ஒரு பெண்ணின் வாழ்க்கையில் பல்வேறு கட்டங்கள் இருந்தாலும், அவற்றில் முக்கியமானது வளரிளம் பருவம். சென்ற தலைமுறைகளில் வீட்டிலிருக்கும் இளம்பெண்களுக்கு அரவணைப்பாகவும் அக்கறை காட்டவும் பாட்டிமார்கள், அத்தைமார்கள் அவர்களைச் சுற்றி இருந்தார்கள். தாயிடமும் தோழியிடமும் பகிரமுடியாத பல விஷயங்களைக்கூட, இவர்களிடம் பகிர்ந்து நிவர்த்தி பெறமுடிந்தது. பல இல்லற அம்சங்களைக்கூட ஜாடைமாடையாகவோ நேரடியாகவோ அதன் அவசியத்தைப் பொறுத்து, வளரிளம் வயதினருக்கு தந்து வந்தார்கள் மூத்த பெண்கள். ஆனால், இன்றைய 'நியூக்ளியர்’ குடும்பச் சூழலில் டீன் ஏஜ் பெண்கள் மென்று விழுங்கும் அவஸ்தைகள் சொல்லிமாளாது.

இதைப் பற்றிப் பேசும் திருச்சியைச் சேர்ந்த சீனியர் மருத்துவர் டாக்டர் எஸ்.ராமேஷ்வரி நல்லுசாமி, ''என்னிடம் வரும் பல டீன் ஏஜ் பெண்களின் தாய்மார்களே பெண்களின் அந்தரங்கக் கூறுகளில் போதிய தெளிவின்றி விழித்துத் தடுமாறும்போது, அவர்களின் வளர்ப்பில் அந்த டீன் ஏஜ் பெண்களின் பாடு பரிதாபகரமானது இல்லையா?'' என்று ஏகத்துக்கும் வருத்தம் காட்டியதோடு, இந்தச் சிக்கல் பற்றி விரிவாக பாடமே நடத்திவிட்டார்.

வளரிளம் மகளிர் சிறப்பு மருத்துவராக 40 ஆண்டுகளுக்கும் மேல் சேவையாற்றிக் கொண்டிருக்கும் ராமேஸ்வரி, இங்கே நடத்தும் பாடங்கள்... டீன் ஏஜ் பெண்களுக்கானவை மட்டுமல்ல... அவர்களின் நல்வளர்ப்பினை தர விழையும் தாய்மார்களுக்கும் உரியது.

பூப்படைவு பூகம்பம் !

''முன்பெல்லாம் பூப்படைவுக்கான வயது 14 - 15 ஆக இருந்தது. மாறிப்போன உணவூட்டத்தால், தற்போது அந்த வயது 11 - 13 என்று குறைந்திருக்கிறது. பூப்படைவை ஒட்டி இரண்டு பிரச்னைகள் வரலாம். ஒன்று முன்கூட்டிய பூப்படைவு (precocious puberty)மற்றொன்று தாமதமான பூப்படைவு (Delayed puberty). 8 வயது மற்றும் அதற்கு முன்பாகவே நிகழ்ந்துவிடும் பூப்படைவு மிகவும் அரிதான எண்ணிக்கையில் அமைகிறது. மூளையின் ஹைப்போதாலமஸ் குளறுபடியினாலோ... ஹார்மோன் சுரப்பின் தடுமாற்றத்தினாலோ நிகழும் வினை இது. மூளை பாதிப்பு உறுதி செய்யப்பட்டால், நரம்பியல் மருத்துவரின் மேல் சிகிச்சை அவசியப்படும். ஹார்மோன் பாதிப்பு எனில், அதற்கான காரணத்தைக் கண்டறிந்து மாதவிலக்கையே சில வருடங்களுக்குத் தள்ளி வைக்க மருத்துவத்தில் வழி இருக்கிறது.

16 வயதைக் கடந்தும் பூப்படைவு அடையாததை... தாமதம் என்று சொல்லலாம். ஊட்டச்சத்துக் குறைவு, ரத்தச்சோகை, பிட்யூட்டரி சுரப்பு குறைவது போன்றவை காரணங்களாக அமைந்திருக்கும். இப் பிரச்னைக்கும், துவக்கத்திலேயே மருத்துவரை அணுகினால், எளிமையான மருந்துகள் மூலம் நிவாரணம் பெற முடியும்.

இவற்றோடு, 'ஹைமென்' எனப்படும் கன்னித்திரை தடிமனாக இருந்தாலும் பூப்படைவு நேராது. எளிய சிகிச்சை மூலம் இதற்கும் விடிவு காணலாம். இந்தக் காரணங்கள் தவிர்த்து... மரபு ரீதியான காரணங்களும் பூப்படைவைத் தாமதமாக்கும். இந்த வகை பாதிப்பு அரிதுதான் என்றாலும், மருத்துவ ஆலோசனையைத் துவக்கத்திலேயே பெறுவதன் மூலம் நீண்ட கால தொந்தரவுகளைத் தவிர்க்கலாம்.

மாதவிலக்குப் பிரச்னைகள் !

பூப்படைவை அடுத்த, இரண்டு மற்றும் மூன்றாவது மாதத்தில் சிலருக்கு அதிகப்படியான ரத்தப்போக்கு நிகழலாம். சிலசமயம் மருத்துவ மனையில் சேர்த்து ரத்தம் கொடுத்தாக

வேண்டிய அளவுக்குக்கூட சீரியஸாகலாம். இந்தச் சூழலை முன்னரே அனுமானித்து தயாராக இருந்தால்... துவக்கத்திலேயே விரைந்து செயல்பட ஏதுவாக இருக்கும். பூப்படைவுக்குப் பிந்தைய ஒவ்வொரு சுழற்சியையும் கவனமாக கணக்கில் எடுத்து வரவேண்டும். பூப்படைவை அடுத்து முதல் இரண்டு வருடங்களுக்கு கருமுட்டை இல்லாமலேயே கூட மாதவிலக்கு நிகழலாம். இம்மாதிரியானவர்களுக்கு 2 அல்லது 3 மாதங்களுக்கு ஒருமுறை மாதவிலக்கு ஏற்படும். இது, தானாகவே சரியாகிவிடும் என்பதால் பயப்படத் தேவையில்லை.

அதேசமயம், ஒழுங்கற்ற மாதவிடாய் அடையாளத்துடன் தோன்றும் சினைப்பை நீர்க்கட்டிகள் (PCOD- Polycystic Ovarian Disease), உடனடியாக கவனித்தாக வேண்டிய ஒன்று. ஹார்மோன் சுரப்பில் சீரின்மை மற்றும் தொற்றுகளால் நிகழும் இந்த நீர்க்கட்டிகள் ஒழுங்கற்ற மாதவிலக்குடன்... குண்டாக இருப்பது, அதிகப்படியான உடல் ரோம வளர்ச்சி, பின்னங்கழுத்தில் அதிகப்படியான கொழுப்பு சேர்மானம் போன்றவற்றையும் ஏற்படுத்தலாம். சரியாக கவனிக்காது விட்டால், ஆண்களுக்கான டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் சுரப்பு அதிகரித்து, நீடித்த விளைவுகளை ஏற்படுத்தலாம்.

வலியுடன் கூடிய மாதவிலக்கு !

மாதவிலக்குக்கு முன்போ அல்லது பின்போ தொடர்ந்து 3 நாட்களுக்கு வலியிருந்தால் அதற்கு சினைப்பையில் தோன்றும் கட்டிகளும் ஒரு காரணமாகக்கூடும். இந்த ரக வலியின் துவக்க காலத்திலேயே மருத்துவப் பரிந்துரையின் கீழ் ஒரு ஸ்கேன் மூலம் சினைப்பை கட்டிகள் ஐயத்தை போக்கிக்கொள்ள வேண்டும். வெகு சிலருக்கு மாதவிலக்கை ஒட்டிய வலியானது அதிகமாகவும், வாந்தி மற்றும் மயக்கமும் காணப்பட்டால் உடனடியாக மருத்துவரைச் சந்தித்தாக வேண்டும்.

மனசும் பத்திரம் !

உடல் ரீதியான கவலைகளைப் போலவே, மனோரீதியான பிரச்னைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மாதவிலக்குக்கு முந்தைய தினங்களில் கோபம், மனஅழுத்தம், எரிச்சலான மனநிலை, உடல் ஊதிப்போனதான உணர்வு போன்றவை படுத்தலாம். ஆரம்பத்தில் இதற்கான கவுன்சலிங் அவசியம். புரிந்துகொண்டதும் மனநிலை எழுச்சிகளை வளரிளம் பெண்கள் இயல்பாக எதிர்கொள்வார்கள். தேர்வு நேரம் போன்ற கூடுதல் பதற்ற நாட்களில் கூடுதல் தொந்தரவாக உணர்பவர்களுக்கு விட்டமின் மாத்திரைகள் மூலமாக விடிவு உண்டு.

வெள்ளைப்படுதல் வார்னிங் !

கருமுட்டை வெளிப்படுதலின் வழக்கமான சுழற்சியில் 12 - 15 நாட்களின் இடைவெளியில் வெள்ளைப்படுதல் ஏற்படுவது இயல்பானது. வாடையற்றும் சளி போன்றும் இந்த வெளிப்படுதல் இருந்தால் கவலை தேவையில்லை. ஆனால், வாடையுடன் மஞ்சளாகவோ, ரத்தம் தோய்ந்தோ அரிப்புடன் வெள்ளைப்படுதல் நிகழ்ந்தால்... மருத்துவ சிகிச்சை அவசியம் மேற்கொண்டாக வேண்டும். அலட்சியம் காட்டினால் அதிகபட்சமாக ஃபெலோப்பியன் குழாய் அடைப்பு ஏற்படவும் நேரிடலாம்.

மார்பக சந்தேகங்கள் !

இந்த வயதினரின் மார்பகத்தைப் பொறுத்த கவலை என்பது, ஒன்று வளர்ச்சி போதாது என்பதாக இருக்கும். அல்லது அதீத வளர்ச்சி குறித்ததாக இருக்கும். இரண்டுமே இந்த வயதில் கவலைப்படுவதற்கல்ல. அவை நாள் போக்கில் சரியாகலாம். அல்லது உடல்வாகு மற்றும் மரபு ரீதியான காரணங்களால் மார்பகத்தின் இயல்பே அப்படியாக இருக்கலாம். மார்பகம் உள்ளிட்ட உடல் வனப்புக்கு ஊட்டமான உணவும், அளவான உடற்பயிற்சியுமே இயற்கை வழிகள்.

தவறக்கூடாத தடுப்பூசிகள் !

'ஹெப்படிடைடிஸ் ஏ’ மற்றும் 'ஹெப்படிடைடிஸ் பி’ போன்றவை வளரிளம் பருவத்தில் போட வேண்டிய முக்கிய தடுப்பூசிகள். குழந்தை மருத்துவரிடம் ஏற்கெனவே போடாது இருப்பின்... சின்னம்மை தடுப்பூசியைக் கட்டாயம் இந்த வயதில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதுதவிர 'ருபெல்லா’ எனப்படும் ஜெர்மன் தட்டம்மை தடுப்பூசியையும் போட்டுக் கொள்ளவேண்டும். ஏனெனில் இந்தத் தட்டம்மை பாதிப்பு, பிற்பாடு கர்ப்பஸ்திரிகளுக்கு வந்தால்... குறைபாடுள்ள குழந்தை பிறக்கும் அபாயம் இருக்கிறது.

இந்த வயதில் போட்டாக வேண்டிய மற்றொரு முக்கியமான தடுப்பூசி, கர்ப்பவாய் புற்றுநோய் தடுப்புக்கானது. பாலியல் செயல்பாடுகளுக்கு முன்பாக இந்த ஊசி போட்டுக்கொள்ள வேண்டும் என்பதற்காக, சிலர் திருமணத்துக்கு ஆறு மாதங்கள் முன்பாக வருவார்கள். அந்த சமயத்தில் போட்டுக் கொள்வது, அடுத்து வயிற்றில் வளரப்போகும் சிசுவை பாதிக்கும் என்பதால் அது உசிதமல்ல. இந்தத் தடுப்பூசி போடுவதற்கான துவக்க வயது 13'' என்று பாடங்களை முடித்தார் டாக்டர்.

சின்ன மனுஷிக்கு பெரிய கவனிப்புகள் கொடுப்போம்!