Published:Updated:

புது வீடு !

ம.மோகன் படங்கள்: கே.கார்த்திகேயன்

புது வீடு !

ம.மோகன் படங்கள்: கே.கார்த்திகேயன்

Published:Updated:

பக்காவான பிளானிங் தொடர் 10

##~##

குருவி சேர்ப்பது மாதிரி கொஞ்சம் கொஞ்சமாக பணத்தைச் சேர்த்தாலும், நாளுக்கு நாள் எகிறும் விலைவாசி உயர்வால் பெரும்பாலான நடுத்தரவாசிகளின் சொந்த வீடு ஆசை, அடுத்த ஜென்ம கனவாகவே தேங்கிவிடுகிறது. ஆனால், ''அந்த நினைப்பு தேவையில்லை. மனமிருந்தால் மார்க்கம் உண்டு... வீடும் உண்டு!'' என்று நல்முயற்சியின் வெளிப்பாடான தங்கள் வீட்டைக் காட்டு கிறார்கள், சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் வசிக்கும் சீனிவாசன் - அமுதா தம்பதி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''கடவுள்கிட்ட இருந்து கிடைச்ச பரிசு போலத்தான் இந்த வீட்டை நினைக்கிறோம். 'நம்மளால சொந்த வீடு கட்ட முடியுமா?னு நாங்க ஏங்கிய காலங்கள் போய்... 'நீங்களும் சொந்தமா வீட்டை எழுப்பலாம்'னு இப்போ உறவுக்காரங்களுக்கும், நண்பர்களுக்கும்  நம்பிக்கை கொடுக்குறோம். அந்த தைரியத்துக்கு விதை விதைச்சவர், 'ஜினி’ பில்டர்ஸ் நிர்வாக இயக்குநர் விஜயபோஸ். 20% கையில இருந்த பணம், 80% வங்கிக் கடன் மூலமா வாங்கின பணம் கொண்டு கட்டிய வீடு இது!''

- மகிழ்வும், மனநிறைவும் பொங்கப் பகிர்ந்தார் சீனிவாசன்.

புது வீடு !

''இப்பவெல்லாம் சொந்த வீடு, ரொம்பச் சுலபமான விஷயம். நம்மோட வருமானம், சேமிப்புக்கு தகுந்தாற்போல ஒரு பட்ஜெட்டை போட்டு, அதுக்குள்ள வீடு கட்டுற வேலையில தாராளமா இறங்கலாம். அப்படி 900 சதுர அடி இடத்தை வாங்கி, அதுல 501 சதுர அடிக்கு பில்டிங் கட்டியிருக்கோம். நிலம், கட்டடம்னு 15 லட்ச ரூபாய்ல முடிக்கப்பட்ட சிம்ப்ளி சூப்பர்ப் வீடு இது''

- விஜயபோஸின் வார்த்தைகள், பெரும்பாலானவர்களின் கனவு இல்லத்துக்கு அடிக்கல் நாட்டும் விதமாகவே இருக்கிறது.

''நிலம், வீட்டுக்குச் சேர்த்து 15 லட்சம்தானா... வீடும் விசாலமா இருக்கேனு பலரும் ஆச்சர்யப்பட்டாங்க. பிளான் இதுதான்... 900 சதுர அடி இடத்துல, வீட்டோட இடப்பக்கம் 8.6ஜ்6 அளவிலான போர்டிகோ, வலப்பக்கம் 20ஜ்9 அளவிலான கார் பார்க்கிங்னு முன்பக்கத்தை வடிவமைச்சுருக்கோம். பொதுவா, மொட்டை மாடிக்குப் போறதுக்கு, வீட்டோட பக்க சுவர்களை அடைச்சுத்தான் படிக்கட்டு அமையும். இங்க, கார் பார்க்கிங்கோட மேல்பகுதியிலயே படிக்கட்டுகளை அமைச்சு, டூ இன் ஒன் ஆக்கிட்டோம்.

புது வீடு !

அடுத்ததா, முன்பக்கக் கதவைத் திறந்தா... 7.9ஜ்21 அளவிலான ஹால். இந்த ஹாலை வரைபடத்துல ஒரு நீளமான ஸ்பேஸாத்தான் காட்டியிருந்தோம். ஹவுஸ் ஓனர், 'இதுல கொஞ்ச ஸ்பேஸை தடுத்து பூஜை அறை, டைனிங் அறையாவும் பயன்படுத்திக்கிறோம்’னு கேட்டாங்க. குடியிருக்கப் போறவங்களோட விருப்பப்படி கட்டப்படும் இல்லம்தானே முழுமையா இருக்கும்! அதன்படியே அமைச்சுட்டோம். ஹால், டைனிங் ரெண்டுக்கும் இடப்பக்கம் 10ஜ்10 அளவிலான பெட்ரூம், அடுத்து 6ஜ்3.6 அளவினான பாத்ரூம், வீட்டோட பின்பக்கம் 10ஜ்6.9 சமையலறைனு பிரிச்சுக் கட்டியிருக்கோம்.

ஹால்ல கபோர்டு வைக்கணும்ங்கிறது பலரோட விருப்பம். ஆனா, அதை தவிர்த்து ஷோ கேஸ் மட்டும் வைக்கறதுதான் நல்ல சாய்ஸ். அதைத்தான் இங்கே செய்திருக்கோம். காரணம், கபோர்டு அமைக்கறப்போ தேவையில்லாத பொருட்கள் அதுல சேர வாய்ப்பிருக்கு. இப்படி இருந்தா... விருந்தினர்களும் நண்பர்களும் வந்து போற ஹாலோட அழகு கெட்டுடும்.

புது வீடு !

அதேபோல சமையறை சுவர் பகுதி டைல்ஸை 2 அடி உயரத்தோட நிறுத்திடாம, 4 அடி உயரம் வரைக்கும் எழுப்புறது அவசியம். சமைக்கும்போது சிதறுற எண்ணெய், மசாலா, உணவுப்பொருட்கள் இதையெல்லாம் ஈஸியா துடைச்சு சுத்தப்படுத்திடலாம். வெறும் சிமென்ட் சுவரா மட்டும் விட்டிருந்தா... உணவுப்பெருட்களோட சிதறல் அதுல பட்டு பட்டு சுவர் கறைபடிஞ்சுடும். அதை ஈஸியா க்ளீன் பண்ண முடியாது. பாத்ரூம் சுவர் டைல்ஸ் 7 அடிக்குக் குறையாமல் உயர்த்தி கட்டுறதும் அவசியம்!'' என்று கட்டுமான வேலைகளுடன் வீட்டு பராமரிப்புக் குறிப்புகளையும் 'அட்டாச்டு’ ஆக வழங்கிய விஜயபோஸ், நிறைவாக சொன்னது-

''வீடு கட்டுறதுக்கு நிலத்தை விக்கணும், பொருளை விக்கணும்ங்கிற யோசனைகளை தூக்கிப் போட்டுட்டு பட்ஜெட்டுக்குள்ளயே சொந்த வீட்டை அமைச்சுக்குற யுத்திகளும், வழிகளும் நம்மகிட்டதான் இருக்கு. அதுக்கு எடுத்துக்காட்டுதான் இந்த வீடு!''

பட்ஜெட்டுக்குள்ள வீடு ரெடி... நீங்க ரெடியா?!

- கட்டுவோம்...

சதுர அடிக்கு 1,000 ரூபாய் வீதம், 900 சதுர அடி நிலத்துக்கு 9,00,000 ரூபாய். சதுர அடிக்கு 1,200 வீதம் 501 சதுர அடி கட்டடத்துக்கு 6,01,200 ரூபாய். ஆகமொத்தம் 15,01,200 ரூபாய். டைல்ஸ், மின் உபகரணங்கள், காம்பவுண்ட் வால், கிரில் கேட் எல்லாம் இதில் அடக்கம். ஃபர்னிச்சர் செலவுகள் தனி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism