Published:Updated:

``100 கோடி வருமானம்... ராயல்டி கேட்ட ஶ்ரீப்ரியா... அப்பாவுக்கு பெடிக்யூர்!" - லதா மோகனின் பிசினஸ் சுவாரஸ்யம்

``100 கோடி வருமானம்... ராயல்டி கேட்ட ஶ்ரீப்ரியா... அப்பாவுக்கு பெடிக்யூர்!" - லதா மோகனின் பிசினஸ் சுவாரஸ்யம்

ஆண்டுக்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டும் தன் வெற்றிக் கதையைச் சொல்கிறார், லதா மோகன்.

சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் பியூட்டி பார்லர் துறையில் பெரிய மாற்றத்தை உண்டாக்கியவர், லதா மோகன். `ஸ்பலான் இண்டியா பிரைவேட் லிமிடெட்' என்ற தன் நிறுவனத்தின் கீழ், இருபாலருக்குமான 50-க்கும் மேற்பட்ட பியூட்டி பார்லர்களை நடத்திவருகிறார். 450-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு முதலாளியான லதா மோகன், ஆண்டுக்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டுகிறார். தன் தொழிலில் நடந்த சென்டிமென்ட் மற்றும் சுவாரஸ்யமான விஷயங்களை, புன்னகையுடன் நினைவுகூர்கிறார், லதா மோகன்.

``100 கோடி வருமானம்... ராயல்டி கேட்ட ஶ்ரீப்ரியா... அப்பாவுக்கு பெடிக்யூர்!" - லதா மோகனின் பிசினஸ் சுவாரஸ்யம்

``அழகுக் கலைத்துறையில எனக்கிருந்த ஆர்வத்தை, பிசினஸ் பயணமா கொண்டுபோக நினைச்சேன். சென்னை மயிலாப்பூர்ல, 1981-ம் ஆண்டு `கன்யா'ங்கிற பெயர்ல முதல் பியூட்டி பார்லரைத் தொடங்கினேன். `வெற்றி கிடைச்சா சந்தோஷம்; தோல்வி கிடைச்சா பெரிய அனுபவம்'ங்கிற எண்ணத்துலதான் பிசினஸைத் தொடங்கினேன். அதனால, மனசுல பெரிசா பயமில்லை. நிறைய சவால், சிரமங்களுக்குப் பிறகு பிசினஸ் வேகமெடுத்துச்சு. புதிய கிளைகளைத் தொடங்கினேன். 

``100 கோடி வருமானம்... ராயல்டி கேட்ட ஶ்ரீப்ரியா... அப்பாவுக்கு பெடிக்யூர்!" - லதா மோகனின் பிசினஸ் சுவாரஸ்யம்

நடிகை ஶ்ரீப்ரியா என் நெருங்கிய தோழி. அவங்கதான், என் முதல் மற்றும் மூன்றாவது பியூட்டி பார்லர் கிளைகளைத் திறந்து வெச்சாங்க. என் பிசினஸ் வெற்றி பெற்றதால, `எனக்கு நீ ராயல்டி தரணும்'னு என்கிட்ட கிண்டலாகப் பேசுவார் ஶ்ரீப்ரியா. எங்கம்மா ஜானகி கைராசியானவர். என் ஷோரூமின் முதல் கிளை முதல் பிற்காலத்துல தொடங்கிய பல கிளைகளிலும் கல்லாப்பெட்டியில் முதலில் அம்மாதான் பணம் போடுவார். என் அப்பாதான், மறைந்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன். நான் தொழில் தொடங்கினபோது, `ஏம்மா... உனக்கு என்னம்மா குறை? பிசினஸ் பண்றேன்னு சிரமப்படாதே'னு அப்பா சொன்னார். ஒருகட்டத்தில் என் முடிவுக்கு அவர் அரை மனதா சம்மதம் சொன்னார்." - லதா மோகனின் பிசினஸ் பயணம் இப்படித்தான் ஆரம்பமானது. ஆனால், தன் உழைப்பால் கோடிகளில் வருமானம் ஈட்டும் அளவுக்கு பிசினஸ் பயணத்தை வெற்றிப் பாதைக்குக் கொண்டுசென்றிருக்கிறார். அதனால் மகள் லதாவைப் பாராட்டி பூரிப்படைந்திருக்கிறார் எம்.எஸ்.விஸ்வநாதன். அது குறித்துப் பேசும் லதா...

