சர்டிஃபிகேட்களை சாப்பிட்ட ஃபைல்!

என் மார்க் ஷீட், முக்கியமான ஆவணங்களை எல்லாம் பி.வி.சி. ஃபைலில் வைத்து, பீரோவில் அடுக்கி வைத்தேன். ஒரு மாதம் கழித்து ஓர் ஆவணம் தேவைப்பட, ஃபைலைத் திறந்தபோது அதிர்ச்சியில் உறைந்துவிட்டேன். முதலாவதாக வைத்திருந்த என் பள்ளிச் சான்றிதழும், இறுதியாக வைத்திருந்த கல்லூரிச் சான்றிதழும் ஃபைலிலேயே ஒட்டிக் கொண்டுவிட்டன. அதில் இருந்த எழுத்துக்கள் எல்லாம் ஃபைலின் பக்கங்களுக்கு இடம் பெயர்ந்திருக்க, கிட்டத்தட்ட வெற்றுக் காகிதமாக இருந்தன என் சான்றிதழ்கள். இப்போது, டூப்ளிகேட் சான்றிழுக்கு விண்ணப்பித்திருக்கிறேன்.

இது தெரிந்த என் தோழி, தன் வீட்டு பீரோவைத் திறந்து காட்டி விஷயத்தை விளக்கியபோதுதான், ஃபைல் செய்வதிலிருக்கும் சூட்சமம் புரிந்தது. ''இதோ பார்... எப்போது டாக்குமென்ட்களை ஃபைல் பண்ணினாலும், மேற்புறம், அடிப்புறம் ஒரு பேப்பர் வைத்து பேக் செய்து வைப்பதுதான் பாதுகாப்பு. பிளாஸ்டிக்குகள் ஒரு விதமான திரவத்தை வெளியேற்றி எழுத்துக்களை காலி செய்துவிடும் என்பதாலேயே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை'' என்றாள் தோழி.

ஃபைலுக்குள் வைப்பதாலேயே ஆவணங்கள் பத்திரம் ஆகிவிடாது!

- பி.கவிதா, கோவிலாம்பூண்டி

சிக்கலை உண்டாக்கிய சீப்பு!

எங்கள் வீட்டருகே உள்ள பெரியவருக்கு முதுகில் ஒருவித படை வந்தது. டாக்டரிடம் காண்பித்தபோது, அவர் சொன்ன விஷயம் அதிர்ச்சியைக் கொடுத்தது. ''நீங்கள் சீப்பால் முதுகு சொறியும் பழக்கம் உள்ளவரா?'' என்று கேட்டிருக்கிறார். பெரியவரும் ஒப்புக்கொள்ள, ''தலையில் உள்ள எண்ணெய்ப் பிசுக்கு, அழுக்கு, கண்ணுக்குத் தெரியாத பொடுகு... இவையெல்லாம் ஒட்டிக் கொண்டிருக்கும் சீப்பால் சொறிந்ததால், அந்தக் கிருமிகள் தோல் வழியே கலந்து இப்படியான பாதிப்பை உண்டாக்கி உள்ளது'' என்றாராம் டாக்டர்.

அந்தந்தப் பொருட்களை அதற்குரிய வேலைகளுக்கு மட்டும் பயன்படுத்துவோம்!

- கி.மஞ்சுளா, கரூர்

பயமுறுத்தும் ஃப்ரோஸன் ஷோல்டர்!

கடந்த ஐந்து மாதங்களாக இடது கையை அசைக்கக்கூட முடியாமல் மிகவும் கஷ்டப்படுகிறேன். இதற்கு 'ஃப்ரோஸன் ஷோல்டர்' அல்லது 'பெரி ஆர்த்தரைடீஸ்' என்று பெயர் சொல்லும் மருத்துவர்கள், ''இது, சர்க்கரை நோயாளிகளை அதிகம் தாக்கும். கைகளுக்கு அசைவு கொடுக்கும் உடற்பயிற்சிகளைச் செய்து கொண்டிருந்தாலே போதும் இந்த வலி வந்திருக்காது'’ என்கிறார்கள். இப்போதுள்ள சூழ்நிலையில் வாழ்க்கை ஓடும் வேகத்தில் உடற்பயிற்சிக்கு எல்லாம் நேரம் ஒதுக்குவதில்லை பலர். ஆனால், பல நோய்களுக்கும் அதுவே கவசம் என்பது, நோய் வந்த பின்னான மருத்துவர்களின் கவுன்சிலிங்கில் புரியும்போது 'தவறவிட்டு விட்டோமே’ என்ற புலம்பல்தான் மிஞ்சுகிறது.

கண் இருக்கும்போதே சூரிய நமஸ்காரம் செய்யுங்கள் தோழிகளே!

- இந்திரா சந்திரன், திருச்சி

ஆட்டம் காட்டிய மருந்து!

சேலத்தில் உள்ள ஒரு மருந்துக் கடையில், கண்ணில் போடுவதற்கான சொட்டு மருந்து வாங்கினேன். அதை ஆட்டிப் பார்த்தபோது... அட்டைப்பெட்டியின் உள்ளே பொருள் இருக்கும் சத்தம் கேட்டது. திருப்தியோடு வீட்டுக்கு வந்துவிட்டேன். பிறகு, திறந்து பார்த்தால்... மருந்துக் குப்பி இல்லை; மருந்தை உபயோகிக்கும் முறை குறித்து அச்சிடப்பட்டிருக்கும் சீட்டு மட்டுமே இருந்தது. அட்டைப்பெட்டியை ஆட்டிப் பார்த்தபோது, அந்த சீட்டு ஆடியதைத்தான் மருந்து குப்பி இருப்பதாக நினைத்துவிட்டேன். மீண்டும் கடைக்கு எடுத்துச் சென்று, விவரத்தைச் சொன்னேன். ஆனால், எளிதில் அதை ஏற்றுக் கொள்ளவில்லை கடைக்காரர். நீண்ட நேரம் வாதாடியவர், இறுதியாகத்தான்... அதுவும் வேண்டா வெறுப்பாக பொருளை மாற்றித் தந்தார்.

இப்படி அட்டைப்பெட்டிகளில் வரும் மருந்து உள்ளிட்ட பொருட்கள் வாங்கும்போது, கடையிலேயே திறந்து பார்த்து செக் செய்துவிட்டால்... சிரமமும் அலைச்சலும் குறையுமே!

- ஆர்.ஜி.மகாலட்சுமி, சேலம்