Published:Updated:

என் மகள் விலைமதிக்க முடியாதவள்! - காவ்யா ராஜேஷ்

என் மகள் விலைமதிக்க முடியாதவள்! - காவ்யா ராஜேஷ்
பிரீமியம் ஸ்டோரி
என் மகள் விலைமதிக்க முடியாதவள்! - காவ்யா ராஜேஷ்

அசத்தல் அப்பா-மகள்

என் மகள் விலைமதிக்க முடியாதவள்! - காவ்யா ராஜேஷ்

அசத்தல் அப்பா-மகள்

Published:Updated:
என் மகள் விலைமதிக்க முடியாதவள்! - காவ்யா ராஜேஷ்
பிரீமியம் ஸ்டோரி
என் மகள் விலைமதிக்க முடியாதவள்! - காவ்யா ராஜேஷ்

ப்பாக்களுக்கு மகள்களையும், அம்மாக்களுக்கு மகன்களையும் பிடிக்கும் என்றொரு பொதுக்கருத்து உண்டு. இது நகர்ப்புறப் பெற்றோர்களுக்கு வேண்டுமானால் பொருந்தலாம். கிராமங்களில் அப்பாக்களும் அம்மாக்களும் பெண் குழந்தைகளைச் சுமைகளாகப் பார்க்கிற பார்வையே பரவலாக இருக்கிறது.  பெற்றோர்கள், மகன்களைப் போலவே, மகள்களையும் மதிப்பிற்குரியவர்களாகப் பார்க்க வேண்டும் என்கிற எண்ணத்துக்கு வித்திட்டிருக்கிறார் 19 வயது காவ்யா ராஜேஷ். இவரது இந்த முயற்சி மகள்களைப் பெற்ற மகராசன்களுக்கானது!

குர்கானில் வசிக்கிற காவ்யா,  தன் அப்பாவுடன் இணைந்து நடத்தும் ‘மை டாட்டர் ஈஸ் பிரெஷியஸ்’ புராஜெக்ட் மூலம், குப்பங்களிலும் குடிசைகளிலும் வாழ்கிற பெற்றோர்களிடம் மாபெரும் மனமாற்றத்தை ஏற்படுத்தி வருகிறார். 12-வது படிக்கிற காவ்யா, தன் முயற்சியின் வெற்றிகரமான மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.

என் மகள் விலைமதிக்க முடியாதவள்! - காவ்யா ராஜேஷ்

‘`2016-ம் வருஷம்... நாங்க அப்போ பங்களாதேஷ்ல இருந்தோம். ‘கேர்ள் ரெய்ஸிங்’னு ஒரு டாக்குமென்ட்டரி பார்த்தேன். உலக அளவில் சுமார் ஆறரைக் கோடி பெண் குழந்தைகள் பள்ளிக்கூடம் போறதில்லைங்கிற புள்ளி விவரம் தெரியவந்தது. அன்னிக்கு முழுக்க எனக்கு அதே சிந்தனை... வீட்டுக்குப் போய் அம்மா அப்பாகிட்ட,  ‘இந்த நிலையை மாத்த நான் ஏதாவது பண்ணணும்னு நினைக்கிறேன்’னு சொன்னேன். ஆனா, என்ன செய்யறதுங்கிற ஐடியா இல்லை. கிராமங்களுக்குப் போய் அந்த மக்களை போட்டோஸ் எடுத்து அவங்களுக்கே கொடுக்கிற ஒரு பெண்ணின் பேட்டியை  அம்மா என்கிட்ட கொடுத்தாங்க. என் அப்பா ராஜேஷ் ராமகிருஷ்ணனுக்கும் எனக்கும் போட்டோகிராபி ரொம்பப் பிடிக்கும். இந்த ரெண்டையும் இணைச்சுப் பார்த்தபோது, ஐடியா வந்தது. வறுமைச் சூழலில் வசிக்கிற மக்களைச் சந்திக்கிறது, அங்குள்ள அப்பாக்களை அவங்களுடைய மகள்களோடு போட்டோஸ் எடுத்து அவங்களுக்கு ஒரு காப்பி கொடுக்கிறதுன்னு முடிவு பண்ணினோம். புரொஃபஷனல் ஸ்டூடியோவுக்குப் போய் ஆசைக்காக ஒரு போட்டோ எடுத்து அழகு பார்க்கிற வசதிகூட இல்லாத குடும்பங்கள் அவை. நாங்க எடுத்துக் கொடுக்கிற அந்தப் படம், அந்த ஏக்கத்தைப் போக்கும். தவிர, அந்த அப்பாவுக்குத் தன் மகளைப் பற்றிய நல்ல நினைவுகளைத் தக்கவைக்கும்னு நம்பினோம். ‘என் மகள் எனக்கு விலை மதிக்க முடியாதவள். அவளுக்குக் கல்வியைக் கொடுக்க வேண்டியது என் கடமை’ என்ற மெசேஜையும் அப்பாக்களிடம் பதியவெச்சோம். இப்படி நாங்க எடுக்கிற போட்டோக்களை முகநூலில் சம்பந்தப்பட்டவங்களுடைய கதைகளோடு பதிவுசெய்யவும் ஆரம்பிச்சோம். அதன் மூலமா பெண் குழந்தைகளுக்குக் கல்வி எவ்வளவு முக்கியம் என்ற விழிப்புணர்வை இன்னும் பெரிய அளவுக்குக் கொண்டு போக முடியும்னு நம்பினோம்.’’  - மகளின் பேச்சை மௌனமாகக் கேட்டுக்கொண்டிருக்கிறார் அப்பா ராஜேஷ்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என் மகள் விலைமதிக்க முடியாதவள்! - காவ்யா ராஜேஷ்

‘`ஏழ்மை காரணமா பெண் குழந்தைகளைப் படிக்கவைக்க முடியாத அப்பாக்கள் என்ன செய்வாங்க? அதுக்காக ஆன்லைன் கிரவுட் ஃபண்டிங் கேம்பெயின் ஒன்றை ஆரம்பிச்சோம். 3.45 லட்ச ரூபாய் நிதி சேர்ந்தது. பெண் குழந்தைகளின் கல்விக்காக இயங்கும் ‘நன்ஹி கலி’ என்கிற என்.ஜி.ஓவிடம் அந்தத் தொகையைக் கொடுத்தோம். அதன் மூலமா அவங்க 108 பெண் குழந்தைகளைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிவெச்சிருக்காங்க. அப்பப்போ புகைப்படக் காட்சிகள் நடத்தியும் நிதி திரட்டிக்கொடுக்கறோம்’’ என்கிற காவ்யா, டாக்கா, டெல்லி, கொல்கத்தா, சென்னை எனப் பல நகரங்களுக்கும் இந்தச் சேவையைக் கொண்டு சென்றிருக்கிறார், தன் தந்தையோடு.

‘`இந்த புராஜெக்ட்டுக்காக சென்னை வந்து சில குடும்பங்களைச் சந்திச்சபோது, பள்ளிக்கூடத்துக்கு அனுப்பினாலும், தொடர்ந்து கல்லூரிப் படிப்புக்குச் செலவு செய்ய முடியாத அவங்களுடைய நிலைமை தெரியவந்தது. கல்லூரிப் படிப்பைத் தொடர ஆசைப்படும் ஏழை மாணவிகளுக்கும் இப்போ நிதி திரட்டிக் கொடுப்பதை நீட்டிச்சிருக்கோம்.

என் மகள் விலைமதிக்க முடியாதவள்! - காவ்யா ராஜேஷ்

சென்னையில நாங்க சந்திச்ச முதல் மாணவி காயத்ரி. ஊரூர் ஆல்காட் குப்பத்தைச் சேர்ந்த அந்தப் பெண், எம்.ஜி.ஆர். ஜானகி காலேஜில் பிபிஏ படிச்சிட்டிருந்தாங்க. படிப்புச் செலவுக்காக, பீச்சுல சோளம் வித்து சமாளிச்சிட்டிருந்தாங்க. அவங்க நிலை ரொம்பவே பரிதாபமானதா இருந்தது.  அவங்களுடைய கதையை ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதினேன். அதையடுத்து நிறைய உதவிகள் வந்தன. அந்தப் பணத்தை காயத்ரியின் காலேஜுக்கு அனுப்பிவெச்சதோடு, அவங்களைப் பற்றி அப்டேட்ஸும் கொடுக்க ஆரம்பிச்சோம்.

சுஜிப்ரியாவையும் சென்னையிலதான் சந்திச்சோம். நாங்க அவளை போட்டோ எடுக்கும்போது கதறி அழுதாள். வறுமை காரணமா படிப்பைப் பாதியோடு நிறுத்த அவளுடைய பெற்றோர் வற்புறுத்தறதாகச் சொன்னாள். அவளுக்கு உதவிகள் செய்தோம்.  இன்னிக்கு அவளுடைய காலேஜில் பேச்சுப் போட்டி, பட்டிமன்றப் போட்டி, கட்டுரைப் போட்டிகள் எல்லாவற்றிலும் கலந்துக்கிட்டு ஜெயிக்கிற அளவுக்கு உற்சாகமான மாணவியா மாறியிருக்கா. இப்போதைக்கு ஒன்பது பெண்களைப் படிக்கவெச்சிருக்கோம். இந்த எண்ணிக்கையை அதிகரிக்கிறதுதான் எங்க நோக்கம்...’’ - சிறிய கண்களில் பெருங்கனவுகள் கண்டுகொண்டிருக்கும் காவ்யாவின் இந்த முயற்சியில் அவரின் அம்மா நிருபமாவும் இணைந்திருக்கிறார்.

என் மகள் விலைமதிக்க முடியாதவள்! - காவ்யா ராஜேஷ்

‘`எங்கம்மா நிருபமா, கன்சல்ட்டன்ட். மற்றும் பயிற்சியாளரா இருக்காங்க. எங்க புராஜெக்டின் அடுத்தகட்ட வளர்ச்சியா, படிக்க ஆசைப்படும் பெண்களுக்கு மென்ட்டார்ஷிப் கொடுக்க ஆரம்பிச்சோம். படிப்பை முடிச்சதும் என்ன செய்யலாம் என்ற ஐடியா இல்லாதவங்களுக்கு வழிகாட்டுவதோடு, வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசிய திறமைகளான பப்ளிக் ஸ்பீக்கிங் மாதிரியான விஷயங்களையும் கற்றுக்கொடுக்கறோம். இந்த வேலைகளை எங்கம்மாதான் செய்யறாங்க...’’ பெருமையோடு சொல்பவருக்கு, எதுவும் சுமுகமாக அடுத்த கட்டங்களை நோக்கி நகர்ந்துவிடவில்லை.

‘`பல குடும்பங்களிலும் ஆண் குழந்தைகளைப் படிக்கவைக்கிறதுல ஆர்வம் காட்டின பெற்றோர், பெண் குழந்தைகள் விஷயத்துல அந்த ஆர்வத்தைக் காட்டலை. ‘மகன்களைப் போலவே மகள்களும் முக்கியமானவங்கதான், அவங்களுக்கும் கல்வி அவசியம்’னு புரியவைக்கிறது பெரிய சவாலா இருந்தது.

ஆனா, உதவிகள் கிடைக்கப்பெற்ற பெண் குழந்தைகள், அதன் பிறகு முன்பைவிட அதிக ஆர்வத்தோடு படிக்கிறதையும் பார்த்தபோது நாங்க சரியான விஷயத்தை, சரியான முறையில்தான் செய்திட்டிருக்கோம் என்கிற திருப்தி கிடைச்சது. 100 சதவிகிதப் பெண் கல்வி... இதுதான் எங்க இலக்கு...’’ - லட்சியம் சொல்லி நிறுத்துகிறார் காவ்யா.

அதுவரை மகளின் பேச்சைப் பொறுமையாக ரசித்துக்கொண்டிருந்த அப்பாவிடம் பேச்சு கொடுத்தோம். ‘மை டாட்டர் ஈஸ் பிரெஷியஸ்.... வேறென்ன சொல்ல?’ - ஒற்றை வரி மகளதிகாரத்தில் மனம் நிறைக்கிறார் அப்பா!

-ஆர்.வைதேகி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism