‘`ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இளைஞர் நிக் வுஜிசி. அவருக்கு கை கால்கள் கிடையாது. ஆனாலும் சாப்பிடறது, நீச்சலடிக்கிறது, டிரைவிங்னு எல்லா வேலைகளையும் தானே செய்வார். கல்யாணமாகி, மூன்று குழந்தைகளுக்கு அப்பா. மோட்டிவேஷனல் ஸ்பீக்கரான அவர்தான் எனக்கு இன்ஸ்பிரேஷன். நான் ஏறும் மேடைகளில் அவரைப் பற்றிப் பேசத் தவற மாட்டேன். அவராலேயே அணுஅணுவா ரசிச்சு வாழ முடியும்போது நம்மால முடியாதா என்ன?’’

பாசிட்டிவிட்டி அடுத்தவர்களையும் தொற்றிக் கொள்ளும். அதை நிரூபிக்கின்றன ரேகா கௌடாவின் அறிமுக வார்த்தைகள். பெங்களூரின் மல்ட்டி நேஷனல் நிறுவனமொன்றில் இன்ஜினீயராக வேலை பார்க்கும் ரேகா கௌடாவும், முன்னணி மோட்டிவேஷனல் ஸ்பீக்கர்களில் ஒருவர். வாழ்வை வெறுத்து விரக்தியின் விளிம்பில் நிற்கும் யாரும், ரேகாவின் பேச்சை ஒருமுறை கேட்டால் மறுபிறவி எடுப்பார்கள். அவரின் வார்த்தைகளில் தன்னம்பிக்கை தாண்டவமாடும். வாழ்க்கையில் எல்லோருக்கும் போராட்டங்கள் வரும்தான். ரேகாவுக்கோ வாழ்க்கையே போராட்டம்தான். `மியூகோபாலிசாக்ரிடோசிஸ்' என்கிற அபூர்வ நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் ரேகாவுக்கு வீல் சேர்தான் வாழ்க்கை.

‘`ஜெயந்த் என் அண்ணன். என்னைவிட ரெண்டு வயசுப் பெரியவன். அவன் பிறந்தபோது எல்லாம் சரியாதான் இருந்ததாம். அவனுக்கு ரெண்டரை வயசான போதுதான் அவனுடைய வளர்ச்சியில் ஏதோ அசாதாரணம் தெரியறதா என் பெற்றோர் உணர்ந்திருக்காங்க. அவனுக்குச் சரியா காது கேட்கலையாம். நெஞ்சுப்பகுதி வீங்கியிருந்ததாம். பார்வை சரியா தெரியலையாம். நடப்பதிலும் சிக்கல் இருந்திருக்கு. என்ன பிரச்னைன்னு தெரியாம அவனை குழந்தைகளுக்கான டாக்டர்ஸ்கிட்ட காட்டியிருக் காங்க. ஆனா, டாக்டர்ஸ் அவனுக்கு ‘ரிக்கெட்ஸ்’ பிரச்னைனு தப்பா கணிச்சதோடு இல்லாம அதுக்கான மருந்துகளையும் கொடுத்திருக் காங்க. ஒரு கட்டத்துல அது ரிக்கெட்ஸ் இல்லை, `எம்.பி.எஸ் டைப் 4' என்கிற அபூர்வமான மரபியல் பாதிப்புனு கண்டுபிடிச்சிருக்காங்க. அது அவனுடைய எலும்புகள் மற்றும் முதுகுப்பகுதியை பாதிக்கும், வளர்ச்சியையும் தடுக்கும்னு சொல்லியிருக் காங்க. அது மட்டுமல்லாம, ‘உங்களுக்கு எத்தனை குழந்தைகள் பிறந்தாலும் எல்லாருக்கும் இந்த பாதிப்பு வரும் வாய்ப்புகள் இருக்கு’ங்கிற தகவலையும் சொல்லியிருக்காங்க. அங்கேதான் விதி எங்க எல்லோர் வாழ்க்கை யிலும் விளையாடிருச்சு. அந்த அட்வைஸ் அப்பா அம்மாவுக்கு வந்து சேர்ந்தபோது நான் பிறந்திருந்தேன், டாக்டர்ஸ் சொன்ன மாதிரி அதே பாதிப்புகளோடு...’’ - 24 வருடங்கள் பின்னோக்கி நம்மை அழைத்துச் செல்கிறார் ரேகா.

‘`மருத்துவமும் பெரிய அளவில் முன்னேறாத காலகட்டம் அது. இங்கிலாந்துலேருந்து பெங்களூரு வந்திருந்த ஒரு டாக்டர்தான் முதன்முறையா என் அண்ணனுக்கு இருக்கிறது எம்.பி.எஸ் பாதிப்பா இருக்கலாம்னு சந்தேகப்பட்டார். ரெண்டு வருஷப் போராட்டத்துக்குப் பிறகு இதுதான் பிரச்னைன்னு உறுதியா தெரியவந்திருக்கு. அதனால என் விஷயத்துல அதைக் கண்டுபிடிக்கிறதுல அம்மா அப்பாவுக்குப் பெரிய பிரச்னைகள் இல்லை. எனக்கு ஏழு, எட்டு வயசாகிற வரை பிரச்னை என்னன்னே தெரியாமதான் வளர்ந்தேன். எங்க ரெண்டு பேராலயும் சரியா நடக்க முடியாது. மத்த பிள்ளைங்களைப் போல ஸ்கூல் பேகைத் தூக்கிட்டுப் போக முடியாது. வயசாக ஆக பிரச்னைகளும் அதிகமாச்சு. நடக்கவே முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டோம். ஹியரிங் எய்டு இல்லாம எங்களால கேட்க முடியாதுங்கிற நிலை வந்தது. ப்ளஸ் ஒன் படிக்கிற வயசுல நானும் என் அண்ணனும் 100 சதவிகிதம் எங்க பெற்றோரைச் சார்ந்தே வாழ வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டோம். எந்த அம்மாவாவது காலையில பிள்ளைங்களோடு ஸ்கூலுக்குக் கிளம்பி, சாயந்திரம் ஸ்கூல் முடியற வரைக்கும் அங்கேயே உட்கார்ந்திருக்கிறதைப் பார்த்திருக்கீங்களா... எங்கம்மா அப்படித்தான் இருந்தாங்க. ரெஸ்ட் ரூம் போகணும்னாலோ, கிளாஸ்ரூம்லேருந்து லேபுக்குப் போகணும்னாலோ அம்மா தான் எங்களைத் தூக்கிட்டுப் போவாங்க.

நானும் அண்ணனும் ரெகுலர் ஸ்கூல்லதான் படிச்சோம். காலேஜுக்குப் போனபோதும் இதுதான் தொடர்ந்தது. சயின்ஸ் க்ரூப்ல படிச்சேன். அதனால நிறைய லேப் வகுப்புகள் இருக்கும். லேப் ரெண்டாவது மாடியில் இருக்கும். கொஞ்சம்கூட முகம் சுளிக்காம அம்மாதான் எங்களைத் தூக்கிட்டுப் போவாங்க. அதோடு, எங்களுடைய சவால் முடிஞ்சிடாது. லேபுகளும் மாற்றுத்திறனாளிகளுக்கேற்ற வகையில இருக்காது. அங்கேயும் எங்களுக்கு யாருடைய உதவியாவது தேவைப்படும். ஃபிரெண்ட்ஸும் நிறைய உதவியிருக்காங்க. அம்மாவின் சப்போர்ட் இருந்ததாலதான் நாங்க ரெண்டு பேரும் பி.டெக் படிக்க முடிஞ்சது’’ - சாமானியர்களுக்கே சாத்தியமாகாத சாதனைகளைச் செய்திருக்கிறார்கள் இந்த அண்ணனும் தங்கையும்.

‘`வேலைக்குப் போறதுன்னு முடிவெடுத்தபோதுதான் இன்னும் பயங்கரமான சவால்கள் எங்க முன்னாடி நின்றன. எனக்கும் அண்ணனுக்கும் ஒரே இடத்துல வேலை கிடைக்குமானு முயற்சி செய்தோம். அப்போதான் எங்கம்மாவால ரெண்டு பேரையும் ஒரே நேரத்துல கொண்டுவிடவும் கூட்டிட்டு வரவும் முடியும். ஆனா, பல இடங்களில் யாராவது ஒருவருக்குத்தான் வேலை காத்திருந்தது. நாங்களும் காத்திருந்தோம். கடைசியா ரெண்டு பேருக்கும் ஒரே நிறுவனத்துல வேலை கிடைச்சது. காலையில எழுந்ததுலேருந்து நைட் தூங்கற வரைக்கும் யாரையாவது சார்ந்திருக்கும் நிலை சாதாரணமானதில்லை. சில நேரங்களில் என்ன வாழ்க்கை இதுன்னு நினைச்சிருக்கேன். அப்பல்லாம் எங்கம்மா, அப்பாவைதான் நினைச்சுப்பேன். எங்களுக்காக அவங்க எல்லாக் கஷ்டங்களையும் சகிச்சுக்கிட்டிருக்கும்போது, வாழ்க்கையை எதிர்கொள்ளும் சவாலைச் சந்திக்க வேண்டிய பொறுப்பு என்னுடையதுதானேன்னு எனக்கு நானே தைரியம் சொல்லிப்பேன். மனசு துவண்டுபோகும்போதெல்லாம் வாழ்க்கையில என்னைவிடவும் மோசமான உடல்நிலையோடு போராடிக்கிட்டிருக்கிற மனுஷங்களைப் பார்ப்பேன். அவங்களுடைய தன்னம்பிக்கை என் மனசை மாத்திடும்’’ - தளராமல் சொல்கிறவர், இன்று பலருக்கும் தன்னம்பிக்கையின் அடையாளமாகியிருக்கிறார்.

‘`ஒரு ரியாலிட்டி ஷோவில் கலந்துக்கிட்டபோது என் கதையைச் சொல்லியிருந்தேன். அது ரொம்பப் பிடிச்சுப் போனதாகவும், தன்னை மோட்டிவேட் பண்ணினதாகவும் நிறைய பேர் சொன்னாங்க. அதுதான் மோட்டிவேஷனல் ஸ்பீச்சுக்கான ஆரம்பப் புள்ளி. இன்னும் நிறைய பேரை ஊக்கப்படுத்த முடியும்னா, நான் ஏன் இதைத் தொடர்ந்து செய்யக்கூடாதுன்னு யோசிச்சேன். மோட்டிவேஷனல் ஸ்பீக்கர் என்பது, இன்னிக்கு என்னுடைய அடையாளமா மாறியிருக்கு. முழுநேர மோட்டிவேஷனல் ஸ்பீக்கராவதுதான் என் எதிர்கால லட்சியம்’’ - எதிர்காலக் கனவுடன் காத்திருப்பவருக்கு, நிகழ்காலம் அவ்வளவு இனிமையானதாக இல்லை என்பதே உண்மை.

‘`அப்பா ஓய்வுபெற்ற ஆசிரியர். அவர் சம்பளத்துல ரெண்டு மாற்றுத்திறனாளிக் குழந்தைகளை வளர்த்தெடுக்கிறது, படிக்க வைக்கிறது, மருந்து மாத்திரைகளுக்கு செலவு பண்றது பெரும் போராட்டமா இருந்தது. நானும் அண்ணனும் முழுவீச்சில் சிகிச்சையில் இருந்த நேரம் அது... அரசியல்வாதிகள் உட்பட நிறைய பேர்கிட்ட உதவிகள் கேட்டு அணுகியிருக்கோம். உதவினவங்களைவிடவும், ‘ஏன் இப்படிப் பிச்சை எடுக்கிறீங்க..’ன்னு விரட்டி, அவமானப்படுத்தினவங்கதான் அதிகம். இப்போ வரைக்கும் எங்களுக்கு அரசு உட்பட யாரிடமிருந்தும் எந்த உதவியும் கிடைக்கிறதில்லை. உதவிகள் கேட்டு ஒவ்வோர் இடமா ஏறி, இறங்கற நிலையில் நாங்களும் இல்லை. வாழ்நாள் முழுவதும் நாங்க மருந்துகளின் உதவியோடுதான் வாழ்ந்தாகணும். எங்களுடைய பிரச்னைக்கு அமெரிக்காவில் மருந்து கிடைக்குது. ஆனா, அதன் விலை ஒரு வருஷத்துக்கு ஒரு நபருக்கு ஒன்றரைக் கோடி ரூபாய். அந்த மருந்து இந்தியாவில் கிடைக்க ஏற்பாடுகள் செய்யச் சொல்லி அரசாங்கத்துக்கிட்ட தொடர் கோரிக்கை வெச்சிட்டிருக்கோம். அதுவும் நடக்கலை. அது இந்தியா, அமெரிக்கானு ரெண்டு நாடுகள் சம்பந்தப்பட்ட விஷயம். என்னை மாதிரியான தனி நபர் போராட்டம் எந்த மாற்றத்தையும் கொண்டு வராது. இப்போ நாங்க எடுத்துக்கிற மருந்துகளும் எங்க உடல்நலத்தில் எந்த வகையிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தாது. ஆனா, எதிர்காலத்தில் பிரச்னைகள் தீவிரமாகாமல் தடுக்கும். மாற்றுத்திறனாளிகளுக்கான அடிப்படை வசதிகளே போது மானவையாக இல்லை. மாற்றுத்திறனாளிகள் எல்லா இடங்களுக்கும் போயிட்டு வரும்படி மால்கள், தியேட்டர்கள்னு பரவலா ராம்ப் வசதிகள் செய்யப்படணும். பொதுக் கழிவறைகளும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தக்கூடிய வசதிகளோடு இருக்கணும்’’ - கவலையோடு கோரிக்கைகளையும் முன்வைக்கிறவர், நமக்கும் மெசேஜ் வைத் திருக்கிறார்.

‘`நெவர் கிவ் அப். போராடுங்க. நிச்சயம் ஜெயிப்பீங்க. அடுத்தவங்களுக்கு உதவறதை உங்க இயல்பா மாத்திக்கோங்க. உதவின்னு சொன்னதும் பொருளாதார உதவியா இருக்கணும்னு அவசியமில்லை. அடுத்தவங்க முகத்துல சின்ன புன்னகையை வரவழைக்கிற உதவிகள்கூட மகத்தானவை.’’

புன்னகையோடு விடைபெறுகிறார் வணக்கத்துக்குரியவர்!

-ஆர்.வைதேகி