Published:Updated:

வாழ்நாள் முழுக்க கோபமேபட்டதில்லை அந்த மனுஷி! - சாந்தா தியாகராஜன்

வாழ்நாள் முழுக்க கோபமேபட்டதில்லை அந்த மனுஷி! - சாந்தா தியாகராஜன்
பிரீமியம் ஸ்டோரி
வாழ்நாள் முழுக்க கோபமேபட்டதில்லை அந்த மனுஷி! - சாந்தா தியாகராஜன்

இசை ஆளுமை

வாழ்நாள் முழுக்க கோபமேபட்டதில்லை அந்த மனுஷி! - சாந்தா தியாகராஜன்

இசை ஆளுமை

Published:Updated:
வாழ்நாள் முழுக்க கோபமேபட்டதில்லை அந்த மனுஷி! - சாந்தா தியாகராஜன்
பிரீமியம் ஸ்டோரி
வாழ்நாள் முழுக்க கோபமேபட்டதில்லை அந்த மனுஷி! - சாந்தா தியாகராஜன்

டி.கே.பி என்கிற தாமல் கிருஷ்ணசாமி பட்டம்மாளின் குரல் வளமும் இசை ஞானமும் அவரைக் காலத்தால் அழியாத ஆளுமை ஆக்கியிருக்கிறது. இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்த அன்று, ‘ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே’ என்று அகில இந்திய வானொலியில் பட்டம்மாள் பாடியது, வரலாற்றுத் தருணம். அவருடைய நூற்றாண்டை முன்னிட்டு அவரைப் பற்றி ஆங்கிலத்தில் ‘டி.கே.பட்டம்மாள் - எ மேஸ்ட்ரோ அண்டு ஹர் டைம்லெஸ் மியூசிக்’ என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார் சாந்தா தியாகராஜன்.

“சொந்த ஊர் நீலகிரியில, 18 வருஷமா பேங்க்ல வேலை பார்த்துட்டிருந்தேன். என் கணவர், ‘டைம்ஸ் ஆஃப் இண்டியா’வுல, நீலகிரி மாவட்ட ரிப்போர்ட்டரா வேலைபார்த்துக்கிட்டிருந்தார். அன்னிக்கு நாங்க ஒன் டே கிரிக்கெட் மேட்ச் பார்ப்பதற்காக சென்னைக்கு வந்திருந்தோம். மேட்ச் பார்த்துட்டு ஹோட்டலுக்குப் போனதுக்கு அப்புறம், திடீர்னு என் கணவருக்கு மாரடைப்பு வந்துடுச்சு. பதறியடிச்சு ஹாஸ்பிடல் தூக்கிட்டுப் போறதுக்குள்ள எல்லாமே முடிஞ்சிருச்சு” என்றவர், சிறிது நேரம் அமைதியாகிவிட்டார். 

வாழ்நாள் முழுக்க கோபமேபட்டதில்லை அந்த மனுஷி! - சாந்தா தியாகராஜன்

“என் கணவரின் எம்.டி-கிட்ட, என் கணவர் பார்த்துட்டிருந்த வேலையை நான் பார்க்கிறதா சொல்லிக் கேட்டேன். அவர், எனக்கு பேங்க் வேலையில் கிடைக்கிற சம்பளம், சீனியாரிட்டி ரெண்டுமே புதுசா சேருகிற பத்திரிகை வேலையில் கிடைக்கா துன்னு சொல்லி என்னை கன்வின்ஸ் செய்ய முயற்சி செய்தார். இருந்தாலும் பிடிவாதமா நான் ரிப்போர்டர் வேலையில் சேர்ந்தேன்’’ என்கிறவர், பட்டம்மாளின் வாழ்க்கை வரலாற்றை எழுதும் எண்ணம் வந்தது பற்றிக் கூறினார்.

“டிசம்பர் கச்சேரிகள் பத்தி கட்டுரைகள் எழுதுவது வழக்கம். ரெண்டு வருஷங்களுக்கு முன்னாடி, நான் ரசிக்கும் பாடகி நித்யஸ்ரீயைப் பார்க்க, அவங்க பாட்டி பட்டம்மாள் வாழ்ந்த வீட்டுக்குப் போயிருந்தேன். அந்த வீட்டுக்குள்ள போனவுடனே டி.கே.பியோட மூச்சுக்காற்று அங்கேயே உலவிக்கிட்டு இருக்கிற மாதிரி ஓர் உணர்வு; ஒரு சிலிர்ப்பு. உடனே நித்யஸ்ரீகிட்டே, ‘உங்க பாட்டியைப் பத்தின புத்தகத்தை நான் எழுதட்டுமா?’ன்னு கேட்டுட்டேன். அவங்களும் சரின்னு சொல்ல, ரெண்டு வருஷங்கள் டி.கே.பியைப்பத்தி ஆராய்ச்சி செஞ்சேன். அடுத்ததா, ஆபீஸுக்கு 75 நாள்கள் லீவ் போட்டுட்டு, சென்னையில ஒரு ஹாஸ்டல்ல தங்கி, புத்தகத்தை எழுத ஆரம்பிச்சேன். அந்த 75 நாளும் நோ ஃபேமிலி, நோ போன். சொன்னா நம்ப மாட்டீங்க... அந்த 75 நாளும் அந்த ஹாஸ்டல் ரூமுக்குள்ள என்கூட டி.கே.பியும் இருந்தாங்க...” - இதைச் சொல்லும்போதே சாந்தாவின் உடல் சிலிர்க்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வாழ்நாள் முழுக்க கோபமேபட்டதில்லை அந்த மனுஷி! - சாந்தா தியாகராஜன்

டி.கே.பியைப் பற்றி சில சுவாரஸ்யமான விஷயங் களைப் பகிர்ந்துகொண்டார் சாந்தா.

•  “பத்து வயசுல பாட ஆரம்பிச் சிருக்காங்க. சினிமாவிலும் தேசபக்திப் பாடல்கள், தெய்விகப் பாடல்கள் மட்டும்தான் பாடியிருக்காங்க. பாரதியாரின் பல பாடல்களுக்கு ட்யூன் போட்டுப் பாடினது பட்டம்மாதான்!

 

• குடும்பத்தார், சிஷ்யப் பிள்ளைங்கனு பட்டம்மா யார்கிட்டேயும் கோபப்பட்டதோ,   எதிர்மறையா பேசினதோ இல்லை. சிஷ்யப் பிள்ளைங்க தப்பா பாடினா, ‘அதை இப்படிப் பாடிப்பாரு... சரியா வந்துடும்’னுதான் திருத்து வாங்களாம். கச்சேரி பண்ணும்போது, பக்கவாத்தியம் வாசிக்கிறவங்க தப்பா வாசிச்சாகூட கோபப்பட மாட்டாங்களாம். ஒரு மனுஷி தன் வாழ்நாள் முழுக்க யார்கிட்டேயும் கோபப்படாம எப்படி இருக்க முடியும்? ஆச்சர்யம்தான்!

• 19 வயசுலேயே அவங் களுக்குக் கல்யாணமாகிடுச்சு. திருமணம் முடிஞ்சு கணவர் ஈஸ்வரனோடு பொள்ளாச்சிக்குப் போயிட்டாங்க. கச்சேரிகளின்போது, கணவர் ஈஸ்வரன்தான் தன் ஆபீஸுக்கு லீவு போட்டுட்டு டி.கே.பிக்குத் துணையாகப் போவார். ஒரு கட்டத்துல அவர், ‘நான் இந்த வேலையை லீவு போடாம கரெக்ட்டா செஞ்சா நிச்சயம் ஓர் உயர் பதவிக்கு வருவேன். அதே மாதிரி நீயும் தொடர்ந்து கச்சேரி பண்ணிட்டிருந்தா உலக அளவுல புகழ் பெறுவே. என் திறமைக்கு, நான் ஆயிரத்துல ஒருத்தன்தான். ஆனா, நீ கோடியில ஒருத்தி. அதனால, உன்னோட வளர்ச்சிதான் முக்கியம்’னு சொல்லி தன் வேலையை விட்டுட்டு, மனைவிக்காக சென்னைக்கு வந்து செட்டிலாகிட்டார்.

• 90 வயசு வரைக்கும் சங்கீத கலாநிதி, பத்மபூஷண், பத்மவிபூஷண் மாதிரி எத்தனையோ விருதுகள் அவங்ககிட்டே வந்து சேர்ந்தது. எதையுமே தன் தலைக்கு ஏத்திக்காம கடைசி வரைக்கும் குழந்தையாவே வாழ்ந்துட்டுப் போயிருக்காங்க!’’

- சொல்லும்போது சாந்தாவின் கரங்கள் அவரை யறியாமல் குவிகின்றன! 

-ஆ.சாந்தி கணேஷ்,  படம்: ப.பிரியங்கா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism