Published:Updated:

குடும்ப ஒற்றுமையைச் சீர்குலைக்கிறதா டிக் டாக்- என்ன சொல்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்?

குடும்ப ஒற்றுமையைச் சீர்குலைக்கிறதா டிக் டாக்- என்ன சொல்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்?

திருமணமான பெண்கள் இது போன்ற சமூக ஊடகங்களைப் பயன்படுத்தக் கூடாது என்பது சரியல்ல. தம்பதிகளிடையே போதிய புரிதல் இருந்தால் எந்தப் பிரச்னையும் ஏற்படாது. தங்களுக்கான எல்லைகளை இருவரும் சேர்ந்து பேசி முடிவெடுக்கலாம்.

ளம் தலைமுறையை முற்றுமுழுதாக வளைத்துப் போட்டிருக்கிறது டிக் டாக் ஆப். சமூக ஊடகங்களைத் திறந்தாலே, வரிசை கட்டி நிற்கின்றன வீடியோக்கள். ஆண், பெண் வேறுபாடில்லாமல் விதவிதமாக வீடியோக்கள் எடுத்துப் பதிவு செய்கிறார்கள். தொடக்கத்தில் கொண்டாட்டமாகவும், பொழுதுபோக்காகவும் இருந்த டிக் டாக் இப்போது விபரீதமாகவும் உருவெடுத்து நிற்பதுதான் அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது. 

குடும்ப ஒற்றுமையைச் சீர்குலைக்கிறதா டிக் டாக்- என்ன சொல்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்?

பெரம்பலூர் மாவட்டம், சீராநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி அனிதா, மகன் அனீஷ், மகள் மோனிஷா மூவரும் சீராநத்தத்தில் வசித்து வந்தனர். அனிதாவுக்கு `டிக் டாக்'கில் அதிக ஈடுபாடு. வீட்டில் குழந்தைகளைக்கூட சரியாகக் கவனிக்காமல், எப்போதும் `டிக் டாக்'கிலேயே மூழ்கியிருக்கிறார் என்று கணவர் சுரேஷிடம் உறவினர்கள் புகார் செய்துள்ளனர். 

சமீபத்தில் ஒருநாள், மகள் மோனிஷா அடிபட்டு வலியால் துடித்திருக்கிறார். அப்போது அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், `டிக் டாக்' கில் மூழ்கியிருந்ததாக கணவர் சுரேஷுக்கு புகார் சென்றுள்ளது. இதைத் தொடர்ந்து சுரேஷ், தன் மனைவி அனிதாவைக் கண்டித்துள்ளார். கணவன் திட்டியதால் மனமுடைந்த அனிதா விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டார். மேலும், அவர் விஷம் குடித்ததையும் `டிக் டாக்'கில் வீடியோவாக்கி வெளியிட்டுள்ளார். 

குடும்ப ஒற்றுமையைச் சீர்குலைக்கிறதா டிக் டாக்- என்ன சொல்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்?

"சுரேஷ் - அனிதா தம்பதி விஷயத்தில் மட்டுமல்ல, இன்று பல தம்பதிகளிடையே விரிசலை ஏற்படுத்துவதுடன்,  குடும்ப உறவுகளைச்

குடும்ப ஒற்றுமையைச் சீர்குலைக்கிறதா டிக் டாக்- என்ன சொல்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்?

சிதைக்கும் ஊடகமாகவும் 'டிக் டாக்' மாறியிருக்கிறது. அதனால்தான் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன"  என்கிறார் உளவியல் நிபுணர் ஜெயமேரி. 

மேலும், சமூக ஊடகங்களை எப்படிக் கையாளவேண்டும் என்பது குறித்து விரிவாகப் பேசினார் அவர்.

"பயனுள்ள தகவல்களையும் மற்றவர்களுடன் சொல்லி சிரித்து, மகிழ்ச்சியடைய வேண்டிய விஷயங்களையும் பொதுவெளியில் பகிர்ந்து கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், பெரும்பாலான பெண்கள் பொதுவெளியில் பகிரக்கூடாத பல விஷயங்களை வெளியிடுகிறார்கள். காரணம், மற்றவர்களின் பார்வை தன்மீது இருக்கவேண்டும் என்கிற எண்ணம். பாராட்டுகளுக்கு அடிமைப்பட்டுக் கிடப்பதால் தங்களது எல்லை எது என்பதை மறந்து விடுகின்றனர். இதனால் காலப்போக்கில் கணவன், பிள்ளை எனக் குடும்பத்தை மறந்து `டிக் டாக்'கே கதி எனக் கிடக்கிறார்கள்.  

நாம் எதைச் செய்தாலும், `அதை ஏன் செய்கிறோம்', `அதனால் என்ன பயன்', `என்னென்ன பின்விளைவுகள் ஏற்படும்' என்பதுபற்றி யோசிக்கவேண்டும். 'டிக் டாக்'கில் வீடியோ போடுவதால் என்ன பலன் கிடைக்கப் போகிறது..? சினிமா, தொலைக்காட்சித் துறைகளில் வாய்ப்புத் தேடுபவர்களுக்கு இது பயனளிக்கலாம். அந்தத் தேடலே இல்லாத பெண்கள் ஏன் வீடியோக்கள் போடவேண்டும்? தற்காலிக சந்தோஷத்துக்காக, முகம் தெரியாதவர்களின் பாராட்டுக்கு ஆசைப்பட்டு அதைச் செய்கிறார்கள் என்பதுதான் வேதனை. தன் மீதான கவனத்தைத் தக்க வைப்பதற்காக சில நேரங்களில் வரம்பை மீறி விடுகிறார்கள். 

குடும்ப ஒற்றுமையைச் சீர்குலைக்கிறதா டிக் டாக்- என்ன சொல்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்?

`டிக் டாக்' பயன்படுத்துவது முற்றிலும் தவறு என்று சொல்லவில்லை. ஆனால், நாம் அதில் பகிரும் விஷயங்கள், நம்மையும், நம் குடும்பத்தையும் பாதிக்காதவாறு பார்த்துக்கொள்ளவேண்டும். ஆபாசமான அசைவுகளுடன் நடனமாடுவது, தவறான வசன உச்சரிப்புகளுக்கு வாயசைப்பது போன்ற தேவையில்லாத, எதற்கும் பயனற்ற விஷயங்களை கண்டிப்பாகச் செய்யக் கூடாது. நாம் செய்யும் தவறான செயல்களுக்காக, நம்மைப் பின் தொடர்பவர்கள், பாராட்டுபவர்கள் தவறான நோக்கத்துடன்தான் நம்மைப் பார்ப்பார்கள். பெரும்பாலும் இது அழிவை நோக்கியே அழைத்துச் செல்லும்; குடும்ப வாழ்க்கையைச் சிதைக்கும். 

குடும்ப ஒற்றுமையைச் சீர்குலைக்கிறதா டிக் டாக்- என்ன சொல்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்?

சுய கட்டுப்பாடு உள்ளவர்கள் மட்டுமே ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிக் டாக் போன்ற சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தவேண்டும். அப்படி இருக்க முடியாதவர்கள் இதுபோன்ற ஆப்களை டெலிட் செய்துவிடுவது நல்லது'' என்கிறார் உளவியல் ஆலோசகர் ஜெயமேரி. 

`கணவன் மனைவியிடையே சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது பற்றித் தெளிவிருந்தால் பிரச்னைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம்' என்கிறார் மனநல மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கம்.

``இது போன்ற ஆப்களைப் பயன்படுத்தி வீடியோக்கள் பதிவிடும்போது உடனடி அங்கீகாரம் கிடைக்கிறது. பிறர் நம்மை அங்கீகரிக்க வேண்டும், பாராட்டவேண்டும் என்பது மனிதர்களிடையே பொதுவாக காணப்படும் ஓர் எதிர்பார்ப்புதான். தங்களது திறமைகளை வெளி உலகுக்குக் காட்ட இது ஒரு நல்ல தளமாக இருக்கிறது. அதேநேரம்,  ஒருமுறை பாராட்டு கிடைத்தால் அதை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் உண்டாகிவிடும். இதனால், சிலர் அதற்கு அடிமையாகி முழுநேரத்தையும் அதிலேயே செலவழிக்கின்றனர். அதனால் அன்றாடப்பணிகளில் எந்தத் தடையும் ஏற்படாமல் பார்த்துக்கொண்டால் எந்தப் பிரச்னையும் ஏற்படாது.

குடும்ப ஒற்றுமையைச் சீர்குலைக்கிறதா டிக் டாக்- என்ன சொல்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்?

திருமணமான பெண்கள் இது போன்ற சமூக ஊடகங்களைப் பயன்படுத்தக் கூடாது என்பது சரியல்ல. தம்பதிகளிடையே போதிய புரிதல் இருந்தால் எந்தப் பிரச்னையும் ஏற்படாது. தங்களுக்கான எல்லைகளை இருவரும் சேர்ந்து பேசி முடிவெடுக்கலாம். எல்லா விஷயத்திலும் நன்மையும் உண்டு, தீமையும் உண்டு. அதைச் சரியாகக் கையாண்டால் எந்தப் பிரச்னையும் ஏற்படப் போவதில்லை'' என்கிறார் அவர்.