``என் சொந்த ஊர் லக்னோ. மிடில் கிளாஸ் குடும்பம் என்னுடையது. எம்சிஏ படிச்சேன். ஒரு ஸ்கூல்ல டீச்சரா வேலை பார்த்துட்டு இருந்தேன். எனக்கு ராணுவத்தில் வேலை பார்க்கணும்கிறது கனவு. கடினமா உழைச்சா, அதற்கு ஒரு நாள் நிச்சயம் பலன் கிடைக்கும் என்பதை நம்பினேன். அதே மாதிரி தேர்வில் செலெக்ட் ஆனேன். 2010-ல் வேலையில் சேர்ந்தேன். ஆரம்பத்தில் நிர்வாகப் பணிகளைப் பார்த்துட்டிருந்தேன்.

2012-ல் சிறப்புப் பயிற்சிக்குப் போனேன். செகண்டு பைலட், முதல் பைலட், ஆபரேட்டர்னு படிப்படியா முன்னுக்கு வந்தேன். எங்களுடைய சீனியர்ஸ், நான் உட்பட நான்கு பெண்களைத் தேர்ந்தெடுத்து பயிற்சி கொடுத்தாங்க.

பலகட்டத் தேர்வுக்குப் பிறகு, என் பொறுப்புல இந்த மிதவைக் கப்பலை ஒப்படைச்சாங்க. நான்தான் இந்தக் கப்பலின் கேப்டன். எனக்குக் கீழே கமாண்டோ ஆபீஸரும், 10 மாலுமிகளும் இருக்காங்க. இதுதான் என் வாழ்வின் பெருமைமிகு தருணம்” என்கிற அனுராதா சுகுலாவின் முகத்தில் அத்தனை பெருமிதம்!

ஆம்... நிலத்திலும் செல்லக்கூடிய மிதவைக் கப்பலின் (ஹோவர் கிராஃப்ட் - 197), இந்திய கடலோரக் காவல்படை கிழக்குப் பகுதியின் முதல் பெண் கமாண்டர்கள் அனுராதா சுகுலா மற்றும் சிரின் சந்திரன் ஆகியோர். இவர்களே சமீபத்தில் ராமேஸ்வரத்திலுள்ள மண்டபம் பகுதியிலிருந்து சென்னை வரை கிட்டத்தட்ட 500 கி.மீ கடல் மைல் தூரம் அந்தக் கப்பலை இயக்கி சாதனை படைத்தார்கள்.

“ஒரு பொண்ணு நினைச்சா எதுவும் செய்யலாம் என்பதற்கு நானே சாட்சி. ஆரம்பத்தில் என்னுடைய சொந்தக்காரங்க எல்லோரும் இந்த வேலையை என்னால செய்ய முடியாதுனு நினைச்சாங்க. இப்போ நான், அவங்களுக்கே ரோல் மாடலா இருக்கேன். கப்பலுக்கு ஆண் பெண் வித்தியாசமெல்லாம் தெரியாதுங்க. இது எனக்குப் பிடிச்ச வேலை. அதை நான் விரும்பிப் பண்றேன்” என்று புன்னகைத்தவரிடம் அவருடைய அனுபவங்கள் குறித்துக் கேட்டோம்.

“மிதவைக் கப்பலை ரொம்ப கவனமா இயக்கணும். ஒரு நொடி மிஸ் ஆனாலும், அதை நம்மால கன்ட்ரோல் பண்ண முடியாது. என்னை நம்பி 10 குடும்பங்கள் இருக்கு, அவங்களுடைய உயிருக்கு நான்தான் பொறுப்பு என்கிற எண்ணம் எப்பவும் எனக்குள்ளே இருக்கும். ஆனா, இது எனக்கு கஷ்டமாவே தெரிலை. ஒவ்வொரு நாளும் புதுசா இருக்கு; புதியதைக் கத்துக்குறேன்.

ஏதோ ஒரு மூலையில் சாதாரண குடும்பத்தில் பிறந்த என்னால இந்த சாதனையைச் செய்ய முடியுதுன்னா, எல்லா பொண்ணுங்களாலயும் முடியும்'' என்கிறவரின் வயது 31. இன்னும் திருமணமாகவில்லை.

``கப்பலில் ரோந்துப் பணிகளில் ஈடுபடும் போது, கடல் வழியாகப் பொருள்களைக் கடத்துபவர்கள் இருக்காங்களான்னு பார்ப்போம். அப்படி ஒருமுறை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தப்போ ஓர் உடல் மிதந்துட்டு இருந்ததைப் பார்த்தோம். அது மீனவருடைய உடல். அதை மீட்டு, அவர் குடும்பத்தினரிடம் கொடுத்தேன். ‘அவர் உடம்பைக்கூடப் பார்க்க முடியாமப் போயிடுமோன்னு கவலைப்பட்டுட்டு இருந்தோம்மா... ரொம்ப நன்றிம்மா’ன்னு சொன்னாங்க. அந்தத் தருணத்தை எப்பவும் மறக்க மாட்டேன்” என்றவரிடம், ‘`அடுத்து?’' என்றோம்.

“இப்போ மிதவைக் கப்பலை என்னை நம்பி ஒப்படைச்சிருக்காங்க. சீக்கிரமே வழக்கமான கப்பலையும் இயக்கணும்கிறதுதான் என் ஆசை” எனப் புன்னகைக்கிறார், கேப்டன் அனுராதா. இவருடன் மிதவைக் கப்பலை இயக்கிவந்த கமாண்டோ ஆபீஸர் சிரின் சந்திரனிடம் பேசினோம்.

“என் சொந்த ஊர் பாலக்காடு. என்னுடைய அப்பாவும் கடலோரக் காவல்படையில் பணியாற்றியவர். சின்ன வயசுல இருந்தே நாமளும் ராணுவத்துல சேரணும்கற ஆசை எனக்கு இருந்தது. கோயம்புத்தூரில் இன்ஜினீயரிங் படிச்சேன். படிச்சு முடிஞ்சதும் தேர்வில் பாஸாகி 2011-ல் கோஸ்ட் கார்டாக பணியில் சேர்ந்தேன். 2016-ல் நிர்வாக அலுவலகப் பணி. பிறகு ஒருவருஷம் செலெக்ஷன் டிரெய்னிங்கில் இருந்தேன். இப்போ கமாண்டோ ஆபீஸரா இருக்கேன்” என்றவரின் பணி அனுபவங்கள் குறித்துக் கேட்டோம்.

“கஷ்டப்பட்டு ஒரு விஷயத்தை சாதிக்கும் போது வருகிற சந்தோஷத்துக்காக எவ்வளவு வலியை வேணும்னாலும் தாங்கிக்கலாமே... இது என் கனவு. இதே கனவோடு இருக்கிறவரை காதலிச்சு திருமணம் செஞ்சுக்கிட்டேன். உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த அவரும் கமாண்டோ ஆபீஸர். மார்ச் 10 எங்களுடைய முதல் திருமண நாள். அன்று நான் எங்கோ ரோந்துப் பணியில் இருந்தேன். அவர் வேறு எங்கோ ரோந்துப் பணியில் இருந்தார். சின்னச் சின்ன விஷயங்களை இழந்தால்தான் நம்ம இலக்கை அடைய முடியும். எமோஷனல் விஷயங்களைத் தாண்டி வரப் பழகிக்கணும். எனக்கான கனவை என்கூட சேர்ந்து காண்கிறவரைத்தானே நான் கரம் பிடிச்சிருக்கேன்” என்கிறவரின் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி!

“மிதவைக் கப்பலை இயக்குறது சிரமமான காரியம். கடல் சீற்றம் குறையும் வரைக்கும் நடுக்கடலில்தான் காத்திருக்கணும். பெண்களின் உடல்ரீதியான அசௌகரியங்களுக்கு எந்தச் சலுகையையும் எதிர்பார்க்க முடியாது; எதிர்பார்க்கவும் மாட்டோம். என் வேலையை நான் பார்த்துதான் ஆகணும். மத்தவங்களுக்கு ஏதாவது பிரச்னைனா அவங்களை மீட்கணும். கடலில் போதைப்பொருள்கள் கடத்தாமல் பார்த்துக்கணும். எப்பவுமே ஆக்டிவ்வா இருக்கணும். இந்தத் துறையில் இன்னும் பல விஷயங்களைக் கத்துக்கணும்” என்கிறார் சிரின் சந்திரன்.

-வெ.வித்யா காயத்ரி, படங்கள்: தி.குமரகுருபரன்