''கொஞ்ச நாளைக்கு முன்ன உங்க போட்டோவை பார்த்தேன். அவ்வளவு அழகா இருக்கீங்க. டோன்ட் வொர்ரி. திரும்பவும், நீங்க பழைய நிலைக்கு வர்றதுக்கு நான் பொறுப்பு. உங்களுக்கான செலவு மொத்தத்தையும் அரசாங்கமே பார்த் துக்கும். நீங்க நல்ல முறையில் குணமடைஞ்சு வீடு திரும்பணும்னு தினமும் ப்ரே பண்றேன்...''

- தீ அணைப்புத்துறை கீழ்ப்பாக்கம் கோட்ட அலுவலர் ப்ரியா ரவிச்சந்திரனை, அப்போலோ மருத்துவமனையில் சந்தித்தபோது தமிழக முதல்வர் ஜெயலலிதா, இப்படி தெம்பூட்டி திரும்பியிருக்கிறார்.

சென்னை கடற்கரை சாலையில், அரசுத் துறை அலுவல கங்கள் அமைந்திருக்கும் எழிலகம் கட்டடத்தில் பொங்கல் அன்று நடைபெற்ற கோர தீவிபத்தை யாரும் மறந்திருக்க முடியாது. அதைத் தடுக்கும் முயற்சியில் இறங்கிய ப்ரியா, இனி வாழ்நாள் முழுக்கவே அதை மறக்க முடியாத அளவுக்கு தீயின் கொடிய நாக்குகளால் தீண்டப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

மகளின் இந்த நிலை கண்டு அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாதவராக, மருத்துவமனையிலேயே தவம் கிடக்கிறார்... ப்ரியாவின் தந்தை ஆடிட்டர் நல்லியப்பன். அவரிடம் பேசியபோது... ''சொந்த ஊர் சேலம். எனக்கு ஒரு பொண்ணு, ஒரு பையன். ப்ரியா எப்பவும் துறுதுறுனு இருப்பா. புதுசா ஏதாவது கத்துக்கணும்கற ஆர்வம் இருந்துட்டே இருக்கும். சேலத்துல ஸ்கூல் படிப்பை முடிச்சுட்டு, பி.ஏ. கார்ப்பரேட் செகரட்டரிஷிப் படிப்பை சென்னையிலயும், எம்.ஏ. சோஷியாலஜியை டெல்லியிலும் முடிச்சா. கையோட கல்யாணம் செய்து வெச்சுட்டோம்.

அதுக்குப் பிறகு, ரெண்டு வருஷம் கழிச்சு ஃபயர் சர்வீஸுக்கு செலக்ட் ஆனா. அதாவது... இந்தியாவுலயே முதல்முறையா, தமிழக தீயணைப்பு படையில 2003-ம் வருஷம் பெண்கள சேர்த்தாங்க. அவங்கள்ல ஒருத்தர் எங்க ப்ரியா. இதுல இருந்தபடியே டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 எக்ஸாம் மூலமா... தீயணைப்பு துறை கோட்ட அலுவலராயிட்டா.

ஃபயர் சர்வீஸ் வேலைனு சொன்னதுமே... 'ராத்திரி, பகல்... பார்க்காம ஓடிப்போய் செய்யற இந்த வேலைய, ஒரு பொண்ணால பார்க்க முடியுமா?'னு சொந்தக்காரங்க பலரும் கேட்டாங்க. உடனே, 'பொண்ணுங்க மாதிரி அர்ப்பணிப்போட இங்க யாரு இருக்கா..? இப்படியே பயந்துட்டு இருந்தா, பெண்கள் எட்டாத துறைகள்ல எப்படித்தான் பெண்களால சாதிக்க முடியும்'னு சொல்லி, அவங்களை திகைக்க வெச்சுட்டா'' பெருமையோடு சொன்ன நல்லியப்பன், கண்களில் வழிந்த நீரை துடைத்தபடியே தொடர்ந்தார்...

''வேலையில அவ்வளவு சின்சியர், டெடிகேஷன். எப்பவுமே ஃபயராத்தான் இருப்பா. தகவல் வந்தா... முதல் ஆளா போய் நிப்பா. அன்னிக்கும் அப்படித்தான் ஃபயர் கால் வந்ததும் நாலு டி.எஃப்.ஓ-வும் ஸ்பாட்டுக்கு வந்துட்டாங்க. அதுல இவ மட்டும்தான் பெண். ஆளுக்கு ஒரு பக்கமா தீயை அணைக்க... அன்பழகன், முருகன் ரெண்டு பேரும் ஃபயர்ல மாட்டிக்கிட்டாங்க. ப்ரியாதான் தைரியமா முருகனை காப்பாத்தப் போயிருக்கு. அப்பதான் நெருப்புக் கங்கு அவ மேல விழுந்திருக்கு போல.

45 சதவிகித அளவுக்கு தீக்காயம் ஏற்பட்டிருக்கு. அப்போலோ ஹாஸ் பிட்டலோ... பொட்டம்மாள், கணபதி கிருஷ்ணன், செங்குட்டுவேலு, சுந்தர்ராஜன் இந்த நாலு டாக்டரும்தான் இப்ப எங்களுக்கு கடவுளா தெரியுறாங்க. அவங்களோட அர்ப்பணிப்பான முயற்சியாலதான் ப்ரியா இப்ப குணமா கிட்டு வர்றா. முழுசா குணமடைய '60 நாட்களாவது ஆகும்'னு டாக்டர்ஸ் சொல்லி இருக்காங்க. ப்ரியாவோட துணிச்சலையெல்லாம் கேள்விப்பட்டு தான் முதலமைச்சரே நேர்ல வந்து தைரியம் சொல்லிட்டுப் போனாங்க. குடியரசு தினத்தன்னிக்கு கேலன்ட்ரி அவார்டு (அண்ணா விருது) கொடுத்திருக்காங்க'' என்று பெருமிதத்தோடு சொன்னார் நல்லியப்பன்.

ப்ரியாவின் கணவர் ரவிச்சந்திரன் ஐ.ஆர்.எஸ், வருமான வரித்துறை உதவி கமிஷனராக இருக்கிறார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள். சென்னை, கோபாலபுரம் டி.ஏ.வி. பள்ளியில் படித்துக் கொண்டுள்ளனர்.

''பிரியாவைப் பார்க்கறதுக்கு குழந்தைங்கள இன்னும் அனுமதிக்கல. அம்மா எப்ப வருவாங்கனு தினமும் கேட்டுட்டே இருக்காங்க... அவங்கள சமாதானப்படுத்த முடியாம நாங்களும் அழுதுட்டே இருக்கோம்'' என்ற நல்லியப்பன் உடைந்து அழ ஆரம்பித்துவிட்டார்!

''தீயணைப்பு துறை வாகனத்தோட சைரன் சத்தம் கேட்டா போதும்... 'நம்மள காப்பாத்த ஆள் வந்தாச்சு'ங்கற நம்பிக்கையில துள்ளி எழுந்துடுவாங்க ஆபத்துல இருக்கறவங்க. அப்படிப்பட்ட முகங்களைப் பார்க்கறப்ப கிடைக்கற திருப்தி... அதுல கிடைக்கற சந்தோஷம்... இதெல்லாம்தான், எப்படியாப்பட்ட கொடுமையான சூழ்நிலையிலயும் சளைக்காம எங்கள வேலை செய்ய வைக்குது''

- இவை, நான்கு மாதங்களுக்கு முன்பு சந்தித்தபோது, ப்ரியா நம்மிடம் சொன்ன வார்த்தைகள்.