Published:Updated:

`காய்கறி விலை எப்போது இறங்கும்?' சொல்கிறார் கோயம்பேடு வியாபாரிகள் சங்கத் தலைவர் சௌந்தரராஜன்!

`காய்கறி விலை எப்போது இறங்கும்?' சொல்கிறார் கோயம்பேடு வியாபாரிகள் சங்கத் தலைவர் சௌந்தரராஜன்!
`காய்கறி விலை எப்போது இறங்கும்?' சொல்கிறார் கோயம்பேடு வியாபாரிகள் சங்கத் தலைவர் சௌந்தரராஜன்!

இந்த விலைவாசியில் காய்கறிகளை எப்படியெல்லாம் குறைவாக சமையலில் பயன்படுத்தலாம் என்று சில குடும்பத் தலைவிகளிடம் கேட்டோம். 

`நாலு நாள் முன்னாடி தக்காளி கிலோ 20 ரூபாதானே இருந்துச்சு. திடீர்னு 80 ரூபா சொல்றீங்களே'; `என்னது கொத்தமல்லி கட்டு 120 ரூபாயா' - காய்கறி விலை உச்சத்துக்கு ஏறும்போதெல்லாம் பொதுமக்களும் இப்படி பீப்பி எகிறிக் கதறுவது அடிக்கடி நிகழ்வதுதான். கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கேரட்டும் பீன்ஸும் தங்க விலைக்கு விற்றுக்கொண்டிருக்கிறது. தக்காளி கிலோ 50 ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருக்கிறது. `10 ரூபாய்க்கு கொத்தமல்லி கொடுங்க' என்றால், நாலே நாலு கொத்தமல்லிக் குச்சியைக் கொடுத்து `இதுக்கு மேல கட்டுப்படியாகாதுங்க' என்கிறார்கள். ஒவ்வொரு விலையேற்றத்தின்போதும் விளைச்சல் இல்ல, வரத்து இல்ல, பெட்ரோல், டீசல் விலை ஏறிப்போச்சு, மழையில செடிகொடியெல்லாம் அழுகிப் போச்சு என்று காரணம் சொல்வார்கள். இந்த முறை தண்ணீர்ப்பஞ்சம் காரணமாகி விட்டது. இந்த நேரத்தில் சமாளிக்கிறீர்கள் என்று சில குடும்பத் தலைவிகளிடமும், விலை எப்போது இறங்கும் என்று கோயம்பேடு வியாபாரி சங்கத் தலைவர் சௌந்தரராஜனிடம் கேட்டோம்.

`காய்கறி விலை எப்போது இறங்கும்?' சொல்கிறார் கோயம்பேடு வியாபாரிகள் சங்கத் தலைவர் சௌந்தரராஜன்!
`காய்கறி விலை எப்போது இறங்கும்?' சொல்கிறார் கோயம்பேடு வியாபாரிகள் சங்கத் தலைவர் சௌந்தரராஜன்!

