Published:Updated:

`25 வருச அனுபவத்துக்கு மூக்கு மேல பலன்!'- ஆன்லைனில் கலக்கும் மசால் பொடி சாரதா பாட்டி

`25 வருச அனுபவத்துக்கு மூக்கு மேல பலன்!'- ஆன்லைனில் கலக்கும் மசால் பொடி சாரதா பாட்டி

"நம்முடைய லாபத்தை எண்ணி முடிக்கும்போது அவ்வளவு சந்தோஷமாக இருக்கும். அந்தக் காசை வெச்சு என் பிள்ளைகளுக்கு எதாவது பொருள் வாங்கிக் கொடுக்கும் போது மனசு பெருமையில் துள்ளிக் குதிக்கும்."

`25 வருச அனுபவத்துக்கு மூக்கு மேல பலன்!'- ஆன்லைனில் கலக்கும் மசால் பொடி சாரதா பாட்டி

"நம்முடைய லாபத்தை எண்ணி முடிக்கும்போது அவ்வளவு சந்தோஷமாக இருக்கும். அந்தக் காசை வெச்சு என் பிள்ளைகளுக்கு எதாவது பொருள் வாங்கிக் கொடுக்கும் போது மனசு பெருமையில் துள்ளிக் குதிக்கும்."

Published:Updated:
`25 வருச அனுபவத்துக்கு மூக்கு மேல பலன்!'- ஆன்லைனில் கலக்கும் மசால் பொடி சாரதா பாட்டி

காஸ்டியூம் டிசைனிங், ஃபேஷன் ஜூவல்லரி மேக்கிங் என டிரெண்டுக்கு ஏற்ற பிசினஸில் பெண்கள் கலக்கிக்கொண்டு இருப்பவர்களுக்கு சவால் விடும்விதமாக வியாபாரத்தில் அசத்துகிறார் சாரதா பாட்டி. திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த சாரதா பாட்டிக்கு 85 வயதாகிறது. நமது பாரம்பர்யமான மிளகாய்ப் பொடி, வத்தல், அப்பளம், ரெடிமேட் பொடி மிக்ஸ், ஸ்நாக்ஸ் வகைகள் தயாரித்து பிசினஸ் செய்து வருகிறார். ஆன்லைனில் ஆர்டர்கள் பெற்று, பிசினஸில் அடுத்தகட்டத்தைக் கடந்து, தன்னை அப்டேட்டாக வைத்திருக்கும் சாரதா பாட்டி தன்னுடைய வெற்றியின் ரகசியங்களைப் பகிர்கிறார்.

`25 வருச அனுபவத்துக்கு மூக்கு மேல பலன்!'- ஆன்லைனில் கலக்கும் மசால் பொடி சாரதா பாட்டி

``எனக்குப் பதினைஞ்சு வயசா இருக்கும்போது சமையல் கத்துக்க ஆரம்பிச்சேன். இத்தன வருஷத்துல ஒரு நாள்கூட சமையல் செய்யறதுக்கு வெறுப்பு வந்தது இல்ல. இன்னும் சொல்லணும்னா சமைக்கிற ஒவ்வொரு நிமிஷமும் சந்தோஷமா இருக்கேன். படம் வரைறது மாதிரி சமையலும் ஒரு கலை. ரசிச்சு செஞ்சா கைப்பக்குவம் தானாக வரும். இப்போ இருக்கிற புள்ளைங்க ஆன்லைனில் வீடியோவைப் பார்த்து சமைக்கிறாங்க. எங்க காலத்துல அந்த வசதியெல்லாம் கிடையாது. யாரிடமாவது கேட்டுத் தெரிஞ்சுட்டுதான்  சமைக்கக் கத்துக்கிட்டோம். எங்க வீட்டுச் சமையலுக்குத் தேவைப்படும் பொடிவகைகளை மொத்தமாக வறுத்து உரலில் இடிச்சு வைக்கிறது என்னோட பழக்கம். அக்கம் பக்கத்தில் இருக்கவங்க, அவசர தேவைக்கு எங்க வீட்டுல சமையல் பொடிகளை வாங்கிப் பயன்படுத்துவாங்க. அதில் ஒரு அக்கா கொடுத்ததுதான் இந்த பிசினஸ் ஐடியா" என்ற சாரதா பாட்டி பிசினஸ் தொடங்கியதைப் பற்றி விவரிக்கிறார்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"`பொடிகள் தயாரித்து விற்பனை செய்கிறதெல்லாம் சரிப்பட்டு வராது, எல்லா வீட்லேயும் அவங்களே ரெடி பண்ணும்போது நம்மகிட்ட யார்வாங்குவா'ன்னு எங்க வீட்டில் சொன்னாங்க. ஆனா, என்னோட கைப்பக்குவத்தில் இருந்த நம்பிக்கையால் குறைந்த முதலீட்டில் பொருள்களை வாங்கி பிசினஸ்ஸை ஆரம்பிச்சேன். ஆரம்பத்தில் ஆர்டர் கொடுக்குறவங்களுக்கு மட்டும் பொடிகள் தயார் செய்து கொடுத்துட்டிருந்தேன். அவங்க என்னைப் பத்தியும் பொருளோட தரத்தைப் பத்தியும் மத்தவங்ககிட்ட சொல்லி, விளம்பரம் பண்ணினாங்க. அதனால, அடுத்தடுத்து ஆர்டர்கள் வந்துச்சு. பெங்களூர், மும்பை, சென்னையில் இருக்கும் பெண்கள் ஊருக்கு வரும்போது அதிகமான அளவு வாங்கிட்டுப் போவாங்க. 

சில மாதங்களுக்கு அப்புறம், கைமுறுக்கு, சீடை என ஸ்நாக்ஸ் செய்து விற்கவும் ஆரம்பிச்சேன். கடைகள், சமையல்காரர்களிடமிருந்தும் ஆர்டர்கள் வந்துச்சு. அதற்கப்புறம்தான். பொடிகள் தயாரிக்க பொருள்களை மொத்தமாக வாங்க ஆரம்பிச்சேன். அந்தக் காலத்துல மாசம் ஐந்தாயிரம் கிடைச்சாலே பெரிய தொகை. பத்து ரூபா நோட்டுகள் நிறைஞ்சிருக்கும். நம்முடைய லாபத்தை எண்ணி முடிக்கும்போது அவ்வளவு சந்தோஷமாக இருக்கும். அந்தக் காசை வெச்சு என் பிள்ளைகளுக்கு எதாவது பொருள் வாங்கிக் கொடுக்கும் போது மனசு பெருமையில் துள்ளிக் குதிக்கும்.  

`25 வருச அனுபவத்துக்கு மூக்கு மேல பலன்!'- ஆன்லைனில் கலக்கும் மசால் பொடி சாரதா பாட்டி

பசங்க படிச்சு முடிச்சு, திருமணமாகி ஆளுக்கு ஒரு ஊரில் செட்டில் ஆகிட்டாங்க. `வயசான காலத்துல ஏன் இப்படி கஷ்டப்படுற மிளகாய்ப் பொடி பிசினஸ்ஸையெல்லாம் விட்டுட்டு எங்க கூட வந்து இரு'னு அடிக்கடிச் சொல்லுவாங்க. ஆனா, நான் `இதைக் கஷ்டமாக பார்க்கல, விருப்பப்பட்டுத்தான் செய்றேன்'னு சொல்லிருவேன். அதனால, என் பசங்களுக்கு என் மேல கோபம்கூட வந்திருக்கு. அவங்களுக்காகக் கொஞ்ச நாள் சென்னையில தங்கினேன். ஆனாலும் மனசு கேட்கல திரும்பி, ஊருக்கே வந்துட்டேன். பிள்ளைகளுக்காக என் அடையாளத்தை விட முடியுமா சொல்லுங்க!" என்று சாரதா பாட்டி அப்பாவியாகக் கேட்கும் கேள்விகளுக்குள், பெண்ணியச் சிந்தனைகள் உட்பொதிந்திருக்கும்.

"ஒரு குறிப்பிட்ட வயசுக்கு மேல நிறைய ஆர்டர்களை எடுத்துச் செய்ய முடியல. `உங்க கைப்பக்குவம் வருமா? கண்டிப்பா மசால் பொடி வேணும் பாட்டி'னு உரிமையாக் கேட்கிறவர்களுக்கு மட்டும் செய்துகொடுத்தேன். 25 வருஷம் இப்படியே போயிருச்சு. என்னோட உழைப்பை அடுத்தகட்டத்துக்கு எடுத்துட்டு போறதுக்கான வழிமுறைகளை, என் பேரக் குழந்தைகள் அவங்களோட கடமையாகக் கையில் எடுத்தாங்க. ஆன்லைன் பிசினஸ் பற்றிச் சொன்னாங்க. `உன்னோட மசால் பொடி பிசினஸை நாங்க எல்லாரும் சேர்ந்து செய்றோம் பாட்டி'னு அவங்க வந்து நின்னப்போ புல்லரிச்சுப்போச்சு. அவங்க எல்லாருக்கும் அவங்க ஆசைப்பட்ட இன்னொரு வேலை இருந்தாலும் எனக்காக மசால்பொடி பிசினஸை கையில் எடுத்தாங்க. படிச்சுட்டு ஏன் இதைச் செய்யணும்னு ஒரு நிமிஷம்கூட யாரும் தயங்கல. உங்களுக்கு எதுக்குப்பா இதெல்லாம்னு நான் கேட்டா கூட `சென்னையில் உணவுப்பொருள் தயாரிக்கிறதுதான் பாட்டி கெளரவமான பிசினஸ்'னு சொல்லி என்னை சந்தோஷப்படுத்துவாங்க.

`25 வருச அனுபவத்துக்கு மூக்கு மேல பலன்!'- ஆன்லைனில் கலக்கும் மசால் பொடி சாரதா பாட்டி

ஆரம்பத்தில் சில ஆயிரங்கள் முதலீடுசெய்து பொடிகள் தயாரித்து சென்னையில் உள்ள கடைகளுக்குக் கொடுத்தாங்க. நல்ல வரவேற்பு கிடைச்சதும் `வராஹா' என்ற ஒரு பிராண்டாக பிசினஸைத் தொடங்கினாங்க. நிறைய ஆர்டர்கள் வந்ததும், வேலைக்கு ஆளுங்கள வெச்சிட்டோம். பாட்டி இவ்வளவு ஆர்டர் வந்திருக்கு, இவ்வளவு லாபம் வந்திருக்குன்னு அவங்க சொல்லும்போது என்னோட வயசு, உடல் நிலையை மறந்து நானும் இன்னும் ஆர்வமாக, அடுத்தடுத்து என்ன பண்ணலாம்னு ஐடியா கொடுத்துட்டிருக்கேன். ஆன்லைனிலும் என்னை அப்டேட் பண்ணிட்டு இருக்கேன். பத்து வருஷத்துக்கு முன்னாடி ஆயிரங்களில் இருந்த என்னோட பிசினஸ்ஸை இப்போ என் பேரக்குழந்தைகள் லட்சத்தில் கொண்டு போயிருக்காங்க. உண்மையில இது என் குடும்பத்தோட வெற்றி" என்கிறார் மகிழ்ச்சியுடன்.