம், என் குடும்பம். தினமும் இசை கற்றுக்கொள்கிறேன். சபாக்களில், சினிமாவில் பாடுகிறேன். இசை வகுப்பு எடுக்கிறேன். வொர்க்‌ஷாப் நடத்துகிறேன். நேரம் கிடைத்தால், புத்தகம் படிப்பேன். மற்ற கர்னாடக இசைக் கலைஞர்களின் கச்சேரிகளுக்கும் ரசிகையாகச் செல்வேன்; கலைஞர்களை மனதாரப் பாராட்டுவேன்.

திருவாரூர் மாவட்டம் மஞ்சக்குடி கிராமத்தில் ஓர் இசைப் பள்ளி நடத்திவருகிறீர்கள். இந்த முயற்சி, எந்தப் புள்ளியில் தொடங்கியது?

ஐந்தரை ஆண்டுகளுக்கு முன்பு அக்கிராமத் துக்கு கச்சேரிக்காகச் சென்றிருந்தேன். அப்போது, அங்கிருந்த அரசுப் பள்ளியில் மாணவர்கள் திருக்குறளை அழகாகப் படித்துக்கொண் டிருந்தார்கள். மழலைக் குரலால் ஈர்க்கப்பட்டு, அந்த மாணவர்களைச் சந்தித்து உரையாடினேன். பாரதியாரின் பாடலை நான் பாடிக்காட்ட, அக் குழந்தைகளும் மிகச் சிறப்பாகப் பாடினார்கள். அப்போதிலிருந்து அவர்களுக்கு முறைப்படி இசை கற்றுக்கொடுக்க ஆரம்பித்தேன். வாரம்தோறும் வெள்ளிக்கிழமையில் என் மாணவிகள் இசை கற்றுக்கொடுப்பார்கள். மாதத்தில் ஒரு வெள்ளிக்கிழமையில், நான் பாடம் சொல்லிக்கொடுக்கச் சென்றுவிடுவேன். இப்போது, 300-க்கும் மேற்பட்ட குழந்தைகள், கர்னாடக இசையைக் கற்றுக்கொள்கிறார்கள். மிகச் சிறப்பாகப் பாடுகிறார்கள். அந்த அழகைக் காண, எல்லோரும் மஞ்சக்குடி வந்து பாருங்கள்!

-கு.ஆனந்தராஜ்

படங்கள் : க.பாலாஜி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism