குழந்தைகளை வெளியில் அழைத்துச் செல்லும் அம்மாக்கள், பால் பாட்டில்களைவிட டைப்பர் (Diaper) பாக்கெட்டுகளைத்தான் இப்போதெல்லாம் மறக்காமல் எடுத்து வைத்துக் கொள்கிறார்கள். அந்தஅளவுக்கு அதன் பயன்பாடு பெருகியுள்ளது. ஆனால், செல்லக் குழந்தைகளின் மென்மையான சருமம் இந்த 'டைப்பர்’களால் சிரமத்துக்கு உள்ளாவது ஒரு வேதனை என்றால், இதன் காரணமாக குழந்தைகளின் 'டாய்லெட்' பழக்கமே சிக்கலாவது அடுத்த வேதனை.

டைப்பரால் ஏற்படும் பாதகங்கள் பற்றியும், அதற்கான மாற்று பற்றியும் பேசினார் சென்னை, எழும்பூரில்இருக்கும் தமிழக அரசின் குழந்தைகள் நல மருத்துவமனை டாக்டர் ரமா. ''டைப்பர் என்பது குளிர் பிரதேசங்களில் உள்ள குழந்தைகளுக்காகத் தயாரிக்கப்பட்டது. குளிரினால் அடிக்கடி சிறுநீர் கழிப்பது, மேலும் குளிருக்கு இதமாக அணிவிக்கப்பட்டுஇருக்கும் பல அடுக்கு உடைகளை ஒவ்வொரு முறை சிறுநீர் கழிக்கும்போதும் அந்தக் குழந்தைகளுக்கு கழற்றி மாற்றுவதில் உள்ள சிரமங்கள்... இது எல்லாம்தான் அந்தப் பிரதேசத்து மக்களை, டைப்பர் கண்டுபிடித்து உபயோகிக்கச் செய்தது. அதற்கு எதிரான தட்பவெப்பம் நிலவும் நம் நாட்டிலும் குழந்தைகளுக்கு அதை அணிவிப்பது தேவையில்லை என்று சொல்லலாம்.

பொதுவாக, குழந்தைகளின் மேனி மிருதுவானது. பிறந்து ஆறு மாதங்கள் வரை குழந்தைகளுக்கு நாம் வழக்கமாகப் பயன்படுத்தும் வெள்ளை காட்டன் துணிகளே சிறந்தது. புதுத் துணியில் உள்ள கஞ்சி போக நன்கு அலசியபிறகே, குழந்தைகளுக்குப் பயன்படுத்த வேண்டும். தாய்ப்பால் குடிக்கும் வரை குழந்தை நீர்த்துதான் மோஷன் போகும். ஒவ்வொரு முறை சிறுநீர் அல்லது மோஷன் போகும்போதும் உடனடியாக கவனிக்க துணிதான் சிறந்தது. வெள்ளைத் துணியாக இருந்தால், கரை ஏதாவது இருக்கிறதா என்று பார்த்துத் தூய்மையாக அலசுவதற்கு ஏதுவாக இருக்கும். துவைக்கும்போது ஊதா நிற டிடர்ஜென்டுகளை விடுத்து, மஞ்சள் நிற டிடர்ஜென்டுகளை பயன்படுத்த வேண்டும். எக்காரணம் கொண்டும் துணியை டெட்டால் மாதிரியான கடுமை யான லிக்விடில் அலசக்கூடாது'' என்ற டாக்டர், தொடர்ந்தார்.

''வீட்டில் குழந்தைகள் நேரடிக் கண்காணிப்பில் இருக்கும்போது காட்டன் துணியே போதுமானது. வெளியிடங்களுக்குச் செல்லும்போது தவிர்க்க முடியாத சமயங்களில் மட்டும் டைப்பர் உபயோகிக்கலாம். சிறுநீர், மோஷன் ஏதாவது போயிருக்கிறதா என்று அடிக்கடி செக் செய்யத் தவறக்கூடாது. அப்படிப் போயிருந்தால் அதைக் கழற்றி வீசிவிட்டு, மிதமான வெந்நீரால் இடுப்புக்குக் கீழே அலசி, நன்றாகத் துடைத்து, புதிதாக அணிவிக்க வேண்டும். இப்படி செய்யாமல், உடனே புதிதாக மாட்டினால், தொடை இடுக்குகளில் தொற்று ஏற்படும்.

'வீட்டை, பெட்டை ஈரமாக்கிடறான்...’ என்று கவலைப்பட்டு எப்போது பார்த்தாலும் டைப்பர் அணிவிக்கும் அம்மாக்களுக்கு... வீட்டையும், பெட்டையும்விட குழந்தையின் ஆரோக்கியம் முக்கியம் என்பது ஏன் புரிவதில்லை? 'டைப்பர் அணிவித்துதான் குழந்தைகளை அனுப்ப வேண்டும்' என்று கட்டாயப்படுத்தும் பள்ளிகளும் அதிலிருக்கும் பிரச்னைகளை உணர வேண்டும்'' என்று நாசூக்காக அறிவுறுத்திய டாக்டர்,

'டைப்பரை தொடர்ந்து அணிவிக்கும்போது குழந்தைகள் டாய்லெட் பழக்கங்களைக் கற்றுக்கொள்வது கெட்டுவிடும். இரண்டரை அல்லது மூன்று வயதுக்குள்ளாக தானாகவே டாய்லெட் போக, அல்லது டாய் லெட் போக வேண்டும் என்பதை அம்மாவிடம் சொல்ல குழந்தைகளைப் பழக்க வேண்டும். காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான பால் கொடுத்து அவர்களை பேபி டாய்லெட் ஸீட்டில் உட்கார வைத்தால், 'தினமும் டாய்லெட் போக வேண்டும், இதுதான் அதற்கான இடம்’ என்பது குழந்தைகளின் மனதில் பதிந்து பழக்கமாகும். எப்போதும் கவச குண்டலம் மாதிரி டைப்பர் கட்டிக்கொள்ளும் குழந்தைகள்... யூரின், கக்கா வந்தால் அதை அம்மாவிடம் சொல்லவோ, டாய்லெட்டுக்குப் போக வேண்டும் என்ற பழக்கமோ இல்லாமல், எந்த உறுத்தலும் இன்றி அதிலேயே கழித்து... சோஷியல் பிஹேவியர் தெரியாமல் வளர்வார்கள். அதையும் நேரம் கழித்தே கவனித்து, புதிதாக மாற்றி விடுகிறார்கள் அம்மாக்கள் பலரும்'' என்று வருத்தப்பட்ட டாக்டர் ரமா,

''எனவே, விலை அதிகமான, சுற்றுச்சூழலுக்கும் கேடான டைப்பர்களை எப்போதும் உபயோகிக்காமல், வெள்ளை நிற காட்டன் துணிகளை நாடுவதே குழந்தைக்கு நல்லது எல்லா வகைகளிலும். சோம்பேறித்தனத்தை விடுத்து, அதற்கு அம்மாக்கள்தான் கொஞ்சம் மெனக்கெட வேண்டும்!'' என்கிற வேண்டுகோளோடு முடித்தார்.