''பிடிச்ச மாதிரி மொபைல், டிரெஸ், ஃப்ரெண்ட்ஸுனு அமைச்சுக்கறது மட்டுமே லைஃப் ஸ்டைல் இல்லீங்க. நமக்கே நமக்குனு பார்த்துப் பார்த்து எழுப்புற இல்லமும், லைஃப் ஸ்டைல்தான்!''

- இனிமையாக இருந்தது சிவக்குமாரிடம் பேசியபோது.

1,200 சதுர அடி கொண்ட இடத்தில் 825 சதுர அடியில் தரை தளம், 900 சதுர அடியில் முதல் தளம் என்று எடுத்துக்கொண்டு, தன் 'லைஃப் ஸ்டைலை’ விரும்பியபடி பூரணமாக்கியிருக்கிறார் சிவக்குமார். வீட்டின் முன்பகுதி கேட் தொடங்கி, ரூஃப் வண்ணங்கள் வரை ஒரு நண்பரைப்போல கூடவே இருந்து முழுமையாக்கிக் கொடுத்திருக்கிறார், 'ஆல்டிட்யூட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர்’ கம்பெனியின் எம்.டி-யான விக்னேஷ்.

''சென்னை, மடிப்பாக்கத்தில் உள்ள சிவக்குமார் - ஹேமா தம்பதியோட வீட்டைப் பத்தி, மணிக்கணக்கா பேசலாம். வீடு கட்டத் திட்டமிடும்போது மேல் தளத்தை வாடகைக்குவிட நினைச்சுதான் பலரும் பிளான் போடுவாங்க. ஆனா, அந்த தளத்துக்கு வரப்போற குடித்தனக்காரங்களுக்கு வசதியா தனி வாட்டர் டேங்க், கார் பார்க்கிங், கழிவுநீர் வசதினு எதையும் ஏற்படுத்திக் கொடுக்க மாட்டாங்க பலரும். அந்த விஷயத்துல பாராட்டப்பட வேண்டியவர் சிவக்குமார். தரை தளத்துக்கு கொடுக்கிற அதே முக்கியத்துவத்தை முதல் தளத்துக்கும் கொடுக்கணும்னு வலியுறுத்தினதோட, 'வாடகைக்கு வர்றவங்களுக்கு வீடு பத்தி சிறு குறையும் இருக்கக்கூடாது’னு சொன்னார். அவரோட எண்ணத்துக்கு உயிர் கொடுக்கற சந்தோஷ ஆர்வத்தோட வேலைகளை ஆரம்பிச்சோம்'' என்று ஆரம்பித்தார் விக்னேஷ்.

''மொத்தமா உள்ள 1,200 சதுர அடி நிலத்துல முன் பக்க கிரில் தடுப்புக்கு அடுத்ததா, ரெண்டு தளங்களுக்குமான கார் பார்க்கிங் அமைச்சோம். முகப்போட வலதுபக்கத்துல தரை தளத்தோட நுழைவாயில், முதல் தளத்தோட மாடிப்படி ரெண்டையும் அமைச்சுருக்கோம். தரை தளத்துல நுழைஞ்சதுமே... இடப்பக்கம் 15ஜ்10 அளவுல லிவிங் ஏரியா. பொதுவா, குறைவான சதுர அடிகளுக்குள்ள வீட்டை எழுப்பறப்போ... ஒவ்வொரு அறைக்கும் தனித்தனியே சுவர் எழுப்பினா... இடமும் வேஸ்ட், லுக்கும் சிறப்பா இருக்காது. இப்போ பாருங்க... முன்பக்க கதவுப் பகுதியில இருந்து, இடப்பக்கம் டர்ன் செய்து வர்ற சூழல்ல ஏதோ பெரிய ஸ்பேஸில் அமர்வதற்கான ஒரு ரிலாக்ஸ் மனநிலை கிடைக்கும்.

லிவிங் ஏரியாவை ஒட்டியே 12ஜ்7 அளவுல கிச்சன் கம் டைனிங் ஏரியா. கிச்சனுக்கும், லிவிங் ஏரியாவுக்கும் தடுப்பு அமைக்கல. ரூஃப் சீலிங் டிசைனால் மட்டுமே இடத்தைப் பிரிச்சுக் காட்டியிருக்கோம். தடுப்பு நிச்சயம் தேவைனு நினைச்சா, திரைச்சீலை போட்டுக்கலாம்!

லிவிங் ஏரியாவைக் கடந்து உட்புறம் உள்ள ரெண்டு பெட்ரூம் மற்றும் பாத்ரூம்களை இணைக்கற பகுதியை, வித்தியாசமா யோசிச்சோம். நீளவாக்கில் வராண்டா போல கொஞ்சம் ஓபன் ஸ்பேஸை விட்டதால... லிவிங் பகுதியான ஹாலைப் போலவே பெட்ரூமையும் அது பெரிதா காட்டுது. லிவிங் ஏரியாவுல இருந்து, மற்ற இரு பெட்ரூம், பாத்ரூம் பகுதிக்கும் இடையில நிறைய இடம் இருக்குங்கிற எண்ணத்தையும் ஏற்படுத்துது. இப்போ அந்த ஸ்பேஸ்ல... ஹவுஸ் ஓனரோட பையன் சைக்கிள் ஓட்டியே பழகுறான்னா பார்த்துக்கோங்க!'' என்று சிரிக்கிறார் விக்னேஷ்.

''முதல் பெட்ரூமை 12ஜ்10 அளவில் கொஞ்சம் சுருக்கியும், அடுத்த பெட்ரூமை 10ஜ்15 அளவில் சற்று நீட்டியும் வடிவமைச்சுருக்கோம். ரெண்டு பாத்ரூம் கம் டாய்லெட்கள 5.15ஜ்5.10 அளவுல கட்டினோம். இது ரெண்டும் அருகருகே இருந்தாலும், நுழைவுப் பகுதியை வேறவேற திசையில வெச்சு எழுப்பினப்போ, அந்த இடத்தைப் பார்க்க எங்களுக்கே ஆச்சர்யமா இருந்தது'' என்றவர், முதல் தளத்துக்கு இடம் மாறினார்.

''தரை தளத்தோட அதே பிளான்தான் முதல் தளத்துக்கும். கிச்சன் மற்றும் பால்கனி ஏரியா மட்டும் மாறுபடும். கிச்சனை 15ஜ்7 அளவுல கொஞ்சம் பெரிதாக்கிட்டு, மீதமுள்ள 17ஜ்4 அளவிலான இடத்துல பால்கனியை அமைச்சோம். ஒவ்வொரு அறையோட சுவர்கள்லயும் ஏதாவது ஒரு சுவருக்கு மட்டும் டார்க் கலர் பெயின்ட் அடிச்சு, மற்ற சுவர்களுக்கு வெள்ளை அல்லது மைல்ட் கலர் பெயின்ட் அடிச்சுருக்கோம். இப்படி செய்யுறப்ப அந்த அறையோட வெளிச்சமும், லுக் கும் கம்பீரமா இருக்கறத நீங்களே பார்க்கலாம்.

வுட் வொர்க், வீட்டோட அழகை இன்னும் கூட்டும். கிச்சன் ஷெல்ஃப், பெட்ரூம்கள்னு மர வேலைப்பாடுகளை நேர்த்தியாவே செய்திருக்கோம்!'' என்று கியாரன்டி கொடுத்து பேசுகிறார் விக்னேஷ்!

சந்தோஷத்துக்கு கியாரன்டி!

- கட்டுவோம்...

மர உபகரணங்கள், மின் சாதனப் பொருட்கள், வீட்டின் முன்பக்க கிரில் கேட், அறை அலங்கார மின்பொருட்கள், டைல்ஸ், பெயின்ட் என்று எல்லாமும் சேர்த்து ஒரு சதுர அடிக்கு 1,900 ரூபாய் செலவாகியிருக்கிறது. தரை தளம் 825 சதுர அடி... முதல்தளம் 900 சதுர அடி... ஆகமொத்தம் 1,725 சதுர அடிக்கு, 32 லட்சத்து 77 ஆயிரத்து 500 ரூபாய் செலவாகியுள்ளது. நிலத்தின் மதிப்பு தனி!