Published:Updated:

கேபிள் கலாட்டா !

லட்சுமிப் பாட்டி... லட்சியப் பாட்டி ! படம்: பொன்.காசிராஜன்

கேபிள் கலாட்டா !

லட்சுமிப் பாட்டி... லட்சியப் பாட்டி ! படம்: பொன்.காசிராஜன்

Published:Updated:

ரிமோட் ரீட்டா

##~##

''லட்சுமி பாட்டி... 'மகாநதி படத்துல நான் நடிச்ச பிறகு, மகாநதி பாட்டி... மகாநதி பாட்டினுதான் எல்லாரும் கூப்பிடுவாங்க. உனக்குப் பாட்டியா வேஷம் போட்டதுல இருந்து இப்போ எல்லாரும் என்னை துளசி பாட்டி... துளசி பாட்டினு கூப்பிடுறாங்க’னு அடிக்கடி சந்தோஷமா அலுத்துக்குவாங்க என்கிட்ட. அந்தக் குரலை இனி கேட்கவே முடியாதே ரீட்டா!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- கண் கலங்கினாங்க 'தென்றல்’ சீரியல்ல துளசியா வர்ற ஸ்ருதி.

சமீபத்தில் உறவினர் இல்ல விசேஷத்துக்காக சொந்த ஊரான விருதுநகருக்குப் போயிருக்காங்க எஸ்.என்.லட்சுமி. குளியலறையில் தவறி விழுந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாங்க. நிலைமையில முன்னேற்றம் இல்லாமலே இருந்தவங்க, கடந்த பிப்ரவரி 20-ம் தேதி விடைபெற்றுட்டாங்க. ஆயிரத்துக்கும் மேலான திரைப்படங்கள்ல நடிச்ச தமிழ் சினிமாவோட மூத்த நடிகை லட்சுமியோட நினைவுகளை, ஈர மனசோட பகிர்ந்துக்கிட்டாங்க இந்தத் தலைமுறை நடிகை ஸ்ருதி.

''கடந்த ரெண்டு வருஷமா மாசத்துல பாதி நாட்கள் பாட்டி கூடதான் இருந்திருக்கேன். ஷூட்டிங் இல்லாத நாட்கள்லகூட பாட்டியும் நானும் போன்ல பேசிக்குவோம். கேரளாவில இருக்கற என் ஜானகிப் பாட்டியை விட்டுப் பிரிஞ்சுருக்கிற ஏக்கத்தை, லட்சுமி பாட்டிதான் நிறைவு செய்துட் டிருந்தாங்க.

கேபிள் கலாட்டா !

அழற ஸீன்ல, கிளிசரின்கூட போட்டுக்காம பாட்டி அவ்வளவு ரியலா நடிப்பாங்க. அதைப் பார்த்தாலே... கூட நடிக்கற எங்களுக்கு எல்லாம் தானாவே நடிப்பு வந்துடும். விருதுநகருக்குப் போய் வரும்போதெல்லாம் அந்த ஏரியாவோட ஸ்பெஷல் ஸ்வீட்ஸ், காரம்னு 'தென்றல்' யூனிட்டுக்கே வாங்கிட்டு வந்து குவிச்சுடுவாங்க. 'பாட்டி.. பாட்டி..!’னு பத்து, இருபது பேர் எப்பவும் அவங்களைச் சுத்தியே இருப்போம்.

சமீபத்துல ஒரு அசிஸ்டென்ட் டைரக்டர், வேலை இல்லாம  சிரமப்படுறதை பாட்டிகிட்ட சொன்னப்போ, உடனே போனை எடுத்தாங்க பாட்டி. தனக்குத் தெரிஞ்ச ஒவ்வொரு டைரக்டரா தொடர்பு கொண்டு, 'எனக்குத் தெரிஞ்ச பையன், திறமைசாலி, அவரை உதவியாளரா சேர்த்துக்கோங்க!’னு கேட்டு கேட்டு, அந்த அசிஸ்டென்டை அனுப்பிட்டே இருந்தாங்க. அதை பக்கத்துல இருந்து பார்த்த என்னால ஆச்சர்யப்படாம இருக்கவே முடியல. அப்படி ஒரு மனசு பாட்டிக்கு. அடுத்தவங்களுக்கு உதவுறது ஒண்ணுதான் அவங்களோட லட்சியம்.

கேபிள் கலாட்டா !

'திருமணம் செய்துக்காம இருந்துட்டோமேனு வருத்தம் இல்லையா பாட்டி?’னு கேட்டா, 'அதான் இத்தனை பேரப் புள்ளைங்க எங்கூட இருக்கீங்களே!’னு நம்மை நெகிழ வைப்பாங்க. கடைசிவரைக்கும் நடிச்சுக்கிட்டே இருக்கணும், சொந்தக் கால்ல நிக்கணும்... இதைத்தான் அடிக்கடி சொல்லிட்டே இருப்பாங்க. எங்களை விட்டுட்டு ஏதோ ஊருக்குப் போயிருக்குற ஒரு உணர்வுதானே தவிர... கொஞ்சம்கூட நினைக்க முடியலை அவங்க இனி இல்லைனு!'' - கண்கள் ஈரமாகி முடிச்சாங்க ஸ்ருதி.

அவங்க வாழ்ந்த கேரக்டர்கள் என்றும் நம்முடன் வாழும்!

'கலைதான் போஸ்டல் அட்ரஸ்!’

'பொதிகை’ தொலைக்காட்சியில ஞாயிறு காலை ஒளிபரப்பாகும் 'கொஞ்சும் சலங்கை’ நிகழ்ச்சி இதம். கிளாஸிக்கல், ஃபோக்னு கலந்து, குழந்தைகளை அழகா திரையில் நடனமாட வைக்கிற இந்த நிகழ்ச்சியை இயக்கி, தொகுத்து வழங்கறாங்க... 'வெண்ணிற ஆடை’ நிர்மலா. கூடவே... 'என் தங்கை கல்யாணி' படத்துல நடிச்ச சுதாவும்.

''வீட்டுல டான்ஸ் கிளாஸ் நடந்துட்டு இருக்கு... பார்த்துட்டே இரு ரீட்டா பத்து நிமிஷத்துல வந்துடறேன்மா!''னு போன்ல சொன்னவங்க, ஷார்ப்பா வந்தாங்க.. கூடவே காபியையும் கூட்டிக்கிட்டு!

''கொஞ்சும் சலங்கை நிகழ்ச்சி, என் கேரியர்ல மறக்க முடியாத அனுபவம் தருது. இதை என்னோட சேர்ந்து நடத்துற சுதா, என் அக்கா பொண்ணு. எங்க ரெண்டு பேருக்குமே நடனத்துல ஆர்வம், மீடியாவுல பரிச்சயம் இருக்கிறதால... நிகழ்ச்சியைச் சிரமமில்லாம நடத்த முடியுது!''னு சொன்னவங்க, நிகழ்ச்சி பத்திப் பேசினாங்க.

கேபிள் கலாட்டா !

''7 - 14 வயது குழந்தைங்களோட நடன ஆர்வத்தை, ஆற்றலை வெளிக்கொண்டு வர்ற மேடைதான் இது. 'டான்ஸ்’ங்கிற பெயர்ல குத்துப் பாடல்களுக்கு குழந்தைகள அரைகுறை ஆடைகள்ல ஆட விடுற நிகழ்ச்சி இல்லை; நம் கலாசாரத்தை சிறப்புப்படுத்துற, குழந்தைகளோட மனசைக் காயப்படுத்தாம நடக்கிற நடனப்போட்டி. நிகழ்ச்சி ஹிட் ஆனதால... இப்போ தமிழ்நாடு கடந்து, கொல்கத்தா, மும்பைனு மற்ற மாநிலக் குழந்தைகளும் ஆர்வமா கலந்துக்கிட்டு நிகழ்ச்சியை அழகாக்கறாங்க''னு உற்சாகமான நிர்மலாகிட்ட,

''இந்த வயசுலயும் சுறுசுறுப்பா இருக்கீங்களே?''னு கேட்டா, புன்னகையைப் பெரிதாக்குறாங்க.

''வெறுமனே... 'வெண்ணிற ஆடை’ நிர்மலா, சென்னைனு எழுதிப் போடற லெட்டர்கூட, சரியா எங்க வீட்டுக்கு வந்து சேருதுனா, அது கலை எனக்குக் கொடுத்த நிரந்தர முகவரிதானே ரீட்டா?''னு ஏகத்துக்கும் உருகினவங்க,

''அந்தக் கலைக்கு ஏன் ஓய்வு கொடுக்கணும்..? இப்போ ஒரு டிரஸ்ட் நிறுவி, குழந்தைகளுக்கு நடனப் பயிற்சி கொடுக்கறதோட, பொருளாதாரச் சூழலால அரங்கேற்றம் நிகழ்த்த முடியாத குழந்தைகளுக்கு அந்த சந்தோஷத்தையும் நாங்க தர்றோம்!''னு மகிழ்வா சொன்னாங்க மேடம்!

ஜல் ஜல் சந்தோஷம்!

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

கேபிள் கலாட்டா !

150

வாசகிகள் விமர்சனம்

அம்மாவுக்கு மரியாதை !

''இப்போது வரும் பல சீரியல்களிலும் அம்மாவை... 'நீ, வா, போ' என்றே ஒருமையில் அழைக்கும்படியான வசனங்களே அதிகமாக இடம்பெறுகின்றன. 'ஒருமைதான் நெருக்கத்தின் அடையாளம்' என்று தவறாக கற்பித்துக் கொண்டு எழுதப்படுவதால் வரும் வினை இது. 'வாங்க... போங்க...' என்று மரியாதையோடு அழைக்கும்போதும் நெருக்கம் குறைந்துவிடாது என்பதே உண்மை. இன்றைக்கு டி.வி-யை பார்த்தே பல விஷயங்களை கற்றுக் கொள்கின்றன குழந்தைகள். எனவே, சீரியல் டைரக்டர்கள் இந்த விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருக்கலாமே'' என்று அட்வைஸ் செய்கிறார் சென்னையைச் சேர்ந்த அகிலா கிருஷ்ணா.

அருமை போளி !

''புதிய தலைமுறை சேனலின் சமையல் நிகழ்ச்சியில், போளி ரெசிபியை செய்து காட்டினார்கள். பருப்பு போளி, தேங்காய் போளி என்றில் லாமல்... டூட்டி ஃப்ரூட்டி போளி, பழ போளி, மசாலா போளி... என்று போளியில் இத்தனை வகைகளா..! என வியக்க வைத்து விட்டார்கள்'' என்று பாராட்டுகிறார் திருச்சியைச் சேர்ந்த எஸ்.விஜயா சீனிவாசன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism