Published:Updated:

குட்டீஸ் குறும்பு !

வாசகிகள் பக்கம், ஓவியங்கள்: ஹரன்

குட்டீஸ் குறும்பு !

வாசகிகள் பக்கம், ஓவியங்கள்: ஹரன்

Published:Updated:

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

குட்டீஸ் குறும்பு !

150

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மைக் வேண்டாம்... மௌத் போதும்!

குட்டீஸ் குறும்பு !
##~##

எங்கள் பேரன் அக்ஷத் குட்டிக்கு வயது இரண்டரை. நாங்கள் எது பேசினாலும் எதிர்பாராத கோணத்தில் மிகவும் சூட்டிகையாக அவனிடமிருந்து வரும் பதிலுக்கு, வீட்டில் அனைவரும் ரசிகர்கள். ஒருநாள் குடும்பத்தினர் அனைவரும் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தோம். செய்தி வாசிப்பவரைப் பார்த்து, ''அந்த அங்கிள் என்ன செய்றார்?'' என்று கேட்டான் குட்டி. ''அவர் மைக்கில் பேசறார். நீயும் பெரியவனான பிறகு அதேமாதிரி மைக்கில் பேசுறியா?'' என்று கேட்டோம். அதற்கு அவன், ''இல்லே இல்லே... மைக்கிலே பேச மாட்டேன்... வாயிலேதான் பேசுவேன்'' என்று சொல்ல, அதிர்ந்த சிரிப்புகளால் 'நியூஸ் ஹவர்', அன்று 'காமெடி ஹவர்' என்றாகிப் போனது எங்கள் வீட்டில்!

- அஸ்வினி ஆனந்த், சென்னை-53

பிரசாத நூடுல்ஸ்!

குட்டீஸ் குறும்பு !

எங்கள் ஊரில் பங்குனி உத்தரத்தின்போது வழி நெடுக தண்ணீர்ப் பந்தல், மோர், பானகம் வழங்குவது வழக்கம். சிலர் தக்காளி சாதம், சாம்பார் சாதம், தயிர் சாதம் எனப் பொட்டலங்களையும் வழங்கு வார்கள்.

இந்தத் தடவை, எங்கள் தெருவுக்கு முன் நின்று கோயில் காவடிகளைப் பார்த்துத் திரும்பும்போது, என் இரு குழந்தைகளும் சாப்பாட்டுப் பந்தலைக் காட்டி, ''அம்மா... நாமும் போய் சாப்பாடு வாங்கலாம்'' என்று அழைத்தனர். சாப்பாடு கொடுப்பவரிடம் என் ஆறு வயது மகன் தியானேஷ், ''அண்ணே... எனக்கு ஒரு பாக்கெட் நூடுல்ஸ்!'' என்றானே பார்க்கலாம்... மொத்தக் கூட்டமும் வெடித்துச் சிரித்ததில் அந்த உணவுப் பந்தல் உற்சாகப் பந்தல் ஆனது!

- உமா ஜெகதீசன், திருச்சி

டி.வி. தூக்கம்!

குட்டீஸ் குறும்பு !

இரவு ஒன்பது மணி இருக்கும். டி.வி-யை ஆன் செய்தேன். ஏதோ இயந்திரக் கோளாறு காரணமாக டி.வி. இயங்கவில்லை. நானும் விடாமல் முயற்சித்துக் கொண்டிருந்தேன். ஆனால், திரையில் எந்த உருவமும் தெரியவில்லை. நான் டென்ஷனாக, இதைக் கவனித்துக் கொண்டிருந்த எல்.கே.ஜி. படிக்கும் என்னுடைய பேத்தி ஸ்ரீநிதி, ''பாட்டி, ராத்திரி ஆயிடுச்சுல்ல... அதனால எல்லாரும் தூங்கப் போயிருப்பாங்க. மறுபடியும் காலையிலதான் வருவாங்க. காலையிலதான் டி.வி. தெரியும்'' என்று மழலைக் குரலில் சொல்ல... ரசித்துச் சிரித்ததில் என் டி.வி. டென்ஷன் பறந்தேவிட்டது!

- ஜெயலட்சுமி வசந்தராசன், கிருஷ்ணகிரி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism