உள்ளத்தை நெருடும் நெகிழ்ச்சித் தொடர்

'மேம்’ என நான் அன்போடும், மரியாதையோடும் அழைக் கின்ற நிர்மலா மேடத்தை, புன்னகை யின் ஒளிக்கீற்றில்லாமல் ஒருபோதும் பார்த்ததில்லை. எத்திராஜ் மகளிர் கல்லூரியில், ஆங்கிலத் துறையில் பேராசிரியையாகப் பணிபுரிந்து வருகின்ற முனைவர் அ.நிர்மலா எனக்கு அறிமுகமானது... 2002-ம் ஆண்டில். குழந்தைமையின் அழகுடனும், அறிவின் தீட்சண்யத்துடனும் நின்று ஒளிர்கின்ற ஒரு சூரியகாந்திப் பூவைப்போல முதல் சந்திப்பிலேயே என்னைக் கவர்ந்துவிட்ட அவரது வழிகாட்டுதலில்தான், 2010-ல் சென்னைப் பல்கலைக்கழகத்திலிருந்து முனைவர் பட்டத்தைப் பெற்றேன்.

வாழ்வின் நீரோட்டத்தில் நாம் காண்கின்ற பலதரப்பட்ட மனிதர்களில் சிலரது சந்திப்பே, செழுத்துக் கிளைக்கின்ற உறவாய்த் தொடரும். அப்படிக் கிடைத்த கெழுமரம் அவர் எனக்கு. ஒரு மழைக் காலத்தில் அவரது வழிகாட்டுதலின் கீழ் ஆராய்ச்சி மாணவியாகச் சேர்ந்தபோது... புரிதலும், அன்பும், தோழமையும், தெளிவுபடலும் கூடிய பல வசந்தங்கள் எனக்காக காத்திருந்தன. கற்பித்துக் கொண்டே, கற்றுக் கொள்ளுதலில் இருக்கின்ற ஆனந்தத்தை, என்னை முழுமையாக உணரச் செய்தவர் அவர்.

இருபத்தி ஐந்து ஆண்டுகளாகப் பேராசிரியை பணி, அவரது வழிகாட்டுதலின் கீழ் முனைவர் பட்டம் பெற்ற மூவர், ஆய்வைச் சமர்ப்பித்து விட்ட ஒருவர், சமர்ப்பிக்க இருக்கின்ற ஒருவர், ஆய்வைத் தொடங்கி, தொடர்கின்ற எழுவர் என அவரது தன்விவரக்குறிப்பு, ஒரு சிறந்த கல்வியாளராக அவரை முன்னிறுத் தும். ஆனால், அந்தப் பணியைத் தன்னுள்ளே முழுமையான அர்ப்பணிப்புடன் உள்வாங்கி, அறிவின் சுடரை அடுத்த கரங்களுக்குள் மெல்லொளியாய் ஏற்றுகின்ற வித்தை, அவருக்குக் காகிதப் பதிவுகள் தாண்டிய ஒரு தியானமென நான் அறிவேன். இயல்பான மலர்ச்சியுடன், தேனியின் சுறுசுறுப்போடு, அறிவின் மகரந்தத்தைச் சுமந்து வருகின்ற பட்டாம்பூச்சி போலத்தான் அவரை நான் சந்திக்கும் போதெல்லாம் உரையாடுவார். அதில் எப்போதும் சொட்டுத் தேனென அன்பின் அடர்த்தியும் இருக்கும்.

எத்திராஜ் மகளிர் கல்லூரியில் பட்டப் படிப்பும், மேற்படிப்பும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும், இந்திரா காந்தி திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வித் துறையில் பட்டயப் படிப்பும் முடித்திருக்கின்ற அவர், தன்னம்பிக்கையின் மறுபெயர் என்றாலும், பொதுவெளியில் தன்னை முன்னிறுத்திக் கொள்வதே இல்லை. என் வாழ்வின் மிக மகிழ்வான நிகழ்வுகளை, நெருக்கடியான காலகட்டங்களை, சிக்கலான முடிவுகளை உடனடியாகப் பகிர்ந்து கொள்ள விழைவது... அவரிடத்தில்தான். எதிர்பார்ப்பற்ற அன்பையும், உளப்பூர்வமான ஆதரவையும், என்றுமிருக்கின்ற மரநிழலெனத் தருகின்ற அவரது முனைவர் பட்ட ஆராய்ச்சி, அயல்நாட்டு, உள்நாட்டு தேர்வர்களால் 'ஹைலி கமாண்ட்டேட்' (Highly commended) என்று சான்றிதழ் வழங்கப்பட்டதோடு, புத்தகமாகவும் வெளிவந்திருக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு, என்னைச் சிறப்பிக்கின்றதொரு நிகழ்வில், கௌரவ விருந்தினராக அவர் கலந்துகொண்ட அந்த மாலை மிக மனோரம்யமானது. அன்று, என் குறித்த அவரது பகிர்வு... அழகு தமிழில், ஆற்றொழுக்காய் ஓட, நான் வியந்துபோனேன். ஆங்கிலத்தோடு, தமிழிலும் ஆர்வமும், புலமையும், சொற்பொழிவாற்றும் திறனும் பெற்றிருக்கின்ற அவரது மறுபக்கம், என்னை ஆச்சர்யப்படுத்த, அவரோ... தனது மாணவப் பருவத்தில் சென்னை வானொலி, தொலைக்காட்சிகளின் தமிழ் நிகழ்வுகளில், பேச்சுப் போட்டிகளில் கலந்துகொண்டதை கண்கள் விரிய மிக யதார்த்தமாக நினைவுகூர்ந்தார். கல்லூரி நாட்களில் அவர் தமிழ்ப் பண்பாட்டு அமைப்பின் மாணவியர் செயலராக இருந்தாரெனவும், தமிழ்ச் சொற்பொழிவுப் போட்டிகளில் பங்குகொண்டு, சென்னைப் பல்கலைக்கழகத்திலேயே சிறந்த பட்டிமன்றப் பேச்சாளருக்கான இரண்டாவது இடத்தைப் பெற்றவரெனவும், கூடுதல் தகவல்கள் தந்தார். தன்முனைப்பற்ற சிறுகுழந்தை தனது முதல் குடைராட்டினப் பயணத்தைக் குச்சி ஐஸ் ருசித்துக் கொண்டே பகிர்ந்ததைப் போன்றிருந்தது அது!

எனது ஏழாண்டு கால ஆராய்ச்சிப் படிப்பின் வழிகாட்டுனராக (Guide) அவர் எனக்குக் கற்றுத்தந்தவை ஏராளம். மிகமுக்கியமான படிப்பினையாக நிதானம் மற்றும் சுயசார்பற்ற பார்வை ஆகியவற்றை எனக்களித்தது அவர்தான். எனது இலக்கிய வெளிப்பாடுகளில் முழுவதுமாக உணர்வுசார் நிலையைக் கவிதைகளும், அறிவுசார் பார்வையைக் கட்டுரைகளும் கொண்டிருக்குமெனில், அதற்கான சமன்படுத்தலின் சிறு தடம்... அவர் இட்டதே.

ஒரு நாளும் வறட்சியான, வெறும் கருதுகோள்களும், முடிவுகளுமேயான உலகத்தை அவர் எனக்குக் காட்டியதில்லை. வாழ்வின் நுணுக்கமான அழகுகளை, பரிசுகளை, அன்றாடத்தின் முக்கியத்துவத்தை, ஒரு தேநீரைப் போல பருகுகின்ற ஜென் பக்குவத்தை... அவரது வீட்டு மொட்டை மாடியின் சிறிய தோட்டத்தின் மலர்க் கூட்டங்களிடையே அவர் பகிர்ந்து கொண்ட மாலை நேரப் பொழுதுகள், பொக்கிஷங்கள்!

மீன் தொட்டியின் மேலாகப் பொங்கி வழிகின்ற அவரது வீட்டின் நீரூற்றைப் போலவே, முனைவர் ஆராய்ச்சி மாணவியருக்காக 'வித்யார்த்தி கம்யூன்' (Vidyarthy Commune)எனும் ஒரு வெளியை உருவாக்கி, மாதமொருமுறை சந்தித்து, ஆராய்ச்சியின் தேடலை ஊக்குவிக்கின்ற அவருக்கு, வாழ்வின் புதிர்கள் மீதும், கடவுள் தன்மையிலும் திடமான நம்பிக்கையுண்டு.

'அகலாமல், அணுகாமல் தீக்காய்வது’ போல என்னிடத்தே ஒரு வழிகாட்டுனராகவும், சக பேராசிரியையாகவும், அணுக்கமானதொரு உறவாகவும் தொடர்கின்ற 'சமநிலைத் தன்மையே’ அவரது பலம். கரிசல் வெயில், தன் நினைவுக் கிடங்கில் சேமித்து வைத்திருக்கின்ற கோடை மழையென அவர் எனக்களித்த சில தினங்கள் மிகக் குளிர்மையானவை. எனது 'சொல் தொடும் தூரம்’ எனும் விமர்சன நூலின் முதல் பிரதியை என் வற்புறுத்துதலுக்காக மேடையேறி அவர் பெற்றுக் கொண்டது உள்ளிட்ட சில விஷயங்கள், வாழ்வெனும் மூதாதையரின் நெற்குதிருக்குள் நான் சேமித்து வைத்திருக்கின்ற நல்மணிகள்.

என் ஆராய்ச்சி முடிவடையும் தறுவாயில் மிகப்பெரிய விபத்தொன்றில் சிக்கி, நான்கு மாதங்கள் நான் முடங்கியிருந்தபோது, பேனாவின் சிறுமுனையை எனக்கு ஊன்றுகோலாகக் கொடுத்தபடி, தான் 'ரெய்கி' (Reiki) எனும் சிகிச்சை முறையை அறிந்ததையும், பயிற்றுவிப்பதையும் அந்த அடுக்குமல்லிப் புன்னகையுடன் பகிர்ந்து கொண்டார். ஒரு புன்னகையின் தொற்று... எந்த வியாதியையும் குணப்படுத்திவிடுகின்ற மாயம் அவருக்கு மட்டுமே சாத்தியம்.

உறுத்தாத... ஆனால் பொருத்தமான அணி மணிகள், கண்ணியமும், நேர்த்தியும் கலந்த உடை, துள்ளல் நடையெனப் பேச்சிலும் பாவனையிலும், வெளிப்பாட்டிலும் கம்பீரமும், குழந்தைமையும் கொண்டவர் அவர். தனது குருவாகச் சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியை முனைவர் சி.டி. இந்திரா அமைந்ததை இன்று வரை பெருமையாகக் கருதுகின்ற இவர்... எனது 'குருவுமானவர்’ எனப் பரவசமுடன் வானம் பார்த்தேன். நிலவற்றுத் தெளிவாக இருந்தது. இன்றெனக்கு நிலா எதற்கு - 'நிர்மலமே’ போதும்!

- இறகு வருடும்...