Published:Updated:

கோடைக்காலத்துக்கு ஏற்றச் சரும பராமரிப்பு டிப்ஸ்!

கோடைக்காலத்துக்கு ஏற்றச் சரும பராமரிப்பு டிப்ஸ்!
கோடைக்காலத்துக்கு ஏற்றச் சரும பராமரிப்பு டிப்ஸ்!

கோடைக்காலத்தில் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க அன்றாடம் நீங்கள் வீட்டிலேயே செய்யக்கூடிய எளிமையான ப்யூட்டி டிப்ஸ்

நம்மை வெக்கையில் குளிக்கவைக்க வந்துவிட்டது. கோடைக்காலத்தில் ஸ்கின் டேனிங்,முடி உதிர்வு,முகத்தில் கட்டிகள் போன்றவை இயல்பாக ஏற்படக் கூடிய ஒன்றே.இவற்றில் இருந்து உங்கள் சருமத்தை பாதுகாத்துக் கொள்ள,அன்றாடம் நீங்கள் வீட்டிலேயே செய்யக்கூடிய எளிமையான ப்யூட்டி டிப்ஸ்களை வழங்குகிறார், அழகுக்கலை நிபுணர் வசுந்தரா.

 சருமம் வெயிலால் பாதிப்படையாமலிருக்க(டேனிங்) வெளியில் செல்வதற்கு முன் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது அவசியம். நார்மல் ஸ்கின்னுக்கு லோஷன் டைப், ஆய்லி ஸ்கின்னுக்கு ஜெல் டைப், டிரை ஸ்கின்னுக்கு போம் டைப் என சன்ஸ்கிரீனைத் தேர்வுசெய்யலாம்.சன் ஸ்க்ரீனின் எஸ்.பி.எப் அளவு குறைந்தது 15 இருக்க வேண்டும்.

முகம் நாள் முழுக்க டல் ஆகாமலிருக்க, பேஸ் மிஸ்டை(Face mist) அவ்வப்போது முகத்தில் ஸ்பிரே செய்துகொள்ளவும்.அல்லது டிஷ்யூ பேப்பரை ரோஸ் வாட்டரில் நனைத்தும் அவ்வப்போது முகத்தைத் துடைத்துக்கொள்ளலாம்.ரோஸ் வாட்டர் வாங்கும் போது கெமிக்கல் இல்லாதவற்றைத் தேர்வு செய்யுங்கள்.

அதிக வியர்வை மற்றும் வாடையால் அவதிப்படுபவர்கள், யூஸ் அண்ட் த்ரோ வெட் பேட்ஸை அக்குள் பகுதியில் ஆடையுடன் சேர்த்து ஸ்டிக் செய்து பயன்படுத்தவும்.சில நேரங்களில் பெர்ப்யூமில் உள்ள கெமிக்கல்கள் வியர்வையுடன் சேரும்போது ஒருவித துர்நாற்றம் ஏற்படலாம்.எனவே,கோடைக்காலத்தில் அதிகக் கெமிக்கல் கலப்பில்லாத, பூக்களின் நறுமணம் கொண்ட மைல்டு பெர்ப்யூம்களைத் தேர்வு செய்யவும். 

 இருசக்கர வாகனத்தில் பயணிப்பவர்கள் லேசான காட்டன் துணியால் தலையை மூடி, அதன் மீது ஹெல்மெட் அணிந்து கொள்ளலாம். இதனால் அதிகப்படியான வியர்வையால் தலையில் சேரும் பிசுபிசுப்பு, அழுக்கு தவிர்க்கப்படும்; முடி உதிர்வுப் பிரச்னையில் இருந்து காக்கும்.  

சருமத் துவாரங்களில் அழுக்கு சேரும்போது முகம் கறுத்துக் காணப்படும். இதைத் தவிர்க்க வெளியில் சென்று வந்ததும் கிளென்சர் பயன்படுத்தி முகத்தைச் சுத்தப்படுத்துவது அவசியம். கோடைக்காலம் என்பதால் ஜெல் டைப் கிளென்சரைத் தேர்வு செய்யலாம். பேஷ் வாஷ்ஷும் பயன்படுத்தலாம். 

இறுக்கமாக வாட்ச், காலணி என்று அணியும்போது மணிக்கட்டிலும் மேல் பாதங்களிலும் வியர்வைச் சேர்ந்து அலர்ஜி ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பாதிப்புண்டாகும் இடங்களில் காலமைன்(calamine) லோஷன் அப்ளை செய்த பின்னர் வாட்ச், காலணியை அணியவும். 

கோடைக்காலத்தில் தலைக்குத் தினமும் எண்ணெய் வைத்தால் எண்ணெய்யுடன் வியர்வை சேர்ந்து பிசுபிசுப்புத் தன்மையை அதிகப்படுத்தும். எனவே, இரவில் எண்ணெய் வைப்பதை வழக்கமாக்கலாம். கூடுமானவரை, மைல்டு ஷாம்பூ பயன்படுத்தி தினமும் தலைக்குக் குளிப்பது நல்லது. வாரத்திற்கு இரண்டு முறை எண்ணெய்த் தேய்த்து 

கோடைக்காலத்தில் அதிக நேரம் ஏசியிலேயே இருப்பதால் சருமம் வறட்சி அடைகிறது என நினைப்பவர்கள், சம்மருக்கு மட்டும் ஒயின் சோப்பைப் பயன்படுத்தலாம். முகத்துக்கு ரோஸ் ஒயின் சோப், உடலுக்கு ரெட் ஒயின் சோப் எனத் தேர்ந்தெடுப்பது நல்லது. 

அதிகக் கெமிக்கல்கள் கொண்ட பவுண்டேஷன், வொயிட்னிங் கிரீம்கள் போன்றவற்றைக் கோடையில் தவிர்க்கவும். 

அதிகப்படியான வியர்வை வெளியேறுவதால் சில நேரங்களில் சரும வறட்சி அதிகமாக இருக்கும். அதனால் குளித்ததும் உடல் முழுவதும் லைட் மாய்ஸ்ச்சரைசர் அப்ளை செய்துகொள்ளலாம். 

முகம் எப்போதும் பொலிவாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் வெள்ளரிக்காய் ஜூஸ்ஸூடன் புதினா ஜூஸ் கலந்து முகத்தில் அப்ளை செய்து 10 நிமிடங்கள் கழித்துக் கழுவ, முகம் டால் அடிக்கும். 

சன் டேனிங் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் தக்காளி சாறு 3 ஸ்பூன்.தேன் 2 டீஸ்பூன்.எலுமிச்சை சாறு 2 டீஸ்பூன்,தயிர் ஒரு டீஸ்பூன் எடுத்து ஒன்றாகக் கலந்து முகத்தில் பேக் போட்டுக்கொள்ளவும்.அரை மணி நேரத்திற்குப் பின் குளிர்ந்த நீரால் முகத்தினை கழுவ டேனிங் நீங்கி முகம் பிரகாசமாய் மிளிரும்

அடுத்த கட்டுரைக்கு