'எந்திரன்’ அங்கிள் ஏன் கெட்டுப் போகல?!

நானும் என் கணவரும் எங்கள் நாலு வயது மகளை அழைத்துக் கொண்டு 'எந்திரன்’ சினிமா இரவு காட்சிக்குச் சென்றிருந்தோம். தூங்காமல் முழு சினிமாவையும் பார்த்த என் சுட்டி, சினிமா முடிந்து வீட்டுக்கு வந்ததும், களைப்பில் உடனே உறங்கிவிட்டாள். அடுத்த நாள் காலை எழுந்ததும் என்னிடம் வந்தவள், ''அம்மா, எலெக்ட்ரானிக் திங்க்ஸ் எல்லாம் தண்ணியில விழுந்தா கெட்டுப் போயிடும்ல? அப்புறம் 'எந்திரன்’ அங்கிள் மட்டும் எப்படி ஆத்துல குதிச்சு ஒரு பேக்கை எடுத்துட்டு கெட்டுப் போயிடாம வந்துட்டாரு..?'' என்று கேட்டாளே பார்க்கலாம்.

''அது, ஃபயர் புரூஃப், வாட்டர் புரூஃப் பண்ண எந்திரனாச்சே!'' என்று புரிய வைத்தோம்.

- உமிதா நாகேந்தர், ஹைதராபாத்

'சுகர்’ ஸ்வீட் கேர்ள்!

எனக்கு நீரிழிவு தொல்லை இருப்பதால் கோதுமை ரவை சாதம் அல்லது ஓட்ஸ் சாப்பிடுவது வழக்கம். ஒரு நாள் எனக்கு மட்டும் சாப்பாடு என்பதால், அரிசி சாதம் செய்யாமல் கோதுமை ரவை சாதம் செய்தேன். அன்னக் கரண்டியில் கோதுமை சாதம், பருப்பு, நெய் ஊற்றி என் ஐந்து வயது பேத்தியைக் கூப்பிட்டு, ''அம்மு... மாடிக்குப் போய் இதை காக்கைக்கு வெச்சுட்டு வாம்மா...'' என்றேன். நான் எதற்காக கோதுமை சாதம் சாப்பிடுகிறேன் என்று அவளுக்குத் தெரியும் என்பதால், காக்கைக்கு சாதம் வைத்து விட்டு கீழே இறங்கியவள், ''காக்காவுக்கும் சுகரா பாட்டி?!'' என்று குறும்பாகக் கேட்டாலே ஒரு கேள்வி... சிரித்து சிரித்து கண்களில் நீர்!

- எஸ்.ஞானாம்பாள், சென்னை-24

'இரண்டு ரூபாய் கொடுத்தால் இந்தியாவைக் காப்பாத்துறேன்!’

என் நாலு வயது 'வாலுக்குட்டி’ ஷாலினி, நாம் என்ன சொன்னாலும் அதற்கொரு பதிலை ரெடியாக வைத்திருப்பாள். அன்று டி.வி-யில் விஜயகாந்த் படம் ஓடிக்கொண்டிருந்தது. அதைப் பார்த்துக் கொண்டே, ''அம்மா... எனக்கு சாக்லேட் வேணும். காசு கொடுங்க'' என்று அடம் செய்தாள். திசை திருப்புவதற்காக, ''அங்க பாரு விஜயகாந்த் அங்கிளை! அவரைப் போல நீயும் நல்லா படிச்சு, பெரிய ஆளாகி, எதிரிகள அழிச்சு, இந்தியாவைக் காப்பாத்துவியா?'' என்றேன். குஷியானவள், ''அப்படீனா ரெண்டு ரூபா கொடு... சாக்லேட் வாங்கி சாப்பிட்டுட்டு, இந்தியாவைக் காப்பாத்துறேன்மா!'' என்று தன் காரியத்தில் விடாமல் குறியாக இருக்க, நாங்கள் சிரிக்க சிரிக்க... தீபாவளியானது வீடு!

- எஸ்.அபிராமி, திருச்சி