Published:Updated:

வாழ்க்கை: குடும்பங்களைப் பார்க்கும்போது ஏக்கமா இருக்கும்! - ‘மிஸ் கூவாகம்’ நபிஷா

வாழ்க்கை: குடும்பங்களைப் பார்க்கும்போது ஏக்கமா இருக்கும்! - ‘மிஸ் கூவாகம்’ நபிஷா
பிரீமியம் ஸ்டோரி
வாழ்க்கை: குடும்பங்களைப் பார்க்கும்போது ஏக்கமா இருக்கும்! - ‘மிஸ் கூவாகம்’ நபிஷா

வாழ்க்கை: குடும்பங்களைப் பார்க்கும்போது ஏக்கமா இருக்கும்! - ‘மிஸ் கூவாகம்’ நபிஷா

வாழ்க்கை: குடும்பங்களைப் பார்க்கும்போது ஏக்கமா இருக்கும்! - ‘மிஸ் கூவாகம்’ நபிஷா

வாழ்க்கை: குடும்பங்களைப் பார்க்கும்போது ஏக்கமா இருக்கும்! - ‘மிஸ் கூவாகம்’ நபிஷா

Published:Updated:
வாழ்க்கை: குடும்பங்களைப் பார்க்கும்போது ஏக்கமா இருக்கும்! - ‘மிஸ் கூவாகம்’ நபிஷா
பிரீமியம் ஸ்டோரி
வாழ்க்கை: குடும்பங்களைப் பார்க்கும்போது ஏக்கமா இருக்கும்! - ‘மிஸ் கூவாகம்’ நபிஷா

“என்னைப் பெத்த அம்மாவாலேயே என் பெண்மையைப் புரிஞ்சுக்க முடியலைங்கறதுதான் மிகப்பெரிய வலி’’ - பேச ஆரம்பிக்கிறார் ‘மிஸ் கூவாகம் 2019’ பட்டம்பெற்ற திருநங்கை நபிஷா. முட்கள் நிறைந்த அவருடைய வாழ்க்கையில் இப்போதுதான் பூப்பூக்க ஆரம்பித்திருக்கிறது. அந்த மாற்றங்களைப் பற்றியும் நம்மோடு பகிர்கிறார்.

வாழ்க்கை: குடும்பங்களைப் பார்க்கும்போது ஏக்கமா இருக்கும்! - ‘மிஸ் கூவாகம்’ நபிஷா

‘`சொந்த ஊர் கிருஷ்ணகிரி. விவரம் தெரியாத வயசுல ஆண் பெண் பாகுபாடெல்லாம் இல்லாம நாம குழந்தைங்களா விளையாடிட்டிருப் போம். விவரம் தெரிய ஆரம்பிக்கிற வயசுல என் கூட விளையாடின பசங்க எல்லாம் நாம பொண்ணு, நாம பையன்னு புரிஞ்சுக்கிட்டப்போ... எனக்கு, `நாம பொண்ணும் இல்ல, பையனும் இல்லை'ன்னு குழப்பம் வந்தது. நான் யாருன்னு நான் புரிஞ்சுக்கவே எனக்குள்ள பல போராட்டங்கள். எட்டாவது படிக்கும்போது, ஸ்கூல்ல கிண்டல் ஆரம்பிச்சது. பாத்ரூம் போனா, நான் நின்னுட்டு போறேனா, உட்கார்ந்து போறேனான்னு பார்க்குறதுக்கு ஒரு கூட்டமே இருக்கும். பல அவமானங் களைச் சந்திச்சேன்.

16 வயசுல பரதநாட்டியம் க்ளாஸுக்குப் போக ஆரம்பிச்சேன். அந்த டிரஸ், மேக்கப் எல்லாம் போட்டுக்க எனக்கு ரொம்பப் பிடிக்கும். பரதம் மேல அளவில்லா காதல் வந்துச்சு. அப்பா பிசினஸ் பண்ணிட்டிருந்தாங்க. அம்மா, அப்பாவுக்கு உதவியாயிருந்தாங்க. அண்ணன் ஆர்மியில் இருந்தாங்க. அண்ணனுக்கு நான் இன்ஜினீயரிங் படிக்கணும்னு ஆசை. ஆனா, நான் சென்னை, தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் பரதம் படிக்கணும்னு சொன்னேன். ‘நீ ஏற்கெனவே பொண்ணு மாதிரி நடந்துக்குற. பரதம் படிச்சா அது இன்னும் உன்னை பாதிக்கும்’னு வீட்டுல மறுத்துட்டாங்க. அந்தத் தருணத்தில்தான், நான் திருநங்கைனு வீட்டில் சொன்னேன். ‘நீ இருக்கிறதைவிட செத்துரு’ன்னு சொல்ற அளவுக்கு வந்துட்டாங்க. இதுக்கும் மேல அவங்களைக் கஷ்டப்படுத்த வேண்டாம்னு வீட்டைவிட்டு வெளியேறிட்டேன்’’ என்கிறவர், தன் திருநங்கைப் பயணத்தைப் பற்றிக் கூறுகிறார்.

‘`திருநங்கைகளுக்கு முதல் ஆசையே சர்ஜரி பண்ணிக்கிறதாதான் இருக்கும். அதுக்காக, வேலை பார்த்து காசு சேர்க்க முடிவெடுத்தேன். வீட்டைவிட்டு வெளியே வந்ததும் மதுரைக்குப் போனேன். திருநங்கை பாரதி கண்ணம்மா, ஒரு டிரஸ்ட் வெச்சிருக்காங்கன்னு கேள்விப்பட்டு அங்கே போனேன். அவங்க மூலமா முதியோர் இல்லம், குழந்தைகள் காப்பகம்னு வேலை பார்த்துட்டிருந்தேன். அதில் சேர்க்கிற பணத்தை வெச்சு சர்ஜரி பண்ண வருஷங்கள் ஆகும்னு, அங்கிருந்து பெங்களூரு போனேன். அங்கே, திருமண வீடுகள், விழாக்கள்னு நடன நிகழ்ச்சிகள் பண்ண ஆரம்பிச்சேன். அந்தப் பணத்தை வெச்சு சர்ஜரி பண்ணிக்கிட்டேன்’’ என்கிறவரின் முகத்தில் அவ்வளவு மலர்ச்சி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வாழ்க்கை: குடும்பங்களைப் பார்க்கும்போது ஏக்கமா இருக்கும்! - ‘மிஸ் கூவாகம்’ நபிஷா

‘`சர்ஜரி முடிஞ்சதுக்கு அப்புறம் திருநங்கைன்னு சான்றிதழ் வாங்குறது, பெயர் மாத்துறதுன்னு ரெண்டு வருஷங்கள் ஓடிச்சு. எல்லா பிரச்னைகளும் தீர்ந்ததுக்குப் பிறகு, படிக்கலாம்னு முடிவெடுத்தேன். சென்னை இயல் இசை நாடகக் கல்லூரியில் விண்ணப்பம் வாங்கப் போனப்போ, வாட்ச்மேன் என்னை உள்ளே அனுமதிக்கலை. அவர்கிட்ட என் சான்றிதழ்களை எல்லாம் காட்டி, `எங்களை மாதிரி ஆட்களைக் கைதூக்கி விடலைன்னாலும் பரவாயில்லை... வாய்ப்புகளைக் கெடுத்துடாதீங்க’ன்னு கெஞ்சினேன். அவர் உள்ளே அனுமதிச்சார். பிரின்சிபாலை சந்திச்சேன். இப்போ, ‘ஆடல் கலைமணி’ இரண்டாமாண்டு முடிச்சிருக்கேன். இது டிப்ளோமா கோர்ஸ் மாதிரி. நிறைய பேர் இதை படிச்சிட்டே பி.ஏ படிப்பாங்க. எனக்கும் பி.ஏ படிக்க ஆசைதான். ஆனா, நிகழ்ச்சிகளில் டான்ஸ் ஆடி அதுல கிடைக்கிற பணத்துல காலேஜ் ஃபீஸும் வீட்டு வாடகையும் கொடுத்திட்டிருக்கிற என்னால, பி.ஏ படிக்க எப்படி ஃபீஸ் கட்ட முடியும்? இப்போ மூன்றாம் ஆண்டு போகப்போறேன். எப்படியாச்சும் பணம் சேர்த்து தொலைநிலைக்கல்வியில் பி.ஏ படிக்கணும்’’ என்கிறவரிடம் ‘மிஸ் கூவாகம்’ குறித்துக் கேட்டோம்.

‘சாதிக்கப் பிறந்தவர்கள் சமூக அமைப்பு’ வருடந்தோறும் திருநங்கைகளுக்கு ஒரு ஃபேஷன் ஷோ நடத்துவாங்க. அதுல 2018-ல் கலந்துக்கிட்டு டைட்டில் வின் பண்ணினேன். இப்போ கூவாகத்தில் நடந்த அழகிப்போட்டியில் கலந்துகிட்டு ‘மிஸ் கூவாகம் 2019’ பட்டத்தை வென்றிருக்கேன். இந்த வெளிச்சம் மூலமா இப்போ மாடலிங், ஃபேஷன் ஷோ வாய்ப்புகள் வருது. அத்துடன் நடன நிகழ்ச்சிகளுக்கும் போயிட்டிருக்கேன். எனக்கு பரதநாட்டியத்துக்கான சிறப்பு உயர் படிப்பு படிக்கணும்னு ஆசை. படிப்பு முடிஞ்சதும் அரசு வேலைக்குப் போகணும்’’ என்கிறவர், தன் அம்மாவுக்காக சில வார்த்தைகள் வைத்திருக்கிறார்.

‘`காலேஜ்ல சேர்ந்தப்போ பெற்றோர் கையொப்பம் போட எனக்கு யாருமில்லை. வெளியே எங்கேயாவது போகும்போது அப்பா, அம்மா, பிள்ளைங்கனு குடும்பத்தோடு சந்தோஷமா இருக்கறவங்களைப் பார்க்கும் போது ஏக்கமா இருக்கும். இன்று எத்தனையோ திருநங்கைகளை, இதில் அவங்க தப்பு எதுவும் இல்லைன்னு புரிஞ்சுக்கிட்டு ஏத்துக்கிட்ட பெற்றோர்களைப் பற்றிய செய்திகளைப் படிக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கும்; அதே அளவுக்கு அழுகையும் வரும். எங்க வீட்டுல என் அம்மாவைத் தவிர எல்லோரும் என் கிட்ட பேசிட்டாங்க. அம்மா மட்டும் இன்னும் பேசலை. அம்மான்னா எனக்கு உசுரு. அம்மாவை ரொம்ப மிஸ் பண்றேன்...’’

- வெ.வித்யா காயத்ரி,  படங்கள் : ப.சரவணகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism