Published:Updated:

அதிரடி அக்கா- தங்கை: இது செண்டை மேளச் சத்தம்!

அதிரடி அக்கா- தங்கை: இது செண்டை மேளச் சத்தம்!
பிரீமியம் ஸ்டோரி
அதிரடி அக்கா- தங்கை: இது செண்டை மேளச் சத்தம்!

சோபிதா - ராஹிதா

அதிரடி அக்கா- தங்கை: இது செண்டை மேளச் சத்தம்!

சோபிதா - ராஹிதா

Published:Updated:
அதிரடி அக்கா- தங்கை: இது செண்டை மேளச் சத்தம்!
பிரீமியம் ஸ்டோரி
அதிரடி அக்கா- தங்கை: இது செண்டை மேளச் சத்தம்!

மும்பையின் பரபரப்பான பகுதியில் உள்ள ஓர் அரங்கம். செண்டை மேளம் தோள்களில் தொங்க, கையில் கோல்களுடன் இசையால் அதிரடித்துக் கொண்டிருந்தார்கள் இரண்டு பெண்கள். வளைக்கரங்களில் ஊற்றெடுத்த ஒலி காற்றில் அதிர்ந்துகொண்டிருக்க, கூட்டம் மொத்தமும் அவர்களைப் பிரமித்துப் பார்த்தபடி இருந்தது. இசை நிகழ்ச்சி முடிந்ததும் அந்தப் பெண்களிடம் பேசினோம். ‘`நாங்கள் இருவரும் அக்கா - தங்கை’’ என்று கூடுதலாக ஒரு சர்ப்ரைஸ் கொடுத்து பேச ஆரம்பித்தார்கள் சோபிதாவும் ராஹிதாவும்.

‘`நீங்கள் யூகித்ததுபோலவே, எங்கள் பூர்வீகம் கேரளா. பாலக்காட்டுக்கு அருகே ஒரு சிற்றூரில் பிறந்தோம். இப்போது திருவனந்தபுரத்தில் வசிக்கிறோம். எங்கள் தந்தை கலா மண்டலம் கிருஷ்ணதாஸ், பிரபல செண்டை மேள வித்வான். தனது தனித்துவமான செண்டை வாசிப்பால், கேரள சங்கீத நாடக அகாடமியின் விருதைப் பெற்றவர். திருவனந்தபுரத்தில் உள்ள ‘மார்கி கதகளி பள்ளி’யில் செண்டை மேளத் துறை தலைவராகப் பணிபுரிகிறார். தாய் ஹோம்மேக்கர்.சிறுவயதிலிருந்தே எங்களுக்கும் செண்டை மேளம் கற்றுத்தரும்படி தந்தையிடம் கேட்டோம்.

அதிரடி அக்கா- தங்கை: இது செண்டை மேளச் சத்தம்!

‘உங்களால் வாசிக்க முடியாது’ என்று சொல்லி மறுத்துவந்தார். திருவனந்தபுரத்துக்குக் குடியேறியவுடன், அவர் பல மாணவர்களுக்கு செண்டை மேள வகுப்புகள் எடுக்கத் தொடங்கினார். ‘ப்ளீஸ் நாங்களும் கற்றுக் கொள்கிறோம்’ என்று விடாமல் கேட்க, வேறு வழியின்றி எங்களுக்கும் கற்றுத்தர சம்மதித்தார். 10 வயதுக்குள்ளாக நாங்கள் இருவரும் செண்டை மேளக் கச்சேரிகளில் பங்குகொள்ள ஆரம்பிக்கும் அளவுக்கு, இந்த இசையைக் கற்றுத் தேர்ந்தோம். இதுவரை பல நூறு கச்சேரிகள் செய்துள்ளோம்.

பள்ளி, கல்லூரிப் படிப்புக்கு இடையேயும் செண்டை மேளப் பயிற்சிக்கு நேரம் ஒதுக்கி, ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் கற்றோம். பலர் பாராட்ட வாசித்தோம். ஆனாலும், வட கேரளத்தின் பல பகுதிகளில் எங்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. `இசைக்குப் பால் பேதமில்லை' என்பதை நிரூபிக்க தொடர்ந்து இசைப்பதைத் தவிர வேறு எந்த வழியையும் நாங்கள் தேர்ந்தெடுக்கவில்லை. பல கசப்பான அனுபவங்களுக்குப் பிறகு, இப்போதுதான் எங்களுக்கு அங்கீகாரமும் வாய்ப்புகளும் கிடைக்கின்றன.

இன்றைய காலகட்டத்தில், மரபை மீறாமலும், கேட்பவர்கள் மெய்மறந்து ரசிக்கும்படியும் வாசிப்பது சவாலான விஷயமாக இருக்கிறது. நாங்கள் செண்டை மேள வித்வான்களின் உத்திகளை உற்றுநோக்கி நுணுக்கங்களைக் கற்றோம். அந்த நுணுக்கங்களில் எங்கள் கற்பனை வளத்தைக் கலந்து, இசை ரசிகர்களை லயிக்கச் செய்வதே எங்கள் பணி. செண்டை மேளச் சத்தத்தை உலகம் முழுவதும் ஒலிக்கச் செய்வதே எங்கள் நோக்கம்’’ என்கிறார்கள் சகோதரிகள் இருவரும்!

-ஸ்ரீஅகத்திய ஸ்ரீதர்