Published:Updated:

பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...
பிரீமியம் ஸ்டோரி
பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

Published:Updated:
பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...
பிரீமியம் ஸ்டோரி
பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

புகைப்பட நாயகி!

பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

ண்டத்தில் உள்ள பிரமாண்டமான, மனித கண்ணுக்குப் புலப்படாத கருந்துளை (பிளாக் ஹோல்) ஒன்றைச் சமீபத்தில் புகைப்படமாக வெளியிட்டது `ஈவென்ட் ஹொரைசன் டெலஸ்கோப்’ என்கிற உலகளாவிய ஆய்வாளர்கள் அமைப்பு. மெஸ்ஸியர் 87 எனப்படும் கேலக்ஸியின் நடுவே அமைந்திருக்கும் இந்தக் கருந்துளை, பூமியிலிருந்து 500 மில்லியன் டிரில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது! இந்த விண்மீன் திரளை 10 நாள்கள் தொடர்ச்சியாக உலகெங்கும் உள்ள எட்டுத் தொலைநோக்கிகள் படங்கள் எடுத்தன. இந்தப் புகைப்படங்களைச் சேமித்த லட்சக்கணக்கான கிகா பைட் அளவுள்ள ஹார்டு டிஸ்குகளை ஒரே இடத்தில் ஒன்றிணைத்துத்தான் இந்த ஒற்றைப் புகைப்படம் வெளியிடப்பட்டது.

இந்தப் படம் உலகப்புகழ் பெற்றாலும், இதற்கு மூல காரணமான ஆராய்ச்சியாளர் கேத்தி போமன் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் இருக்கிறார். மூன்று ஆண்டுகளுக்கு முன் இந்தப் புகைப்படங்களை ஒன்றிணைக்கும் கணிப்புநெறியைக் கண்டுபிடித்த மாணவர் குழுவுக்குத் தலைவராக இருந்தவர் கேத்தி. உலக ஊடகங்கள் இப்போது இந்த சாதனைப் பெண்ணைத் தூக்கிவைத்துக் கொண்டாடுகின்றன. அவரோ, ``இந்த வெற்றிக்குக் காரணம் நான் மட்டும் அல்ல... எம்.ஐ.டி-யில் என்னுடன் ஆய்வு மேற்கொண்ட மொத்தக் குழுவுக்கும்தான் இந்தப் பெருமை சேர வேண்டும்'' என்று சொல்லிவருகிறார்!

அண்டத்தை அளக்கவும் செய்வாள்; ஆளவும் செய்வாள் பெண்!

சூடான் சுதந்திர தேவி!

பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

ள்நாட்டுப் போர் மற்றும் கலவரங்களால் பாதிக்கப் பட்டுள்ள சூடான் நாட்டில் அதிபர் ஒமர் அல் பஷீருக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நடத்திவருகின்றனர். அவர்களில் 70% பேர் பெண்கள்! வடக்கு சூடானின் டார்ஃபர் பகுதியில் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டதற்கும், லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்கவும் இவரே காரணம் என்று உலக நாடுகள் பஷீர் மீது குற்றம்சாட்டி வருகின்றன.

இதனிடையே ஏப்ரல் 6 முதல் 8-ம் தேதி வரை ஏறத்தாழ எட்டுப் பேர் அரசுப் படைகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். தலைநகர் கார்டூமில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட 22 வயது இளம்பெண்ணான அலா சாலா, `தோரா', `தோரா' (அரபு மொழியில் போராட்டம்) என்ற அறைகூவல்களுக்கு இடையே கார் ஒன்றின் மேல் ஏறி நின்று விடுதலை குறித்த கோஷங்களை எழுப்பினார். சூடான் நாட்டின் புகழ்பெற்ற உடையான வெள்ளை தோபு  அணிந்து, காதுகளில் பாரம்பர்யமான நிலா வடிவ தோட்டுடன் அவர் பேசிய புரட்சி, மக்களை வெகுவாகக் கவர்ந்துவிட்டது. சூடான் பல்கலைக்கழக மாணவியான அலா, உலகப்புகழ் பெற்றார். சில நாள்களிலேயே சூடானில் ராணுவப் புரட்சி வெடித்தது. அதிபர் பஷீர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இன்னும் மூன்று மாதங்களில் ஜனநாயக முறைப்படி அங்கு தேர்தல் நடத்துவதாகவும் ராணுவம் அறிவித்திருக்கிறது. `சூடான் நாட்டின் சுதந்திர தேவி' என்று ஊடகங்கள் அலாவைக் கொண்டாடிவருகின்றன.

பெண் என்னும் புரட்சி!

பள்ளிக்குக் குதிரையில் பறந்த மாணவி!

பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

திருச்சூர் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வந்த கிருஷ்ணா என்ற அந்தச் சிறுமியின் நண்பன் ஒருவன், ``ஜான்சி ராணி போன்ற அரசிகளும், இளவரசிகளும்தான் பொதுவெளியில் குதிரைச் சவாரி செய்ய முடியும்’' என்று கூறியிருக்கிறான். சற்றே சிந்தித்த கிருஷ்ணா, “ஏன் முடியாது. குதிரையில் சவாரி செய்து பொதுவெளியில் செல்ல வேண்டும் என்றால் ராணியாகத்தான் இருக்க வேண்டுமா என்ன? சாதாரணப் பெண்களாலும் அதைச் செய்ய முடியும்!” என்று நண்பனிடம் கூறியுள்ளார். அதோடு விட்டுவிடாமல், தன் குதிரையேற்ற ஆசிரியரிடம் அதற்கான வழிமுறை என்ன என்று கேட்டுத் தெரிந்துகொண்டு, பெற்றோரின் ஒப்புதலும் பெற்று, 10-ம் வகுப்பு இறுதித் தேர்வு அன்று தேர்வெழுத குதிரையில் கிளம்பிவிட்டார். ஏழாம் வகுப்பு படிக்கும்போது, கிருஷ்ணாவின் தந்தை பிறந்து ஆறு மாதமான குதிரை ஒன்றை அவளுக்குப் பரிசளிக்க, அன்று குதிரையேறிய பெண், இன்னும் இறங்கியபாடில்லை!

ஒவ்வொரு பெண்ணும் ராணிதான்!

சிகாகோ நகரின் முதல் கறுப்பின மேயர்!

பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

மெரிக்காவின் மூன்றாவது பெரிய நகரமான சிகாகோ நகரில் சமீபத்தில் நடைபெற்ற நகர மேயருக்கான தேர்தலில், நகரின் முதல் கறுப்பினப் பெண் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் லோரி லைட்ஃபுட். எந்த அரசியல் பின்புலமும் இல்லாமல், தேர்தலில் வென்றிருக்கிறார் இந்த முன்னாள் ஃபெடரல் பிராசிக்யூட்டர். தன்னுடன் போட்டியிட்ட மற்ற 13 வேட்பாளர்களைவிட 74% அதிக வாக்குகளைப் பெற்றிருக்கிறார் லோரி.

56 வயதான லோரி, தன் ட்விட்டர் பக்கத்தில், “இன்று இங்கு நடப்பதை நிறைய சிறுவர்களும் சிறுமிகளும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். சற்றே வித்தியாசமான மாற்றத்தின் முதல் விதையை அவர்கள் கவனிக்கிறார்கள். ஒவ்வொரு குழந்தையும் இதை அறிந்துகொள்ள வேண்டும்; உங்களில் ஒவ்வொருவரும்... யார் வேண்டுமானாலும், ஒருநாள் சிகாகோவின் மேயர் ஆக முடியும்” என்று எழுதியிருக்கிறார்.

லோரியுடன் சேர்த்து மொத்தம் 12 கறுப்பினப் பெண்கள் இப்போது அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் மேயர்களாக உள்ளனர்.

புதுமைப் பெண்ணுக்கு நம் வாழ்த்துகள்!

பெண்கள் வாக்கு!

பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

திர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பெண்கள் எந்த அடிப்படையில் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்கிற கடிதம் ஒன்றைக் கூட்டாக வெளியிட்டிருக்கின்றன பெண் தொழிலாளர் சங்கம் மற்றும் பிரஜன்யா அமைப்பு. `அறிவியல் ரீதியாக வாழ்க்கையை அணுக வேண்டும் என்று நம் அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது. இப்போதோ, அறிவியல் மற்றும் பகுத்தறிவு பேசுபவர்களைத் தேசத்துரோகிகளாகப் பார்க்கும் துரதிர்ஷ்டம் நிலவுகிறது. நாம் எத்தகைய நாட்டை நம் குழந்தைகளுக்கு விட்டுச் செல்லப்போகிறோம் என்கிற அச்சத்தில் கேள்விகள் எழுப்புவது நமக்கே ஆபத்தாக முடிகிறது. இதுபோன்ற கேள்விகளைக் கேட்கும் பெண்கள் அதிகப்படியான வன்முறைக்கு ஆளாகிறார்கள்.

குடிமக்களாக நம் உரிமை, நம் விடுதலை மற்றும் சீரிய வாழ்க்கை வாழ நமக்குண்டான உரிமை இவற்றைப் பற்றியது இந்தத் தேர்தல். நம் அரசியலமைப்புச் சட்டம் சொல்லும் சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மை, ஒற்றுமை போன்றவற்றை நிலைநிறுத்துபவர்கள்; நாட்டின் வளங்களையும், அதன் ஆற்றலையும் பாரபட்சமின்றி எல்லாருக்கும் சமமாகப் பகிர்ந்தளித்து, அதற்கென மது விற்பனையை நாடாத கட்சிகள்; சட்டத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள்; அது சொல்லும் சமத்துவத்தை நிறுவுபவர்கள்; நம் எழுத்து, பேச்சு, எண்ணம் என்று நம் அடிப்படை உரிமைகளை நம்மிடமிருந்து பறிக்காதவர்கள் - இவர்களுக்கே நாம் வாக்களிக்க வேண்டும். பெண்களுக்கு எதிராகக் குற்றம் புரிந்து வழக்குகளை சந்தித்துக் கொண்டிருப்பவர்களைப் புறம்தள்ள வேண்டும்; பணியிடங்கள் மற்றும் ஆட்சியில் பெண்களுக்கு சம உரிமை தருபவர்களுக்கு நம் ஆதரவு இருக்க வேண்டும்; பாலின வேறுபாடற்ற தேர்தல் வாக்குறுதிகள் தரும் கட்சியினரை நாம் ஆதரிக்க வேண்டும்’ என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

சிந்திப்போம்... சரியானவர்களுக்கே வாக்களிப்போம்!

- நிவேதிதா லூயிஸ்

அவள் செய்திகள்

* ந்தியா முழுக்க 1,36,244 பெண்கள் உறுப்பு மற்றும் ரத்த தானம் செய்துள்ளனர். இவர்களில் 34% பேர் மட்டுமே முறைப்படி பதிவுசெய்து கொண்டவர்கள். சமீபத்தில் கோவை முதலிப்பாளையத்தைச் சேர்ந்த மாசிலாமணி என்ற பெண்மணி, உறவினர் அல்லாதவருக்கு எலும்பு மஜ்ஜை தானம் செய்த முதல் இந்தியப் பெண் என்ற சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்.

* கேரள மாநிலம் வயநாடு பகுதியைச் சேர்ந்த 26 வயதான தன்யா சுரேஷ், சமீபத்தில் நடைபெற்ற குடிமைப்பணி தேர்வுகளில் நாட்டில் 410-வது இடம்பிடித்து, மாநிலத்தின் முதல் மலைவாழ் பெண் குடிமைப்பணி அதிகாரி என்கிற பெருமையைப் பெறுகிறார். இவரது தந்தை தினக்கூலி; தாய் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணியாற்றுகிறார்.

* சமீபத்தில் வெளியான குடிமைப்பணி தேர்வு முடிவுகள் பட்டியலில் நாட்டிலேயே முதலிடம் பிடித்த கனிஷ்க் கட்டாரியா, தன் வெற்றிக்கு உறுதுணையான பெற்றோர், தங்கை ஆகியோருக்கு நன்றி தெரிவித்ததுடன் தன் கேர்ள் ஃபிரெண்டுக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார். தன் வெற்றிக்கு முதல் முறையாக கேர்ள் ஃபிரெண்டுக்கு நன்றி சொன்ன குடிமைப்பணி அதிகாரி கனிஷ்க்கைப் பாராட்டிவருகின்றனர் நெட்டிசன்கள்!

* மிசோரம், அருணாசலப் பிரதேசம் மாநிலங்களில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் லால்த்லாமௌனி மற்றும் ஜார்ஜும் ஈத்தே ஆகிய இரண்டு பெண்கள் களம் காண்கிறார்கள். வடகிழக்கு பகுதியிலிருந்து போட்டியிடும் அந்த இரு மாநிலங்களின் முதல் பெண் வேட்பாளர்கள் இவர்களே! இவர்களில் ஜார்ஜும், இப்போதைய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜுஜுவை எதிர்த்துக் களம் காண்கிறார்.

* கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தென்னிந்திய மாநிலங்கள் மற்றும் அதன் செய்திகளுக்கு இந்திய அளவில் இயங்கும் செய்தி நிறுவனங்கள் சரியான இடம் தரவில்லை என்று கருதிய இரு பெண் ஊடகவியலாளர்கள், எந்தச் செய்தி நிறுவனத்தையும் சாராமல், சுயமாகவே கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்களிலும் சுமார் 3,000 கி.மீ பயணம் செய்து ஃபேஸ்புக் மூலம் களநிலைமைகளை பதிவு செய்கின்றனர். `பிக்கிள் ஜார் போல் எக்ஸ்பிரஸ்’ என்கிற பக்கத்தில் லைவ் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் மூலம் சாமான்ய மக்களின் எண்ணங்களைப் படம்பிடித்து வருகின்றனர்.