``100 கோடி வருமானம்... ராயல்டி கேட்ட ஶ்ரீப்ரியா... அப்பாவுக்கு பெடிக்யூர்!" - லதா மோகனின் பிசினஸ் சுவாரஸ்யம்

``என் பிசினஸ் வெற்றிகரமா போனதில் அதிக சந்தோஷப்பட்டவரும் என் அப்பாதான். பிற்காலத்தில், `நீ பல குடும்பங்களுக்குச் சாப்பாடு போடுறே. நல்ல காரியம் பண்ணேம்மா! என் பேச்சை மீறி பிசினஸை தொடங்கினது நல்லதுதாம்மா'னு உருக்கமாகப் பேசினார் அப்பா. படிப்பை முடிச்சுட்டு, என் மகன் விக்ரம் மோகனும் என்னுடைய தொழிலுக்கே வந்தான். அப்போ, `என்னம்மா... என் பேரன் வெளிநாட்டுல படிச்சுட்டு, சலூன் பிசினஸ் பண்றேன்னு சொல்றான். இது சரியா வருமா?'னு அப்பா என்கிட்ட கேட்டார். `சரியா வரும்பா'னு சொன்னேன். 

அப்பாவை ஒருமுறை எங்க சலூனுக்கு வரவெச்சு, அவருக்கு முடிவெட்டிவிட்டான் என் மகன். மேலும், முதல் முறையாக அப்பாவுக்கு பெடிக்யூர் செய்துவிட, அவர் நெகிழ்ந்துபோயிட்டார். `சாதாரண முடி வெட்டுற விஷயத்துல இவ்வளவு புதுமைகளா... ஆச்சர்யமா இருக்குது'னு சொன்னார். தொழிலில் நேர்மை, பேச்சிலும் செயலிலும் நம்பகத்தன்மை, கஷ்டமரை ஏமாற்றக் கூடாதுனு அப்பா என்கிட்ட சொன்னபடிதான் தொழில் செய்துகிட்டிருக்கேன். அவர் இறக்கும் முன்பு, `நீ, உன் தனி அடையாளத்துடன் சாதிச்சுட்டேமா. ஓர் அப்பாவா எனக்கு ரொம்பப் பெருமையா இருக்குது'னு மனதார வாழ்த்தினார்.

``100 கோடி வருமானம்... ராயல்டி கேட்ட ஶ்ரீப்ரியா... அப்பாவுக்கு பெடிக்யூர்!" - லதா மோகனின் பிசினஸ் சுவாரஸ்யம்

இன்றைக்கு மூணு பிராண்டுகள் பெயர்ல 50-க்கும் மேற்பட்ட பியூட்டி பார்லர்களை நடத்துறோம். நிறைய வி.வி.ஐ.பி-களும் எங்களுடைய ரெகுலர் வாடிக்கையாளர்கள். வெளிநாடுகளில் இருப்பதுபோல எங்க ஊழியர்களுக்கும் நிறைய சலுகைகளைக் கொடுக்கிறோம். அதனால குடும்ப உறுப்பினர்கள்போல எங்க ஊழியர்கள் அன்பாக வேலை செய்றாங்க. இந்திய அளவில் எங்க நிறுவனம் நல்ல வளர்ச்சி நிலையில் இருக்குது!" மகிழ்ச்சியுடன் கூறுகிறார், லதா மோகன். 

லதா மோகனின் விரிவான பேட்டி மற்றும் அவரது பிசினஸ் பயணத்தை முழுமையாகத் தெரிந்துகொள்ள... அவள் விகடன் `தொழிலாளி டு முதலாளி' என்ற தொடரில் படிக்கலாம்.