Published:Updated:

உதவும் உள்ளம்: மனிதத்துக்கு வெல்கம்... பிளாஸ்டிக்குக்கு குட்பை! - கவிதா நரசிம்மன்

உதவும் உள்ளம்: மனிதத்துக்கு வெல்கம்... பிளாஸ்டிக்குக்கு குட்பை! - கவிதா நரசிம்மன்
பிரீமியம் ஸ்டோரி
உதவும் உள்ளம்: மனிதத்துக்கு வெல்கம்... பிளாஸ்டிக்குக்கு குட்பை! - கவிதா நரசிம்மன்

உதவும் உள்ளம்: மனிதத்துக்கு வெல்கம்... பிளாஸ்டிக்குக்கு குட்பை! - கவிதா நரசிம்மன்

உதவும் உள்ளம்: மனிதத்துக்கு வெல்கம்... பிளாஸ்டிக்குக்கு குட்பை! - கவிதா நரசிம்மன்

உதவும் உள்ளம்: மனிதத்துக்கு வெல்கம்... பிளாஸ்டிக்குக்கு குட்பை! - கவிதா நரசிம்மன்

Published:Updated:
உதவும் உள்ளம்: மனிதத்துக்கு வெல்கம்... பிளாஸ்டிக்குக்கு குட்பை! - கவிதா நரசிம்மன்
பிரீமியம் ஸ்டோரி
உதவும் உள்ளம்: மனிதத்துக்கு வெல்கம்... பிளாஸ்டிக்குக்கு குட்பை! - கவிதா நரசிம்மன்

கை நிறைய சம்பளம், வசதியான வாழ்க்கை என்றிருந்தவர், சென்னையைச் சேர்ந்த கவிதா நரசிம்மன். அந்த வேலையை விட்டுவிட்டு, கிராமப்புறங்களைச் சேர்ந்த படிக்காத பெண்கள், மாற்றுத்திறனாளிகள், மனநலம் குன்றியவர்களை இணைத்துக் கொண்டு, ‘மெட்ராஸ்4 என்டர்பிரைசஸ்’ என்கிற ஆன்லைன் நிறுவனத்தை தற்போது நடத்தி வருகிறார். காட்டன் ஹேண்ட் பேக், காட்டன் உள்பாவாடைகள், துணிகள் மூலம் செய்யப்படும் அணிமணிகள், காட்டன் சானிட்டரி நாப்கின்கள், கொட்டாங்கச்சித் துண்டுகளால் செய்யப்படும் விளையாட்டுப் பொருள்கள் என இவரது பிசினஸ் ‘ஜீரோ பிளாஸ்டிக்’ கொள்கை சார்ந்ததாகவும் இருப்பது கூடுதல் ஸ்பெஷல்.

உதவும் உள்ளம்: மனிதத்துக்கு வெல்கம்... பிளாஸ்டிக்குக்கு குட்பை! - கவிதா நரசிம்மன்

“நான் பிறந்து வளர்ந்தது சென்னையில். ஏழு வருடங்கள் பார்த்த ஐ.டி வேலையை விட்டுவிட்டு, குடும்பத்துடன் ஏற்காட்டுக்கு இடம்பெயர்ந்தோம். அங்கே, நானும் என் முன்னாள் கணவரும் இணைந்து ஓர் உணவகத்தை ஐந்து வருடங்கள் நடத்தினோம். இன்னொரு பக்கம், ஏற்காட்டில் உள்ள எளிய பின்னணி உள்ள குழந்தைகளுக்குக் கல்வி கற்றுக்கொடுப்பது போன்ற சமூக அக்கறை சார்ந்த விஷயங்களிலும் நான் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்” என்கிறவர், அதன் பிறகு கணவருடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டதன் காரணமாகத் தன் இரண்டு குழந்தைகளுடன் சென்னைக்குத் திரும்பியிருக்கிறார்.

“ஐ.டி துறையில் எனக்கான வேலை தயாராகவே இருந்தது. ஆனால், தனித்து இயங்க முடியாத மாற்றுத்திறன்கொண்ட குழந்தை களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்கிற எண்ணம் என்னுள் நிறைந்திருந்ததால், சிறப்புக் குழந்தைகளுக்காக சென்னையில் இயங்கும் தனியார் தொண்டு நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தேன். இதற்கிடையில், என்னுடன் இருந்த என் குழந்தைகள் விருப்பப்படுகிற வாழ்க்கைமுறையை என்னால் அமைத்துக்கொடுக்க முடியவில்லை. அதனால் அவர்களின் விருப்பப்படி அவர்களை அவர்களின் தந்தையிடம் அனுப்பிவைத்தேன். என் நேரம், செயல் முழுவதையும் இந்தச் சமூகத்தில் வாழ்கிற எளிய மக்களுக்குக் கொடுக்க முடிவு செய்தேன்’’ என்கிறவர், தனது நண்பர் சிவாவுடன் இணைந்து மேற்சொன்ன ஆன்லைன் நிறுவனத்தை ஆரம்பித்திருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உதவும் உள்ளம்: மனிதத்துக்கு வெல்கம்... பிளாஸ்டிக்குக்கு குட்பை! - கவிதா நரசிம்மன்

‘`நான் ஆரம்பிக்கும் தொழில் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு என்னால் முடிந்த வேலைவாய்ப்புகளைக் கொடுக்க முடிவுசெய்தேன். சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக்குக்கு எதிராக, முற்றிலும் பிளாஸ்டிக் கலப்பு இல்லாத பொருள் களைத் தயாரிக்க முடிவு செய்தேன். பொதுவாக, கிராமங்களில் இருக்கிற மாற்றுத்திறனாளி களில் பலரும் அடிப்படை தையல் கலையை அறிந்து வைத்திருப்பார்கள். சுயஉதவிக் குழுக்கள் போன்றவற்றின் உதவியோடு, பெரும்பாலும் தையல் மெஷினும் வாங்கி வைத்திருப்பார்கள். தைப்பதற்கான வாய்ப்புதான் அவர்களுக்குக் கிடைக் காது. எனவே, அவர்களைக்கொண்டு ஹேண்ட் பேக் தைத்து ஆன்லைனில் விற்க முதலில் முடிவு செய்தேன்.

முதற்கட்டமாக திருநெல்வேலி அருகிலுள்ள கடையநல்லூர் உட்பட ஆறு கிராமங்களைத் தேர்வுசெய்தேன். கடையநல்லூர் போன்ற கிராமங்களில் தனியார் தொண்டு நிறுவனங்கள் டே கேர் சென்டர்களை நடத்துகிறார்கள். மாற்றுத்திறனாளிகள், மனநலம் குன்றியவர்கள் வீட்டிலிருந்து சாப்பாடு எடுத்துக்கொண்டு வந்து காலை முதல் மாலை வரை அந்த சென்டரில் எந்த வேலையும் இல்லாமல் சும்மாவே இருந்துவிட்டு சாயங்காலம் சென்றுவிடுவார்கள். இப்படி இவர்கள் வேலையே இல்லாமல் இருப்பதால், மன அழுத்தம் அதிகமாகிறது. எனவே, அவர்களுக்குத்தான் வேலைவாய்ப்பு தேவை என்று முடிவுசெய்தேன்’’ என்ற கவிதா வுக்கு, ஆரம்பத்தில் வரவேற்பு கிடைத்துவிடவில்லை. ‘இதெல்லாம் எப்படிச் செய்ய முடியும்? எங்களைப் பயன்படுத்திக்கப் பார்க்குறீங்களா...’ என்றெல்லாம் சந்தேகித்திருக் கிறார்கள். முயற்சியைக் கைவிடாத கவிதா, அந்தந்த கிராமங்களில் இருக்கும் தொண்டு நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர்களின் உதவியோடு, அந்தப் பெண்களுக்குத் தன் நோக்கத்தைப் புரியவைக்க, ஹேண்ட் பேக் செய்யும் வேலை ஆரம்பமாகியிருக்கிறது.

உதவும் உள்ளம்: மனிதத்துக்கு வெல்கம்... பிளாஸ்டிக்குக்கு குட்பை! - கவிதா நரசிம்மன்

‘`முதலில் ஹேண்ட் பேக் செய்வதற்கான துணியை வெட்டி, டிசைன் செய்து, டே கேர் சென்டரின் ஒருங்கிணைப்பாளருக்கு அனுப்பிவிடுவேன். அவர் அங்குள்ள மாற்றுத்திறனாளி களுக்கு அவற்றைக் கொடுப்பார். தைத்து முடித்தவற்றை கலெக்ட் செய்து ஒருங்கிணைப்பாளர் திரும்பவும் எங்களுக்கு அனுப்பி வைப்பார். ஹேண்ட் பேக்கில் பிளாஸ்டிக் பட்டனுக்குப் பதிலாக கொட்டாங்கச்சித் துண்டுகளைப் பட்டன்களாகப் பயன்படுத்துகிறோம். கொட்டாங்கச்சியின் மேற்பரப்பை மென்மையாக்கி, உடைத்து, பட்டன்கள் தயாரிக்கப்படுகின்றன. கிராமங்களிலிருக்கும் மனநலம் குன்றியவர்கள்தாம் இந்த பட்டன் களைத் தயாரித்துக் கொடுக்கிறார்கள். தேங்காய் ஓட்டை உடைக்கும்போது அவை ஒரே சீராக உடையாது என்பதால், சிறு துண்டுகளாக உடைபவற்றை பட்டனுக்கும், பெரிய துண்டுகளாக உடைபவற்றை விளையாட்டுகளுக்கான காய்களாகவும் மாற்றி விடுகிறோம்” என்று ஆச்சர்யப்படுத்துகிறார் கவிதா.

சென்னையின் புறநகர்ப் பகுதியான அயப்பாக்கம், துரைப்பாக்கம் போன்ற பகுதிகளிலிருக்கும் படிப்பறிவு அதிகம் இல்லாத பெண்களும் இந்த ஹேண்ட் பேக் தைக்கும் தொழிலில் ஈடுபட்டிருக் கிறார்கள். இப்படி தமிழகம் முழுக்க 50 பேர் கவிதாவால் வேலைவாய்ப்பைப் பெற்று வருகிறார்கள்.

“இவர்கள் செய்யும் வேலைக் கான சம்பளம், இவர்களின் வங்கிக் கணக்கில் உரிய நேரத்தில் சேர்க்கப்பட்டுவிடும். ஒரே ஒரு பொருளை மட்டும் தயாரித்தால் அதில் பெரிதாக வேலைவாய்ப்பு எதுவும் கிடைக்காது. எனவே, துணிகளால் உருவாக்கப்படும் அணிமணிகள், உள்பாவா டைகள், காட்டன் சானிட்டரி நாப்கின்கள், கைத்தறிப் புடவைகள், கைத்தறித் துண்டுகள் என்று பொருள் களின் வகைகளையும் அதிகப்படுத்தியிருக்கிறோம். எந்த ஒரு புதுத் தயாரிப்புக்கான ஆரம்பகட்ட பயிற்சியையும் நான் நேரில் சென்று அவர்களுக்குக் கொடுத்து விடுவேன். மேற்கொண்டு ஏற்படும் சந்தேகங்களைத் தீர்க்க, இருக்கவே இருக்கிறது வாட்ஸ்அப்” என்று சொல் லும் கவிதா, ஆன்லைன் விற்பனையோடு, சமீபத்தில் சென்னை மயிலாப்பூரில் ‘ஏகாக்ரதா’(Ekagrata)’ என்ற பெயரில் நேரடி விற்பனையகம் ஒன்றையும் ஆரம்பித்திருக்கிறார்.

இன்னும் பல பெண்கள் இவர் மூலம் வலிமைபெறட்டும்!

-சு.கவிதா,  படங்கள்: க.பாலாஜி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism