ஓவியம்: கண்ணா
வடிவேலு

போன வாரம் மதுரையில ஒரு தங்கச்சியப் பாத்தேன். ''நீங்க 'அவள் விகடன்’ல எழுதுற தொடர, தொடர்ந்து படிக்கிறேண்ணே... சொந்த பந்தங்கள பத்தி நல்லா எழுதுறீங்கண்ணே’னு ரொம்ப வாஞ்சையா பாராட்டுனாக. சந்தோசம்னா சந்தோசம்... அப்புடி ஒரு சந்தோசம் எனக்கு.

என் மனசத் தொட்டு சொல்றேன் தாய்களா... இப்பக் கொஞ்ச நாளாத்தேன் நான் ரொம்ப நிம்மதியா இருக்கேன். இந்த வாழ்க்கை, ஓட்டப்பந்தயம் மாதிரி வெரட்டிக்கிட்டே இருக்கு. நாமளும் பின்னங்காலு பிடரியில அடிக்கிற வேகத்துல ஓடிட்டே இருக்கோம். எதுக்கு... யாருக்காக இப்புடி ஓடுறோம்னு தெரியாமலே ஓடிட்டே இருக்கோம். ஒரு எடத்துல நிக்கறப்பதேன்... அதப்பத்தி எல்லாம் யோசிக்க நேரங் கெடைக்குது.

ஷூட்டிங் ஷூட்டிங்னு கால்ல ராட்டினத்தைக் கட்டிவிட்ட மாதிரி ஓடிட்டே இருந்தேன். சொந்த பந்தங்கள பாக்க முடியல, ஆத்தா, அம்மாகிட்ட பேச முடியல, குடும்பத்துல என்ன நடக்குதுங்கிறத தெரிஞ்சுக்க முடியல, பெத்த புள்ளைககிட்ட ஒக்காந்து பேச முடியல. படிப்பு, கல்யாணங் காட்சினு புள்ளைகளப் பத்தி யோசிக்க முடியல.

''அப்பா, உங்களை நேர்ல பாக்குறதவிட படத்துலயும் டி.வி-யிலயுந்தான் அதிகமா பாக்க முடியுது''னு எம்பொண்ணு ஒரு தடவை சொன்னப்ப ஆடிப் போயிட்டேன். ''மகராசி மகளே... ஒனக்காகத்தேன் இப்புடி அரக்கப்பரக்க ஓடிட்டு இருக்கேன்''னு சொன்னேன். ''நீங்க ஒக்காந்து பேசுறதுல கிடைக்குற சந்தோசத்தைவிட, ஓடி ஓடி சம்பாதிக்கறதுல எங்களுக்கு என்னப்பா சந்தோசம்?''னு மகராசி கேட்டா பாருங்க... சுடற பால்ல வாய வெச்ச பூனை மாதிரி சுருக்குனு இருந்துச்சு. 'குடும் பத்துக்காகத்தானே நாயா பேயா ஓடிட்டு இருக்கோம்... இன்னிக்கு வீட்டுல இருக்குற பொண்ணுகிட்ட பேசக்கூட நேரம் இல்ல... நாளைக்கு ஒரு எடத்துல கட்டிக் கொடுத்து அது புகுந்த வீட்டுக்குப் போனதுக்கு அப்புறம், நாம நெனச்சாலும், நெனச்ச நேரத்துக்குப் பேச முடியுமா, பாக்க முடியுமா?’னு அன்னிக்குத்தேன் யோசிச்சேன்... வேதனைப்பட்டேன். இத்தனைக்கும் நான் குடும்பத்துக்காக முடிஞ்ச மட்டும் நேரம் ஒதுக்குறவன். எனக்கே இப்புடினா, குடும்பத்தையே மறந்து இயங்குறவங்க எத்தன பேரு இருக்காக? இப்போ ஒரு குடும்பஸ்தனா நான் அனுபவிக்கிற சந்தோசம் கொஞ்சநஞ்சம் இல்ல. தாய், புள்ளைககிட்ட ஆற அமரப் பேசுறேன். அங்காளி பங்காளிககிட்ட நல்லது கெட்டதுகள பகிர்ந்துக்குறேன். எம்பொண்ணுக்கு நல்ல எடத்துல சம்பந்தம் பேசுறேன். பையன்கிட்ட மனசுவிட்டுப் பேசுறேன். எப்பவுமே எங்கம்மாவ கலந்து பேசாம எதையுமே நா செய்ய மாட்டேன். இப்போ இன்னும் அதிகமா எங்கம்மாவ நேசிக்கிறேன். குலதெய்வம், சொந்தபந்தம்னு வாழ்க்கையே ரொம்ப ரம்மியமா மாறிடிச்சு.

நான் சென்னை வந்துட்டா வாரத்துக்கு ஒரு தடவை சொந்த பந்தங்கள சென்னைக்கே வரச் சொல்லிடுறேன். கிராமத்தையே காலி பண்ணிட்டு வந்த மாதிரி அவுக எல்லாம் இங்கே வாரதும், அந்தச் சாப்பாடு, இந்தக் கூட்டுனு அலப்பறை கொடுக்கறதும் சினிமாவையே மிஞ்சுற மாதிரி சிரிக்க வைக்கும்.

என்னோட வீட்டுல நேபாளி பையன் ஒருத்தன் புதுசா வேலைக்குச் சேர்ந்தான். நான் வெளியே போயிருந்தப்ப, வீட்டுக்கு விருந்தாளிங்க வந்திருக்காக. அதுல ஒருத்தன் தண்ணி பார்ட்டி. மத்தவுகளுக்கு மத்தியில சரக்கு வாங்கிட்டு வரச் சொல்லக் கூச்சப்பட்டுக்கிட்டு, அந்த நேபாளிப் பையன்கிட்ட, 'பூஜைக்கு’ பொருள் வாங்கிட்டு வாப்பானு சூசகமா சொல்லி இருக்கான். சைக்கிள எடுத்துக்கிட்டுப் போய் திரும்பி வந்த அந்த நேபாளி பையன் கையில ஊதுபத்தி, சூடம், பூவு! இந்தக் கூத்த எங்கிட்ட சொல்லக்கூட முடியாம, பய மதுரைக்குப் போயி புலம்பி இருக்கான்.

கேமராவுக்கு காமெடி செஞ்சு ஊரையே சிரிக்க வைக்கிற நான், என் வீட்டுக்குள்ள நடக்குற காமெடிகளை எல்லாம் இப்போதேன் அதிகமாப் பாக்குறேன், ரசிக்கிறேன், சிரிக்கறேன். இந்த வாழ்க்கை இப்போதேன் எனக்கு சுவாரஸ்யமா தெரியுது. சொந்தத் தாயா புள்ளைகளா நெனச்சு ஒங்ககிட்ட நான் சொல்றதெல்லாம் இதுதேன்... முதல்ல குடும்பத்தை நேசிங்க... சுத்தி இருக்குறவங்கள நேசிங்க... அதுக்கப்புறந்தேன் வேலை... வெட்டி... எல்லாமே!

- நெறய்ய பேசுவோம்...