வாசகிகள் பக்கம்

ஃபாலோ அப்

''அமெரிக்காவிலும் உண்டா எக்ஸாம் ஃபீவர்?'' என்ற தலைப்பில் சென்ற இதழில் ஒரு கட்டுரை இடம்பிடித்திருந்தது. அதற்கு சப்போர்ட்டிங் டாகுமென்ட்டாக ஒரு கடிதத்தை அனுப்பி வைத்திருக்கிறார் அமெரிக்கா வாசகி தீபிகா சுதாகர்! அதில் -

''அமெரிக்காவில் பயிலும் உயர்நிலைப் பள்ளி மாணவியின் அம்மா என்கிற முறையில், எழுதுகிறேன். இங்கு ஸ்கூல் அட்மிஷன் ஒரு பிரச்னையே இல்லை. 'ஸ்கூல் ஸோன்’ அடிப்படையில், வீட்டு முகவரியை மட்டும் வைத்தே அதற்கு அருகில் இருக்கும் பள்ளி, உங்கள் குழந்தைக்கான பள்ளியாக நிர்ணயிக்கப்படுகிறது. தெரிந்தவர், எம்.எல்.ஏ. சிபாரிசுக் கடிதம், நன்கொடை என்கிற பேச்சுக்கும் அவசியமில்லை. பெற்றோருக்கோ, குழந்தைகளுக்கோ அட்மிஷன் இன்டர்வியூ வைக்கும் அதிகப் பிரசங்கித்தனமும் சுத்தமாகக் கிடையாது.

பஸ் வசதி மற்றும் உயர்நிலைப் பள்ளி வரை கல்வி முழுக்க இலவசம். புத்தகங்கள்கூட பள்ளியிலேயே இலவசமாகக் கொடுத்துவிடுகிறார்கள். எல்லாப் பள்ளிகளிலும் மதிய உணவு நிச்சயமாகப் பரிமாறுகிறார்கள்... மிகக் குறைந்த விலையில். ஆக, வேலைக்குப் போகும் தாய்மார்கள் குழந்தைகளின் மதிய உணவுக்காக அதிகாலையே எழத் தேவையில்லை. பெற்றோர் வருமானம் குறைவானவராக இருந்தால், மதிய உணவு இலவசம்.

மாநில அளவில், தேசிய அளவில் பள்ளி இறுதியாண்டுத் தேர்வுகள் நடப்பதில்லை. அந்தந்தப் பள்ளிகளில், அந்தந்த ஆசிரியர்கள் தங்கள் வகுப்புக்கென்று தேர்வு (மற்றும் அசைன்மென்ட், புராஜெக்ட், க்விஸ், லேப்) நடத்தி, மார்க் போடுகிறார்கள். அதுவே அதிகாரப்பூர்வமான மதிப்பீடாகி, காலேஜ் அட்மிஷனை நிர்ணயிக்கிறது.

இன்னொரு முக்கியமான விஷயம், கல்லூரி அட்மிஷனை 12-ம் வகுப்பு ரிசல்ட் மட்டுமன்றி, 9, 10, 11 மற்றும் 12 என்ற நான்கு வருட மதிப்பெண்களும் முடிவு செய்கின்றன. தொடர்ந்து நல்ல மதிப்பெண்கள் பெறுவதன் அவசியத்தை இது உணர்த்துகிறது என்பதுதான் ஹைலைட்டே!

உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், குறிப்பிட்ட நேரம் பொதுச்சேவை செய்தே ஆக வேண்டும் என்பது, ஸ்காலர்ஷிப் கேட்டு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்குக் கட்டாயமாக இருக்கிறது. மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு உதவுவது, போக்குவரத்தைச் சீர்படுத்துவதில் போலீஸுக்கு உதவுவது, குழந்தைகள் காப்பகம், முதியோர் இல்லம் போன்ற இடங்களில் உதவுவது... நீள்கிறது சேவைப் பட்டியல்.

மாணவர்களுக்கு யூனிஃபார்ம் இல்லை என்பது மட்டுமே எனக்கு சிறு குறையாக தோன்றுகிறது!'' என்று தகவல்களை பகிர்ந்திருக்கிறார் தீபிகா சுதாகர்!