Published:Updated:

அக்னி ஆட்டம்: விடாமுயற்சியால் நெருப்பும் நட்பானது! - கோட்டீஸ்வரி கண்ணன்

அக்னி ஆட்டம்: விடாமுயற்சியால் நெருப்பும் நட்பானது! - கோட்டீஸ்வரி கண்ணன்
பிரீமியம் ஸ்டோரி
அக்னி ஆட்டம்: விடாமுயற்சியால் நெருப்பும் நட்பானது! - கோட்டீஸ்வரி கண்ணன்

அக்னி ஆட்டம்: விடாமுயற்சியால் நெருப்பும் நட்பானது! - கோட்டீஸ்வரி கண்ணன்

அக்னி ஆட்டம்: விடாமுயற்சியால் நெருப்பும் நட்பானது! - கோட்டீஸ்வரி கண்ணன்

அக்னி ஆட்டம்: விடாமுயற்சியால் நெருப்பும் நட்பானது! - கோட்டீஸ்வரி கண்ணன்

Published:Updated:
அக்னி ஆட்டம்: விடாமுயற்சியால் நெருப்பும் நட்பானது! - கோட்டீஸ்வரி கண்ணன்
பிரீமியம் ஸ்டோரி
அக்னி ஆட்டம்: விடாமுயற்சியால் நெருப்பும் நட்பானது! - கோட்டீஸ்வரி கண்ணன்
அக்னி ஆட்டம்: விடாமுயற்சியால் நெருப்பும் நட்பானது! - கோட்டீஸ்வரி கண்ணன்

ரதநாட்டியம் மேல்தட்டு மக்களால் மேல்தட்டு மக்களுக்காக நிகழ்த்தப்படுகிற ஒரு கலை என்கிற எண்ணம் பரவலாக உண்டு. அதை உடைத்துக்காட்டியிருக்கிறார் கோட்டீஸ்வரி கண்ணன். பரதக் கலையைப் பாமரனும் ரசிக்க, கோட்டீஸ்வரி மேற்கொண்ட முயற்சிகள் அசாதாரணமானவை, அசத்தலானவை!

ஹூலா ஹூப் டான்ஸர், நெருப்பு டான்ஸர் என்றெல்லாம் அடையாளப்படுத்தப்படுகிறார் கோட்டீஸ்வரி. கால்களில் சலங்கையை மாட்டிவிட்டால் அசாத்திய அவதாரமெடுக்கிறார். அடவு தப்பாமல் அவ்வளவு அழகாக பரதமாடுகிறார். அதுவும் எப்படி? இடுப்பில் பெரிய வளையத்தை மாட்டிக்கொண்டு, அதைச் சுழற்றியபடியே... லேஸர் விளக்குகள் பொருத்திய வளையத்தை மாட்டிக்கொண்டு, அதைச் சுழற்றியபடியே... நெருப்பு பற்றவைத்த வளையத்தை மாட்டிக்கொண்டு, அதைச் சுழற்றியபடியே... தலையில் அடுக்கடுக்காக பானைகளை வைத்துக்கொண்டு, ஆணிகளின் மேல் நின்றபடியே... இப்படி கிட்டத்தட்ட 42 பொருள்களைப் பயன்படுத்தியபடி பரதமாடும் கோட்டீஸ்வரி, பள்ளிப்படிப்பைக்கூட முடிக்காதவர்.

அக்னி ஆட்டம்: விடாமுயற்சியால் நெருப்பும் நட்பானது! - கோட்டீஸ்வரி கண்ணன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘` ‘எல்லாரும்தான் டான்ஸ் ஆடறாங்க. உன் டான்ஸைப் பார்க்க மக்கள் ஆர்வமா வரணும்னா வித்தியாசமா, புதுமையா ஏதாவது முயற்சி பண்ண வேண்டாமா?’னு ஒருநாள் என் கணவர் கேட்டார். வெரைட்டி டான்ஸ் பத்தி எனக்கு எடுத்துச் சொல்லி, அந்த மாதிரியான டான்ஸை யூடியூபில் போட்டுக் காட்டினார். அதுல `ஹூலா ஹூப்' டான்ஸ் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அதாவது பெரிய வளையத்தை உடம்புக்குள்ளே மாட்டிக்கிட்டு, அதைச் சுழற்றிக்கிட்டே ஆடணும். உடனே வளையங்களுக்கு ஆர்டர் கொடுத்து வாங்கிட்டேன். ஆனா, அதை எப்படி யூஸ் பண்ணணும்னு தெரியலை. பொதுவா அந்த வளையங்களை எக்சர்சைஸ் பண்றவங்கதான் யூஸ் பண்ணுவாங்க.  அதனால அடிப்படையைத் தெரிஞ்சுக்கலாம்னு ஃபிட்னெஸ் எக்ஸ்பர்ட்டை அணுகினேன். ரொம்பத் தயங்கினாங்க. அப்புறம் என் ஆர்வத்தைப் புரிஞ்சுக்கிட்டுக் கத்துக் கொடுத்தாங்க. அதைவெச்சு ஹூலா ஹூப்பை எப்படிக் கையாளணும்னு மணிக்கணக்குல பிராக்டிஸ் பண்ணினேன். ஒரே நேரத்துல ரெண்டு விஷயங்களைச் செய்யறபோது கவனம் பயங்கரமா சிதறும். வளையத்துல கவனம் போனா, நடனத்தைக் கோட்டைவிடுவேன். நடனத்துல கவனம் செலுத்தினா, வளையம் சுத்த வராது. பல நாள்கள் போராட்டத்துக்குப் பிறகு ரெண்டையும் ஒரே நேரத்துல பிசிறில்லாமல் செய்யப் பழகினேன். ஆனா, பிராக்டிஸ் பண்ணின நாள்கள் கொடுமையானவை. வளையத்தைச் சுத்திக்கிட்டு ஆடும்போது இடுப்பும் வயிறும் புண்ணாகும். ரத்தம் கசியும். வலியில் உயிரே போகும்.

அடுத்து என்ன செய்யலாம்னு யோசிச்சேன். ஆணிகள் அடிச்ச சட்டத்தின் மேலும், கத்திகளை அடுக்கிவெச்சு அது மேலயும் ஆடப் பழகினேன். கூடவே தலையில பானைகளை அடுக்கிக்கிட்டும் முயற்சி செய்தேன். ஆணிகளும் கத்தியும் கால்களில் குத்தி ரத்தம் வழியும். அடுத்த நாள் கால்களைத் தரையில் வைக்க முடியாத அளவுக்கு வலிக்கும். பானைகள் உடைஞ்சு நொறுங்கும். விடாம முயற்சி செய்தேன். ஒருகட்டத்துல அதுலயும் சாதிச்சுக் காட்டினேன். இத்தனை விஷயங்கள் செய்யத் தெரிஞ்சாலும் எனக்கான அங்கீகாரம் அவ்வளவு எளிதாகக் கிடைச்சிடலை’’ - குரல் உடைபவருக்கு நடனம் கற்றுக்கொள்வதிலிருந்தே தொடங்கி யிருக்கின்றன சவால்கள்.

அக்னி ஆட்டம்: விடாமுயற்சியால் நெருப்பும் நட்பானது! - கோட்டீஸ்வரி கண்ணன்

‘`சொந்த ஊர் ஆந்திரா.  அந்த ஊர்ல பிழைக்க வழியில்லைனு சென்னைக்கு வந்தோம். அம்மா சாப்பாடு செய்து கொடுப்பாங்க. நான் எடுத்துட்டுப்போய் வித்துட்டு வருவேன். அப்படி வியாபாரத்துக்காகப் போகும்போது வடபழனியில தினமும் ஒரு டான்ஸ் ஸ்கூலைக் கடந்து போவேன். எனக்கும் ஆடணும்னு தோணும். வெளியில நின்னு வேடிக்கை பார்த்துக்கிட்டே நானும் அந்தப் பாட்டுக்கேத்தபடி ஆடிக்கிட்டிருப்பேன். ஒருநாள் மாஸ்டர் என்னைப் பார்த்துட்டு  கூப்பிட்டு விசாரிச்சார். என் குடும்பப் பின்னணியையும் டான்ஸ்ல எனக்கிருந்த ஆர்வத்தையும் சொன்னேன். அவரே எனக்கு டான்ஸ் கத்துக்கொடுக்க சம்மதிச்சார். ‘பொம்பிளைப் புள்ளைக்கு ஆட்டம் எதுக்கு?’ன்னும், ‘இன்னொருத்தன் வீட்டுல வாழப்போறவளுக்கு இதெல்லாம் தேவையில்லை’ன்னும் அம்மா தடுத்தாங்க. அம்மாவுக்குத் தெரியாம க்ளாஸுக்குப் போவேன். என்னிக்காவது அவங்களுக்குத் தெரிஞ்சிடுச்சின்னா அன்னிக்கு எனக்கு உடம்பு முழுக்க சூடு வைப்பாங்க. அதையும் தாங்கிக்கிட்டு அடுத்த நாள் மறுபடியும் டான்ஸ் க்ளாஸுக்குப் போவேன். இப்படித்தான் கத்துக்கிட்டேன். ஒருவேளை அன்னிக்கு அம்மாவெச்ச சூட்டையெல்லாம் தாங்கிப் பழகினதாலதானோ என்னவோ, இன்னிக்கு நெருப்பு வளையத்தைக் கட்டிக்கிட்டு ஆடும்போது எனக்கு வலிக்கிறதில்லைபோல’’ - சோகம் மறைத்துச் சிரிக்கிறார்..

‘`ஆண்களின் ஆதிக்கமே நிறைய இருந்த காலத்துல நான் ஒரே பெண்ணா ஹூலா ஹூப் டான்ஸையும் நெருப்பு டான்ஸையும் ஆடியபோது என்மேல மோசமான விமர்சனங்கள் வந்திருக்கு. என் உழைப்பையோ, அதுக்குப் பின்னாலுள்ள வலியையோ புரிஞ்சுக்க யாரும் தயாரா இல்லை. ஒருநாள் எல்லாமே மாறிச்சு. என்னை மோசமா விமர்சனம் பண்ணினவங்களே, ‘நீ டான்ஸ் ஆடறதைப் பார்க்கும்போது சிவன், பார்வதியைப் பார்க்கிற மாதிரி இருக்கு’னு பாராட்டியிருக்காங்க. இப்போ, குழந்தைகளுக்கும் வெளிநாட்டினருக்கும் ஹூலா ஹூப் டான்ஸ் கத்துக்கொடுக்கறேன்.

ஒரு படத்துல டான்ஸ் பண்ணியிருக்கேன். சிவன் கோயிலில் வளையம் சுத்திக்கிட்டு ஆடியிருக்கேன். ‘சலங்கை ஒலி’ படத்துக்கு இணையானதொரு டான்ஸா அது இருக்கும். படங்களுக்கு கோரியோகிராப் பண்ணணும்னு ஆசையிருக்கு...’’ - கண்கள் மின்னச் சொல்லிவிட்டு, அடுத்த அக்னி பிரவேசத்துக்குத் தயாராகிறார் கோட்டீஸ்வரி!

-ஆர்.வைதேகி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism