Published:Updated:

முகங்கள்: அதிரடி சாதனை செய்த விவசாயி மகள்! - சிருஷ்டி படிதர்

முகங்கள்: அதிரடி சாதனை செய்த விவசாயி மகள்! - சிருஷ்டி படிதர்
பிரீமியம் ஸ்டோரி
News
முகங்கள்: அதிரடி சாதனை செய்த விவசாயி மகள்! - சிருஷ்டி படிதர்

முகங்கள்: அதிரடி சாதனை செய்த விவசாயி மகள்! - சிருஷ்டி படிதர்

‘`ஒரு விவசாயியின் மகளான நான் இசையில் உலக சாதனைபுரிய உதவியது என் தன்னம்பிக்கையும் கடின உழைப்பும்தான்’’ என்கிறார், 27 வயது இளம் பெண் சிருஷ்டி படிதர். டிரம்ஸ் இசைக் கலைஞரான சிருஷ்டி, தொடர்ந்து 31 மணி நேரத்துக்கும் மேலாக டிரம்ஸ் இசைத்து, கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்திருக்கிறார். மத்தியப்பிரதேசத்தின் இந்தூர் நகரில் வசிப்பவரிடம் பேசினோம்.

‘`குக்கிராமத்தில் பிறந்தவள் நான். நவோதயா பள்ளியில் படித்தபோது, அங்கு காங்கோ, ஹார்மோனியம் மற்றும் சில இசைக் கருவிகளைக் கற்றேன். இவற்றில் என்னை மிகவும் ஈர்த்தது, டிரம்ஸ் வாத்தியக் கருவிதான். பள்ளி இசை ஆசிரியரிடம் டிரம்ஸ் இசைக்கருவியின் அடிப்படைகளைக் கற்றேன். 14 வயதுக்குள் அதன் நுணுக்கங்களை முறைப்படி அறிந்தேன்.

முகங்கள்: அதிரடி சாதனை செய்த விவசாயி மகள்! - சிருஷ்டி படிதர்

2011-ல் சாஃப்ட்வேர் இன்ஜினீயரிங் படிப்பதற்காக இந்தூர் நகரில் வசித்தபோது, ஆன்லைன் ஆசிரியர்கள் மற்றும் யூடியூப் வீடியோக்களின் உதவியுடன், புகழ்பெற்ற டிரம்ஸ் இசைக் கலைஞர்களான தாமஸ் லாங், ஜோஸ்ட் நிக்கல், ஸ்டீவ்காட் ஆகியோரின் நுணுக்கங்களை அறிந்துகொண்டேன். தினமும் 6 - 8 மணி நேரம் என இடைவிடாது ஒரு வருடம் பயிற்சிசெய்தேன்.

மும்பை உட்பட, பல நகரங்களில் இசைக் கச்சேரிகளில் பங்குகொள்ள ஆரம்பித்தேன். ஆண்களே அதிகம் கோலோச்சும் இந்தத் துறையில் அவ்வளவு எளிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. மனம் தளராமல், என்மீது கவனம்படும்படி ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்தேன். 2016-ம் ஆண்டு, இந்தூரில் உள்ள காந்தி ஹாலில் தொடர்ந்து 31 மணி நேரம் டிரம்ஸ் வாசித்து, முந்தைய சாதனையை முறியடித்து, கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தேன். இப்போது வாய்ப்புகள் தொடர்ந்து வந்தவண்ணம் இருந்தாலும், எதிர்கால சந்ததியினருக்கு டிரம்ஸ் இசையின் புதிய பரிமாணங்களை விளக்கி ஆல்பங்களை வெளியிடுவதே என் லட்சியம். என் தனித்திறமையை நிரூபிக்கும் வகையில் இசை நிகழ்ச்சிகளை நடத்தும் பயணத்திலும் விரைந்துகொண்டிருக்கிறேன்’’ என்கிறார்.

வாழ்த்துகள் சிருஷ்டி!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

-ஸ்ரீஅகத்திய ஸ்ரீதர்