Published:Updated:

ஏழுக்கு ஏழு: அப்பா ரொம்ப ஸ்பெஷல்!

ஏழுக்கு ஏழு: அப்பா ரொம்ப ஸ்பெஷல்!
பிரீமியம் ஸ்டோரி
ஏழுக்கு ஏழு: அப்பா ரொம்ப ஸ்பெஷல்!

ஏழுக்கு ஏழு: அப்பா ரொம்ப ஸ்பெஷல்!

ஏழுக்கு ஏழு: அப்பா ரொம்ப ஸ்பெஷல்!

ஏழுக்கு ஏழு: அப்பா ரொம்ப ஸ்பெஷல்!

Published:Updated:
ஏழுக்கு ஏழு: அப்பா ரொம்ப ஸ்பெஷல்!
பிரீமியம் ஸ்டோரி
ஏழுக்கு ஏழு: அப்பா ரொம்ப ஸ்பெஷல்!

அப்பாவுடனான மறக்க முடியாத சம்பவம்?

ஆதிரா பாண்டிலட்சுமி, நடிகை


ள்ளியில் படிக்கும்போது, மதிய உணவுக்கு தினமும் இட்லி கட்டித் தருவாங்க. ஒருநாள் வெறுப்பாகி, `இட்லி வேணாம்’னு சொல்லிட்டுப் போயிட்டேன். இதைக் கேள்விப்பட்ட அப்பா, தூக்குவாளி எடுத்துக்கிட்டு நேரா பழநியிலேருந்து திண்டுக்கல் போய், எனக்குப் பிடிச்ச தலப்பாக்கட்டியில பிரியாணியும் கோலா உருண்டையும் வாங்கிட்டு ஸ்கூலுக்கு வந்துட்டாரு. 

ஏழுக்கு ஏழு: அப்பா ரொம்ப ஸ்பெஷல்!

நான் விஷயம் தெரியாம, `அதே இட்லிதானே, ஒண்ணும் வேணாம்’னு சொல்ல, `போய் சாப்பிடு, போ’ன்னு தூக்குவாளியை என் கையில் திணிச்சிட்டு கிளம்பிட்டாரு.

தூக்குவாளியைத் திறந்ததும் அடிச்சதுபாருங்க வாசம்... எல்லா பிள்ளைங்களும், `ஹே... பிரியாணி’ன்னு கத்த, ஆளுக்கு கொஞ்சம் கொடுத்துட்டு சாப்பிட்டேன். இந்த உலகத்துல யாருங்க இப்படியெல்லாம் செய்வாங்க? அப்பாவுக்கு, என்மேல அவ்ளோ பாசம். இந்த விஷயத்தை எப்போ நினைச்சாலும் என் கண்ல தண்ணி வந்துடும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அப்பா தந்த மிகச் சிறந்த அறிவுரை!

அபிநயா செல்வக்குமார், நிகழ்ச்சித் தொகுப்பாளர்.

ப்பா என்கிட்ட நேரடியா எதுவும் சொல்ல மாட்டாரு. எப்பவுமே அம்மா மூலமாத்தான் சொல்வாரு.

ஏழுக்கு ஏழு: அப்பா ரொம்ப ஸ்பெஷல்!

2014-ம் ஆண்டில் சொந்த ஊரைவிட்டு முதன்முறையா சென்னைக்கு வரும்போது, `நம்ம கிராமத்துல இருக்கிற மாதிரியான சூழல் அங்கே இருக்காது. வெவ்வேறு விதமான மனிதர்கள் உன்கிட்ட வந்து பழகுவாங்க. இங்க இருக்கிற மாதிரி எல்லோரும் நல்லவங்கன்னு இருந்திடக் கூடாது. ரெண்டு விதமான மனநிலையில இருக்கணும். அவங்க நல்லவங்களாகவும் இருக்க வாய்ப்பிருக்கு. அதேநேரத்தில், சந்தேகத்தின் அடிப்படையிலும் ஒரு பார்வை இருக்கணும். கூடவே, அவங்க பேசுற விதத்துலேயே அவங்க எப்படின்னு சரியா கணிச்சுடக் கத்துக்கம்மா’ன்னு சொன்னாரு. அதுதான் அப்பா நேரடியா சொன்ன முதல் அறிவுரை!

அப்பாவுடன் நிகழ்ந்த மறக்க முடியாத சண்டை?

தமிழ்நதி, கவிஞர்

ஏழுக்கு ஏழு: அப்பா ரொம்ப ஸ்பெஷல்!

ப்பாவுக்கும் எனக்கும் சண்டைகள் வருவது குறைவு. நினைவில் வைத்திருக்கும் படியாக சண்டைகள் எதையும் நாங்கள் போட்டதில்லை. அவர் என்னுடைய விஷயங்களில் ஒருபோதும் தலையிடமாட்டார்.  எப்போதாவது சிறிய சர்ச்சைகள் எழும். அடுத்த 10 நிமிடங்களுக்குள் நான் போய்க் கதைத்துவிடுவேன். அல்லது அவருக்குப் பிடித்த கருவாட்டுக்குழம்பு செய்துகொடுத்துச் சமாளிப்பேன். தந்தை - மகளுக்கிடையில் என்ன `ஈகோ’ வேண்டியிருக்கிறது!

எதனால் உங்களுக்கு அப்பா மிகவு‌ம் ஸ்பெஷல்?

பிரியா, இயக்குநர்

ம்மாவிடம்கூட சில விஷ யங்கள் பேசப் பயப்படுவோம். அப்பாவிடம் என்ன வேண்டு மானாலும் பேசலாம். 

ஏழுக்கு ஏழு: அப்பா ரொம்ப ஸ்பெஷல்!

ஒரு நண்பர் மாதிரிதான் இருப்பாரு அப்பா. ஆனாலும், அவர்கிட்ட ஒருவித பயமும் மரியாதையும் எப்பவுமே இருக்கும். ஒருதடவை, ஒரு பரீட்சையில நான் ஃபெயிலாகிற மாதிரி இருந்துச்சு. இது மட்டும் வீட்டுல தெரிஞ்சா அடிக்கப்போறாங்க, திட்டப்போறாங்கன்னு நானே கற்பனை பண்ணிக்கிட்டு, பயந்துக்கிட்டே அப்பா முன்னாடி போய் நின்னேன். அப்பா, `ஓகே. பரவாயில்லமா. அடுத்த வாட்டி பாஸ் பண்ணிடு’ன்னு சொன்னாரு. அப்பா இப்படித்தான்... தப்பா எதுவுமே சொல்ல மாட்டாரு. அவருடைய இந்தக் குணம்தான் எனக்கு எப்பவுமே ஸ்பெஷல்!

அப்பா யாருக்கு தீவிர ரசிகர்?

ரேகா சுரேஷ்சந்திரா, மக்கள் தொடர்புப் பணி (திரைத்துறை)

ஏழுக்கு ஏழு: அப்பா ரொம்ப ஸ்பெஷல்!

ம்.ஜி.ஆர்... எம்.ஜி.ஆர்... எம்.ஜி.ஆர் சோகமா இருந்தாலும் சரி, சந்தோஷமா இருந்தாலும் சரி, அப்பா எப்போதுமே அவருடைய பாடல்களைத் தான் கேட்டுக்கிட்டே இருப்பாரு. முன்னெல்லாம் என்னையும் கேட்கச் சொல்லி ரொம்ப வற்புறுத்துவாரு. இப்போ, என் பையனையும் கேட்கச் சொல்லிட்டிருக்காரு. `அந்தப் பாடல்களும், அதிலுள்ள கருத்துகளும் நம்ம வாழ்க்கையோடு நல்லாவே பொருந்திப்போகும். அந்தக் கருத்துகளை மனசுல ஏத்திக்கிட்டு அதன்படி நடந்தா, உன் வாழ்க்கையே  மகிழ்ச்சியா மாறும்’னு ஒரு விளக்கமும் சொல்வாரு அப்பா!

அப்பா செல்லப் பெயர் வைத்து உங்களை அழைத்ததுண்டா?

தேனம்மை லட்சுமணன், எழுத்தாளர்.

ஏழுக்கு ஏழு: அப்பா ரொம்ப ஸ்பெஷல்!

ப்பா என்னை `ஆத்தா பொண்ணு’ என்றுதான் வாஞ்சையோடு கூப்பிடுவார். உதாரணமாக, நான் கல்லூரிக்காக மதுரைக்குச் செல்லும் போது பேருந்தில் ஏற்றிவிட்டு, `ஆத்தா பொண்ணு, பத்திரமா இறங்கிக்கம்மா’ என்றுதான் அப்பா சொல்வார். ஒருவிதமான கூச்சமாக இருக்கும். என்னுடைய உறவினர்கள், தம்பிகள் எல்லோருமே என்னை `தேனு’ என்றுதான் கூப்பிடுவார்கள். ஆனால், அப்பாவுக்கு நான் என்றுமே `ஆத்தா பொண்ணு’தான்!

அப்பாவிடம் மிகவும் பிடித்த விஷயம்?

சாரு, பண்பலை நிகழ்ச்சித் தொகுப்பாளினி.

ஏழுக்கு ஏழு: அப்பா ரொம்ப ஸ்பெஷல்!

நீங்க அவர் மேல நம்பிக்கை வெச்சி, `இந்த விஷயம் நீங்கதான் செய்துகொடுக்கணும்’னு சொல்லிட்டீங்கன்னா போதும்... தன் வேலையை விட்டுட்டு, சாப்பிடுறதை விட்டுட்டு, தூங்குறதை விட்டுட்டு, ஓய்வு எடுக்கிறதை மறந்துட்டு, உதவி செஞ்சிட்டுப் போவாரு. சில நேரங்கள்ல, உதவி கேட்டவங்களே, `ஏன் நமக்கு இப்படி உதவி பண்றாரு?'ன்னு நினைக்கிற அளவுக்கு உதவி பண்ணுவாரு. அப்படி ஒரு நல்ல கேரக்டர் அப்பா!

-ப.தினேஷ்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism