Published:Updated:

பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...
பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

பிரீமியம் ஸ்டோரி

ஆசியத் தடகளப் போட்டிகளில் தங்கம் வென்ற கோமதி!

பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

திருச்சியை அடுத்த முடிகண்டத்தில், வயலில் வேலை செய்து கொண்டிருந்த ராசாத்தியைத் தேடி வந்தது அந்தச் செய்தி. அவரின் மகள் கோமதி மாரிமுத்து தோஹா நகரில் நடைபெற்றுவந்த ஆசியத் தடகளப்போட்டிகளில் தங்கம் ஜெயித்திருக்கிறார் என்கிற செய்திதான் அது. மகளின் சாதனை என்ன என்று இன்னும் சரிவரப் புரியாத நிலையிலேயே மகிழ்வுடன் ஊடகங்களுக்குப் பேட்டி கொடுத்திருக்கிறார் ராசாத்தி. `திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மைதானத்தில் தினமும் காலையில் பயிற்சிக்குச் செல்வாள் கோமதி. இங்கிருந்து காலை 4.45 மணி பஸ்ஸைப் பிடித்தால்தான் போக முடியும் என்பதால் அவள் அப்பா அவளை பஸ் ஸ்டாப்பில் விட்டுவிட்டு வருவார். இப்போது மகளின் இந்த வெற்றியைப் பார்க்க அவர் இல்லை' என்று கண்ணீருடன் கூறியிருக்கிறார் இந்தத் தாய்.

மிக எளிமையான பின்புலம் கொண்ட 30 வயதான கோமதி 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தின் இறுதிச் சுற்றில் ஓடிய விதம் அற்புதமானது. முதல் 400 மீட்டர்வரை அளவான ஓட்டம், அடுத்த 200 மீட்டர் முன்னேற்றம், இறுதி 200 மீட்டர் அதிவேகப் பாய்ச்சல் என்று கலக்கிவிட்டார். இந்த ஆசியப்போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கத்தைப் பெற்றுத் தந்த தங்கம் இவர். பெங்களூரு நகரில் வருமான வரித்துறையில் பணியாற்றி வரும் கோமதியை தமிழக முதல்வர் உட்பட பலரும் பாராட்டிவருகிறார்கள்.

திருச்சி எக்ஸ்பிரஸுக்குப் பாராட்டுகள்!

17 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த நீதி

பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

``சலேஹாவின் உடல் இப்போதுவரை எனக்குக் கிடைக்கவில்லை. அவளுக்கு இறுதி அஞ்சலிகூடச் செலுத்த முடியவில்லை. ஆனால், இந்தத் தீர்ப்பு என் மகளின் ஆத்மாவுக்கு அமைதியை அளிக்கும் என்று நம்புகிறேன்'' என்று சொல்லியிருக்கிறார் பில்கிஸ் பானு. 2002-ம் ஆண்டு, குஜராத்தில் நடைபெற்ற வன்முறை வெறியாட்டத்தில், பில்கிஸ் பானுவின் மூன்றே வயதான மகள் சலேஹா உட்பட, இவர் குடும்பத்தைச் சேர்ந்த ஆறு நபர்கள் கொல்லப்பட்டனர். அப்போது ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ், கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இவற்றுக்கெல்லாம் நீதி கேட்டு இவர் தொடர்ந்த வழக்கின் விசாரணை கடந்த 17 ஆண்டுகளாக நடைபெற்றுவந்தது. சமீபத்தில் உச்சநீதிமன்றம், இவ்வழக்கில் பானுவுக்கு 50 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கும்படி குஜராத் மாநில அரசுக்கு ஆணையிட்டது.

இந்தப் பணத்தில் ஒரு பகுதியைக்கொண்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் பெண்களுக்கு உதவ தனி நிதி ஒதுக்கீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளார் பானு. கடந்த 17 ஆண்டுகளாக ஊர் ஊராக நாடோடிகள்போல பயத்தில் சுற்றித் திரியும் இந்தக் குடும்பம் இப்போதுதான் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறது. நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும், இத்தனை ஆண்டுகளுக்குப் பின் மகிழ்ச்சியுடன் வாக்களித்திருக்கிறார் பில்கிஸ். பிரிவினைவாதம் பேசாமல், நாட்டின் ஒற்றுமையைப் பாதுகாக்கும் கட்சிக்குத்தான் தன் வாக்கு என்றும் தெரிவித்திருக்கிறார்.

மன நிம்மதி கிடைக்கட்டும், பில்கிஸ்!

தந்தைக்கு ஈரல் தானம் செய்த ராக்கி

பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

ஹைதராபாத்தைச் சேர்ந்த 19 வயதான இளம்பெண் ராக்கி தத்தா. இவரின் தந்தை மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். ஒரு கட்டத்தில் 90% ஈரல் பாதிக்கப்பட்டுவிட்டதாகவும், ஈரல் மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே அவர் உயிரைக் காப்பாற்ற முடியும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தார்கள். மேலும், ராக்கியின் ஈரலில் ஒரு பகுதியை எடுத்து அவரின் தந்தைக்குப் பொருத்த முடியும் என்றும், 3 - 4 மாதங்களில் வெட்டி எடுக்கப்பட்ட அளவுக்கு மீண்டும் ராக்கிக்கு ஈரல் வளர்ந்துவிடும் என்றும் அவரிடம் மருத்துவர்கள் கூறியுள்ளார்கள். உடனடியாக அதற்கு ஒப்புக்கொண்ட ராக்கி, 109 பரிசோதனைகளை மேற்கொண்டார். 15 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு ராக்கியின் 65% ஈரல் வெட்டி எடுக்கப்பட்டு அவரின் தந்தைக்குப் பொருத்தப்பட்டது.

நடைபெற்ற சம்பவத்தை ராக்கியின் தோழி தன் சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட, நெட்டிசன்களை அது ஈர்த்தது. கொல்கொத்தாவைச் சேர்ந்த மருத்துவர்கள் கைவிட்ட பிறகு, ராக்கியும் அவர் சகோதரியும் தந்தையை ஹைதராபாத்துக்கு அழைத்துவந்து சிகிச்சை அளித்திருக்கிறார்கள். `எந்த மகளுக்கும் அப்பாவின் அன்பு ஸ்பெஷல்தான். மகள்களால் எந்தப் பயனும் இல்லை என்பவர்களுக்கு இந்தப் பதில்' என்று ட்விட்டரில் இதுகுறித்துப் பதிவும் வெளியாகியுள்ளது.

தாயுமான மகள்!

எண்ணத்தை மாற்றும் 33%

பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

இந்தத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சமூக வலைதளங்கள் மற்றும் பொது இடங்களில், பெண்கள் அரசியல் பேசியும் பழகியும் வருவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். மூன்று பெண்கள்... அவர்களைச் சுற்றி கேமராக் கண்கள்... அலட்டிக்கொள்ளாத அசத்தலான அரசியல் அலசல் என்று களைகட்டிக்கொண்டிருக்கிறது நியூஸ் 7 தொலைக்காட்சியின் `33%' நிகழ்ச்சி. கட்சி தாவும் வேட்பாளர்களை நையாண்டி செய்வதில் ஆகட்டும், ஒரே பெயரில் பலர் வேட்புமனு தாக்கல் செய்திருப்பதை ஆராயும் புத்திசாலித்தனத்தில் ஆகட்டும், கலக்குகிறார்கள் பெண்கள் மூவரும்!

பெண் தொகுப்பாளர்கள் என்றாலே கைகால்களை அசைத்து சினிமா, கிசுகிசு போன்ற விவாதங்களையே செய்வார்கள் என்ற எண்ணத்தை மாற்றியிருக்கிறது இந்த `33%'. சுகிதா, லாவண்யா, மிருணாளினி ஆகிய மூன்று செய்தியாளர்களும் மிக இயல்பாக, நேர்த்தியாக நிகழ்ச்சியைக் கொண்டு செல்லும் விதம் அவ்வளவு அழகு. அறிவார்ந்த ஒரு சமுதாயமாக, பெண்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கும் சமூகமாக நாம் மாறிவருவது நல்ல மாற்றம்!

மாற்றம்... முன்னேற்றம்: 33%

-நிவேதிதா லூயிஸ் 

அவள் செய்திகள்

பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

மீபத்தில் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற மகளிர் குத்துச்சண்டைப் போட்டி ஒன்றில் கலந்துகொண்டு வென்றார் ஈரான் நாட்டு வீராங்கனை சதஃப் காதிம். வெளிநாட்டில் நடைபெற்ற போட்டியில் முதல் முறையாக வெற்றிபெற்ற ஈரான் பெண் இவர். துரதிர்ஷ்டவசமாக, இவர் அணிந்து விளையாடிய பாக்ஸர் ஷார்ட்ஸ் மற்றும் டி-ஷர்ட் தங்கள் மத நம்பிக்கைக்கு எதிரானது என்று கூறி அவர் நாடு திரும்பினால் கைது செய்வதாக முடிவெடுத்திருக்கிறது ஈரான் அரசு. இதை அறிந்த சதஃப் நாடு திரும்ப வழியின்றி பிரான்ஸில் தவித்துவருகிறார்.

ர்நாடக மாநிலம் சிக்கபெல்லாபுரா மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ரேகா அம்மாநில பி.யூ.சி. தேர்வில் 90.3% மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்திருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் பத்தாம் வகுப்புத் தேர்வில் 74% மதிப்பெண்கள் பெற்ற ரேகாவை, வீட்டுவேலை செய்யும் அவரின் தாய் திருமணத்துக்கு வற்புறுத்த, மறுத்த ரேகா 1098 ஹெல்ப்லைன் உதவியை நாடினார். அரசு அதிகாரிகள் அவரை மீட்டு, மாதிக்கெரேவில் உள்ள ஸ்பர்ஷா டிரஸ்ட் என்ற தொண்டு நிறுவனத்தில் சேர்த்துள்ளனர். அங்கு தங்கிப் படித்துத்தான் இந்த சாதனையைப் புரிந்துள்ளார் ரேகா.

ங்கிலாந்து நாட்டின் பிரபல ராயல் சொசைட்டியில் இந்த ஆண்டுக்கான உறுப்பினர்களாக 51 விஞ்ஞானிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஐந்து இந்தியர்களும் அந்தக் குழுவில் இடம் பிடித்துள்ளனர். முதல் முறையாக அந்தக் குழுவில் இடம் பெற்றிருக்கிறார் இந்தியப் பெண் விஞ்ஞானி ககன்தீப் கங். நியூட்டன், டார்வின், ஐன்ஸ்டீன் போன்ற அறிவியலாளர்கள் உறுப்பினர்களாக இருந்த சொசைட்டியில் ககன்தீப்பும் தேர்வாகியுள்ளது நமக்கான பெருமை!

வெளிவந்த பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகளில் விழுப்புரம் மாவட்டம் வீரணாமூரைச் சேர்ந்த இருளர் இனப்பெண் சங்கீதா, 600க்கு 263 மதிப்பெண்கள் வாங்கி வெற்றி பெற்றிருக்கிறார். அந்தப் பகுதியிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சிபெற்ற முதல் இருளர் இனப்பெண் இவர்தான். கொத்தடிமைகளாக 20 ஆண்டுகள் வாழ்ந்து மீட்கப்பட்ட குடும்பம் சங்கீதாவுடையது என்பது குறிப்பிடத்தக்கது.

மெரிக்காவின் கனெக்டிகட் நகரில் கடந்த ஆண்டு பிறந்த 311 கிராம் எடை மட்டுமேயிருந்த, அளவில் மிகச் சிறிய குழந்தையான பேபி கானர் உடல்நலம் தேறி 4.9 கிலோ எடையுடன் வீடு திரும்பினான். சோடா கேன் ஒன்றின் அளவைவிடச் சிறிய இந்தக் குழந்தை பிழைத்தது ஒரு மருத்துவ அதிசயம் என்று சொல்கிறார்கள் மருத்துவர்கள்.

குறைபாடுள்ள கரு மற்றும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணின் கருவை, பெண்ணின் விண்ணப்பத்தின் பேரில் குழந்தை உருவான 20 வாரங்களுக்குள் மட்டுமே கலைக்க முடியும் என்று கருக்கலைப்புச் சட்டத்தில் உள்ள உட்பிரிவை மாற்றி, 24 வாரங்களாக அந்தக் காலக்கெடுவை நீட்டிக்கக் கோரும் வழக்கு உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்துள்ளது. இருதரப்பு வாதங்களையும் கேட்டிருக்கும் நீதிமன்றம் மத்திய அரசின் நிலைப்பாட்டை எதிர்பார்த்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு