ஓவியங்களைக்கொண்டு... அவற்றில் பயன்படுத்தப்பட்ட நிறங்களைக் கொண்டு உங்கள் மனநிலையை சமன் செய்ய முடியும் என்றால் நம்பமுடிகிறதா? “அதெல்லாம் சர்வ சாதாரணம்'' என ‘தம்ஸ் அப்’ காட்டுகிறார் மண்டாலா கலைஞர் வரலட்சுமி பரணிதரன்.
வரலட்சுமியின் `மண்டாலா’ ஓவியக்காட்சி... மகிழ்ச்சி, உற்சாகத்தைப் பிரதிபலிக்கும் மஞ்சள், வலிமையை வெளிப்படுத்தும் பழுப்பு என அந்த அரங்கு முழுவதும் பளீர் வண்ணங்களால் நிறைந்திருக்கிறது. ஓவியங்களுக்கு இடையிலான உரையாடல் இது.

மண்டாலா ஓவியக் கலை பற்றிச் சொல்லுங்கள்...
இது மனத்தை ஒருநிலைப்படுத்தும் ஒருவிதமான சிகிச்சை முறை. மண்டாலா என்பதற்கு சம்ஸ்கிருதத்துல ‘வளையம்’னு பொருள். நம்மைப் பற்றி நாமே புரிஞ்சிக்கிறதுக்கு இது அற்புதமான வழிமுறை. தியானம் பண்ணணும்னு நினைக்கிறவங்க, மன அழுத்தம் அல்லது மனச்சோர்வால் பாதிக்கப்படுகிறவங்க, புதுசா ஏதாவது கத்துக்கணும்னு நினைக்கிறவங்க... தாராளமா மண்டாலாவைத் தேர்வுசெய்யலாம்!
மண்டாலா வரைய எவ்வளவு நேரம் தேவைப்படும்?
ஏ4 அளவு பேப்பர்ல அடிப்படை மண்டாலா வரைய 2 - 3 மணி நேரம் ஆகும். இது முழுக்க முழுக்க தியானம் செய்வதற்குச் சமம். நிச்சயமா மன அழுத்தம் குறைஞ்சு நிம்மதி கிடைக்க இந்த 3 மணி நேரம் உதவும். நான் `100 மண்டாலா 100 நாள்கள்’ சவாலை வெற்றிகரமா முடிச்சு இங்கே காட்சிப்படுத்தியிருக்கேன். ரொம்பவே மனநிறைவா இருக்கு.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மண்டாலா வரைவதற்கு என்னென்ன உபகரணங்கள் தேவை?
மண்டாலா வரையறதுக்குச் சில வரைமுறைகள் இருக்கு. பென்சில், ஸ்கேல், காம்பஸ்... இவைதாம் முக்கியமான உபகரணங்கள். பேப்பர் மட்டுமில்ல, கார்ட்போர்டு, கேன்வாஸ் போன்றவற்றிலும் வரையலாம். அடிப்படைக் கணிதமும் இதற்கு அவசியம்.
ஏராளமான நிறங்கள் மற்றும் வடிவங்களைப் பயன்படுத்தியிருக்கீங்களே... இவை எந்த அளவுக்கு மனநிலையைக் கட்டுப் படுத்துகின்றன?
பொதுவாகவே நிறங்களுக்கும் நம் உணர்வுகளுக்கும் நிறைய தொடர்பு இருக்கு. வெவ்வேறு உணர்வுகளைக் கட்டுப்படுத்தும்படியான நிறங்களை மட்டும்தான் என் ஓவியங்கள்ல பயன்படுத்தி யிருக்கேன். அதேபோல, வடிவங் களுக்கும் நம் உடலமைப்புக்கும் நிறைய ஒற்றுமை உண்டு. ஒரு நரம்புச்சுற்றை எடுத்துப் பார்த்தால்கூட அது வளைய மாகத்தான் இருக்கும். வளைய வடிவில் உருவாகிற இந்த ஓவியங்கள், நிச்சயம் மன அழுத்தத்தைக் குறைக்கும்!
-கானப்ரியா