``கோயம்பேடு மாதிரி மொத்தவிலை கடைகள்லேயே கத்திரிக்காய் கிலோ 30 ரூபா, தக்காளி 30 டு 40 ரூபா, இஞ்சியும் அவரைக்காயும் கிலோ  90 ரூபா, பீன்ஸ் 120 ரூபா, கேரட் 60 ரூபா. கொத்துமல்லி மொத்த விலை மார்க்கெட்டிலேயே ஒரு கட்டு 50 ரூபாங்க. 20 ரூபாய்க்கு வித்துக்கிட்டிருந்த பச்சை மிளகாய் கிலோ 70 ரூபாய்க்கு விக்கிறாங்க. எட்டு ரூபாய்க்கு வாங்கறதுக்கு ஆளில்லாம கிடக்கிற முட்டைக்கோஸ் இன்னிக்கு கிலோ 30 ரூபாய்க்கு விக்குதுங்க. இதெல்லாம் மார்க்கெட்டுக்கு வர்றப்போ 15 ரூபா கூடித்தான் ஜனங்களுக்குக் கிடைக்கும். இதையே சூப்பர் மார்க்கெட்ல வாங்கினீங்கன்னா, 20 ரூபாயாவதுகூட இருக்கும். ஏழைகள் எப்படி சாப்பிடுவாங்கன்னு தெரியலை. ஆறுதலான காய்கறிகள்னா உருளைக்கிழங்கும் முருங்கைக்காயும்தான். பெல்லாரி வெங்காயம்கூட ரூபாய் 20-க்கே கிடைக்குது. சாம்பார் வெங்காயம் எப்பவும்போல கொஞ்சம் கெத்தா 40, 50ன்னுதான் இருக்குது. கடந்த 50 வருசத்துல இப்படியொரு விலையேற்றத்தை நான் பார்த்தது இல்லீங்க. மழை இல்ல, தண்ணியில்ல, போர் வாட்டரும் கீழே இறங்கிப் போச்சு. விளைச்சல் குறைஞ்சுப் போச்சு.  காய்கறி விலை எல்லாம் கூடிப் போச்சு. இப்ப உடனே மழை வந்தாக்கூட உடனே விலை  குறையாதுங்க. ரெண்டு மாசத்துக்கு அப்புறம்தான் விலை குறையும்'' வருத்தமாகச் சொல்கிறார் வியாபாரி சங்கத் தலைவர் சௌந்தரராஜன். 

இந்த விலைவாசியில் காய்கறிகளை எப்படியெல்லாம் குறைவாக சமையலில் பயன்படுத்தலாம் என்று சில குடும்பத் தலைவிகளிடம் கேட்டோம். 

கோவில்பட்டியைச் சேர்ந்த ராஜேஸ்வரி, ``நாங்க சைவம் மட்டும்தான் சாப்பிடுவோங்க. எங்களுக்கு காய்கறியைவிட்டா வேற வழியே கிடையாது. இந்த மாதிரி விலை எக்குத்தப்பா ஏறிப்போச்சுனா, உளுந்தஞ்சோறு, எள்ளுத் துவையல், புளித் தண்ணி, பொட்டுக்கடலை துவையல்னு சமாளிப்போம். சின்ன வெங்காயத்தைப் பாதியா குறைச்சுட்டு பெல்லாரியைச் சமையல்ல சேர்த்துப்போம்'' என்கிறார். 

கோடம்பாக்கத்தைச் சேர்ந்த செல்வி, ``தக்காளியைக் குறைச்சுப் போட்டாலும் ஒரு வாரத்துக்கு ஒரு கிலோவாவது தேவைப்படுதே. அதனால, ரசத்துக்குக்கூட வெறும் புளிதான். கொத்தமல்லி தழைக்குப் பதிலா, தனியா தட்டிப் போட்டு தாளிச்சுடுவேன்'' என்கிறார் வருத்தமாக. 

`காய்கறி விலை எப்போது இறங்கும்?' சொல்கிறார் கோயம்பேடு வியாபாரிகள் சங்கத் தலைவர் சௌந்தரராஜன்!


செல்வி | ஜூலி | ராஜேஸ்வரி

``10 ரூபா கீரைக் கட்டு 20 ரூபாய்க்கு விக்கிறாங்க. நல்லா தேறின தேங்காய் வாங்கணும்னா 40 ரூபான்னு விலை சொல்றாங்க. எங்க வீட்ல முருங்கை மரம், ஒரு தென்னமரம்னு இருக்கிறதால கீரையும் தேங்காயும் கடையில வாங்கறதில்லே. காய்கறிகள்ல இப்போதைக்கு விலை குறைச்சலா இருக்கிற உருளை, முட்டைக் கோஸ், கத்திரிக்காய் மாதிரி காய்கறிகளை சமைச்சு சமாளிக்கிறோம். இல்லன்னா இருக்கவே இருக்குது முட்டை'' என்கிறார் திருச்சியைச் சேர்ந்த ஜூலி. 

வெங்காயம் நறுக்கினால்தான் கண்ணீர் வரும். இன்றைய நிலைமையில் காய்கறிகளின் விலையைக் கேட்டாலே கண்ணீர் வரும்போல இருக்கிறது.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு