Published:Updated:

கேபிள் கலாட்டா

"சீக்கிரமே நான் சிங்கர்!" படங்கள்: ச.இரா.ஸ்ரீதர் ரிமோட் ரீட்டா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரீமியம் ஸ்டோரி
##~##

காட்டன் புடவை கட்டிக்கிட்டு ஸ்கூட்டியில கலக்கிட்டு இருந்த 'நாதஸ்வரம்’ மலர் பொண்ணை, டைரக்டர் இப்போ ஒரே அழுகையும், கவலையுமா மாத்திட்டார். ஆனாலும்... நேர்ல பார்க்கறப்ப அவ்வளவு ஃப்ரெஷ்ஷா, ஹேப்பியா இருந்தாங்க 'மலர்’ என்றழைக்கப்படுகிற அந்த ஸ்ரிதிகா.

''அஞ்சு நிமிஷம் லேட்டா வந்திருந்தேன்னா... என்னைப் பார்த்திருக்க முடியாது. ஷாப்பிங் கிளம்பிட்டு இருந்தேன். 'நாதஸ்வரம்’ சீரியல் ஷூட்டிங் முழுக்க முழுக்க காரைக்குடியிலயே நடக்கறதால, சென்னைக்கு அப்பப்போதான் வர முடியுது ரீட்டா. வர்ற நேரத்துல ஷாப்பிங், தியேட்டர்னு ஒரே ரவுண்ட்ஸ்தான்!''னு சிரிச்சாங்க ஸ்ரிதிகா.

''நாதஸ்வரம் தொடர்ல கமிட் ஆகி ரெண்டு வருஷம் ஆகப்போகுது. நாட்கள் ஓடினதே தெரியல. எங்கப்பா மலேசியாவில பிஸினஸ் செய்துட்டு இருந்ததால, ப்ளஸ் டூ வரை அங்கதான் படிச்சேன். அப்புறம் எங்க குடும்பம் சென்னைக்கு ஷிஃப்ட் ஆச்சு. எங்கக்கா சுதா, டிகிரி முடிச்சுட்டு ஒரு சேனல்ல ஆங்கரா சேர்ந்தாங்க. அவங்களோட கான்டாக்ட்ஸால எனக்கும் ஆங்கர், விளம்பரங்கள், 'வெண்ணிலா கபடிக்குழு’, 'வேங்கை’ பட வாய்ப்புகள்னு கிடைச்சுது. சினிமா டு சீரியல் கிராஃப் படி, நானும் சின்னத்திரைக்கு வந்துட்டேன். இப்போ எங்கக்கா 'மருதாணி’, 'உதிரிப்பூக்கள்’னு கலக்க, நான் 'நாதஸ்வரம்’ல அழுதுட்டு இருக்கேன்''னு குறும்பு பேசின ஸ்ரிதிகா, நல்லா பாடவும் செய்வாங்களாம்.

கேபிள் கலாட்டா

''ஏதோ ஹாபினு நினைச்சுடாதே. பாடகி ஆகணும்ங்கிறது என்னோட லட்சியம், கனவு, ஆசை, தோசை எல்லாம். கூடிய சீக்கிரமே சிங்கர் ஸ்ரிதிகாவையும் நீ பேட்டி எடுக்க வருவே!''னு விடைகொடுத்தாங்க ஸ்ரிதிகா!

கேபிள் கலாட்டா

ஸரி... ஸரி... பேரே மியூஸிக்கலாதான் இருக்கு!

இருபது நாட்கள் 'ஹோம் மேக்கர்’, பத்து நாட்கள் 'உதிரிப்பூக்கள்’... இதுதான் இப்போ மானஸாவோட மன்த்லி ஷெட்யூல். ''சீரியல் உலகத்துக்கு ஒரு புது ஹீரோயின் கிடைச்சுடுச்சு!''னு மானஸாவை வெல்கம் பண்ணினேன் ''தமிழ் மீடியாதான் எனக்குப் புதுசு ரீட்டா. தெலுங்கு, மலையாளம்னு இவ்வளவு நாளா சினிமாவில் கலக்கிட்டு இருந்தேன். இப்போ சன் டி.வி 'உதிரிப்பூக்கள்’ சீரியல் மூலமா உன்னோட கவரேஜ் ஏரியாவுக்குள்ள வந்துட்டேன். 'ஷக்தி’ கேரக்டருக்கு நிறைய பாராட்டுகள் கிடைச்சுட்டே இருக்கு''னு சந்தோஷப்பட்டவங்க, நடிகர் விஜய்யின் சித்தி பையன், ஹீரோ விக்ராந்தோட மனைவி.

கேபிள் கலாட்டா

''நாங்க ரெண்டு பேரும் மீடியா இண்டஸ்ட்ரியில் இருக்குறதால, பலரும் எங்களோடது லவ் மேரேஜ்னு நினைச்சிக்கிட்டிருக்காங்க. அதுதான் இல்லை! பெரியவங்க நிச்சயித்த அரேஞ்ச்டு மேரேஜ்தான் ரீட்டா. விக்ராந்த் அவ்ளோ அன்பானவர். எங்களுக்கு ஒரு வயசுல யஸ்வந்த்னு ஒரு பையன் இருக்கார். டி.வி-யில வர்ற என்னைப் பார்த்துட்டு 'அம்... அம்...’ னு தத்தி தத்தி பேசுறப்போ அவரை அவ்ளோ ரசிக்கலாம்!''னு முடிச்ச மானஸா அம்மாவை அவ்ளோ ரசிக்கலாம்!

கலக்குங்க 'ஷக்தி’!

 வாசகிகள் விமர்சனம்

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

கேபிள் கலாட்டா

150

டிஸ்கவரிக்கு என்னவாயிற்று?

''வீட்டில் குழந்தை, குட்டிகளோடு உட்கார்ந்து பார்க்கக் கூடிய சேனல்களில் ஒன்று 'டிஸ்கவரி'. ஆனால், அதிலும்கூட சமீப காலமாக அருவருப்பான காட்சிகளை ஒளிபரப்ப ஆரம்பித்துவிட்டனர். கணவன் - மனைவி இருவரும் பாலைவனத்தில் தனித்து விடப்படுகிறார்கள். அங்கே அவர்கள் தண்ணீருக்காக தவிக்க ஆரம்பித்து, தண்ணீரைத் தேடும் முயற்சியில் தோல்வி அடைந்து, வேறு வழி யில் தண்ணீரை பெறுவது போல காட்டுகிறார்கள். அந்தக் காட்சிகளும், அதையட்டி இடம் பெறும் வசனங்களும் அருவருப்பை ஏற்படுத்துகின்றன. இவையெல்லாம் இந்தியாவில் ஒளிபரப்பாகின்றன என்பதை நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்'' என்று வேண்டுகோள் விடுக்கிறார் சத்தியமங்கலத்தை சேர்ந்த ஏ.ஜாஸ்மின்

முதியோரைப் போற்றும் பொதிகை!

''பொதிகை டி.வி-யில் புதன்தோறும் மதியத்தில் ஒளிபரப்பாகும் 'முதுமை சித்திரம்' நிகழ்ச்சி அருமையாக இருக்கிறது. முதியோர்களின் அனுபவங்கள், கூட்டுக் குடும்பமாக வாழ்வதில் கிடைக்கும் சந்தோஷங்கள்... என அவர்களுடைய மகிழ்ச்சி, துன்பம் கலந்த உலகத்தை கண் முன்னே படம் பிடித்துக் காட்டுகிறார்கள். இந்நிகழ்ச்சியை பார்ப்பவர்கள், நிச்சயமாக தங்கள் வீட்டு முதியவர்களை மதிக்கச் செய்வார்கள்'' என்று உறுதி கூறுகிறார் ஹூப்ளியை சேர்ந்த ஆர்.ராஜலட்சுமி

அருமை கலைஞர்!

''கலைஞர் டி.வி-யில் தினமும் காலையில் ஒளிபரப்பாகும் 'சிநேகிதியே' நிகழ்ச்சியில், குழந்தை வளர்ப்பில் தந்தையின் பங்கு குறித்து காண்பித்தது வித்தியாசமாக இருந்தது. குழந்தைகளை உப்பு மூட்டை தூக்குவது, முதுகில் ஏற்றி குதிரை சவாரி செய்ய வைப்பது என்று தந்தைகள் மேற்கொள்ளும் விளையாட்டுகளையெல்லாம் பற்றி காண்பித்த தோடு... 'இவையெல்லாம் பிற்காலத்தில் குழந்தை களுக்கு தன்னம்பிக்கை மனோபாவத்தை வளர்த் தெடுக்கும், சவால்களை சந்திக்க புது தெம்பு தரக் கூடியதாக இருக்கும்' என்றெல்லாம் விளக்கங் களையும் தந்தார்கள். உண்மையிலேயே அருமை யான நிகழ்ச்சி'' என் மனநிறைவோடு பாராட்டுகிறார் சென்னையை சேர்ந்த ஆர்.ஜானகி ரங்கநாதன்.

 லஷ்மி டைரக்டராகிறார்!

சினிமா டு சீரியல் என்ட்ரி கொடுத்திருக்காங்க, லஷ்மி. 'அவள்’ சீரியல்ல வில்லியா பயமுறுத்துறவங்க, அடுத்ததா டைரக்டர் புரமோஷனும் வாங்கறது, சூப்பர் நியூஸ்.

கேபிள் கலாட்டா

''படத்தோட பேர்... 'ஆரோஹணம்’. சமீபத்துலதான் ஒரு செட்டியூல் ஷூட் முடிச்சிட்டு வந்தோம் ரீட்டா. எனக்கு சினிமா, சீரியல் எல்லாமே சில வருஷங்களாதான் பரிச்சயம். கடந்த 25 வருஷமா கணவர், குழந்தைங்கனு மஸ்கட்ல இருந்துட்டு, அஞ்சு வருஷத்துக்கு முன்னதான் சென்னைக்கு வந்தோம். அப்புறம்தான் 'யுத்தம் செய்’, 'பாஸ் என்கிற பாஸ்கரன்’, 'உச்சிதனை முகர்ந்தால்’னு 30 படங்களுக்கும் மேல நடிச்சுட்டேன். சீரியல் என்ட்ரி 'அவள்’ சீரியல் மூலமா கிடைச்சுது''னு சொன்ன லஷ்மி,

''இதுக்கு முன்ன நிறைய குறும்படங்கள் இயக்கின அனுபவம் உண்டு. அதோட ஐ.ஐ.டி-யில ரெண்டு வருஷத்துக்கு முன்ன கமல் சார் நடத்தின ஸ்கிரிப்ட் ரைட்டிங் கிளாஸுக்கு 250 பேர்ல நானும் ஒருத்தியா செலக்ட் ஆகிப்போனேன். அப்போ திரைக்கதை பத்தி நல்ல ஐடியா கிடைச்சது. அந்த தைரியத்துலதான் இயக்குநர் கலத்துலயும் குதிச்சிட்டேன்''னு கலகலப்பா முடிச்சாங்க லஷ்மி!

வாங்க டைரக்டர் வாங்க!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு