கச்சேரியின்போது மூச்சு வாங்கும் என்பதால், இரண்டு கலைஞர்கள் மாற்றி மாற்றி நாதஸ்வரம் வாசிப்பதுதான் வழக்கம். ஆனால், ஆண் கலைஞர்களுக்கெல்லாம் சவால் விடும் வகையில் நாதஸ்வரத்தை கையில் எடுத்த பொன்னுத்தாய், தனி ஆளாகவே வாசித்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்ததுதான்... ஆச்சர்யம்!

பல ஆயிரம் கச்சேரிகள் நடத்தியிருக்கும் பொன்னுத்தாய்... நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோதுகூட, வாசிப்பை நிறுத்தவில்லை. இப்படி அர்ப்பணிப்பு காட்டி, அதற்காக 23 தங்கப் பதக்கங்கள், கலைமாமணி, கலைமுதுமணி, நாத கான அரசி உள்ளிட்ட ஏராளமான விருதுகளைக் குவித்த பொன்னுத்தாய், ஜனவரி 17-ம் தேதியன்று, தன் 84 வயதில் விண்ணுலகம் சென்றுவிட்டார்!

பழனி அருகே இருக்கும் புதுஆயக்குடி கிராமத்தில் பிறந்த பொன்னுத்தாய், 5-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். பாட்டி பாப்பம்மாள், பிரபலமான மிருதங்க வித்வான் என்பதால், இவருக்கும் கலை ஆர்வம் ஏற்பட, நாதஸ்வரம் கற்றிருக்கிறார். மீனாட்சியம்மன் கோயிலின் ஆஸ்தான வித்வானாக இருந்த பி.நடேச பிள்ளையிடம் நாதஸ்வரம் கற்ற பொன்னுத்தாய், 13 வயதில் சித்திரைத் திருவிழாவில் அரங்கேற்றம் கண்டபோது, ஊரே அதிசயித்து நின்றது.

படிப்படியாக புகழேணியின் உச்சிக்கே பொன்னுத்தாய் செல்ல, அவருடைய குடும்பம் செல்வச் செழிப்போடு வாழத் துவங்கியது. ஆனால், காலப்போக்கில் அத்தனையும் கரைந்து... இப்போது வாடகை வீட்டில் வசிக்கிறார்கள் வாரிசுகள்! பொன்னுத்தாய்க்கு ஒரு மகன், இரண்டு மகள்கள், நிறைய பேரன், பேத்திகள். ஆனால், இவர்களில் இசை வாரிசாக இருப்பது... பேரன்களில் ஒருவரான தவில் கலைஞர் விக்னேஷ்வரன் மட்டுமே.

''ஒரு பெண் நாதஸ்வரம் வாசிப்பதா என்று அந்தக் காலத்தில் கிளம்பிய எதிர்ப்பையே அஞ்சாமல் கடந்தவர் பாட்டி. ஆனால், அவரின் மன உறுதியையும் பாதித்தது... கல்யாண வீட்டில் கே.பி.சுந்தராம்பாள் பாட வந்தபோது, சிலர் அமங்கலமாக பேசியது. தன்னையும் யாரும் சுட்டிவிடக் கூடாதே என்று, தாத்தா இறந்த பிறகு திருமணத்துக்கு வாசிப்பதை நிறுத்திவிட்டார்'' என்றபோது, விக்னேஷ்வரனின் கண்களில் நீர்.

இன்று பொன்னுத்தாயின் புகழ் பல நாடுகளிலும் பரவிக்கிடக்கிறது. அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் பாடமாகவும்... ஜப்பான் மியூசிக் மியூசியத்தில் படமாகவும் இடம்பெற்றிருக்கும் பொன்னுத்தாய், பெண் இனத்தின் பொக்கிஷம்!