தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...
பிரீமியம் ஸ்டோரி
News
பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

காவலர் பணியேற்கும் மதுவின் தங்கை!

டந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உலகை உலுக்கிய காணொலி ஒன்று கேரள மாநிலம் பாலக்காட்டை அடுத்த அட்டப்பாடியில் இருந்து வெளியானது. மது என்ற பழங்குடி இளைஞரைச் சூழ்ந்துகொண்ட 20 பேர் கொண்ட கும்பல் ஒன்று அவர் கைகளைக் கட்டி அடித்துத் துன்புறுத்திய வீடியோ அது.

பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

`திருடினாயா, இனி அப்படிச் செய்வாயா' என்று கேட்டுக் கேட்டு அவரை அடித்தது அந்தக் கும்பல். நடந்தவற்றை செல்போனில் வீடியோவும் எடுத்துக்கொண்டது. முகத்தில் ரத்தம் சொட்ட நின்ற மதுவுடன் சேர்ந்து புன்னகையுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டது. அட்டப்பாடி ஊருக்குள் உள்ள கடைகளில் உணவுப் பொருள்கள் அடிக்கடி திருடு போனதாகவும், கையில் உள்ள பையில் கொஞ்சம் அரிசியை மது வைத்திருந்ததாகவும் சொல்லப்பட்டது. அதுபற்றிய கேள்விக்கு, மனநலம் பாதிக்கப்பட்ட மது சரியான பதில் தராமல் போகவே, அவரை அடித்து உதைத்தது பொதுமக்கள்கொண்ட அந்தக் கும்பல்.

சிலர் தலையிட்டு மதுவை மீட்டு மருத்துவமனை அனுப்ப, செல்லும் வழியிலேயே பரிதாபமாக மரணமடைந்தார் மது. வீட்டைவிட்டு வெளியேறிய மது, குகைகளில் சில காலம் தனியே வசித்ததாக சொல்லப்பட்டது.

மது இறந்த சில நாள்களிலேயே காவலர் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த அவர் தங்கை சந்திரிகாவுக்கு நேர்முகத் தேர்வு அழைப்பு வர, கண்ணீருடன் அதில் கலந்துகொண்டார் சந்திரிகா. அவரது தன்னம்பிக்கை வென்றது. நேர்முகத் தேர்வில் வெற்றிபெற்றவர், ஓராண்டுப் பயிற்சிக்குப் பின் சமீபத்தில் காவலராகப் பணியேற்றுக்கொண்டார். தன் உந்துசக்தி என மதுவைக் குறிப்பிட்ட சந்திரிகா, அனைவருக்கும் சமநீதி கிடைக்கச் செய்வது என்ற குறிக்கோளுடன் பணியாற்றப் போவதாகத் தெரிவித்திருக்கிறார். பழங்குடியின மக்கள் 74 பேரைக்கொண்ட இந்த சிறப்புக் காவல்படையில் 24 பெண்கள் உள்ளனர். இவர்கள் காடுகளின் எல்லையைப் பாதுகாக்கும் சிறப்புப் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்று கேரள அரசு அறிவித்துள்ளது.

மதுவின் ஆத்மா நிம்மதியாக உறங்கும், சந்திரிகா… வாழ்த்துகள்!

அரபுப் பெண் எழுத்தாளருக்கு சர்வதேச `மேன் புக்கர்' பரிசு!

மன் நாட்டைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் ஜோகா அல் ஹர்தி. இவர் எழுதிய `செலெஸ்டியல் பாடீஸ்' என்ற புத்தகத்துக்காக 2019-ம் ஆண்டுக்கான `மேன் புக்கர்' பரிசு வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பரிசை வெல்லும் முதல் அரபு மொழிப் புத்தகம் இது என்பது குறிப்பிடத்தக்கது. சில தலைமுறை அடிமை வாழ்க்கை வரலாற்றையும், இப்போதைய நுகர்வுக் கலாசாரத்தையும் எதிர்கொண்டு பாலைவனத்து நகரம் ஒன்றில் வாழும் மூன்று சகோதரிகளின் கதைதான் `செலெஸ்டியல் பாடீஸ்'.

பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

பரிசுப் பணமான 50,000 பவுண்டுகளைத் தானும் தன் மொழிபெயர்ப்பாளரான அமெரிக்க எழுத்தாளர் மார்லின் பூத்தும் சமமாகப் பங்கிட்டுக்கொள்ளப்போவதாகத் தெரிவித்துள்ளார் ஜோகா. ``நம்மைக் கட்டுப்படுத்தும் மற்றும் நமக்கு விடுதலை தரும் சக்திகள் பற்றிய அற்புதப் புனைவு இது'' என்று நாவல் குறித்துக் கூறியுள்ளார் பரிசை வழங்கிய வரலாற்று ஆய்வாளர் பத்தானி ஹியூ. ஆங்கிலப் புனைவுக்கு வழங்கப்படும் ஆங்கில மேன் புக்கருக்கு இணையான இந்த சர்வதேச மேன் புக்கர் பரிசு, பிற மொழிப் புத்தகங்களுக்கு வழங்கப்படுகிறது.

பாலைவன சகோதரிக்கு வாழ்த்துகள்!

கால்களால் விமானம் செலுத்தும் தன்னம்பிக்கைப் பெண்!

மெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள பீனிக்ஸ் நகரைச் சேர்ந்தவர் 36 வயதான ஜெசிக்கா காக்ஸ். கால்களால் விமானம் இயக்கும் திறன் பெற்ற முதல் பெண் விமானியான ஜெசிக்காவுக்கு விமானம் ஓட்டும் உரிமம் வழங்கியிருக்கிறது அரசு. கருவிலேயே கைகள் வளர்ச்சியில்லாமல் போகும் அரிய நோய் தாக்கிய நிலையில், பிறந்தபின் கொஞ்சம் கொஞ்சமாக தன் வேலைகளைக் கால்கள்கொண்டு செய்யக் கற்றுக்கொண்டார் ஜெசிக்கா. பியானோ வாசிப்பது, கார் ஓட்டுவது, கராத்தேயில் மூன்றாவது டிகிரி கறுப்பு பெல்ட் வாங்கியது, ஸ்கூபா டைவிங் கற்றுத் தரும் உரிமம் பெற்றது என்று தன்னம்பிக்கையுடன் செயல்பட்டார்.

பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

இவற்றை எல்லாம் மிஞ்சும் அளவுக்கு, ஒற்றை இன்ஜின் கொண்ட விமானம் ஒன்றைத் தன் கால்களால் ஓட்டக் கற்றுக்கொண்டார். தன்னைப் போன்ற மாற்றுத்திறனாளிகளை எதையும் செய்யலாம் என ஊக்கப்படுத்துவதே தன் நோக்கம் என்று கூறியுள்ளார். தான் நார்மலாகவே வாழ விரும்பியதாகக் கூறும் ஜெசிக்காவுக்கு விமானங்களைக் கண்டாலே பயம்! சிறிய விமானம் ஒன்றின் விமானி இவரை காக்பிட்டுக்குள் அழைத்து ஓட்டுமாறு உற்சாகப்படுத்த, பறப்பதில் ஆர்வம்கொண்டார்.

2005-ம் ஆண்டு கல்லூரிப்படிப்பை முடித்ததும் மூன்று ஆண்டுகள் பலவிதமான விமானங்கள், கற்றுத் தர தேர்ந்த விமானிகள் என்று முயற்சி செய்து ஒருவழியாக அவருக்கு ஓட்ட வசதியான 'எர்கூப்' ரக ஒற்றை இன்ஜின் விமானத்தைத் தேர்ந்தெடுத்தார். 2008-ம் ஆண்டு விமானி லைசென்ஸும் பெற்றார். அன்று முதல் விமானங்கள் இயக்கிவருபவர், ``எனக்குப் பல ரோல்மாடல்கள் உள்ளனர். இனி வரும் அடுத்த தலைமுறையினருக்கு ரோல்மாடலாக வாழவே நான் ஆசைப்படுகிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

பீனிக்ஸின் பீனிக்ஸ் ஜெசிக்கா!

அன்னையர் தினத்தன்று அம்மாவான இரோம் ஷர்மிளா!

டகிழக்கு இந்தியாவை அறிந்தவர்களில் இரோமைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. மணிப்பூரின் இரும்பு மங்கை என்று அறியப்பட்ட இரோம், கொடூரமான ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை எதிர்த்துக் கடந்த 2000-ம் ஆண்டு முதல் 16 ஆண்டுகள் அகிம்சையைப் பின்பற்றி உண்ணாவிரதம் இருந்தது நாம் அனைவரும் அறிந்ததே. 2016-ம் ஆண்டு உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டவர், கட்சி ஒன்றைத் தொடங்கி 2017-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டார். மொத்தமே 90 ஓட்டுகள் மட்டுமே கிடைக்க, மனம் சோர்வடைந்த இரோம் ஷர்மிளா, அதே ஆண்டு டெஸ்மண்ட் ஆன்டனி என்ற தன் நீண்ட நாள் காதலரைக் கொடைக்கானலில் கைப்பிடித்தார். அதன்பின் தென்னிந்தியாவிலேயே வசித்து வருகிறார்.

பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

47 வயதான இரோமுக்கு அன்னையர் தினமான மே 12 அன்று பெங்களூரு மருத்துவமனையில் இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தன. நிக்ஸ் சக்தி மற்றும் ஆட்டம் தாரா என்று தங்கள் குழந்தைகளுக்குப் பெயரிட்டுள்ளனர் தம்பதியர். கடினமான பிரசவம் என்பதால் சிசேரியன் முறைப்படி அறுவைசிகிச்சையில் குழந்தைகள் பிறந்துள்ளன. சில மாதங்களுக்கு முன், தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு, `அரசியல் எனக்கானதல்ல' என்று கூறிவிட்டார் இரோம்.

தொலைத்த வாழ்க்கையை இனியேனும் வாழ, வாழ்த்துகிறோம் இரோம்!

ஐ.சி.சி-யின் முதல் பெண் நடுவர் சுவர்ணலட்சுமி!

முன்னாள் மத்திய கிழக்கு ரயில்வேயின் கிரிக்கெட் வீராங்கனையான 50 வயதுப் பெண் சுவர்ணலட்சுமியை முதல் பெண் ஆட்ட நடுவராக (மேட்ச் ரெஃபரீ) நியமித்துள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில். ஐ.சி.சி-யின் மூத்த மேலாளரான ஏட்ரியன் கிரிஃபித், ``பெண் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்ற ஐ.சி.சி-யின் கொள்கைக்கேற்ப இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது. கிரிக்கெட்டில் ஈடுபடும் பெண்களின் வளர்ச்சியை நாங்கள் கண்கூடாகக் கண்டிருக்கிறோம். சுவர்ணலட்சுமியைப் போல இன்னும் பல பெண்கள் இந்தத் துறைக்கு வருவார்கள் என நம்புகிறோம்'' என்று கூறியுள்ளார்.

பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

``இதை நான் எதிர்பார்க்கவில்லை. கடந்த ஆண்டும் என் பெயரை பி.சி.சி.ஐ தேர்வுக்குழுவுக்கு அனுப்பியிருந்தது. இந்த ஆண்டு மீண்டும் அனுப்பியிருக்கிறது. அவர்களுக்கு என் நன்றி. எந்தத் துறையிலும் `முதல் பெண்' என்ற இடத்தைப் பிடிப்பதில் பெருமகிழ்ச்சி உண்டு. அதை நான் இப்போது உணர்கிறேன்'' என்று கூறியிருக்கிறார் சுவர்ணலட்சுமி. கிரிக்கெட் வீராங்கனையாக அதிகம் பிரபலம் அடையாதபோதும், ஆட்ட நடுவராக நாட்டுக்குப் புகழ் சேர்க்க வேண்டும் என்பது தன் ஆசை என்றும் கூறியிருக்கிறார். உலகக்கோப்பை போட்டிகளில் நடுவராகப் பணியாற்ற வேண்டும் என்பதே தன் கனவு என்றும் கூறியிருக்கிறார் இவர்.

கனவு மெய்ப்படட்டும், சுவர்ணலட்சுமி!

-நிவேதிதா லூயிஸ்

அவள் செய்திகள்

பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

ந்திய விமானப் படையின் போர் விமானங்களில் பகலில் பறக்கும் `காம்பாட் மிஷன்கள்' எனப்படும் போர் நடைமுறையில் பங்கேற்கும் முதல் பெண் என்ற பெருமையைப் பெறுகிறார் ஃப்ளைட் லெஃப்டினன்ட் பாவனா காந்த். பிக்கானேர் படைத்தளத்தில் பணியாற்றும் பாவனா, இரவு மிஷன்களில் பறக்கும் பயிற்சியை முடித்ததும், அதிலும் ஈடுபடுத்தப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

மேற்கு வங்கத்தின் சொனார்பூர் பகுதியைச் சேர்ந்த ஆசிரியரான சூரியகாந்த பாரிக், தன் திருமணத்துக்கு வரதட்சணை வேண்டாம் என்று தெரிவித்திருக்கிறார். மணமகனது புத்தகங்கள் மீதான ஆர்வம் குறித்துத் தெரிந்துகொண்ட மணப்பெண்ணின் குடும்பம், ஒரு லட்ச ரூபாய்க்குப் புத்தகங்கள் வாங்கி, மணமகனுக்குத் திருமணப் பரிசாக வழங்கி அசத்திவிட்டனர்.

பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

ங்கள் கோரிக்கைகளை அங்கீகரிக்கும் வேட்பாளர்கள் மற்றும் கட்சிகளுக்கே வாக்களிப்பது என்று இந்தியாவின் ஐம்பது லட்சம் பாலியல் தொழிலாளிகளும் முடிவெடுத்து இயங்கியுள்ளனர். சட்டபூர்வப் பாதுகாப்பு, சம ஊதியம் போன்ற தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து அமைப்பு ரீதியாகவே இவர்கள் போராடிவருகிறார்கள்.

பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

புனே நகரைச் சேர்ந்த 79 வயதான ஓய்வுபெற்ற தாவரவியல் விரிவுரையாளரான ஹேமா சனே, தன் வாழ்நாள் முழுக்க மின்சாரத்தைப் பயன்படுத்தாமலே வாழ்ந்து வருகிறார். இயற்கையுடன் இயைந்து வாழும் ஹேமா, ``உணவு, உடை மற்றும் இருப்பிடம் மூன்றும்தான் நம் முக்கியத் தேவைகள். மின்சாரம் வரும் முன்னும் நாம் வாழ்ந்துகொண்டுதான் இருந்தோம். என்னால் மின்சாரம் இன்றி வாழ முடியும்'' என்று கூறுகிறார்.

பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

டந்த ஆண்டு அக்டோபர் மாதம் தூத்துக்குடி கோயில் ஒன்றில் திருமணம் செய்துகொண்ட திருநங்கை பி.ஸ்ரீஜா - எஸ்.அருணின் திருமணம் கடந்த மே 20 அன்று திருநெல்வேலி துணை சார்பதிவாளர் அலுவலகத்தில் சட்டப்படிப் பதிவுசெய்யப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக்கிளையை நாடி, அதன் உத்தரவின் பேரில்தான் திருமணம் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

தான் ஒரு தற்பாலின ஈர்ப்பாளர் என்றும், சிறு வயது முதல் தன் தோழிமீது காதல்கொண்டுள்ளதாகவும் துணிவுடன் அறிவித்திருக்கிறார் இந்தியாவின் அதிவேக மங்கை என்று அழைக்கப்படும் தத்தீ சந்த்! அந்தப் பெண் யார் என்பதைக் கூற மறுத்துவிட்ட தத்தீ, அடுத்த ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்ஸ் முடிவடைந்ததும் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடப் போவதாகத் தெரிவித்துள்ளார்.