Published:Updated:

வானம் வசப்படும்! - திருலோகச்சந்திரன் - சாருமதி

வானம் வசப்படும்! - திருலோகச்சந்திரன் - சாருமதி
பிரீமியம் ஸ்டோரி
வானம் வசப்படும்! - திருலோகச்சந்திரன் - சாருமதி

அசத்தல் அப்பா-மகள்

வானம் வசப்படும்! - திருலோகச்சந்திரன் - சாருமதி

அசத்தல் அப்பா-மகள்

Published:Updated:
வானம் வசப்படும்! - திருலோகச்சந்திரன் - சாருமதி
பிரீமியம் ஸ்டோரி
வானம் வசப்படும்! - திருலோகச்சந்திரன் - சாருமதி

‘`மகள்கள் ஏதாவது சாதிக்கணும்னு ஆசைப் பட்டா, ‘இன்னொரு வீட்டுக்குப் போகப் போறவதானே... எதுக்கு செலவு பண்ணிக்கிட்டு’ன்னு கேட்கிற பெற்றோர், மகன்கள் கேட்கும்போது யோசிக்கிறதில்லை. மகன்கள்தான் சாதனையாளர்களாகணுமா என்ன... அப்பாக்கள் நினைச்சா ஒவ்வொரு மகளையும் சாதனையாளராக்கலாம். நான் நினைச்ச மாதிரி...’’ என்கிறார் திருலோகச்சந்திரன்!

அம்மாவும் மகளும் சேர்ந்து செய்கிற சாதனைகள் பல பார்த்திருக்கிறோம். அப்பா மகள் ஜோடி உயரம் தொட்ட இந்தக் கதை, இன்னோர் ‘உயரே’!

மணிமங்கலத்தைச் சேர்ந்த திருலோகச் சந்திரனும் ஒன்பதாவது படிக்கிற அவரின் மகள் சாருமதியும் மலையேற்றப் பிரியர்கள். கிளிமஞ்சாரோவில் கால் பதித்துத் திரும்பியிருக்கும் இந்த ஜோடியின் அடுத்த இலக்கு எவரெஸ்ட்!

‘`காலேஜ் படிக்கும்போது நான் என்சிசியில இருந்தேன். அப்போ இருந்தே மலையேற்றப் பயிற்சிகள் எடுத்திருக்கேன். நிறைய போட்டி களில் கலந்துக்கிட்டு ஜெயிச்சிருக்கேன்’’ என்கிற திருலோகச்சந்திரன், ப்ளூ டார்ட் ஏவியேஷனில் வேலை பார்க்கிறார்.

வானம் வசப்படும்! - திருலோகச்சந்திரன் - சாருமதி

‘`2004-ம் ஆண்டில் எவரெஸ்ட் போகணும்னு விண்ணப்பிச்சேன். ஆனா, தமிழ்நாடு அரசில் அதுக்கான நிதி உதவிகள் கொடுக்க மறுத்துட்டாங்க. ஆனாலும், அந்த முயற்சியைக் கைவிட மனசு வரலை. எவரெஸ்ட் மாரத்தானில் கலந்துக்கிட்டேன். எங்கம்மாவின் நகைகளையெல்லாம் அடகு வெச்சு அதுக்காக செலவு பண்ணினேன். இந்த மாரத்தானில் கலந்துக்கிட்ட முதல் இந்தியர் நான்தான். ‘வெல்விஷர்ஸ் அட்வென்ச்சர் கிளப்’ என்ற பெயரில் மவுன்ட்டனீயரிங் அகாடமி ஆரம்பிச்சு நிறைய இளைஞர்களுக்குப் பயிற்சிகள் கொடுக்க ஆரம்பிச்சேன். என் மகள் சாருமதிக்கு அப்போ மூணு வயசிருக்கும். ‘அப்பா நானும் உங்ககூட மவுன்ட்டனீயரிங் பண்ணட்டுமா’னு கேட்ட நாள் முதல் நாங்க ரெண்டு பேரும் நிறைய டிராவல் பண்ண ஆரம்பிச்சோம். அப்படி நாங்க டிராவல் பண்ற இடங்கள், ஊட்டி, கொடைக்கானல், ஏலகிரி, முதுமலை, ஏற்காடு மாதிரி மலைகள் நிறைந்தவையாதான் இருக்கும். அவளுக்கு ஒன்பது வயசானபோது உத்தர்காண்ட் கூட்டிட்டுப் போய் 10 நாள்கள் பனிமலையில் பயிற்சி கொடுத்தேன். அங்கே உள்ள ருத்ரகரியா என்ற சிகரத்தில் ஏறினோம். 18,500 அடிகள் உயரம்கொண்டது அது. அந்த வெற்றி என் மகளுக்குள்ளே மலையேற்ற ஆர்வத்தை இன்னும் அதிகமாக்குச்சு. அடுத்த முயற்சியா நாங்க ரெண்டு பேரும் 2017-ம் ஆண்டு, கிளிமஞ்சாரோ ஏறினோம். அதுக்காக ஒரு வருஷம் அவளுக்குக் கடுமையான பயிற்சிகள் கொடுத்தேன். கிளிமஞ்சாரோ போனவர்களிலேயே இளவயது நபர் என் மகள்தான் என்கிற பெருமையும் கிடைச்சது. உலக அளவில் மூன்றாவது நபர் என்கிற பெருமையும்கூட. ரஷ்யாவில் மவுன்ட் எல்பிரஸ் ஏறுவதுதான் எங்க அடுத்த இலக்கு. ஸ்பான்சருக்காகக் காத்திட்டிருக்கோம்.  என் மகளின் சாதனைகள் கேள்விப்பட்டு நிறைய பெற்றோர், அவங்க குழந்தைகளுக்குப் பயிற்சிகள் கொடுக்கச் சொல்லி அணுகறாங்க.

கிளிமஞ்சாரோ போனபோது சாருமதி உடல்ரீதியா ரொம்பவே கஷ்டப்பட்டிருக்கா. சரியான உடைகள் கிடைக்கலை. அதிக உயரத்துக்குப் போகும்போது ஏற்படும் ஹை ஆல்டிட்யூட் பிரச்னை, சுவாசப் பிரச்னைகள், குளிர்னு எல்லாம் வந்தது. முதலுதவிகள் செய்துதான் தொடர்ந்து கூட்டிட்டுப் போனேன். ஆனாலும், அவ பயப்படவோ, பின்வாங்கவோ இல்லை. நாங்க ஏறினது எரிமலையில் வெடிச்சு சிதறிக்கிடக்கும் கற்கள் நிறைஞ்ச பாதை... பகல் நேரத்தில் வெப்பம் உச்சத்தில் இருக்கும் என்பதால் இரவில்தான் மேலே ஏற அனுமதிச்சாங்க. விளையாட்டா ஒருமுறை என்கூட மலையேற்றத்துக்குக் கூட்டிட்டுப் போனது, இன்னிக்கு மகளுக்கு வாழ்க்கையின் லட்சியமா மாறியிருக்கு. எவரெஸ்ட் மட்டுமல்ல, உலகின் மிக உயரமான ஏழு சிகரங்களை எட்டணும்கிற லட்சியத்தோடு ஹார்டு வொர்க் பண்ணிட்டிருக்கா’’ - பெருமை பொங்கப் பேசும் அப்பா தன் மகளோடு இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் மவுன்ட் எல்பிரஸ் ஏறுவதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்.

‘`இதுவரை இந்தியாவில் எவரெஸ்ட் ஏறினவங்களில் ட்வின் சகோதரிகள் இருக்காங்க. அப்பா மகள் ஜோடியா அந்தப் பெயரை நாங்க வாங்கணும். எவரெஸ்ட்டை எட்டறது அத்தனை சாமானிய காரியமில்லை. நிறைய நிறைய பயிற்சிகள் தேவை. கடுமையா உழைக்கணும். அதுக்கு முன்னாடி மவுன்ட் எல்பிரஸ், ஆஸ்திரேலியாவில் உள்ள மவுன்ட் கொசியுஸ்கோ இப்படி பல இலக்குகள் இருக்கு’’ - நம்பிக்கையோடு காத்திருக்கிற அப்பாவுக்கும் மகளுக்கும் அத்தனை உயரங்களும் வசப்பட அட்வான்ஸ் வாழ்த்துகள் சொல்வோம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

-சாஹா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism