Published:Updated:

அவள் கிளாஸிக்ஸ்: அப்பா என்னும் அறியாக் குழந்தை! - சுபஸ்ரீ மோகன்

அவள் கிளாஸிக்ஸ்: அப்பா என்னும் அறியாக் குழந்தை! - சுபஸ்ரீ மோகன்
பிரீமியம் ஸ்டோரி

``தாத்தா, சுதந்திரப் போராட்டத் தியாகி. அதனால், அப்பா சுப்பிரமணியத்தின் ரத்தத்திலேயே நேர்மை ஊறிவிட்டது. வட்ட வளர்ச்சி அதிகாரியாக இருந்த அவர், வேலை சம்பந்தமான எதுவாக இருந்தாலும், நேரில் சென்று பார்த்து, அது முறையாக இருந்தால்தான் கையெழுத்திடுவார். யாருடைய சிபாரிசுக்கும் கையெழுத்திட்டதில்லை. அதனாலேயே அவர் நிறைய பிரச்னைகளைச் சந்தித்தார். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஊர்மாற்றம். கூடவே, நாங்களும் கஷ்டப்பட்டோம். எந்தச் சூழ்நிலையிலும் அவர் தன்னை மாற்றிக்கொண்டதே இல்லை. அம்மா இறந்தபின் என்னை வளர்க்கவோ, என் ஆசைகளை நிறைவேற்றவோ நினைத்ததைவிட, நேர்மைக்குத்தான் அவர் வாழ்வில் முதலிடம் கொடுத்தார்.     

அவர் எங்களோடுதான் இருக்கிறார். கடந்த ஏழு வருஷங்களாக, `அல்சைமர்’ என்ற மறதி நோய் கொஞ்சம் கொஞ்சமாக அவரை ஆட்கொள்ளத் தொடங்கியது. நாங்கள் சீனாவில் இருந்தபோது, ஆறு மாதங்கள் எங்களோடு இருப்பார். மற்ற நாள்களில் பெங்களூரிலுள்ள எங்கள் வீட்டில் இருப்பார்.

பேச்சுத் துணைக்கு யாருமில்லாமல் தனித்து இருந்ததாலோ என்னவோ... அவருக்கு மறதி அதிகமாயிற்று. சாப்பிட்டது மறந்துவிடும். `எனக்குச் சாதமே போடலைம்மா’ என்பார். `இப்போதானேப்பா சாப்பிட்டே...’ என்று சொல்லி, என்னென்ன சாப்பிட்டார் என்று சொன்னால்தான் ஞாபகம் வரும்.

அவள் கிளாஸிக்ஸ்: அப்பா என்னும் அறியாக் குழந்தை! - சுபஸ்ரீ மோகன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இரவு, பகலில் குழப்பம். இரவு 8 மணிக்கு `குளிக்கணும்’ என்பார். பகலில் எவ்வளவு நேரம்தான் அவரைத் தூங்கவிடாமல் கட்டிக்காக்க முடியும்? நாம் கண் அசந்தாலோ, இரவு 2 மணிக்குக் குளித்துவிட்டு வந்து நிற்பார்.

சில நேரங்களில் மட்டும் போன ஜென்மத்து ஞாபகம்கூட இருக்கிற மாதிரி பேசுவார். அதிகபட்சம் மூன்று மணி நேரம்தான் அவரைத் தனியாக விட முடியும். அதனால், எங்கு சென்றாலும் கூடவே அழைத்துப் போய்விடுவேன்.

அன்றொரு நாள் விடியற்காலை 5 மணி இருக்கும். டாய்லெட் போக எழுந்தபோது, டெலிபோன் மணி அடித்துக்கொண்டிருந்த சத்தம் லேசாகக் கேட்டது. போனை அட்டெண்ட் செய்தால், `ரொம்ப நேரமா போன் அடிக்கிறேன்மா. நீங்க எடுக்கவேயில்லை’ என்ற காவலர் தொடர்ந்து, `உங்கப்பா வெளில போகக் கிளம்பியிருக்காரு. நாங்க தடுத்து `லாபி’யில உட்கார வெச்சிருக்கோம். வந்து அழைச்சுட்டுப் போங்க’ என்றார். உடனே பதறியடித்துக்கொண்டு ஓடினால், அவர் லாபியில் இருக்கும் சோபாவில் படுத்திருந்தார்.

அவள் கிளாஸிக்ஸ்: அப்பா என்னும் அறியாக் குழந்தை! - சுபஸ்ரீ மோகன்

எங்கள் குடியிருப்பில் மூன்று நிலைகளில் காவலர்கள் இருப்பார்கள். அவர்கள் யாரும் கவனிக்காதபோது அவருக்கே தெரியாமல் தன்னை மறந்து கீழே இறங்கிப் போயிருக்கிறார். நினைத்தாலே பகீர் என்கிறது. லிஃப்ட்டில் ஏறி இறங்கத் தெரியாமல் ஆறு மாடிப் படிகளையும் கடந்து போயிருக்கிறார். கொஞ்ச நேரம் கழித்துக்கேட்டால் `அப்படியா பண்ணினேன்’ என்கிறார். 

முன்பு ஒரு தரம் நாமக்கல் சென்றிருந்த  போதும், ரூமைவிட்டு வெளியே வந்து வேறு மாடிக்குப் போய் உட்கார்ந்திருந்தார். அவரைக் கண்டுபிடிப்பதற்குள் எனக்கு அழுகையே வந்துவிட்டது. `எங்கே போனீங்கப்பா?’ என்று கேட்டால் `திருப்பதிக்குப் போனேன்’ என்று சொன்னார். இப்போது அந்தச் சம்பவத்தைப் பற்றி அவரிடம் கேட்டால், `நான் அப்படி எல்லாம் பண்ணுவேனாடீ?’ என்கிறார்.

இதற்கு மருந்து எதுவுமில்லை. அந்த நேரத்தில் அவருக்கு என்ன தோன்றுகிறதோ அதையேதான் செய்வார். அவர் காணாமல் போகும் ஒவ்வொரு முறையும் அவரைத் தேடிக் கண்டு் பிடிக்கும்வரை மூச்சே நின்றுவிடும்.

அவரைப் பார்த்துக்கொள்வதில் எவ்வளவு சிரமங்கள் இருந்தாலும், அவர் மீதான அன்பும் பாசமும் எப்போதும் குறையாது. அவர் அப்பா மட்டும் அல்ல... குழந்தையும்கூட!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism