Published:Updated:

பாளையங்கோட்டை `சில்க் பேக்ஸ்' பற்றித் தெரியுமா! #WomenPower

பாளையங்கோட்டை `சில்க் பேக்ஸ்' பற்றித் தெரியுமா! #WomenPower
பாளையங்கோட்டை `சில்க் பேக்ஸ்' பற்றித் தெரியுமா! #WomenPower

ஹேண்ட் பேக்ஸ் - பெண்களின் ஃபேஷன் தேர்வுகளில் இவற்றுக்கு முக்கிய பங்குண்டு. அழகிய ஆடைகளை உடுத்தும் பெண்களின் லுக்குக்கு கூடுதல் அழகு சேர்ப்பவை இந்த ஹேண்ட் பேக்ஸ். காட்டன், பாலிஸ்டர், வெல்வெட், லெதர், லினென் போன்ற பல மூலப்பொருள்கள் மூலம் ஹோபோ பேக், டோட் பேக், சேட்ச்சல், கிளட்ச், பேகட் பேக் என விதவிதமான பல ஹேண்ட் பேக்குகள் சந்தையில் கிடைக்கின்றன. இதில், பலரது விருப்பமான பட்டுத் துணியைப் பயன்படுத்தி ஹேண்ட் பேக்குகளை தயாரித்து வருகிறார் பாளையங்கோட்டையைச் சேர்ந்த ரனித்தா ராஜேந்திரசிங். 

பாளையங்கோட்டை `சில்க் பேக்ஸ்' பற்றித் தெரியுமா! #WomenPower

நேஹா'ஸ் பேக்ஸ்...

பாளையங்கோட்டையில் மிகப்பெரிய கூட்டுக்குடும்பத்தில் திருமணமாகிச் சென்றார் ரனித்தா. தன் தாயைப் போலவேதையலில் ஆர்வம்கொண்ட ரனித்தா, தன் குழந்தைகளுக்காக ஃபிராக்ஸ் மற்றும் கவுன்களை தயாரித்து வந்தார். இதனிடையே எம்பிராய்டரி தெரிந்த பெண்மணி ஒருவரின் அறிமுகம் கிடைக்க, ஹேண்ட் பேக்குகள் பக்கம் திரும்பியது இவரின் ஆர்வம். அப்போதைக்கு சந்தையில் கிடைத்த அத்தனை விதமான ஹேண்ட் பேக்குகளையும் வாங்கிவந்து, அவற்றின் தையல் நுணுக்கத்தை அறிந்துகொண்டார். தன்னுடைய கற்பனைத் திறனைப் புகுத்தி முதற்கட்டமாக 50 ஹேண்ட் பேக்குகளை உருவாக்கினார். பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்மணி இவரின் ஹேண்ட் பேக்குகளைப் பார்க்கும்போது, அவருக்கு மிகவும் பிடித்துப்போனது கூட்டத்துக்குள் இருந்த கண்ணைக் கவரும் பச்சை நிறத்திலான ஒரேயொரு சில்க் பேக்! சில்க் பேக்ஸ் பக்கம் ரனித்தாவின் கவனம் திரும்பியது.

ஸ்பன் சில்க் எனப்படும் ஒருவகையான பட்டு மெட்டீரியலில் செய்யப்படும் ஹேண்ட் பேக்ஸ் மிகவும் உறுதியானவை மற்றும் லேசானவை, பட்டைப் போலவே இருந்தாலும் இவற்றை சுலபமாக துவைக்கவும் முடியும், எனவே இவை நீடித்து நிலைக்கக்கூடியவை. 2005ஆம் வருடம் பெங்களூரில் சென்ட்ரல் சில்க் போர்டு நடத்திய சர்வதேச விற்பனைக் கண்காட்சியில் ரனித்தா தனது சில்க் பேக்குகளை அறிமுகம் செய்தார். அந்தக் கண்காட்சியில் மிகப்பெரிய ஹிட் அடித்தது இந்தப் புதிய வகை சில்க் ஹேண்ட் பேக்ஸ். ஒரே நாளில் நூற்றுக்கணக்கான ஆர்டர்கள் வந்துகுவிந்தன. தன்னுடைய பேத்தியின் பெயரில் நேஹா'ஸ் பேக்ஸ் என்கிற சில்க் பேக்ஸ் உற்பத்தி நிலையத்தை தனது கணவரின் ஆதரவோடு ஆரம்பித்தார் ரனித்தா. நேஹா'ஸில், பீடி இலை சுற்றும் தொழிலாளிகளாக இருந்த பல பெண்களுக்கு தையல் பயிற்சி வழங்கி, அவர்களை பணியாளர்களாக அமர்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாளையங்கோட்டை `சில்க் பேக்ஸ்' பற்றித் தெரியுமா! #WomenPower

நம் விருப்பம் போல சில்க் பேக்ஸ்!

2005ஆம் ஆண்டு மிகவும் சிறியதாக ஆரம்பிக்கப்பட்ட நேஹா'ஸ் பேக்ஸ் இன்று பாளையங்கோட்டை சுற்று வட்டார பகுதியில் மிகவும் பிரபலம். மதுரை மற்றும் கொடைக்கானலில் ஷோரூம்கள் கொண்ட நேஹா'ஸ் தற்போது சென்னையிலும் அடியெடுத்துவைத்துள்ளது.

அரசின் சில்க் மார்க் சான்றிதழ் பெற்ற காயின் பர்ஸ், கிளட்ச், ஹேண்ட் பேக்ஸ், மொபைல் கவர், குஷன் கவர், ஐ பேட் கவர், ஷர்ட்ஸ், பேபி ஃபிராக்ஸ், சல்வார் மெட்டீரியல்கள் மற்றும் சேலைகளைத் தயாரித்து வழங்கிவருகிறது நேஹா'ஸ். 70 ரூபாயிலிருந்து 2000 ரூபாய் மதிப்பிலான பொருள்கள் இங்கு விற்கப்படுவதால், அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்துள்ளது நேஹா'ஸ். சில்க் ஹேண்ட் பேக்குகளில் சில்க் ரோப் ஹேண்டில், வுட்டன் ஹேண்டில், பீட்ஸ் ஹேண்டில், கேன் ஹேண்டில், மெட்டல் ஹேண்டில் என வித்தியாசம் காட்டுகின்றனர். 

நமக்குப் பிடித்த நிறம், டிசைன், மெட்டீரியல் அடங்கிய கஸ்டமைஸ்டு பேக்குகளை இங்கு ஆர்டர் கொடுத்து வாங்கமுடிவது சிறப்பு. இதுமட்டுமல்லாது திருமண - நிச்சயதார்த்த கிஃப்ட் பேக்ஸ், பொட்லி பேக்ஸ், வால் ஹேங்கிங்ஸ்(Wall Hangings) போன்றவற்றையும் ஆர்டர் கொடுத்து வாங்கலாம். குறைந்தபட்சம் 10 பீஸ்களுக்கு மேல் ஆர்டர்கள் வரவேற்கப்படுகின்றன. பல்க் புக்கிங் மற்றும் விழாக்காலங்களில் சிறப்பு சலுகையையும் வழங்குகிறது நேஹா'ஸ்.

விகடன் வாசகர்களுக்கு சிறப்பு சலுகையாக 25% தள்ளுபடியை வழங்குகிறது நேஹா'ஸ் பேக்ஸ். இந்தச் சலுகையைப் பெற கீழ்க்கண்ட படிவத்தைப் பூர்த்தி செய்யவும். உங்கள் எண்ணுக்கு வரும் SMS-ஐக் காட்டி இச்சலுகையைப் பெறலாம்!

www.nehasbags.com மூலம் ஆன்லைனிலும் வாங்கலாம். சென்னை ஷோரூம் முகவரி: நேஹா'ஸ் பேக்ஸ், 1B, முதல் மாடி, 59 டி.டி.கே சாலை, அகர்வால் மருத்துவமனை எதிரில், ஆழ்வார்பேட்டை, சென்னை - 600 018.
 

விவரங்களைப் பெற